ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு நிகராக கருதப்படும் "கோல்டன் குளோப்' விருதை வென்றார். ஆஸ்கர் விருதுக்காகவும் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மான் பிரிட்டன் திரைப்படத் துறையால் வழங்கப்படும் சர்வதேச விருதான பாஃடா விருதையும் வென்றார்.
இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 100 கோடி இந்தியர்களின் பிரார்த்தனையே தனக்கு விருது கிடைக்க காரணம் என்று ரஹ்மான் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று சென்னை திரும்புகிறார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. கோல்டன் குளோப் விருது வென்று சென்னை திரும்பிய போது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.