இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா? ஜனக்கடலில் எங்கோ நீந்திக்கொண்டிருக்கும் திருமணமான ஒரு ஆணோ பெண்ணோ தப்பு செய்தால் மட்டும் அதை மிகவும் அநாகரிகமாக கள்ளக்காதலன் கைது, கள்ளக்காதலி கொலை என்றெல்லாம் தலைப்பிட துணிபவர்கள், மீடியா வெளிச்சத்தில் உள்ளவர்களைப் பற்றி குறிப்பிடும்போது மிகவும் நாசூக்காக, ‘பிரபுதேவா - நயன்தாரா காதல்’ என்பது போல் குறிப்பிடுவது ஏன்? ஏன் அவருக்கு மட்டும் குடும்பம், குட்டி இல்லையா? நயன்தாரா என்ன கல்யாணத்திற்காக மட்டுமே காத்திருப்பவரா?
இவர்கள் செய்தால் நல்லக் காதல் மற்றவர்கள் செய்தால் கள்ளக் காதலா?
பொதுவாகவே பிரபல நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் அந்தரங்க விஷயங்கள் எல்லாம் ஏன் கிசுகிசுக்கப்படுகின்றன. குறிப்பிட்டவர்கள் ஈடுபடும் தொழில் குறித்த செய்திகள் தரும் பிரபல்யத்தைவிட, பரபரப்பைவிட அதிகளவில் அவர்களுடைய அந்தரங்க சமாச்சாரங்கள் தருகின்றன.
உண்மையோ பொய்யோ, என்றாவது ஒருநாள் நடக்கப்போவதோ எதுவாக இருந்தாலும் தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் உள்ள விஷயங்கள்தான் மனித மனதை அதிகம் தூண்டி ரசிக்க வைக்கின்றன.
வலிக்கிறது என்று சொல்வதைக் காட்டிலும் ஐயோ என்று கத்துவதில் உள்ள அர்த்தத்தைப் போல.
சரி நயனும் பிரபுதேவாவும் கள்ளக்காதல் செய்தாலும், நிஜக்காதல் செய்தாலும் நமக்கென்ன? அப்படி விட்டுவிட முடியுமா என்ன? ‘அட ச்சீ… என்னய்யா பத்திரிகை இது?’ என்று சொல்லிவிடுவார்களோ என்று அச்சம்.
சம்பந்தப்பட்டவர்கள் அடிக்கும் தம்பட்டத்தை விட மீடியாக்கள் அடிக்கும் இவர்கள் பற்றிய தம்பட்டம் அதிகம்.
அதைவிட கூத்து என்னவென்றால், நயன்தாரா பிரபுதேவாவின் பெயரை தன்னுடைய வலது கையில் பச்சை குத்தியிருக்கிறார் என்றும், இடதுகையில் பச்சை குத்தியிருக்கிறார் என்றும் செய்திகள் மாற்றி மாற்றி வருவது.
இன்னொரு செய்தியில் பிரபுதேவாவின் மனைவி ரமலத்திடம், கணவனை பிரிக்க மாட்டேன் என்று நயன்தாரா சத்தியம் செய்திருப்பதாகவும், மற்றொரு செய்தியில் பிரபுதேவா மீதான காதலுக்கு நயனின் பெற்றோர் எதிர்ப்பு என்று தெரிவிக்கப்படுகிறது.
உண்மையைச் சொல்லப்போனால் இந்த மாதிரி செய்திகள் கூறப்படுகிறது, சொல்லப்படுகிறது அல்லது நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகையில் என்கிற ரீதியில் தான் வருகின்றன. சினிமாவில் புலனாய்வு என்கிற சினிமா மீடியா இன்னும் முன்னேறவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நிருபர்களின் கணிப்புகளே பெரும்பாலும் கருத்துக்களாக பதியப்படுகின்றன.
75 சதவிகித செய்திகள் பிஆர்ஓக்களை நம்பியும், மேனேஜர்களை நம்பியுமே வெளியிடப்படுகின்றன. ஒரே வட்டாரத்தில் இருந்து அனுப்பப்படும் ஒரே செய்தி பல காதுகளை அடைந்து, அதற்கு வெவ்வேறு உருவங்கள் கொடுக்கப்படுகின்றன.
நயன்தாரா பிரபு தேவா பெயரை இடது கையில் பச்சைக் குத்திக் கொண்டார்(அது அவர் விருப்பம் என்பது வேறுவிஷயம்) என்பது லேட்டஸ்ட் செய்தி. சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஆதவன் திரைப்படப் பாடல் ஒன்றில் நயன்தாராவின் இடது கையில் குத்தப்பட்டிருந்த Pரபு என்கிற பெயரை கிராபிக்ஸில் சுத்தப்படுத்தும் வேலை கூட நடப்பதாகத் தகவல்(என்ன செய்வது நாமும் இப்படி எழுத வேண்டியுள்ளது).
வெளியே தெரியும் உடல்பாகங்களில் பச்சைக் குத்திக்கொள்வது அக்கால காதல் பேஷன். சிலர் மார்பில், தொடையில், முதுகில்கூட குத்திக் கொள்வார்கள். ஆனால் பெரும்பாலோர் முட்டியில் இருந்து விரல்கள் தொடங்கும் கையின் ஏதாவது ஒரு பாகத்தில்தான் பச்சைக் குத்திக்கொள்வார்கள். அப்பத்தானே ‘இதோ பார், உனக்காக நான் உருகுகிறேன்’ என்று காதலன் காதலியிடம் காண்பித்துக்கொள்ள முடியும்.
இந்த பழைய ஷோ காட்டும் வித்தையை நவீன நடிகையான நயன்தாரா செய்திருப்பார் என்று நம்ப முடியவில்லை. நமக்குத் தெரிந்து அவருடைய ஒரு காதல் தோல்வியடைந்திருக்கிறது. அதில் நிறைய பாடம் கற்றுக்கொண்ட நயன்தாரா இப்படியொரு மிகவும் சாதாரண காரியத்தை செய்யமாட்டார்.
இன்னொன்று அவர் ஒரு நடிகை. உச்சி முதல் பாதம்வரை (அங்கங்கே மறைத்துதான்) பளபள வென்று திரையில் காட்டவேண்டிய நிலையில் இருப்பவர். அப்படிப்பட்டவர் எப்படி வெளிப்படையாக கையில் பச்சை குத்துவார்? அதுமட்டுமல்ல இந்த சினிமா காதல் என்பதெல்லாம் எப்போ வேண்டுமானாலும் புட்டுக்கும் என்ற நிலை இருக்கும்போது இப்படியெல்லாம் நயன்தாரா அதிகபட்ச ரிஸ்க் எடுப்பாரா என்ன?
ஓரு பெண்ணான நயன்தாராவே காதல் செய்யும் தொல்லை தாங்க முடியாமல், பிரபுதேவாவை மறக்க முடியாமல் அவர் பெயரை பச்சைக்குத்திக் கொண்டார் என்றால், நயன்தாராவுக்காக பிரபுதேவா என்ன செய்திருக்கிறார் என்பதையும் ஆராயலாமே.
நயன்தாராவின் பழைய புகைப்படங்களை காண்கையில், பல படங்களில் அவர் உடலில் ஏதாவது ஒரு இடத்தில் டாட்டு எனப்படும் பச்சையைக் குத்தியிருக்கிறார்.
சரி, அவர் பச்சை குத்தட்டும் அல்லது சிவப்பா குத்தட்டும் அதுவா மேட்டர் என்பதுதான் நம்ம மேட்டர். THANKS-கிருஷ்ணாசேகர்