Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

02 அக்டோபர் 2009

வர இருக்கும் மொபைல்கள்

திருவிழா காலம் தொடங்கிவிட்டது. புதிய ஆடைகளுடன் வீட்டு சாதனங்களையும் புதியதாய் மாற்றும் வழக்கம் நம்மிடையே எப்போதும் உண்டு. மொபைல் போன்களைப் பொறுத்தவரை புதியதாய் என்ன வர இருக்கின்றன என்று அனைவரும் அறியும் வண்ணம், மொபைல் போன் நிறுவனங்கள் அறிவிப்பதில்லை. இருப்பினும் மற்ற நாடுகளில் அண்மையில் அறிமுகமான போன்கள், உலக அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்ட போன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சில போன்களை நாம் நிச்சயமாக இங்கு விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இவற்றின் சரியான விலை விற்பனைக்கு வருகையில் தெரியவரும்.

1.நோக்கியா என் 900:
வர இருப்பதில் முதல் இடத்தைப் பெறுவது நோக்கியா என் 900 ஆகும். இது என் 800 போனின் தொடர்ச்சி என யாரும் எண்ண வேண்டாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஓப்பன் சோர்ஸ் அடிப்படையிலான மேமோ(Maemo) ஆகும். இதன் பிரவுசர் ARMCortexA8 மிக வேகமாக இயங்கும் திறன் கொண்ட புதிய பிரவுசர். இதில் தரப்படும்OpenGL ES 2.0 கிராபிக்ஸ் அக்ஸிலரேஷன், இந்த போனில் கிடைக்கும் காட்சிகளை முற்றிலும் புதிய அனுபவமாக்கிக் காட்டும். இதன் திரை 3.5 அங்குல டச் ஸ்கிரீன் திரை. ஸ்லைடாகி வரும் குவெர்ட்டி கீ போர்டு தரப்படுகிறது. 3ஜி போனாகக் கிடைக்கும் இதில் எட்ஜ் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இணைந்து நெட்வொர்க் இணைப்பை எளிதாக்குகின்றன. Maemo பிரவுசர் மொஸில்லா தொழில் நுட்பத்தினால் இயக்கப்படுவது. அடோப் பிளாஷ் 9.4 தொகுப்பின் சப்போர்ட் தரப்படுகிறது. இதன் ஸ்டோரேஜ் 32 ஜிபி; இதனை 48 ஜிபி வரை நீட்டிக்கலாம். 3.5 மிமீ இயர்போன், ஹேண்ட்ஸ் பிரீ சாக்கெட், கார்ல் ஸெய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் டெஸ்ஸார் லென்ஸ் கொண்ட 5 மெகா பிக்ஸெல் ஆட்டோ போகஸ் கேமரா, டூயல் எல்.இ.டி. பிளாஷ் இணைந்து தரப்படுகிறது. எப்.எம் ரேடியோ மற்றும் ட்ரான்ஸ்மீட்டர் தரப்படுகிறது. இதன் விலை மார்க்கட்டிற்கு போன் வந்த பின்னரே தெரியும்.
2. எல்.ஜி. பி.எல். 40 சாக்லேட்:
எல்ஜி நிறுவனத்தின் சாக்லேட் மொபைல் போன் வரிசையில், அண்மையில் வெளியான மாடல் பி.எல். 40ஆகும். தன் வழக்கமான எஸ் கிளாஸ் யூசர் இன்டர்பேஸிலிருந்து சற்று விலகி மல்ட்டி டச் திறனுடன் இந்த போனை எல்ஜி வடிவமைத்துள்ளது. இந்த ஸ்லிம்மான, ஆனால் சற்று உயரமான, போனில் 4.01 அங்குல டச் ஸ்கிரீன் உள்ளது. இதன் வைட் ஸ்கிரீன் ரெசல்யூசன் 345 x 800 பிக்ஸெல்களாகும். இது ஒரு 3ஜி போன். நெட்வொர்க் இணைப்பிற்கு எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. வை–பி நெட் இணைப்பு, A2DP இணைந்த புளுடூத் 2.1, யு.எஸ்.பி. 2, ஏ–ஜிபிஎஸ் சப்போர்ட் கொண்ட ஜி.பி.எஸ்., 1 ஜிபி ஸ்டோரேஜ், இயர்போன், ஹேண்ட்ஸ் பிரீ சாக்கெட், 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா, இருவகை வீடியோ பார்மட் சப்போர்ட், எப்.எம். ரேடியோ மற்றும் ட்ரான்ஸ்மீட்டர், டோல்பி மொபைல் சவுண்ட் இஞ்சின் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
3. சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா எக்ஸ் 2.
இந்த வரிசையில் வந்த முந்தைய போன்களைக் காட்டிலும் இது சற்று மேம்பாடு கொண்ட போன். ஸ்லிம்மாகவும் பார்ப்பதற்கு நளினமாகவும் இதன் தோற்றம் உள்ளது. இதன் கருப்பு நிறம் இதனை மிக அழகாகக் காட்டுகிறது. தரப்படும் குவெர்ட்டி கீ போர்டும் இணைந்து அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ் மொபைல் 6.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வெளிவரும். வழக்கமான வசதிகளுடன் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வசதிகள் பின்வருமாறு:
போனில் 3.2 அங்குல டச் ஸ்கிரீன் உள்ளது. இதன் ரெசல்யூசன் 400 x 800 பிக்ஸெல்களாகும். ஸ்லைடாகி வரும் குவெர்ட்டி கீ போர்டு, ஆப்டிகல் ட்ரேக் பேட், வை–பி நெட் இணைப்பு, 3ஜி திறனுடன் எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் சப்போர்ட், A2DP இணைந்த புளுடூத் 2.1, யு.எஸ்.பி. 2, ஏ–ஜிபிஎஸ் சப்போர்ட் கொண்ட ஜி.பி.எஸ்., இயர்போன், ஹேண்ட்ஸ்பிரீ சாக்கெட், 8 மெகா பிக்ஸெல் திறன் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா, வீடியோ சப்போர்ட், மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன.
4. சாம்சங் கார்பி (Samsung Corby):
மிகச் சிறிய அழகான மொபைல் போன். மத்திய நிலையில் ரூ.10,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் போன். டச் ஸ்கிரீன் கொண்டது.இதன் வண்ணங்களைப் பார்க்கையில் பெண்கள் விரும்பும் தன்மை இதற்கு உள்ளது எனலாம். அல்லது சாம்சங் மகளிரை மனதில் வைத்து இதனை வடிவமைத்தது எனலாம். இதில் 2.8 அங்குல டச் ஸ்கிரீன், 240 x 320 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்ட திரை,எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் சப்போர்ட், A2DP இணைந்த புளுடூத் 2.1, யு.எஸ்.பி. 2, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், 2 மெகா பிக்ஸெல் கேமரா மற்றும் எப்.எம். ரேடியோ தரப்படுகின்றன.
5. எச்.டி.சி. டாட்டூ ((HTC Tattoo) :
ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் உள்ள மொபைல் போன்களில் இன்னும் எச்.டி.சி. நிறுவனப் போன்களே முன்னணியில் உள்ளன. மாதம் ஒரு மாடலை இந்நிறுவனம் வெளியிடுகிறது. இதன் பேனலை நம் விருப்பப்படி மாற்றிக் கொண்டு பயன்படுத்தலாம் என்பதால் இந்த பெயர் தரப்பட்டுள்ளது. மேலும் இதனாலேயே இளைஞர்கள் இதனை விரும்பலாம்.
மேலும் ஒரு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட குறைந்த விலை போனாக இது இருப்பதால், புதிய முயற்சிகளை மேற்கொள்ள விரும்புபவர்களும் இதனைப் பயன்படுத்த எண்ணுவார்கள். இதில் 2.8 அங்குல டச் ஸ்கிரீன், 240 x 320 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்ட திரை,3ஜி சப்போர்ட், எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் சப்போர்ட், வை–பி இணைப்பு, A2DP இணைந்த புளுடூத் 2.1, யு.எஸ்.பி. 2, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட்,ஏ–ஜிபிஎஸ் சப்போர்ட் கொண்ட ஜி.பி.எஸ்., 3 மெகா பிக்ஸெல் கேமரா மற்றும் எப்.எம். ரேடியோ தரப்படுகின்றன. விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்னும் பல மொபைல் போன்கள் விழாக் காலத்தினை ஒட்டி வெளியிடப்படலாம். மேலே கூறப் பட்டவை உறுதியாகத் தெரிந்த நிறுவனப் போன்களாகும்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com