நீ எங்கிருக்கிறாய்.. எதுவும்
எனக்குத் தெரியாது..
உனக்காக நான் காத்திருக்கப்
போவதுமில்லை.. இருந்தும்..
அன்பே.. எனக்காய்
நீ வரும்வரை.. உன்னை நான்
காதலித்துக் கொண்டிருப்பேன்!!! *
***********
என்றேனும்... நீ வந்து
பெற்றுக் கொள்வாய்
என்னும் நம்பிக்கையில்
சேமித்து வைக்கிறேன்
உனக்கான...
பரிசுப்பொருட்களையும்
என் காதலையும்!!
**********