Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

14 பிப்ரவரி 2009

Ten blasting domesticostcutters for Valentines day

The count down has began. Many of you might have done nothing so far to present your lover, wife (in that order) with a gift for the Valentines day that is very close by and will close by midnight on 14 February 2009.

Since I am also one like you, I squeezed the gray matter below the skull and scratched the gray matter above the skull (I have gray matter above the skull since I don’t lie or dye - I live) thinking of ways and means to convey the “no means” story to my lover and wife (in my case they are one and the same, I don’t know about you).

As most of us do these days, I ran to the 24×7x365 pharmacy for remedy. Yes! I Googled if there are helpful tips to tide over this expense Tsunami called Valentines Day Gift. Google, didn’t yield to my search. Thus, I understood, it is a larger problem than one would have imagined.

If you are married, it is a double whammy. You use your card to buy an expensive gift for your wife. At the same time, she will use the add on card you gifted her in one of those “I am still in love with you” Valentines’ days to buy an “expensier” gift for you so she remained “one up” on you.

(Note: Expensier is a word that has not YET entered the dictionary. It is brand new; released by me for this Valentines day. My another hobby is coining new words. I have been pursuing this hobby since my school days. Ask my English Teachers. They had to release a new dictionary for all the old words I re-coined with new spelling. A lot of times, I was industrious enough to come up with multiple spellings for the same word thus creating new words in the process. My teachers opined that I had good chemistry with English which showed that not only me, even they, showed signs of not being good in science. One more example for me being good at coining new words is in the title of this post!).

1. Tell her that you wanted to buy her a red hot red heart, but had to by-pass it as red was replaced by pink everywhere at the office and it was difficult to be in the pink of cheers

2. Tell her that you lost the vallet (with all the plastic) and hence had to deactivate all the cards. Ensure that you have also run out of check books and the ATM card is also lost along with the vallet. You can’t take any chances when it comes to your wife. They think much better in a crisis than a man. Especially crisis related to gifts.

3. Tell her it is not that you didn’t buy a gift for no rhyme or reason and you can always recite a rhyme to her for the valentines day. (In fact you can recite the reasons in this post as rhymes)

4.You can buy some Amul Chocolates and give them to her; after all, it is a gift for someone you love. From the picture below you can see that these chocolates also convey some message :)

ad-choc2

5. Tell her you were being followed to the gift shop by Sri Ram Sena and Shiv Sena and hence had to abandon all red ideas and instead turn to brown (chocolates). It is difficult be brave even if you are Shiva or Rama if you are followed by their Sena.

6. If Valentines is all about being red, you can take a print out of your stock portfolio statement and give that to her as a gift “stocks bought for you for “Valentines Day”. (I am sure it will have nothing other than red, unless you are good at lying, in which case, this post will not be of any add on value to you; you can handle the lying part better than using these reasons) You can also see her face turn red which is good for escaping from Valentines Day gift issue.

7. Pick up a old empty carton box from your office (you might have kept it aside to clean your desk in case of pink slip) paste red color paper over it and gift to her with a big smile “to keep all the previous valentines day gifts” in that

8. Open a new blog site with ILOVE”yourlover/wife name”.wordpress.com and copy paste a romantic email forward that you received and say you made your love immortal (be careful to remove the mail id and signature if the mail was from your girlfriend and you are dedicating the blog to your wife). This can be a perpetually working idea if you are lucky enough to get your wife / lover changed between two valentines day.

9. You can buy a pack of heart shaped baloons for less than US $ 1 (about Rs.50) and blow them with her for decorating the house for Valentines day. That will also ensure you have a blast while blowing baloons and after.

10. If you are too broke, you can just buy one baloon give it to her and tell her to blow the baloon saying you want to have her breathe inside that baloon. (That will compensate for anything you didn’t do and any sin you did)

Despite all these ideas, if your wife still gets upset and decides to desert you, don’t be disheartened. There is no better way to achieve reduction in expenses than this. Plus, you get a chance to replace the old model of the wife with a new model wife when things brighten up. If you are lucky, you can even get a “new model” as your wife to shower gifts until next recession hits. At which point you can do a Obama and seek for change.

13 பிப்ரவரி 2009

காதலர் தின நல்வாழ்த்துக்கள்!!

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்!! நான் திருமணத்திற்குப் பின்னான காதலை நம்புபவன். என்னை அலைக்கழிக்கும் என் காதல் தேவதைக்கு.. இந்த பதிவு சமர்ப்பணம்!!!

நீ எங்கிருக்கிறாய்.. எதுவும்

எனக்குத் தெரியாது..

உனக்காக நான் காத்திருக்கப்

போவதுமில்லை.. இருந்தும்..

அன்பே.. எனக்காய்

நீ வரும்வரை.. உன்னை நான்

காதலித்துக் கொண்டிருப்பேன்!!! *

***********

என்றேனும்... நீ வந்து
பெற்றுக் கொள்வாய்
என்னும் நம்பிக்கையில்
சேமித்து வைக்கிறேன்
உனக்கான...
பரிசுப்பொருட்களையும்
என் காதலையும்!!
**********

11 பிப்ரவரி 2009

சென்னையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறப்பான வரவேற்பு

சிறந்த இசையமைப்பாளருக்கான பாஃடா விருதை வென்ற ஏ.ஆர். ரஹ்மான் இன்று இரவு சென்னை திரும்புகிறார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு நிகராக கருதப்படும் "கோல்டன் குளோப்' விருதை வென்றார். ஆஸ்கர் விருதுக்காகவும் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மான் பிரிட்டன் திரைப்படத் துறையால் வழங்கப்படும் சர்வதேச விருதான பாஃடா விருதையும் வென்றார்.

இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 100 கோடி இந்தியர்களின் பிரார்த்தனையே தனக்கு விருது கிடைக்க காரணம் என்று ரஹ்மான் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று சென்னை திரும்புகிறார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. கோல்டன் குளோப் விருது வென்று சென்னை திரும்பிய போது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் பொறுப்பை உதறுகிறார் ஜெயவர்தனே

இலங்கை அணித் தலைவர் மகேலா ஜெயவர்தனே வரும் பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்குப் பிறகு அணித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 1- 4 என்று படு தோல்வியடைந்ததால் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது ராஜினாமா முன்மொழிவை ஏற்றுக் கொள்வதாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை அதிகாரி துலிப் மென்டிஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தொடர் முடிந்தவுடன் புதிய அணித் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று அவர் கூறினார். இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் சேர்க்கப்படாத ஜெயவர்தனே இன்று காலை அணித் தேர்வாளர்களை அழைத்து தனது இந்த முடிவை அறிவித்தார். சில நாட்களாகவே இது குறித்து தான் யோசித்து வந்ததாகவும், தற்போது 2011 உலகக் கோப்பைக்கு இன்னமும் 18 மாதங்கள் இருக்கும் நிலையில் புதிய அணித் தலைவருக்கு இலங்கை அணியை உலகக் கோப்பைக்கு தயார் செய்ய போதிய அவகாசம் உள்ளது என்று தான் கருதுவதாக ஜெயவர்தனே தெரிவித்தார். இவருக்கு பிறகு குமார் சங்கக்காரா கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. 2004ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் அணித் தலைவராக பொறுப்பேற்ற மகேலா ஜெயவர்தனே, பிறகு 2006ஆம் ஆண்டு டெஸ்ட் அணித் தலைவர் மர்வான் அட்டப்பட்டு காயமடைந்திருந்ததால் டெஸ்ட் அணிக்கும் கேப்டன் பொறுப்பில் தேர்வு செய்யப்பட்டார். 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை இலங்கை நுழனிந்தது இவரது அணித் தலமையின் கீழ் நிகழ்ந்த குறிப்பிடத் தகுந்த சாதனையாகும். இவரது தலைமையின் கீழ் வெளி நாடுகளில் இலங்கையின் ஆட்டம் மேம்பாடு அடைந்தது. இவர் தலைமையில் இங்கிலாந்து, நியூஸீலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய தொடர்களை சமன் செய்தது. மொத்தம் 26ப் டெஸ்ட் போட்டிகள் தலைமை வகித்த ஜெயவர்தனே அதில் 15 போட்டிகளை வென்றுள்ளார். 7 போட்டிகளைத் தோற்றுள்ளார். ஒரு நாள் போட்டிகளிலும் ஜெயவர்தனே தலைமையின் கீழ் 94 போட்டிகளில் 54 போட்டிகளை இலங்கை வென்றுள்ளது. 35 போட்டிகளை தோற்றுள்ளது. இவரது தலைமையில்தான் கடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை கோப்பையை வென்றது.

10 பிப்ரவரி 2009

சிங்கப்பூரை அதிரவைத்த தைப்பூசம் (படங்கள்)

தமிழகத்தில் கொண்டாடப்படும் தைப்பூசத்திற்கு சற்றும் குறைவில்லாத கொண்டாட்டங்கள் பல வெளிநாடுகளில் கொண்டாடப்படுகிறது. அதுவும் தமிழர்கள் அதிகம் நிறைந்த சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கேட்கவே வேண்டாம். இங்கே சிங்கப்பூர் ல் கொண்டாடப்பட்ட தைப்பூச கொண்டாட்டங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இங்கு குட்டி இந்தியாவில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து காவடி புறப்பட்டு டோபி காட் என்ற இடத்தில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோவிலை அடைகிறது, குறைந்த பட்சம் மூன்று கிலோ மீட்டர் தூரம் இருக்கும். வழி நெடுக காவடி ஊர்வலம் செல்ல பாதை ஒதுக்கி கொடுத்திருந்தார்கள், நம்மவர்கள் மேள சத்தத்துடன் நொறுக்கி தள்ளிட்டு போயிட்டு இருக்காங்க. வேடிக்கை பார்க்காதவர்களே கிடையாது. வெளிநாட்டினர் இதற்காகவே காத்திருந்து பார்க்கிறார்கள், வழி நெடுக பார்வையாளர்களுக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது ஊர்வலத்தை பார்வையிட, தண்ணீர் பந்தலும் உண்டு.
நான் காலை 7.30 மணிக்கு சென்றேன் அதற்க்கு முன்னாடி இருந்தே காவடி வந்து கொண்டு இருந்தது மாலை வரை வந்து கொண்டு இருந்தார்கள், இத்தனை பேர் இருக்காங்களா ன்னு வாயை பொளந்துட்டேன். கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம்.
போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. படத்தில் உள்ளவர்கள் இதற்காக வந்தவர்களே..
வெளிநாட்டினர் காலையில் இருந்த படம் எடுக்க குவிந்து விட்டனர், அதில் ஒருவர் ஸ்டேன்ட் எல்லாம் வைத்து படமாக சுட்டு தள்ளி கொண்டிருந்தார்
தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது, இங்கு வருபவர்கள் அனைவருக்கும் உணவு தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டன
கோவிலினுள் சென்று பார்க்க முடியாதவர்கள் கடவுளை தரிசிக்க வெளியே பெரிய திரை அமைக்கப்பட்டு இருந்தது
ஏகப்பட்ட வெளிநாட்டினர் காவடி மற்றும் அலகு குத்துதல் பார்க்க வந்து இருந்தனர். அதில் ஒரு குடும்பம் இவர்கள். இதில் இரண்டு பொடிசுகள் காவடிக்கு வந்தவர்கள் அடித்த ட்ரம்ஸ் சத்தத்திற்கு செம ஆட்டம் போட்டார்கள் :-)
என்னை மிரளவைத்த பக்தர்
தமிழர்கள் மட்டுமல்ல சீனர்களும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அலகு குத்தி காவடி எடுத்து வந்தார்கள். அதில் இவர் செம ஆட்டம் போட்டார், பாவம்! என்ன இவருக்கு ட்ரம்ஸ் அடிக்க ஆள் இல்ல. இருந்தாலும் பக்கத்து குழு அடித்த சத்தத்துக்கு இவர் சுத்து சுத்துன்னு சுத்திட்டார் :-)
மற்றொரு சீனர் குழு பால்குடம் எடுத்து வந்தார்கள், இவர்கள் ஸ்டைல் ல் ட்ரம்ஸ் அடித்தார்கள், செம அடி. எனக்கு சும்மா கிர்ர்ர் னு இருந்தது. பட்டய கிளப்பிட்டாங்க. அதுவும் வித்யாசமா ஒலி எழுப்பினாங்க.... உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்த மாதிரி இருந்தது
இந்த அம்மாவிற்கு கோவில் அருகே வந்தவுடன் அருள் வந்து விட்டது (இது உண்மையா பொய்யா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை) அனைவரையும் ஒரு மிரட்டு மிரட்டி விட்டார், படத்தை பார்த்தால் சரி என்று தானே தோன்றுகிறது! ;-)
பால் குடம் எடுத்து வந்த பக்தர் இவர், கோவில் அருகே வர வர இவரை பிடிக்கவே முடியவில்லை, அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு மாதிரி திமிறிட்டு இருக்கிறார், நான்கு பேர் போட்டு இவரை அமுக்கியும் இவரை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை, ஆனால் எப்படி இருந்தும் தலையில் இருந்த பால் குடத்தை மட்டும் விடவில்லை.
இவர் ஜிம் க்கு போவாரு போல! :-) வழி நெடுக முறுக்கி கிட்டே ஜெய் ஜாண்டிக்கா நடந்து வந்தாரு ..நிற்கும் போது கூட இரண்டு கையையும் இடுப்புக்கு கொடுத்து கம்பீரமா தான் நின்னாரு
இவர் ஒரு வெளிநாட்டவர், சும்மா அர்னால்ட் கணக்கா இருக்காரு ஆனா அமைதியா தான் இருந்தாரு.
ஆணி செருப்பு அணிந்து வந்தவர்
சுருட்டு சாமியார் மாதிரி இவர் சுருட்டு பக்தர் :-)). சுருட்டோட தான் வந்தாரு, அதோட ஒரு ஆட்டம் வேற போட்டாரு..ஒண்ணும் சொல்றதுக்கில்ல :-))
இவர் ஒரு சீனர் குடும்பத்துடன் வந்து இருந்தார்
இவங்க ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் போல..அவங்க பாட்டை பாடிட்டு கலக்கி எடுத்தாங்க..ஒலி பெருக்கி, வாத்தியம் எல்லாம் வைத்து அசத்து அசத்துனு அசத்திட்டாங்க..,இவங்களை பார்க்க கூட்டம். இவங்க அலகெல்லாம் எதுவும் குத்தவில்லை.
கோவில் கோபுரத்தை பார்த்த படியே வரும் ஒரு பெண் பக்தர்
இவர் தாங்க எனக்கு டாக் ஆஃப் த ஆட்டம், இவர் தண்ணீர் பந்தல் அருகே வந்தவுடன் அங்கே உள்ள ஒலி பெருக்கியில் "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்" பாட்டை போட்டாங்க பாருங்க.. மவனே ..என்னா ஆட்டம்ங்றீங்க ..சும்மா வெளு வெளுன்னு வெளுத்துட்டாரு(எனக்கு கை கால் எல்லாம் பரபரன்னு ஆகி விட்டது). செமையா ஆடுனாரு..நான் மிரண்டு போயிட்டேன். அவரது நண்பர்கள் அவர்கள் வைத்து இருந்த ட்ரம்ஸ் ல் கலக்கு கலக்குன்னு கலக்கிட்டாங்க.. அதனால் செம குஷி ஆகிட்டாரு..அனைவரும் உற்சாகப்படுத்தியவுடன் பட்டய கிளப்பிட்டாரு. நான் போகும் போது பாதி முடிந்து விட்டது, எனக்கு அது பெரிய ஏமாற்றம் ஆகி விட்டது.. அடடா! வடை போச்சே மாதிரி ஆகிட்டேன் :-( கடைசி வரை சோர்வடையாமல் உற்சாகமாக இருந்தார்
இவர் ஒரு பக்தர், சும்மா கர கர கரன்னு சுத்துறாரு..பக்கத்துல எவரும் வர முடியாது போல பின்னி பெடலெடுத்துட்டாரு ..படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரியும்
இவர் பால் குடம் எடுத்து வந்த பக்தர், இவரையும் அடக்க முடியல, ஆனால் பால் குடத்தை உடன் வந்தவர் தான் பிடித்து வந்தார், என்ன நடக்குதுன்னே அவருக்கு தெரிந்து இருக்காது என்று நினைக்கிறேன்
நானும் கூட்டம் இதோட முடிந்து விடும், காவடி நின்று விடும் என்று நினைத்துட்டே இருக்கிறேன்..அது குறைந்த மாதிரியே தெரியல.. வராங்க வராங்க வராங்க வராங்க சரமாரியா வந்துட்டே இருக்காங்க.. எனக்கு கண்ணை கட்டி விட்டது, ஆறு மணி நேரமா நின்று இடுப்பு கழண்டு விட்டது, அதனால் இனி வேலைக்காகாது என்று உள்ளே சென்று சாமி கும்பிட்டு விட்டு, கிளம்பிட்டேன்.
குட்டி இந்தியாவில் காவடி எடுத்து செல்பவர்கள் செல்ல வழி தடுப்பு வைத்து அமைத்து இருந்தார்கள். ட்ரம்ஸ் எல்லாம் வைத்து வழி முழுவதும் அசத்து அசத்துனு அசத்திட்டாங்க நம்ம மக்கள் , வேடிக்கை பார்க்காதவர்களே கிடையாது, ஒரு சில வேன் பேருந்து ஓட்டுனர்கள் அவர்கள் அருகே நிறுத்தி வணங்கி சென்றனர். ..எனக்கு அங்கே அடிக்கிற அடிக்கு ஆட்டம் போட்டே ஆக வேண்டும் போல ஆகி விட்டது, சூப்ப்ப்ப்ப்ப்பரா இருந்தது.
மொத்தத்துல தைப்பூசம் சிங்கப்பூரை என்ன சங்கதி என்று கேட்டு விட்டது :-) அரசாங்கம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தது. கோவில் பகுதியில் ஒரு பக்கம் போக்குவரத்தையே வேறு பக்கம் திருப்பி விட்டார்கள். காவலர்களும் ஏகப்பட்ட பேர் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்..
தைப்பூசம் சிறப்பாக நடந்ததற்கு கோவில் நிர்வாகம் செய்து இருந்த ஏற்பாடுகளும், அதற்க்கு துணையாக இருந்த அரசாங்கமும் முக்கிய காரணம். இவ்வளவு கூட்டத்தை வைத்து சிறப்பாக ஒரு திருவிழாவை நடத்துவது என்பது சாதாரண விசயமாக படவில்லை.

‘பாலாவின் முயற்சிக்கு நெஞ்சுருகி தலை வணங்கி பாராட்டுகிறேன்!’ - ரஜினி

ருவரை மனமாரப் பாராட்டும் மனசு எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத நிலையில்தான் சக மனிதனை உண்மையாக, முழு மனதுடன் பாராட்ட மனசு வரும்.

ரஜினி அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர். நூறு சதவிகிதம் யதார்த்தமான கலைஞர். நல்ல படைப்புகளை முழுமையாய் உள்வாங்கி ரசிக்கத் தெரிந்த வெகு அரிதான மனிதர்களில் ஒருவர்.

நான் கடவுள் படம் பார்த்துவிட்டு ரஜினி பாலாவுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்று போதும், ரஜினியின் மனது எப்படிப்பட்டது என உலகுக்குச் சொல்ல.

ஒரு கட்டத்தில் இப்படிச் சொல்கிறார்:

‘பாலா அவர்களின் அசாத்திய முயற்சிக்கும், திறமைக்கும் நான் நெஞ்சுருகி, தலைவணங்கிப் பாராட்டுகிறேன்!!’

இந்தியத் திரையுலகே பார்த்து பிரமித்து தலைவணங்கும் ஒரு உச்ச கலைஞன், தன் சக கலைஞனின் திறமைக்கு தரும் அங்கீகாரம் இது.

பாலா… உங்களைப் போன்ற உன்னதப் படைப்பாளிகளுக்கு இந்த மாதிரி நல்லவர்களின் பாராட்டே பல ஆஸ்கர்களுக்கும் தேசிய விருதுகளுக்கும் சமம்!!

பாலாவுக்கு ரஜினி எழுதிய கடிதம்:

“திரையுலகில் நான் கடவுள் போன்ற படம் இதுவரை வந்ததில்லை. பொதுவாக அனைவருக்கும் அவர்களுடைய வாழ்க்கை, சமூக வாழ்க்கை மற்றும் அன்றாட அரசியல் வாழ்க்கை பற்றித்தான் தெரியும்.

ஆனால் இந்த உலகில், இந்த சமூகத்தில் நமக்குத் தெரியாத எத்தனையோ வாழ்க்கைகள் இருக்கு. இதில் Underworld Mafia-க்களிடம் சிக்கித் தவிக்கும் பிச்சைக்காரர்கள் மற்றும் ஆன்மீகத்திலிருக்கும் அகோரி பாபாக்களின் வாழ்க்கையைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இரண்டு வாழ்க்கைகளையும் யதார்த்தமாக திரையில் கொண்டு வந்திருக்கும் பாலா அவர்களின் அசாத்திய முயற்சிக்கும், திறமைக்கும் நான் நெஞ்சுருகி, தலைவணங்கிப் பாராட்டுகிறேன்.

இமய மலையில் பல அகோரிகளை நேரில் சந்தித்தவன் என்ற முறையில் ஆர்யா அவர்களின் யதார்த்தமான அகோரி நடிப்பு என்னை பிரமிக்க வைத்தது. இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை என்ன மெய்சிலிர்க்க வைத்தது. படத்தில் நடித்த அனைத்து ஊனமுற்றவர்களின் நடிப்பும் என்னை கண்கலங்க வைத்தது. இந்த மாதிரி ஒரு திரைக்காவியம் தமிழிழ் வந்தது என் தலையை நிமிர வைத்திருக்கிறது. இனிமேல் ஒரு படம் இதுபோல் வரப்போவதுமில்லை.

இந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

அன்புடன் ரஜினிகாந்த்”

நன்றி -ENVALI

டோனியின் காதலி, கல்லூரி மாணவி - திருமணம் செய்ய முடிவு

இந்திய கிரிக்கெட் அணியை புகழின் உச்சிக்கு அழைத்து சென்றவர் டோனி. அவர் கேப்டன் பதவியை ஏற்ற பிறகு இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை பெற்றுள்ளது. கேப்டன் பதவியில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அவர் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். அதிரடியான ஆட்டம் மூலம் இளம் ரசிகைகளின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இந்தியாவின் விலை மதிப்பு மிக்க அவரை திருமணம் செய்ய ஒவ்வொரும் போட்டி போடுகின்றனர். டோனி முதலில் நடிகை தீபிகா படுகோனேயுடன் சுற்றி திரிந்தார். பின்னர் நடிகை லட்சுமிராயுடன் இணைந்து சுற்றினார். இவர்களை எல்லாம் கைகழுவி விட்டு டோனி தற்போது புதிய காதலியை தேர்ந்தெடுத்துள்ளார். கல்லூரி மாணவியான சாக்சிசிங் ராவத்தை டோனி காதலிக்கிறார். இவர் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரியில் ஹோட்டல் மானேஜ்மென்ட் படித்து வருகிறார். சமீபத்தில் தாஜ்பெங்கால் ஓட்டலில் அவர் தனது பயிற்சியை முடித்தார். அப்போதுதான் டோனியும், சாக்சியும் சந்தித்து கொண்டனர். பின்னர் நடிகை பிபாஷாபாசு அளித்த விருந்தில் இருவரும் பங்கேற்றனர். சாக்சி தனது 21-வது பிறந்த நாளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டாடினார். அதில் டோனியும் கலந்து கொண்டனர். இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். சாக்சி சிங்கை திருமணம் செய்ய டோனி முடிவு செய் துள்ளார். 2010-ம் ஆண்டுக்கு பிறகு இருவரது திருமணம் நடைபெறும். இதை சாக்சி சிங்குக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். சாக்சி சிங்கின் சகோதரியும், உத்ராஞ்சல் போலீஸ் அதிகாரியுமான அபிலாசா டெலிவிஷன் பேட்டியில் கூறும் போது, இருவரும் நல்ல நண்பர்கள் சாக்சியின் படிப்பு முடிந்த பிறகுதான் அவரது திருமணம் என்றார்.பார்க்கலாம் .......???? நன்றி -THENTAMIL

09 பிப்ரவரி 2009

பாஃப்டா: ரஹ்மான் மகுடத்தில் இன்னொரு வைரம்!

லண்டன்: ஸ்லம்டாக் மில்லியனேர் படம் இந்தியாவின் வறுமையைப் பற்றி மட்டுமல்ல, இந்திய இசைக் கலைஞனின் பெருமையைப் பற்றியும் உலகமெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. எனவே இப்போதைக்கு வறுமை சர்ச்சைகளை மறந்துவிட்டு, நமது கலைஞர் ரஹ்மானின் வெற்றியைக் கொண்டாடுவோம்.

இதோ அவருக்குக் கிடைத்த இன்னுமொரு உலக விருதுச் செய்தி…

பிரிட்டனின் மிக உயர்ந்த திரைப்பட விருதான பாஃப்டா (BAFTA) விருதையும் வென்றார் தமிழகத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்.

இந்தியர் ஒருவர் இந்த விருதைப் பொறுவது இதுவே முதல்முறை. கோல்டன் குளோப், பாஃப்டா என ஆஸ்கருக்கான முதல் இரண்டு படிகளை வெற்றிகரமாகக் கடந்துவிட்ட ரஹ்மான், அடுத்து ஆஸ்கர் விருதின் வாயிலில் கால் வைத்துவிட்டார்.

மொத்தம் 9 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘ஸ்லம்டாக்…’

இந்தியக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் படம் என்பதால் பாஃப்டாவிலும் நிச்சயம் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தம் 11 பிரிவுகளில் இந்தப் படத்தை பரிந்துரைத்திருந்தார்கள்.

அவற்றில் சிறந்த இசை உள்பட 7 பிரிவுகளில் பாஃப்டா விருது கிடைத்துள்ளது

.

அவற்றில் சிறந்த இயக்குநர் (டேனி பாய்லே), சிறந்த இசை (ஏஆர் ரஹ்மான்), சிறந்த திரைக்கதை (சைமன் பியூஃபோய்), சிறந்த ஒளிப்பதிவு (ஆண்டனி டாட் மாண்டில்), சிறந்த சவுண்ட் எடிட்டிங் (ரசூல் பூக்குட்டி, க்ளென் ப்ரீமாண்டில், ரிச்சர்டு ப்ரைக், டாம் சாயர்ஸ் மற்றும் இயான் டாப்) ஆகிய பிரிவுகளில் விருது கிடைத்தது. இவர்களில் ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் மட்டுமே இந்தியர்கள்.

நேற்று லண்டனில் நடந்த வண்ணமிகு விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

பாஃப்டா விருதை வெல்லும் முதல் இந்தியர் ஏஆர் ரஹ்மான்தான். ஏற்கெனவே கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

இன்னும் சில தினங்களில் ஆஸ்கர் விருது பெறும் முதல் தமிழர் எனும் பெருமையையும் பெறப்போகிறார்.

வாழ்த்துக்கள் ரஹ்மான்!!

08 பிப்ரவரி 2009

மெகாவீடியோ ஒளிக்கோப்புகளைத் தரவிறக்க

Megavideo தளத்தில் உள்ள காணொளிக் காட்சிகளை, இணையிறக்கி உங்கள் கணினி, iPod,iPhone, செல்பேசிகளில் பதிவு செய்வதற்கு இந்த இலவச மென்பொருளைப் பயன்படுத்தலாம். AVI, MPEG, FLV, WMV ஆகிய வடிவங்களில் பதிவுசெய்துகொள்ளலாம். Megavideo வின் காணொளியின் முகவரியை (URL - Uniform Resource Locator) இந்தப் பயன்பாட்டில் உள்ளீடு செய்தால் போதும். உங்கள் கணினியில் ஒரு குறிப்பிட்ட folderல் நீங்கள் தேர்வுசெய்த கோப்புவடிவில் (Fileformat) பதிவாகிவிடும். மிகச் சிறிய, எளிதான, பயனும் திறனும் மிக்க மென்பொருள் இது. எளிய முகப்பை உடையது. Windows 95 முதல் Windows Vista வரை அனைத்து Windows இயங்குதளங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். http://www.downloadtoolz.com/files/megavideo_d_setup.exe இதே செயலைச் செய்வதற்கு உதவக்கூடிய FireFoxன் ஒரு Add on (நீட்சி) http://www.downloadhelper.net/install.php

கூகுளின் SMS Channel-இலவச சேவை

கூகுள் இலவச SMS Channel சேவை இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Mytoday போன்ற SMS சேவைக்குப் பிறகு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.நீங்களாகவே ஒரு புதிய SMS சேனலை உருவாக்க முடியும்.அதன் பின் அதற்குரிய இணைய முகவரியைப் பெற்று நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களையும் இணையச் செய்யலாம். நாம் SMS சேனலுக்கு அனுப்பும் SMS ஆனது அதில் இணைந்துள்ள அனைவரின் அலைபேசியையும் இலவசமாகச் சென்றடையும்.

sms1உதாரணமாக, Saaral SMS சேனலானது சாரல் சமூக நல அமைப்பின் செயல்பாடுகளை அதன் அனைத்து உறுப்பினர்களும் அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. மேலும் நம்பிக்கை ஊட்டும் கருத்துக்களையும் (உதாரணமாக:A Candle loses nothing by lighting another candle), சமூக அக்கறையுள்ள பொது அறிவுத் தகவல்களையும் (உதாரணமாக:Save Energy,Save Earth-National Energy Conservation Day Wishes(Dec 14)-SAARAL) பகிர்ந்து வருகின்றது. இது தனது உறுப்பினர்களுக்கு குறுந்தகவலாக அனுப்பி வருகிறது. சாரல் அமைப்பின் SMS சேனலுக்கு Subscribe செய்ய இங்கே வசிக்கவும்.

கூகிள் SMS சேனலின் சிறப்பம்சங்கள்:

• நாமாக புதிய SMS சேனல் உருவாக்கிக் கொள்ளலாம்.இதன் மூலம் நண்பர்கள், ஒத்த கருத்துள்ளவர்கள் தங்களுக்கென்று ஒரு SMS சேனலைத் தொடங்கலாம்.ஏற்கனவே பல உபயோகமுள்ள சேனல்கள் உள்ளன.உதாரணத்திற்கு: NDTV National News, Business Line etc.சுனாமி, புயல் எச்சரிக்கை போன்ற தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம்.

• நாம் அனுப்பும் செய்தியை அலைபேசி, கூகுள் இணையதளம், நம் இணையத்தின் RSS Feed மூலம் அனுப்பலாம்.

• நாம் சேர்ந்துள்ள SMS சேனலில் நம்முடைய மொபைல் எண் மற்றவர்களுக்குத் தெரியாது.

• நாம் SMS பெற நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்.உதாரணத்திற்கு: 05:00 AM to 10:00 PM

• தேவையான SMS ன் எல்லையை வரைமுறை செய்யலாம்.உதாரணத்திற்கு: Max SMS per Day:50

• எந்த நேரத்திலும் SMS சேவை பிடிக்கவில்லை என்றால் விலகிக் கொள்ளலாம்.

கூகிள் SMS சேனலில் இணையும் முறை:

இணையத்திற்கு செல்லவும்.

• Nick Name செட் செய்யவும்

• மொபைல் எண் கொடுக்கவும்

• மொபைலுக்கு வரும் Code டைப் செய்யவும்

• விருப்பமான SMS சேனலுக்கு Subscribe செய்யலாம்.Eg:Saaral

கூகிள் SMS சேனலில் இணையுங்கள். Upto Date ஆக இருங்கள்.

கந்தசாமியில் எல்லாப் பாடல்களையும் பாடி விக்ரம் சாதனை!

யக்குநர்கள் நடிகர்களாகிறார்கள்… பாடகர்கள் நடிகர்களாகிறார்கள்… ஆனால் இப்போது நடிகர் விக்ரம் முழுமையான பாடகராகவே மாறியுள்ளார் (நடிப்பை விட்டுடலை.. ஆனா பல பாடகர்கள் வயிற்றில் புளி கரைத்திருக்கிறார்!).

கந்தசாமி படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாடி அசத்தியிருப்பவர் சாட்சாத் விக்ரமேதான்.

நடிகர்கள் பாடகர்களாகவும அவதாரமெடுப்பது தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல. சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை ஒரே ஒரு பாடல்தான் பாடியிருக்கிறார். ஆனால் நல்ல குரல் வளம் அவருக்கு உண்டு என இசைஞானியே பாராட்டியுள்ளார். பாடகர்கள் பிழைப்பைக் கெடுக்க வேண்டாமே என ஜஸ்ட் ஒரு பாடலுடன் நிறுத்திக் கொண்டார் அவர்.

இன்றைய நடிகர்களில் கிட்டத்தட்ட தொழில்முறை பாடகர்களுக்கு சற்றும் குறையாத குரல் வளமும், பாடும் திறனும் கொண்டவர் கமல்ஹாசன். அவர் பாடியதை தனி எம்பி3 ஆகவே விட்டிருக்கிறார்கள். இடையில் விஜய் போன்றவர்கள் பாட முயற்சித்தாலும், பாட்டு விஷயத்தில் கமலின் அருகில்கூட அவர்களால் போக முடியவில்லை.

இப்போது விக்ரம் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.

ஒரு பாடகராக அவர் ஏற்கெனவே வெற்றி பெற்றவர்தான். ஜெமினி படத்தில் இவர் பாடிய ஓ போடு, ஓஹோவென்று பேசப்பட்டது நினைவிருக்கலாம். இப்போது கந்தசாமி படத்தில் அனைத்துப் பாடல்களையும் விக்ரமே பாடி அசத்தியிருக்கிறார்.

இது குறித்து கந்தசாமி படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீதேவி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

விக்ரம் வெறும் நடிகர் மட்டுமல்ல.. பல திறமைகள் கொண்ட அரிய நடிகர். பாகவதர் காலத்தில் பாடத் தெரிந்தவர்கள்தான் நாயகர்கள் என்பார்கள். இப்போது அந்த பாகவதரைப் போலவே பாடும் திறனுடன் கூடிய அருமையான ஹீரோவாக வந்துள்ளார் விக்ரம்.

இந்தப் படத்தில் முதலில் ஒரு பாட்டு மட்டும் பாடுவதாக இருந்தார் விக்ரம். ஆனால் அவர் பாடும் விதம், ஒரு பாடலில் என்னென்ன சிறப்புகள் இருக்க வேண்டுமோ அத்தனை சிறப்புகளையும் அவராகவே செய்யும் அழகு போன்றவற்றைப் பார்த்த பிறகுதான், வேறு பாடகர்கள் எதற்கு என விக்ரமையே பாட வைத்தோம், அவருக்கான அனைத்துப் பாடல்களையும். மிகச் சிறப்பாக வந்துள்ளன பாடல்கள், என்றார்.

அருகிலிருந்த விக்ரம் கூறுகையில், நான் இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களையும் பாடக் காரணம் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் சுசி கணேசன் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இனி என் படங்களில் நிச்சயம் பாடுவேன். வெளிப்படங்களுக்கும் பாடுவேன், என்றார்.

இயக்குநர் தாணு பேசுகையில், இந்தப் படம் நிச்சயம் தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சரித்திரம் படைக்கும். பாடுவதில் எஸ்பிபிக்கு நிகரான திறமை கொண்டவர் விக்ரம். பாடல்களைக் கேட்டால் நீங்களும் இப்படித்தான் சொல்வீர்கள்.மக்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் உள்ள படம் கந்தசாமி. தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளிலும் வெளியிடும் திட்டமுள்ளது, என்றார்.

அந்த மொழிகளிலும் விக்ரம்தான் பாடப்போகிறார் என்பது கூடுதல் தகவல்!

கணினியின் இயக்கத்தை எப்போது நிறுத்துவது?

கணினியின் இயக்கத்தை நிறுத்துவதற்கு Shut down அழுத்தியே பழக்கப்பட்டிருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக அதை இன்னும் 6 மணி நேரம் கழித்துத் தானாகவே நிறுத்திவைக்க உத்தேசிக்கிறோம். அதற்காக ஏதேனும் scheduler எழுதலாம். இந்தமாதிரி நேரங்களில் நமக்கு உதவுவதற்காகவே Shutter எனப்படும் ஒரு இலவச மென்பொருள் உள்ளது. பயன்பாட்டுக்கு எளிதாகவும், குறைந்த நினைவகத்தை ஆக்கிரமிப்பதாகவும் உள்ளது இந்த மென்பொருள். நிறுத்திவைக்க (shutdown), மறுபடி துவக்க(reboot), வேறு பயனருக்கு மாற(logoff), திரையை மட்டும் அணைக்க (monitor turn off ) எனப் பல செயல்களை இதன் மூலம் செய்ய இயலும். http://den4b.com/downloads.php?project=Shutter
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com