Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

02 டிசம்பர் 2009

பின்னழகை எடுப்பாக்க ஆபரேஷன் - உயிரிழந்த அர்ஜென்டினா அழகி

பியூனஸ் அயர்ஸ்: பின்னழகை அழகாக்க அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் மிஸ் அர்ஜென்டினா அழகி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பெயர் சோலங்கே மக்னானோ. 37 வயதாகும் இவர் 2 குழந்தைகளுக்குத் தாயாவார். கடந்த 1994ம் ஆண்டு மிஸ் அர்ஜென்டினா அழகிப் பட்டம் வென்றவர்.
Solange Magnano
இவர் தனது பின்னழகை எடுப்பாக காட்ட அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் இது பலமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. இதன் காரணமாக அவருக்கு நுரையீரலில் அவருக்கு அடைப்பு ஏற்பட்டு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதனால் உயிரிழந்து போனார். பின்னழகை எடுப்பாக்க நடந்த அறுவைச் சிகிச்சையின்போது மக்னானோவுக்கு போடப்பட்ட ஊசி மருந்துகள், நேரடியாக அவரது மூளையையும், நுரையீரலையும் தாக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டாக்டர் கான்சாலோ கார்ட்ஸ் என்பவர் தனது பின்னழகை சற்றே எடுப்பாக மாற்றிக் கொள்வதற்காக செய்து கொண்ட சிகிச்சையால் தற்போது தனது உயிரை பரிதாபமாக இழந்துள்ளார் மக்னானோ என்றார் வருத்தத்துடன். மக்னானோவின் இறுதிச் சடங்கை அர்ஜென்டினா டிவி நேரடியாக ஒளிபரப்பியது.

கூகிளில் படத்தை (Image) எவ்வாறு விரும்பிய நிறத்தில் தேடுவது

இன்றைய இணைய உலகில் எங்களின் உற்ற நண்பனாகிவிட்ட கூகிள் தேடும் பொறியில் (Google search engine), எமக்கு தேவையான படத்தை (Image) எவ்வாறு நிறத்தில் தேடுவது பற்றி இந்த பதிவில் குறிப்பிடுகின்றேன். இது பற்றி பலருக்கு தெரிந்திருக்கும் என்றாலும் சிலருக்காவது என் பதிவு உதவும் என நினைக்கிறேன். நீங்கள் அழகிய மஞ்சள் நிற ரோஜா பூவைத் (Yellow colour Rose) தேட வேண்டும் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்... அதாவது கூகிள் பட தேடலின் (URL- Address Bar)இல் கடைசியில் &imgcolor=yellow என்று சேர்த்தால் போதும். அதாவது http://images.google.com/images?q=rose&imgcolor=yellow படத்தை பாருங்க.....

மிகச் சிறிய MP3 பிளேயர்

உலகிலேயே மிகச் சிறிய MP3 பிளேயரை (Player) Japan நிறுவனமொன்று அறிமுகம் செய்துள்ளது. இதன் அளவு Blue-tooth handset ஜ விட சிறியது. கவலை தரும் விடயம் என்னவென்றால் ஜப்பானில் மட்டுமே தற்போது வாங்க முடியும் (only available in Japan).
ஏனைய MP3 பிளேயர்களைப் போலவே, இந்த சிறிய MP3 பிளேயரும் எல்லா வசதிகளையும் கொண்டுள்ளது....
  • 4 GB சேமிப்பகம் (memory)
  • USB ஊடாக பாடல்கள் மாற்றக்கூடிய, சார்ஜ் செய்யக்கூடிய வசதி
  • மீண்டும் சார்ஜ் செய்யக்கூடிய Li battery வசதி
  • Stereo ஒலி
  • மேலதிக மென்பொருள் இல்லாமல் PC இல் இருந்து பாடல்களை எந்த Operating System இல் இருந்தும் மாற்றலாம்.
பொறுத்திருங்கள் நண்பர்களே, நம்மட நாட்டு சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும்.

ஷாருக்கானிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன்-அமீர்

என் நாய்க்கு ஷாரூக் என்று பெயர் வைத்திருப்பது ஷாருக்கானின் குழந்தைகளைப் பாதித்திருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் நான் ஷாரூக்கிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். அதேநேரம் இனி என் நாயை ஷாரூக் என்று அழைக்கவும் மாட்டேன்" என்று கூறியுள்ளார் அமீர்கான். பாலிவுட் முன்னணி நடிகர்களான அமீர்கான், ஷாருக்கானுக்கு இடையே பனிப்போர் நடந்துவருகிறது. அமீர்கான் சமீபத்தில் தன்னுடைய பிளாக்கில் எழுதும் போது, தன் வீட்டில் ஒரு நாய் இருப்பதாகவும், அதை ஷாரூக் என்று அழைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஷாருக் மீதான பொறாமை காரணமாகவே, அமீர்கான் இவ்வாறு எழுதியதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், மும்பையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் இதுபற்றி பேசிய அமீர்கான், 'ஷாருக்கின் குழந்தைகள் என் பிளாக்கை கடந்த ஒரு வருடமாக படித்து வருகிறார்கள்.
Aamir and Sharukh
நான் என்னுடைய நாய் குறித்து எழுதியது அவர்களை காயப்படுத்தி இருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஷாருக்கின் குழந்தைகளிடம்தான் மன்னிப்பு கேட்கிறேன். ஷாருக்கானிடம் அல்ல. எனெனில் ஷாருக்கிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லையே. எனினும், நான் எனது நாயை இனி ஷாருக் என அழைக்கப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்' என்றார்.

இது சீரியஸான மேட்டரில்லை!-ஆக்கர் ஸ்டுடியோ

திரைத்துறையில் ஏற்படும் சாதாரண விஷயம்தான் இது. ஆக்கர் ஸ்டுடியோ இதை பார்த்துக் கொள்ளும். ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். கோவா பட ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஆக்கர் ஸ்டுடியோ. சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் முதல் படம் கோவா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பாடல் வெளியீ்ட்டுக்கு திட்டமிடப்பட்டு வருகிறது. வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படம் முதலில் ரஜினியின் பிறந்த நாளன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்தப் படத்தின் ஆடியோவை ரஜினி பிறந்த நாளன்று வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இரண்டுமே இப்போது நடக்குமா என்று ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. காரணம், கோவா படத்துக்கு பைனான்ஸ் செய்த வருண் என்பவர் கோர்ட்டுக்குப் போய் டிசம்பர் 11 வரை படம் வெளியாகக் கூடாது என தடை உத்தரவு வாங்கியுள்ளார்.
Soundarya
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினியின் ரியாக்ஷன் குறித்து அறிய ஆக்கர்ஸ் ஸ்டுடியோவைத் தொடர்பு கொண்டோம். சௌந்தர்யா சார்பில் பேசிய அவரது உதவியாளர், "இது ஒரு சீரியான மேட்டரே இல்லை. சினிமாவில் இது சாதாரண விஷயம். படத்துக்கு பைனான்ஸ் வாங்கியது உண்மை. அதில் சிறிய தாமதம் ஏற்பட்டுவிட்டது. இனி இந்த விவகாரத்தை ஆக்கர்ஸ் ஸ்டுடியோ பார்த்துக் கொள்ளும். திட்டமிட்டபடி படம் வெளியாகும்" என்றார்.

ஆசினுடன் வேகமாக நெருங்கும் சல்மான்

லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் இணைந்து நடித்ததால் சல்மான் கானுக்கும், ஆசினுக்கும் கெமிஸ்ட்ரி செமத்தியாக வேலை செய்யத் தொடங்கி விட்டதாம். படப்பிடிப்பு முடிந்த போதிலும் ஆசினுடன் நெருங்கிப் பழகி வருகிறாராம் சல்மான். இதனால் காத்ரீனா கைபிடமிருந்து அவர் வேகமாக விலகி வருவதாகவும் கூறப்படுகிறது.
Asin with Salman Khan
ஆமிர்கானுடன் தனது முதல் இந்திப் படத்தை முடித்த ஆசின் அடுத்து சல்மான் கானுடன் ஜோடி போட்டு லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் நடித்தார். இப்படத்தில் அஜய் தேவ்கனும் நடித்துள்ளார். படப்பிடிப்பின்போது அஜய் தேவ்கனுடன் நட்பானார் ஆசின். இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருவதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் சல்மான் கானுடன்தான் ஆசினுக்கு அதிக நெருக்கம் ஏற்பட்டு விட்டதாம். படப்பிடிப்பு முடிந்த பின்னரும் கூட இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்களாம். இருவருக்கும் படத்தில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் கெமிஸ்ட்ரி ஏக போகமாக இருப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். தற்போது இருவரது நட்பும் அடுத்த கட்டத்திற்குப் போய் விட்டதாம். அதாவது இருவரும் மிக மிக நெருக்கமாக பழகி வருகிறார்களாம். இதுகுறித்து சல்மானுக்கு நெருக்கமானவர்கள் சிலர் கூறுகையில், சல்மான் கானும், ஆசினும் தனிப்பட்ட முறையில் நெருக்கமாக பழகி வருகிறார்கள். லண்டன் ட்ரீம்ஸ் படத்திற்குப் பின்னர் இருவரும் நெருக்கமாகி விட்டார்கள். காத்ரீனை கைபை விட தற்போது ஆசின் மீதுதான் சல்மான் அதிக ஆர்வம் காட்டுகிறார். இருவரது நட்பும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக தெரிகிறது என்கிறார்கள். தனது தனிப்பட்ட அனைத்து செயல்களுக்கும் சல்மானிடம்தான் ஆசின் ஆலோசனை கேட்கிறாராம். ஆசின் - சல்மான் நெருக்கத்தால் காத்ரீனா கைப் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விண்டோஸ் 7 : ஒரே சொடுக்கில் கோப்புகளைத் திறக்க

How to Open Files with a Single-Click in Windows 7

Single-Click or Double-Click : Which one you want? How to Open Files with a Single-Click in Windows 7? We need to twice click to open any file / shortcut / folder in Windows 7 by default. Do you want to make single click to open any item in windows 7? Do the following steps: Open My Computer In your keyboard, Please do press ALT key. Single-Click or Double-Click : Which one you want? Now you can able to see File, Edit Menu on top. Please select Folder options in Tools Menu Single-Click or Double-Click : Which one you want? Click on Single click to open an item (point to select) Press OK. Make mouse clicking easy - change from double click to single click Make mouse clicking easy - change from double click to single click. Click once on a floder to open it or even underline it when you hover over it.

கிளாமரில் கலக்கும் சங்கீதா

‘பிதாமகன்’ மூலம் இரண்டாவது என்ட்ரி கொடுத்த சங்கீதா அதன் பிறகு ‘உயிர்’, ‘தனம்’ போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்தார். அதன்பிறகு தான் அவருக்கு வாய்ப்புகள் சாரமாரியாக வந்து கொட்ட ஆரம்பித்தன.
இதற்கிடையில் திருமணம் செய்து கொண்டாலும் சங்கீதா தொடர்ந்து கலைச் சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவர் நடிப்பில் இப்போது வெளிவந்துள்ள படம் ‘நான் அவன் இல்லை 2’. இதில் இவர் அவ்வளவாக கவர்ச்சியாக நடிக்காவிட்டாலும், நடிப்பில் கலக்கியிருக்கிறாராம். இப்போது தெலுங்கில் சங்கீதா நடித்து வரும் ‘ஸ்ரீமதி கல்யாணம்’, ‘குட்டிப் பிசாசு’ ஆகிய இரு படங்களிலும் குடும்பப்பாங்கான வேடங்கள்தான். ‘தனம் மாதிரியான பார்த்தாலே பத்திக் கொள்ளும் படங்களில் இவர் இப்போது நடிப்பதில்லை’ என்று யாரோ வதந்தியைக் கிளப்பி விட்டுவிட்டதில் கடுப்பாகி இருக்கும் சங்கீதா, ‘எனக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வர்றதைப் பார்த்துத் தாங்கிக்காத யாரோ தான் இது மாதிரி எல்லாம் புரளியைக் கிளப்புகிறார்கள். தனம் மாதிரியான படங்களில் நடிக்கமாட்டேன் என்று நான் ஏன் சொல்லவேண்டும்...? நான் ரெடியாகத்தான் இருக்கிறேன். இது போன்ற படங்களில் நடிப்பதற்கு..’ என்கிறார். தயாரிப்பாளர்களே... கேட்டுக்கோங்கோ...!!!!!!!!

02 அக்டோபர் 2009

ஆண்ட்ரியா புகார்..செல்வராகவனை வெளியில் தள்ளிய நட்சத்திர ஓட்டல்!

ஆண்ட்ரியா கொடுத்த புகார் காரணமாக இயக்குநர் செல்வராகவனை 'கழுத்தைப் பிடித்து' வெளியில் தள்ளினர் சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டல் நிர்வாகிகள். இந்த பரபரப்புச் சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது.
Andrea Jeremiah
மனைவி சோனியா அகர்வாலைப் பிரிந்து தனியே வசிக்கிறார் இயக்குநர் செல்வராகவன். நடிகை ஆண்ட்ரியா மீது இவர் கொண்ட மோகன்தான் இருவருக்கும் இடையே விவாகரத்து வரை மோதல் எழக் காரணம் என்று கூறப்படுகிறது. இந் நிலையில் ஆண்ட்ரியாவும் செல்வராகவனும் ஜோடியாக பல இடங்களில் சுற்றித் திரிவது ஊரறிந்த ரகசியமாகிவிட்டது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று செல்வராகவனும் ஆண்ட்ரியாவும் சென்னையின் அந்த பிரபல நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர். அங்கு டிஸ்கொத்தேயில் பங்கேற்று டான்ஸ் ஆட ஆண்ட்ரியா விரும்பியிருக்கிறார். ஆனால் டான்ஸ் ஆட வேண்டாம் என செல்வராகவன் தடுத்துவிட்டாராம். மனைவியா என்ன சொன்னதும் அதைக் கேட்டு நடக்க...! செல்வராகவன் பேச்சை சட்டை செய்யாமல் ஆண்ட்ரியா டிஸ்கொத்தே ஜோதியில் ஐக்கியம் ஆகியுள்ளார். இதனால் கோபம் அடைந்த செல்வராகவன், அவரை தடுத்து இழுத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து வேகமாக கிளம்பிய ஆண்ட்ரியா ஹோட்டல் நிர்வாகியிடம் செல்வராகவன் மீது புகார் செய்தாராம். உடனே அங்கு வந்த ஹோட்டல் ஊழியர்கள் செல்வராகவனை வெளியே செல்லுமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே, பலவந்தமாக இழுத்துச் சென்று வெளியே விட்டுள்ளனர். இச்சம்பவம் ஹோட்டலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிக் கேட்டால் பதிலேதும் சொல்லாமல் போனைத் துண்டித்துக் கொண்டார் செல்வராகவன்.

இறுதிப்பந்தில் அவுஸ். வெற்றி - சாம்பியன் திரோபியில் இருந்து வெளியேறுகிறது இந்தியா!

PDF Print E-mail

இறுதிப்பந்தில் அவுஸ்த்திரேலியா அடித்த அடி, ஐசிசி அரையிறுதிக்குள் நுழையும் இந்தியக்கனவை தகர்த்தெறிந்து, வீட்டுக்கு திருப்பிவிட்டது.நேற்றை பாகிஸ்த்தானுடனான போட்டியில் அவுஸ்திரேலியா தோற்றால் தான், இந்தியா அரையிறுதிக்குள் செல்ல கொஞ்சமாவது வாய்ப்பிருந்தது.

ஆனால், எப்போதும் இந்தியர்கள் மீது அவுஸ்த்திரேலியர்களுக்கு உள்ள இனவெறிப்பாசம், அதோடு எதிராக விளையாடிவர்கள் பாகிஸ்த்தானல்லவா! கடைசிப்பந்தில் வெள்ளையர்களை வெற்றிபெறச்செய்தும் விட்டனரோ.மேற்கிந்தியாவுடன் இலகுவெற்றி பெற்றும், போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது இந்தியா. பெற்ற ஆறுதல் வெற்றிக்காக மூன்று புள்ளிகள், கிடைத்தாலும், பாகிஸ்த்தானுடன் முதல் போட்டியில் தோல்வி, அடுத்த போட்டியில் மழையால் எந்த புள்ளிகளும் எடுக்க முடியாத நிலை, இவை அனைத்துமே, இந்தியாவிற்கு பாதகத்தை தான் ஏற்படுத்தியது.நேற்று நடைபெற்ற இரு போட்டிகளில் முதலில் ஆரம்பமான அவுஸ்த்திரேலியா - பாகிஸ்த்தான் இடையிலான போட்டி விறுவிறுப்புக்கு குறைவில்லை. இந்திய ரசிகர்களும் பார்த்துக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். பரம எதிரியாக இருந்தாலும், இந்த போட்டியில் பாகிஸ்த்தான் தான் வெற்ற வேண்டும் என பிரார்த்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலை இந்திய ரசிகர்களுக்கு. ஆனால் நான் தோற்றாலும் பரவாயில்லை. இந்தியா.... என நினைத்து விளையாடியதோ? பாகிஸ்த்தான்...! முதலில் துடுப்பெடுத்தாடியது பாகிஸ்த்தான். ஆரம்ப துடுப்பாட்டவீரர் கம்ரான் அக்மல் (44) விளாசினார். அடுத்தடுத்து வந்தவர்கள் அனைவரும் விறுவிறுவென ஆட்டமிழந்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்காக யூசப் (45), மிஸ்பா உல் ஹுக் ஜோடி (41) இணைய மீண்டும் ஆட்டம் சூடு பிடிக்கத்தொடங்கியது. இறுதியில் ஐம்பது ஓவர்கள் முடிவில் 205 ஓட்டங்களை குவித்தது பாகிஸ்த்தான்.பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்த்திரேலியாவினது ஆட்டமும் பிரகாசிக்க தவறியது. மைக் ஹஸ்ஸி மட்டும் 64 ஓட்டங்களை குவித்தார். 4 வது விக்கெட்டுக்கு பின்னர் களமிறங்கியவர்கள் வந்த வேகத்திலேயே பவிலியன் திரும், 45 வது ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து 187 ரன்களை மட்டுமே பெற்றிருந்தது அவுஸ்த்திரேலியா! லீ, நதன் ஹௌவ்ரிட்ஸ் இருவரும் ஒவ்வொரு பந்துக்கும் நிதானமாக ரன்களை குவிக்கத்தொடங்கினர். இறுதிப்பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், வேகமான எடுக்கப்பட்ட ரன் அவுஸ்த்திரேலிய வெற்றியை உறுதி செய்தது.ஆட்டநாயகனாக மைக் ஹஸ்ஸி தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே பாகிஸ்த்தான் அரையிறுதிக்குள் நுழைந்திருந்த நிலையில், அவுஸ்த்திரேலியாவும் செல்கிறது தற்போது. மற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 129 ஓட்டங்களையே குவித்திருக்க, இந்தியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடி இலகு வெற்றி பெற்றது. ஆனால் பயனில்லாமல் போனது. முதலாவது அரையிறுதிப்போட்டி, நாளை அவுஸ்த்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலும், இரண்டாவது அரையிறுதிப்போட்டி, நாளை மறுதினம் நியூசிலாந்து பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையிலும் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்கின்றன.

உங்கள் கருத்துக்கள்

சினிமாவுக்கு நிலா குட்பை!

சினிமாவுக்கு குட்பை சொல்கிறார் நடிகை [^] நிலா. ஜெகன்மோகினிதான் தான் நடித்த கடைசி படம் என்றும் அவர் கூறியுள்ளார். அன்பே ஆருயிரே படத்தில் நடிக்க சிம்ரனின் கால்ஷீட் கிடைக்காததால், அதே பஞ்சாபிலிருந்து எஸ்.ஜே.சூர்யாவால் அழைத்து வரப்பட்டவர் நிலா. அந்தப் படம் [^] நன்றாக ஓடியது. ஆனால் நிலாவின் மார்க்கெட் மதிப்புதான் கூடவில்லை. அதன் பிறகு சில படங்களில் அவர் நடித்தும் கூட அவருக்கு நட்சத்திர அந்தஸ்தே வரவில்லை. இடையில் ஆர்யாவுடன் காதல், படப்பிடிப்பிலிருந்து ஓடல் என்று சர்ச்சைகளிலும் சிக்கினார். தெலுங்கிலும் நடித்துப் பார்த்தார். எதுவும் தேறவில்லை. தற்போது நமீதா [^] நடிக்கும் ஜெகன்மோகினியில் நடித்துள்ளார். இந்த நிலையில் திரைப்படங்களில் நடிப்பதற்கு முழுக்குப் போட்டு விட்டாராம் நிலா. அதற்குப் பதிலாக நியூயார்க்கில் தான் நடத்தி வரும் ஹோட்டல் தொழிலில் கவனம் செலுத்தப் போகிறாராம். அந்த ஹோட்டலின் டெல்லி கிளையை விரைவில் திறந்து முழு நேர தொழிலதிபராக மாறத் திட்டமிட்டுள்ளாராம்.
Nila
எனக்கு நடிப்பு பொருத்தமானதாக இல்லை. இந்த திரைத் துறைக்கும் நான் பொருத்தமானவளாக இல்லை. எனக்கு நடிப்பு போரடித்து விட்டது. ஒருபோதும் நான் பெரிய ஸ்டார் ஆக வேண்டும் என்று நினைத்ததே இல்லை. ஜெகன்மோகினியுடன் எனது நடிப்பை நிறுத்துகிறேன். இதற்கு மேலும் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை. நியூயார்க்கில் உள்ள ஹோட்டலின் கிளையை டெல்லி [^]யில் திறக்கப் போகிறேன். அந்தத் தொழிலில் முழு கவனத்தையும் செலுத்தத் திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் நிலா.

திருட்டுப் பட்டத்தால் அழகிப் பட்டத்தைத் துறந்த சிங்கப்பூர் அழகி!

Miss Singapore has given up her crown

miss-singapore-2009.jpg திருட்டுப்பட்டம் கட்டிக்கொண்ட சிங்கப்பூர் அழகி தன்னுடைய அழகிப் பட்டத்தை துறந்தார்.

2009 ஆண்டுக்கான சிங்கப்பூர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரிஸ் லோ. ஆடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்குவதற்காக கிரெடிட் கார்டுகளை திருடினார் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இவருக்கு பொதுமக்களிடையே உண்டான எதிர்ப்பு காரணமாக, தன்னுடைய அழகிப் பட்டத்தை துறந்தார்.

சிங்கப்பூர் அழகி ரிஸ் லோ கடந்த வருடம் ஒரு மருத்துவமனையில் பணியாற்றியபோது மற்றவர்களின் கிரெடிட் கார்டுகளைத் திருடி தனக்குத் தேவையான ஆடைகள், அணிகலன்கள் உள்ளிட்டவற்றை வாங்கினார் என்று உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்திக்கட்டுரை வெளியிட்டது. கிரெடிட் கார்டுகளைத் திருடி அவர் வாங்கிய பொருட்களின் மதிப்பு சுமார் 3 லட்ச ரூபாய் என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையின் விளைவாக அழகிப் பட்டத்தைத் துறந்தார் ரிஸ் லோ.

சிங்கப்பூர் அழகிப் போட்டியை நடத்திய ERM World Marketing நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ரிஸ்லோ தனது அழகிப் பட்டத்தை துறந்ததை உறுதிப்படுத்தி இருக்கிறது. அத்துடன் டிசம்பர் மாதம் தென் ஆப்ரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக அழகிப் போட்டியில் பங்கெடுக்கும் வாய்ப்பையும் ரிஸ் லோ இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளது.

ரிஸ் லோ மீது திருட்டுப் பட்டம் மட்டுமல்லாது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய ஆங்கிலம் சகிக்கவில்லை என்றும், பிகினி என்ற சொல்லைக்கூட அவரால் சரியாக உச்சரிக்க இயலவில்லை என்றும், சிங்கப்பூரின் பாரம்பரியத்தை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் எந்த அம்சமும் அவரிடம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகத் தான் அவர் தனது அழகிப் பட்டத்தை துறந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

குஷ்பு குடும்பம் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது!

மலேசியாவில் குஷ்பு, அவருடைய கணவர் சுந்தர் சி. சென்ற படகு கவிழ்ந்ததால், நடுக்கடலில் ஒரு மணி நேரம் தவித்தார்களாம். சுந்தர் சி. நடிக்கும் ஒரு படத்தின் பாடல் காட்சி மலேசியாவில் படமாக்கப்பட்டு வந்தது. கணவர் சுந்தர் சி.யுடன் நடிகை குஷ்புவும், அவர்களின் 2 மகள்களும் மலேசியா சென்று இருந்தார்களாம். நேற்று, மலேசியாவில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரடாங் என்ற தீவில் படப்பிடிப்பு நடந்தது. சுந்தர் சி.யும், நடிகை சுருதியும் ஆடிப்பாடுவது போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர். குஷ்புவும், அவருடைய மகள்களும் கடற்கரையில் அமர்ந்து படப்பிடிப்பை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று பயங்கர புயல் காற்று வீச தொடங்கியது. அதைத் தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே படப்பிடிப்பு குழுவினர் அவசர அவசரமாக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, காமிரா மற்றும் கருவிகளுடன் ஒரு பெரிய படகில் மலேசியா [^]வை நோக்கி புறப்பட்டார்கள். வழியில், மழை அதிகரித்து, காற்று மிக வேகமாக வீசியது. மலேசிய கடற்கரையை அடைய அரை கிலோ மீட்டர் தூரம் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. படகில் இருந்த குஷ்பு உள்பட அனைவரும் கடலில் விழுந்தார்கள். அந்த இடத்தில், அதிர்ஷ்டவசமாக ஆழம் குறைவாக இருந்தது. அத்துடன் அருகில் ஒரு பாலமும் இருந்தது. அனைவரும் பாலத்தில் ஏறி அமர்ந்துகொண்டார்கள். பின்னர் வேறு ஒரு படகு மூலம் கரையை வந்தடைந்தார்கள். Kushboo with Daughters படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஓட்டலுக்கு திரும்பிய பிறகுதான், கடலில் 'கொந்தளிப்பு' ஏற்பட்ட தகவல் தெரிந்ததாம். எல்லோரும் உயிர் தப்பியதை எண்ணி, ஒருவரையொருவர் கட்டித்தழுவிக் கொண்டார்களாம். இதனால் அன்றைய படப்பிடிப்பு [^] ரத்து [^] செய்யப்பட்டதாம். இதெல்லாம் குறிப்பிட்ட அந்தப் படத்தின் பிஆர்ஓ பரப்பி வரும் செய்தி. வழக்கம்போல இது பப்ளிசிட்டி செய்தி [^]யா... அல்லது நிஜமாகவே நடந்ததா என்பது கடவுளுக்கே வெளிச்சம்!

வர இருக்கும் மொபைல்கள்

திருவிழா காலம் தொடங்கிவிட்டது. புதிய ஆடைகளுடன் வீட்டு சாதனங்களையும் புதியதாய் மாற்றும் வழக்கம் நம்மிடையே எப்போதும் உண்டு. மொபைல் போன்களைப் பொறுத்தவரை புதியதாய் என்ன வர இருக்கின்றன என்று அனைவரும் அறியும் வண்ணம், மொபைல் போன் நிறுவனங்கள் அறிவிப்பதில்லை. இருப்பினும் மற்ற நாடுகளில் அண்மையில் அறிமுகமான போன்கள், உலக அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்ட போன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சில போன்களை நாம் நிச்சயமாக இங்கு விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இவற்றின் சரியான விலை விற்பனைக்கு வருகையில் தெரியவரும்.

1.நோக்கியா என் 900:
வர இருப்பதில் முதல் இடத்தைப் பெறுவது நோக்கியா என் 900 ஆகும். இது என் 800 போனின் தொடர்ச்சி என யாரும் எண்ண வேண்டாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஓப்பன் சோர்ஸ் அடிப்படையிலான மேமோ(Maemo) ஆகும். இதன் பிரவுசர் ARMCortexA8 மிக வேகமாக இயங்கும் திறன் கொண்ட புதிய பிரவுசர். இதில் தரப்படும்OpenGL ES 2.0 கிராபிக்ஸ் அக்ஸிலரேஷன், இந்த போனில் கிடைக்கும் காட்சிகளை முற்றிலும் புதிய அனுபவமாக்கிக் காட்டும். இதன் திரை 3.5 அங்குல டச் ஸ்கிரீன் திரை. ஸ்லைடாகி வரும் குவெர்ட்டி கீ போர்டு தரப்படுகிறது. 3ஜி போனாகக் கிடைக்கும் இதில் எட்ஜ் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இணைந்து நெட்வொர்க் இணைப்பை எளிதாக்குகின்றன. Maemo பிரவுசர் மொஸில்லா தொழில் நுட்பத்தினால் இயக்கப்படுவது. அடோப் பிளாஷ் 9.4 தொகுப்பின் சப்போர்ட் தரப்படுகிறது. இதன் ஸ்டோரேஜ் 32 ஜிபி; இதனை 48 ஜிபி வரை நீட்டிக்கலாம். 3.5 மிமீ இயர்போன், ஹேண்ட்ஸ் பிரீ சாக்கெட், கார்ல் ஸெய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் டெஸ்ஸார் லென்ஸ் கொண்ட 5 மெகா பிக்ஸெல் ஆட்டோ போகஸ் கேமரா, டூயல் எல்.இ.டி. பிளாஷ் இணைந்து தரப்படுகிறது. எப்.எம் ரேடியோ மற்றும் ட்ரான்ஸ்மீட்டர் தரப்படுகிறது. இதன் விலை மார்க்கட்டிற்கு போன் வந்த பின்னரே தெரியும்.
2. எல்.ஜி. பி.எல். 40 சாக்லேட்:
எல்ஜி நிறுவனத்தின் சாக்லேட் மொபைல் போன் வரிசையில், அண்மையில் வெளியான மாடல் பி.எல். 40ஆகும். தன் வழக்கமான எஸ் கிளாஸ் யூசர் இன்டர்பேஸிலிருந்து சற்று விலகி மல்ட்டி டச் திறனுடன் இந்த போனை எல்ஜி வடிவமைத்துள்ளது. இந்த ஸ்லிம்மான, ஆனால் சற்று உயரமான, போனில் 4.01 அங்குல டச் ஸ்கிரீன் உள்ளது. இதன் வைட் ஸ்கிரீன் ரெசல்யூசன் 345 x 800 பிக்ஸெல்களாகும். இது ஒரு 3ஜி போன். நெட்வொர்க் இணைப்பிற்கு எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. வை–பி நெட் இணைப்பு, A2DP இணைந்த புளுடூத் 2.1, யு.எஸ்.பி. 2, ஏ–ஜிபிஎஸ் சப்போர்ட் கொண்ட ஜி.பி.எஸ்., 1 ஜிபி ஸ்டோரேஜ், இயர்போன், ஹேண்ட்ஸ் பிரீ சாக்கெட், 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா, இருவகை வீடியோ பார்மட் சப்போர்ட், எப்.எம். ரேடியோ மற்றும் ட்ரான்ஸ்மீட்டர், டோல்பி மொபைல் சவுண்ட் இஞ்சின் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
3. சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா எக்ஸ் 2.
இந்த வரிசையில் வந்த முந்தைய போன்களைக் காட்டிலும் இது சற்று மேம்பாடு கொண்ட போன். ஸ்லிம்மாகவும் பார்ப்பதற்கு நளினமாகவும் இதன் தோற்றம் உள்ளது. இதன் கருப்பு நிறம் இதனை மிக அழகாகக் காட்டுகிறது. தரப்படும் குவெர்ட்டி கீ போர்டும் இணைந்து அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ் மொபைல் 6.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வெளிவரும். வழக்கமான வசதிகளுடன் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வசதிகள் பின்வருமாறு:
போனில் 3.2 அங்குல டச் ஸ்கிரீன் உள்ளது. இதன் ரெசல்யூசன் 400 x 800 பிக்ஸெல்களாகும். ஸ்லைடாகி வரும் குவெர்ட்டி கீ போர்டு, ஆப்டிகல் ட்ரேக் பேட், வை–பி நெட் இணைப்பு, 3ஜி திறனுடன் எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் சப்போர்ட், A2DP இணைந்த புளுடூத் 2.1, யு.எஸ்.பி. 2, ஏ–ஜிபிஎஸ் சப்போர்ட் கொண்ட ஜி.பி.எஸ்., இயர்போன், ஹேண்ட்ஸ்பிரீ சாக்கெட், 8 மெகா பிக்ஸெல் திறன் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா, வீடியோ சப்போர்ட், மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன.
4. சாம்சங் கார்பி (Samsung Corby):
மிகச் சிறிய அழகான மொபைல் போன். மத்திய நிலையில் ரூ.10,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் போன். டச் ஸ்கிரீன் கொண்டது.இதன் வண்ணங்களைப் பார்க்கையில் பெண்கள் விரும்பும் தன்மை இதற்கு உள்ளது எனலாம். அல்லது சாம்சங் மகளிரை மனதில் வைத்து இதனை வடிவமைத்தது எனலாம். இதில் 2.8 அங்குல டச் ஸ்கிரீன், 240 x 320 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்ட திரை,எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் சப்போர்ட், A2DP இணைந்த புளுடூத் 2.1, யு.எஸ்.பி. 2, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், 2 மெகா பிக்ஸெல் கேமரா மற்றும் எப்.எம். ரேடியோ தரப்படுகின்றன.
5. எச்.டி.சி. டாட்டூ ((HTC Tattoo) :
ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் உள்ள மொபைல் போன்களில் இன்னும் எச்.டி.சி. நிறுவனப் போன்களே முன்னணியில் உள்ளன. மாதம் ஒரு மாடலை இந்நிறுவனம் வெளியிடுகிறது. இதன் பேனலை நம் விருப்பப்படி மாற்றிக் கொண்டு பயன்படுத்தலாம் என்பதால் இந்த பெயர் தரப்பட்டுள்ளது. மேலும் இதனாலேயே இளைஞர்கள் இதனை விரும்பலாம்.
மேலும் ஒரு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட குறைந்த விலை போனாக இது இருப்பதால், புதிய முயற்சிகளை மேற்கொள்ள விரும்புபவர்களும் இதனைப் பயன்படுத்த எண்ணுவார்கள். இதில் 2.8 அங்குல டச் ஸ்கிரீன், 240 x 320 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்ட திரை,3ஜி சப்போர்ட், எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் சப்போர்ட், வை–பி இணைப்பு, A2DP இணைந்த புளுடூத் 2.1, யு.எஸ்.பி. 2, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட்,ஏ–ஜிபிஎஸ் சப்போர்ட் கொண்ட ஜி.பி.எஸ்., 3 மெகா பிக்ஸெல் கேமரா மற்றும் எப்.எம். ரேடியோ தரப்படுகின்றன. விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்னும் பல மொபைல் போன்கள் விழாக் காலத்தினை ஒட்டி வெளியிடப்படலாம். மேலே கூறப் பட்டவை உறுதியாகத் தெரிந்த நிறுவனப் போன்களாகும்.

26 செப்டம்பர் 2009

சினேகாவால் அடிவாங்கிய ரியல் எஸ்டேட் அதிபர்!

சினேகாவைப் பார்க்கப் போய் தேவையில்லாமல் அடி வாங்கிய ரியல் எஸ்டேட் அதிபர் திருச்சிக்கு வந்த நடிகை சினேகாவை பார்க்க தனது மனைவி விரும்பியதால், சாலையோரம் வண்டியை நிறுத்தி சினேகாவைப் பார்க்கப் போய், சினேகா கலந்து கொண்ட நகைக் கடை பாதுகாவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர். திருச்சி சின்னகடை வீதியில் பிரபல நகை கடையின் 2 -ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் நடிகை சினேகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சினோகாவை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் [^] குழுமியிருந்தனர். அப்போது, அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் ஒருவரை ஒருவர் முண்டியடித்தது. அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் நடிகை சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடிகை சினேகா கடையின் நிறுவன அதிபரிடம் புகார் செய்தார். நீல நிற சட்டை போட்டிருந்த ஒருவர் தனது இடுப்பைக் கிள்ளியதாக கூறியுள்ளார் சினேகா. இதனையடுத்து, கடை காவலாளிகள் கும்பலில் உள்ள நீல நிற சட்டை அணிந்த நபரை தேடி அடித்து உதைத்தனர். அப்போது அங்கு, பாதுகாப்புக்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவராமனும், மற்றும் போலீசார் அந்த வாலிபரை அடிப்பதை தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி அந்த நபருக்கு அடி உதை விழுந்தது. இதனையடுத்து, சினேகா அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு சென்றார். இதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய கடைக் காவலாளிகள் மூன்று பேரையும், அடிபட்டவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் அடிபட்ட நபர் பெயர் சுரேஷ் குமார் என்பதும், திருச்சி காவேரி நகரைச் சேர்ந்தவர் என்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ்குமாருடன் வந்திருந்த அவரது மனைவி சர்மிளா காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், நான் எனது கணவருடன் 24-9-2009 அன்று காலை சின்னக்கடை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது அங்கு நடிகை சினேகா வந்து இருப்பதாக சொன்னார்கள். அவரை பார்க்கலாம் என்று நான் சொன்னதால் எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார். நாங்கள் ரோட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்போது நகைக்கடையில் வேலை பார்க்கும் 3 பேர் வேகமாக ஓடி வந்து எனது கணவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தார்கள். உடனே நான் சத்தம் போட்டேன். அதன் பிறகு எனது கணவரை விட்டு விட்டனர். எனது கணவரை தாக்கிய 3 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்ஸ என்று கூறியிருந்தார். இந்தப் புகாரின் பேரில் காவலாளிகள் சார்லஸ் (37) அலங்கராஜ் (27) சரவணன் (31) ஆகிய 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சர்மிளா குமுறலுடன் கூறுகையில், இச்சம்பவத்தால் எனது கணவர் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். தவறு செய்யாத என் கணவர் மீது தாக்குதல் நடத்த காரணமான, நடிகை சினேகா மீது தக்க நடவடிக்கை [^] எடுக்க வேண்டும்.
Sneha
மன உளைச்சலால் என் கணவர் ஏதாவது செய்து கொண்டால், அதற்கு சினேகா தான் பொறுப்பு. என் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் [^] குறித்து சினேகா மீது மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன் என்றார் ஆவேசமாக. நடிகையை வேடிக்கைப் பார்க்கப் போய் தேவையில்லாமல் அடி வாங்கிய சுரேஷ்குமாரால் திருச்சி [^]யில் பரபரப்பு ஏற்பட்டது.

கணிணிக்கு தேவையான அனைத்து வன்பொருள் ட்ரைவர்களை பதிவிறக்கிட

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மெழுகுச் சிலை

இரட்டை ஆஸ்கர் விருது பெற்ற இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மெழுகுச் சிலையை உருவாக்கி வருகிறார் கேரளாவைச் சேர்ந்த கலைஞர் [^] சுனில். அதேபோல ஆஸ்கர் விருது [^] பெற்ற கேரள சவுண்ட் என்ஜீனியர் ரெசூல் பூக்குட்டியின் மெழுகுச் சிலையையும் வடித்துள்ளார் சுனில்.
AR Rahman
இதேபோல புகழ் பெற்ற 35 பேரின் சிலைகளை உருவாக்கி வரும் அவர், இவற்றை மும்பையில் ஒரு இடத்தில் மியூசியத்தை உருவாக்கி அங்கே வைக்கப் போகிறாராம். இந்த சிலைகளை வடித்து வருபவரான சுனில் கூறுகையில், மு்ம்பையில் நான் வருகிற டிசம்பர் மாதம் சர்வதேச பிரபலங்களின் மெழுகுச் சிலை மியூசியத்தைத் தொடங்கப் போகிறேன். அங்கு இந்த சிலைகள் வைக்கப்படும். முதலில் ரெசூல் பூக்குட்டியின் சிலை வைக்கப்படும். கன்னியாகுமரியில் உள்ள பே வாட்ச் மெழுகுச் சிலை மி்யூசியத்துடன் இதுதொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளேன் என்றார் அவர்.

எளிதாய் சம்பாதிக்க 7 வழிகள்

இன்றைய சூழ்நிலையில் எளிய முறையில் சம்பாதிக்க பைனான்ஸ் கம்பெனி தான் சிறந்த வழி. ஒரு பைனான்ஸ் கம்பெனி தொடங்குவது முதல் மொத்த காசையும் ஆட்டயப் போட்டுக்கிட்டு எஸ்கேப் ஆவது வரை ஏதோ என்னால் முடிந்த யோசனைகள்

தேவையான பொருட்கள்: நல்ல கட்டிடம் : 1 இணையதளம்: 1 மேனேஜர்: 2 அல்ல்து 3 ரிசப்சனிஸ்ட் :2 (அழகாக இருப்பது அவசியம்) தொலைபேசி இணைப்புகள் : 3 அல்லது 4 செக்யூரிட்டிகள் : 2 மேசை நாற்காலிகள்: தேவையான அளவு லர்விளக்குகள் : தேவையான அளவு

செய்முறை :

1) முதலில் நகர்புறத்தின் அல்லது ஒதுக்குப் புறமாக எவ்வளவு கேட்டாலும் ட்வான்ஸ் கொடுத்து ஒரு பிரம்மாண்டக் கட்டிடத்தை வாடகைகுப் பிடித்துக் கொள்ளவும்.அதன்பிறகு கொஞ்சம் செலவுசெய்து கட்டிடத்தின் வெளியே ஸ்டீல் மோல்டிங் செய்து கொள்ளவும்

2) மேஜை நாற்காலிகள் நாள் வாடகைக்குப் பிடித்து வைத்துக் கொள்ளவும். அதற்கும் வாடகை கொடுக்கத் தேவையிருக்காது. எஸ்கேப் ஆகி போகும் போது அதை வைத்துவிட்டுப் போவதால் ஏமாந்தவர்கள் அதைத்தூக்கி அடித்து விளையாட வசதிப்படும்.

3)சாப்ட்வேர் படித்தவர்கள் புதிய நபர்கள் தேவை என பேப்பரில் விளம்பரம் செய்து அவர்களில்நல்லதாகப் 10 பேரை செகச்ட் செய்து பின்னர் அவர்களிடம் நமது ஜில்பான்சி கம்பெனிக்கு ஒரு நல்ல இணையத் தளம் வடிவமைத்துத் தருமாறும் அதை வைத்துத் தான் அவர்களின் திறனை கண்டு பின்னர் அப்பாயின்மென்ட் லட்டர் தருவதாகவும் சொல்லி நல்ல கலர்கலராக வெப்சைட் ஓப்பன்செய்துகொள்ளவும்.அவர்களுக்கும் அல்வா தான். அதேபோல நல்ல அடிவாங்கும் திறன் கொண்ட அப்பாவிகள் சிலரை ஆபீஸ் பணியாளர்களாக அமர்த்த வேண்டும்.கடைசியில் அவர்கள் தான் மாட்டிக் கொண்டு முழிப்பார்கள்.

4) நமீதா, நயன்தாரா போன்ற நல்ல கலர் பிகர்களைத் தேர்வு செய்து அவர்களை ரிசப்சனிஸ்ட் வேலைக்கு அமர்த்த வேண்டும்.அவர்களுக்கு எதிராக ரிசப்சனில் சோபா செட்டுகளைப் போட்டுவிட்டால் போதும் கூட்டம் நாளுக்குநாள் அதிகரிக்கும்.

5)பிரைவேட் செக்யூரிட்டி சென்டரில் நல்ல ஆஜானுபாகுவான 2 பேரை கேட்டு வாங்கி அருகிலேயே வைத்துக் கொள்ளவும். இதன் மூலம் பணத்தை திருப்பிக்கேட்டு சண்டை போட நினைத்துக் கொண்டு வருபவர்கள் ஜம்ப் ஆகிவிடுவார்கள்.

6)முதலில் வைப்புத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதாமாதம் ரூபாய் 25 ஆயிரம், வாரம் ஒருவருக்கு குலுக்கல் முறையில் ஹோண்டா சிட்டி கார் என 10 மாதங்களுக்குத் தரப்படும் என டிவி,பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யலாம். இலவசம் என்றாலே போதும் நம் மக்கள் எதைப் பத்தியும் கண்டுகொள்ளாமல் தங்கள் காசுகளை அள்ளிக்கொண்டு வந்து கொட்டி விடுவார்கள்.

7) செலவைக் கணக்கில் கொள்ளாமல் விளம்பரங்களையும் ஸ்பான்சர்களை அள்ளி இறைக்கவும்.அது மட்டுமின்றி ஒரு நபர் மற்றொரு நபரை சேர்த்துவிட்டால் ஒரு தங்க நாணயம் எனஅள்ளிவிட வேண்டும் . நமது ஆட்களில் ஒரு 10 பேருக்கு தங்க நாணயக் கொடுப்பது போல போட்டோ எடுத்து அதை ரிசப்சனில் மாட்டி வைத்தால் போதும். இதனால் நமது ஜில்பான்சிகம்பெனியின் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை குபுகுபுவென உயர்ந்துவிடும்.

இது போல செய்தால் ஒரு 2 மாதத்தில் எப்படியும் 100 கோடியை எட்டிவிடலாம். அத்தோடு அதை தூக்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடலாம். இதற்குப் பிறகு மட்டுமே சுதாரிக்கும் நம் தமிழக மக்கள் பின்னர் வாயிலும் வயித்திலும் அடித்துக் கொண்டு டிவியில் பேட்டி கொடுப்பார்கள். பிறகு ஏமாந்தோர் அசோசியேசன் அமைத்துப் புகார் கொடுப்பார்கள். பின்னர் காவல்துறை வலைவீசித் தேடும்.எனவே நாம் குளங்களிலும் கடல்களிலும் குளிக்காமல் இருப்பது நலம்.

ஆயிரம் கலைமகள் சபா, ஆயிரம் அனுபவ் குரூப் என கோடி கோடியாய் சுருட்டி பாடம்புகட்டினாலும் நம் தமிழ்மக்களுக்கு அறிவே வராது. நாளைக்கே நீங்கள் ஒரு பைனான்ஸ் கம்பெனிஆரம்பித்து டபுள் வட்டி தருவதாய் சொன்னால் கூட அதற்கென ஒரு கூட்டம் இருக்கிறது.ஆலோசனை மட்டும் தான் நான் சொல்ல முடியும், மத்தத நீங்க தான் செய்யனும். அப்படி யாராவதுஇதை பாலோ செய்து ஒரு நல்ல தொகை அடித்தால் தயவுசெய்து எனக்கும் ஒரு ஷேர் தருமாறுபணிவோடு வேண்டுகிறேன். பணம் கிடைத்தால் நான் வாங்கிக் கொள்கிறேன், வேறு ஏதாவதுகிடைத்தால்?? என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.., விடு ஜூட்!!!!!!!!!!

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com