Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

31 ஜூலை 2009

கூகிள் நம்பர் 1 ஆனது எப்படி ?

இன்று இனைய உலகில் நம்பர் 1 என்று கூறப்படும் கூகிள் நிறுவனமும் தட்டு தடுமாறி பல தடைகளை தாண்டிதான் வந்துள்ளது . இந்த கூகிள் சர்ச் முதலில் யாஹூ நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டு , பின்னர் யாஹூ நிறுவனமே இன்று வியக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது . இது போல இன்னும் சுவாரசியமான விஷயங்கள் கூகிள் வரலாற்றில் நடந்துள்ளன . இதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் .

கட்டுரை PDF வடிவில் உள்ளது ...

இந்த தொடுப்பை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளவும் ..

ஏவி.எம் ஸ்டுடியோவில் பயங்கர தீ-ரூ. 3 கோடி செட்கள் நாசம்

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஏவி.எம். ஸ்டுடியோவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஸ்டுடியோவில் உள்ள 7 வது படப்பிடிப்புத் தளம் முற்றாக எரிந்து நாசமானது. அங்கிருந்த பல செட்கள் அனைத்தும் தீயில் கருகிப் போய் விட்டன. சாலிகிராமம் பகுதியில் உள்ள பிரபலமான ஏவி.எம். ஸ்டுடியோ பரந்து விரிந்த பரப்பளவில் அமைந்துள்ளது. ஏராளமான படப்பிடிப்புத் தளங்கள், ஒலிப் பதிவுக் கூடங்கள், டப்பிங் அரங்குகள், ப்ரிவியூ தியேட்டர்கள், பூங்காக்கள் உள்ளன. நேற்று இரவு தொடங்கி நீண்ட நேரம் விஜய்யின் வேட்டைக்காரன் படப்பிடிப்பு இங்கு நடந்து வந்தது. படப்பிடிப்பு முடிந்து அனைவரும் வெளியேறிய நிலையில், அதிகாலை 3 மணிக்கு 7வது படப்பிடிப்புத் தளத்தில் தீ பற்றியுள்ளது. அடுத்த சில நொடிகளில் மளமளவென தீ பரவி, அந்தத் தளமே முற்றாக எரிந்து நாசமானது. அங்கு போடப்பட்டிருந்த அனைத்து செட்களுமே எரிந்து போய் விட்டதாக தெரிகிறது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. அப்பகுதி முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது. தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு ரூ.3 கோடிக்கும் மேலி்ருக்கும் எனத் தெரிகிறது.

சூறாவளி பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ஓய்வு பெறுகிறார்

தம்புல்லா: இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரும், உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளவருமான முத்தையா முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளார். இதுகுறித்து முரளீதரன் கூறுகையில், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான் எனது கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும். அப்போது எனக்கு 38 வயதாகி விடும். எனவே இதுதான் ஓய்வு பெற சரியான சமயம் என நான் கருதுகிறேன். இருப்பினும் ஒரு நாள் போட்டிகள், டுவென்டி 20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். அடுத்த உலகக் கோப்பைப் போட்டி வரை ஒரு நாள் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இன்னும் சில ஆண்டுகளுக்கு டுவென்டி 20 போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என்றார் முரளீதரன். 1992ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட ஆரம்பித்தார் முரளீதரன். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பெரும் சாதனையாளர் முரளீதரன். முரளிக்கும், ஆஸ்திரேலியாவின் ஷான் வார்னுக்கும் இடையில் உலக சாதனை படைப்பதில் கடும் போட்டா போட்டி நிலவியது. இதில் முதலில் சாதனை படைத்தவர் ஷான் வார்ன். இருப்பினும் 2007ம் ஆண்டு வார்னின் சாதனையை (708 விக்கெட்கள்) முறியடித்து புதிய சாதனை படைத்தார் முரளீதரன். தற்போது 127 போட்டிகளில் ஆடி 770 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி அசைக்க முடியாத இடத்தில் இருக்கிரார் முரளீதரன். இவரது பந்து வீச்சு சரசாரசி 22 ஆகும். 800 விக்கெட்களை வீழ்த்தக் கூடிய திறமை இன்னும் முரளியிடம் உள்ளது. ஒரு நாள் போட்டிகளிலும் முரளீதரன்தான் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளஆர். ஒரு நாள் போட்டிகளில் முரளிதரன் வீழ்த்திய விக்கெட்களின் எண்ணிக்கை 507 ஆகும். இலங்கை அணியின் அசைக்க முடியாத சொத்தாக இருப்பவர் முரளீதரன். அவரது ஓய்வு நிச்சயம் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பேரிழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருக்கும் ஒரே தமிழர் முரளீதரன் என்பது குறிப்பிடத்தக்கது. முரளியால் வென்ற இலங்கை.. இதற்கிடையே, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் நேற்று முரளிதரனின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கையில் பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று தம்புல்லாவில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நடந்தது. இப்போட்டியில், முதலில் ஆடிய இலங்கை அணி 232 ரன்களைக் குவித்தது. 45வது ஓவரின்போது 7 விக்கெட்களை இழந்து 173 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது இலங்கை. அப்போது களம் இறங்கிய முரளீதரன் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 32 ரன்களை விளாசினார். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியை, இலங்கைப் பந்து வீச்சாளர்கள் சிதறடித்து வெற்றிக் கனியைப் பறித்தனர். ஆட்ட நாயகனாக முரளீதரன் அறிவிக்கப்பட்டார்.

பிளாக் தலைப்புல - நம்ப லோகோ வர வெக்க ·

இன்னைக்கி டவுசர் கலாய்க்கப் போறது , நம்ப லோகோவ, நம்ப
பிளாக்குல , தேவையான எடத்துல , வர வெக்க, ஒரு ஐடியா !!
( இன்னாவோ நம்பலே கண்டு புட்சா மேரி " ? " )
நம்ப பிளாக்குல , logo,- தேவையான எடத்துல , வெச்சிக்கலாம் ,
இதுக்கு , நாம்ப பிளாக்குல யூஸ் பண்றோமே , அந்த போட்டோவ
வேணும்னாலும், வர வெக்கலாம் , அதுக்கு ,
ஒரு சின்ன கோடிங்க்கு கீது ,வெவரம் தெரிஞ்ச பெரி மன்சாள்லாம் ,
கோச்சிக்காத நவுந்துடுங்கோ , அப்பால இந்த டவுசரு கொயப்பிட்டான்,
இன்னு என்கிட்டே சண்டைக்கி வரக் கூடாது , அக்காங் !!
மொதல்ல , இங்க பாத்திங்கன்னா , டவுசரு போட்டவ சின்னதா ஆக்கி ,
வெச்சிக்கினேன் , அதுக்கு, நெரியோ வயி கீது , Photobucket
நம்பளுக்கு தேவையான , போட்டோவ , Photobucket .com ,
போட்டு , மொதல்ல , http; // அட்ரசு எட்துக்கோ , அப்பால அதுலயே
எடிட் இன்னு கீது பாரு , அதுல போய், தேவையான அளவுக்கு அந்த
அளவ கொரச்சிக்கினு , வந்துடு , ( படத்த பெரிசா போட்டா, எடத்த
மறைக்கும் )
இப்போ , கிய கீற கோடிங்குல , நம்பளுக்கு தேவையான அட்ரச போட்டு ,
அத்த எட்துக்கினு போய் , Dasboard > layout > HTML/JavaScript ,
சேத்துட்டா, போதும் அப்பால save குத்துட்டு வெளில வந்துடு ,
அங்கியே இருக்காத ,
இங்க போய் - இந்த கோடிங்க பாத்துக்கங்க தலீவா !!
இதுல top ; 102 px ,இன்னு இருக்குறது , நம்ப படம் மேல இருந்து
எத்தினி அளவு கீழ இருக்கணும் அப்படின்ற அளவு , உங்களுக்கு
தேவையான அளவு , வெச்சிக்கலாம்
அடுத்து left 18 px - இன்னு கீது பாரு ,நம்பளோட , பிளாக்கு
டைட்டில் கீது பாரு அதனோட மொத்த அளவு 900 Px , இப்போ ,
இத்த கணக்கு வச்சி , படம் நடுவுல வேணுன்னா , 450 Px, வெக்கணும் ,
கொஞ்சம் இடது ஓரம் வேன்னும்னா ,200px, வெச்சா சரியா இருக்கும் ,
முடிஞ்ச அளவு நம்ப பிளாக் கோட, பேருக்கு, பக்கத்துல
வந்தா நல்லா இருக்கும் , அதுக்கு , ஒரு 210 px , சரியா இருக்கும் ,
ஒரு முறை , இந்த அளவு குத்துட்டு , எங்க வேணுமோ ,
அந்த மாதிரி , லேசான அளவு , மாத்தி save பண்ணிடுங்கோ ,
செரியா !!

ஹாலிவுட்டில் பாடகராகும் ஏ.ஆர். ரஹ்மான் மகன்!

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியே கவிபாடும்போது, நம்ம ஆஸ்கர் தமிழன் ரஹ்மான் வீட்டு செல்லக்குட்டி பாட்டுப் பாடாதா என்ன? ஆம்... ஏ ஆர் ரஹ்மானின் 6 வயது மகன் ஆலிம் ஒரு பாடகராக தனது தந்தையின் இசையில் பாடுகிறார். அதுவும் தமிழில் அல்ல... எடுத்த எடுப்பிலேயே ஹாலிவுட்டில்! 'கப்பிள்ஸ் ரீட்ரீட்' எனும் ஹாலிவுட் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இப்போது இசையமைத்து வருகிறார். பீட்டர் பிரிங்ஸ்லே இயக்கும் இந்த ரொமாண்டிக் காமெடி படத்தில் வின்ஸ் வான், க்ரிஸ்டன் பெல் மற்றும் ஜாஸன் பேட்மேன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு முழுப் பாடலையும் ஆலிம் பாடுகிறார். அந்த சூழலுக்கும், பாத்திரத்துக்கும் ஆலிம் குரல் மிகப் பொருத்தமாக அமைந்ததால் மகனைப் பாடவைத்துள்ளார் ரஹ்மான். ஏற்கெனவே தனது ஆரம்ப காலப் படங்களில் ஒன்றான ஜென்டில்மேனில் தனது சகோதரி மகன் ஜிவி பிரகாஷைப் பாடவைத்துப் பிரபலமாக்கினார் ரஹ்மான் என்பது நினைவிருக்கலாம்.

சிறப்பாக பிளாக்(Blog) அமைய சில யோசனைகள்

Blogs எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இந்த இணையத்தளம் தருகின்றது http://www.sitesketch10.com/ என்ற முகவரியில் உள்ள தளம் பிளாக்குகள் அமைக்கவும் வெப்சைட்டுகளை உருவாக்கவும் பல வழிகளில் ஆலோசனை கூறும் தளமாக உள்ளது. இந்த தளத்தின் மேலாக உள்ள நேவிகேஷன் பாரில் இத்தளம் தரும் உதவிகளை வகைகளாகப் பட்டியல் இட்டுத் தந்துள்ளது. அவை: Blogging Tips: இங்கு உங்களுடைய பிளாக்குகளைச் சிறப்பாக்க அவற்றில் தரப்படும் கருத்துக்கள் எதைப் பற்றி எப்படி இருக்க வேண்டும் எனவும் அந்த வலைமனைகளுக்கு நிறைய பேர் வருவதற்கான சூழ்நிலையை எப்படி உருவாக்க வேண்டும் எனவும் டிப்ஸ்கள் நிறைய தரப்பட்டுள்ளன. Fonts: உங்களுடைய பிளாக்குகளின் தலைப்பை அமைக்க ஒரு நல்ல பாண்ட் வேண்டுமா? அதுவும் ஷார்ப்பாக சிறப்பாக இருக்க வேண்டுமா? அப்படியானால் இந்த பிரிவில் நிச்சயம் நுழைய வேண்டும். இங்கு இலவசமாகக் கிடைக்கக் கூடிய தளங்கள் குறித்தும் எழுத்து வகைகள் குறித்தும் தகவல் கள் தரப்படுகின்றன. உங்கள் வலைமனை களை எந்த எழுத்துக்களைக் கொண்டு கவர்ச் சியாக அமைத்திடலாம் என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது. Graphics: இங்கு உங்கள் வலைமனைகளுக்கான கிராபிக்ஸ் எங்கு கிடைக்கும் என்ற தகவல் தரப்படுகிறது. அத்துடன் மிகச் சிறப்பாக வெப் சைட்டுகளையும் பிளாக்குகளையும் அமைத்தவர்களுடன் பேட்டியும் தரப்படுகிறது. கிராபிக்ஸை எப்படி சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்ற அறிவுரையும் தரப்படுகிறது. குறிப்பாக பிளாக்குகளுக்கான டிசைன்களை வடிமைக்கையில் எப்படி கிராபிக்ஸ் உதவுகிறது என்றும் அறிவுரை தரப்படுகிறது. Inspiration: இங்கு மற்ற பிளாக்குகளை எடுத்துக் காட்டி எப்படி உங்கள் வலைமனைகளை இன்னும் சிறப்பாக அமைக்கலாம் என்று எடுத்துச் சொல்லப்படுகிறது. இந்த தளத்திலேயே எனக்குப் பிடித்த பிரிவு இதுதான். Search Engines: பெரும்பாலான இணைய தளங்கள் அந்த தளங்களில் தங்களுடைய அல்லது பிற நிறுவனங்களின் சர்ச் இஞ்சின் எனப்படும் தேடுதல் தளங்களை அமைக்கின்றனர். தளம் அமைத்தவர்களுடையதோ அல்லது கூகுள் நிறுவனத்தினுடையதோ, இன்டர்நெட்டில் உள்ள எத்தகைய தளத்திலும் ஒரு சர்ச் இஞ்சின் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. இந்த பிரிவில் அப்படிப்பட்ட ஒரு சர்ச் இஞ்சினை உங்கள் பிளாக்கில் எப்படி அமைப்பது என்ற விபரங்கள் தரப்படுகின்றன. Updates: கடைசியாகத் தரப்பட்டுள்ள பிரிவானாலும் முக்கியமான பிரிவாகும். இதில் அண்மைக் காலத்தில் வந்த சைட் அப்டேட் பைல்கள் பட்டியல் தரப்படுகிறது. அன்றைய செய்தியும் கிடைக்கிறது. பிளாக்குகள் வைத்துள்ள அனைவரும் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இணைய தளம் இது.

அஜீத்துக்கு ஜோடி ஸ்ருதி?

அஜீத் தனது 49 வது படமான அசலில் பிஸியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் தனது பொன்விழா படத்துக்கான வேலைகளில் மும்முரமாக உள்ளார். இந்தப் படத்தை இவர் இயக்குகிறார், அவர் இயக்குகிறார் என ஏகப்பட்ட ஹேஷ்யங்கள். இப்போதைக்கு, இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக பேச்சு அடிபடுகிறது. அதைவிட முக்கியமான விஷயம் இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக கூறப்படும் நடிகை. கமல் மகள் ஸ்ருதி ஹாசன், இந்தப் படத்தில் நடிக்கப்போவதாகவும், இது அவரது முதல் தமிழ்ப் படமாக இருக்கும் என்கிறார்கள். ஹிந்தியில் அவரது லக் படம் படுதோல்வியடைந்ததால், தமிழில் நல்ல படத்துடன் கேரியர் துவங்க வேண்டும் என ஸ்ருதி விரும்புகி்றாராம். உண்மையில் வெங்கட் பிரபுவின் சரோஜா படத்தில் வேகாவின் வேடத்தில் நடிப்பதாக இருந்தவர் ஸ்ருதிதான். ஆனால் பின்னர் அந்தப் படத்தில் நடிக்க அப்போது ஸ்ருதி மறுத்துவிட்டார். ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், இப்போது மீண்டும் அதே வெங்கட் பிரபுவின் படத்தில் தமிழில் அறிமுகமாகிறார் ஸ்ருதி. ஆனால் இதுபற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

google க்கு போட்டியாக இணையும் Yahoo - Mirosoft!

Thursday, 30 July 2009 12:42 சில வருடங்களின் வதந்திகளுக்கு பிறகு முதல் முறையாக யாஹூவும் மைக்ரொசொப்டும் தேடல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயட்பட உள்ளதாக அறிவித்துள்ளன. இன்றிலிருந்து சில மாதங்களில் Yahoo Search ஆனது Microsoft இன் Bing தேடு பொறியின் அணுசரனையில் இயங்க தொடங்கும். 10 வருடங்களுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த பேரத்தினால் Yahoo சுமார் $275 million லாபத்தை எதிர்பார்க்கிறது. இரு தரப்பிலும் பல பயனுள்ள மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மற்றும் விளம்பர வருவாய் தரக்கூடிய மாற்றங்கள் இணையத்தள உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். Google இற்கு போட்டியாக கருதப்படும் இந்த ஒப்பந்தம் சிலவேளைகளில் யாகூவின் இன்னொரு பின்னடைவாக கூட அமையலாம் என கணணி வல்லுனர்களால் ஊகங்கள் எழுந்துள்ளன.

29 ஜூலை 2009

அவங்கெல்லாம் தங்கம்... நான் மட்டும் பிளாட்டினம்! - ஸ்ரேயா

'தமிழ் சினிமாவில் எனக்கு போட்டியென்று யாருமில்லை. நயன்தாரா, தமன்னா போன்றவர்கள் தங்கம் என்றால், நான் மட்டும் பிளாட்டினம் மாதிரி. தங்கத்துக்கும் பிளாட்டினத்துக்கும் வித்தியாசம் தெரியும் இல்லையா!', என்று நக்கலடித்துள்ளார் 'சைஸ் ஜீரோ' அழகியான ஸ்ரேயா! தமிழ் சினிமாவில் உண்மையில் எந்த நாயகிக்கும் பெரிய மவுசும் இல்லை, மார்க்கெட்டும் இல்லை. எல்லாப் படங்களுமே ஹீரோக்களின் தயவில் ஓடிக் கொண்டிருக்கின்றன. சரியான நாயகிகள் இல்லாததால், இருக்கிறவர்களை வைத்து ஒப்பேற்ற வேண்டிய நிலையில் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் உள்ளனர். புதிய கதாநாயகிகள் வரவு குறைவாக இருப்பதாலேயே இந்த நிலை. எனவேதான் அமீர், சசிகுமார், சமுத்திரக்கனி போன்றவர்கள் புதிய நாயகிகளை அறிமுகம் செய்வதில் தீவிரமாக உள்ளனர். ஆனால் இன்னொரு பக்கம், நான்தான் நம்பர் ஒன் என்று அடித்துக் கொள்ளாத குறையாக அக்கப்போரில் ஈடுபட்டுள்ளனர் இப்போதுள்ள நாயகிகள். சும்மா ஒப்புக்கு, எனக்கு இந்த நம்பர் விளையாட்டில் நம்பிக்கை இல்லை என்று 'பீலா' விடுவார்கள். இதோ சமீபத்தில் ஸ்ரேயா அளித்துள்ள ஒரு பேட்டி. நயன்தாரா, தமன்னா, த்ரிஷா போன்றவர்களால் உங்களுக்கு படங்கள் வருவது குறைந்துவிட்டதா? "யார் சொன்னது? அதெல்லாம் கிடையாது. நான் எப்பவும் பிஸி. நீங்க சொல்ற நயன்தாரா, த்ரிஷா, தமன்னா இவங்கள்லாம் தங்கம்னா, நான் பிளாட்டினம். தங்கத்துக்கும் ப்ளாட்டினத்துக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாதா?" என்று திருப்பிக் கேட்டுள்ளார் ஸ்ரேயா. ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை என்ற பழைய பழமொழிதான் நினைவுக்கு வந்தது!

160 கோடியில் லண்டனில் வீடு வாங்கினார் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கானுக்கு சமீபத்தில் கலை சேவையை பாராட்டி, லண்டனில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது குடும்பத்தாருடன் லண்டன் சென்றவர், அங்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

சென்ட்ரல் லண்டனில் பார்க் லேன் ஏரியாவில் அபார்ட்மென்ட் ஒன்று உள்ளது. அதில் ஒரு குடியிருப்பை 160 கோடிக்கு வாங்கியுள்ளார் ஷாருக். விடுமுறையை கொண்டாட ஆண்டுதோறும் ஷாருக் லண்டனுக்கு செல்வது வழக்கம். அப்போது, இந்த வீட்டை பயன்படுத்திக்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.

ஆண் மலட்டுத்தன்மைக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றது?

lankasri.com ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உறவின்போது வெளிப்படும் உயிரணுவில் குழந்தை பேறு கொடுக்கக்கூடிய அளவு தகுதியான அணுக்கள் இருக்காது. இந்த நிலை தான் ஆண் மலட்டுத் தன்மை எனப்படுகிறது. பரபரப்பான வாழ்க்கையில் செக்ஸ் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத அளவுக்கு இளையவர்கள் பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதுவே ஆண்மைகுறைவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. புகைபிடித்தல் ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. புகை பிடிப்பவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை 13 சதவிகிதம் முதல் 17 சதவிகிதம் வரை மற்றவர்களை விட குறைவாக இருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இறுக்கமான ஜீன்ஸ் போன்ற உள்ளாடைகள் ஆண்களின் ஆண்மைத் தன்மையை பாதிக்கிறது. செக்ஸ் செயல்பாடுகளையும் பாதிக்கிறது. வெந்நீர் குளியல் மேற்கொள்பவர்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறையாகவே இருக்கிறது. அதிக அளவில் காபி குடிக்கும் நபர்களின் உயிரணுக்கள் பாதிக்கப் பட்டிருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. பிறவிலேயே ‘ஸ்ரீ’ குரோமோசோம்களை கொண்டுள்ள ஆண்கள் இந்த குறைபாடுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அம்மை நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால், விரைக்குள் பாதிப்பு உண்டாகி உயிரணு உற்பத்தி பாதிக்கப்படலாம். உயிரணுக்கள் வெளிவரும் நாளங்களில் அடைப்பு இருக்கும் பட்சத்தில் பாதிப்பு உண்டாகும். பால்வினை நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தாலும், நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும் விந்தணு குறைபாடு உருவாகலாம். விந்தணுக் குறைபாடு உள்ளவர்களில் சுமார் எழுபது சதவிகிதம் நபர்கள் உயிரணு குறைபாடுகளால் தான் பாதிக்கப்படுகிறார்கள். இந்த குறைந்த அளவில் இருக்கும் உயிரணுவும் ஊர்ந்து செல்வதில் சிரமப்படுவதாகவே இருக்கும். உயிரணுக்களின் தலை மற்றும் வால் பகுதி குறைபாடுகளுடன் காணப்படும் பட்சத்திலும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. ஆணின் விரையைச் சுற்றியுள்ள வெரிகோஸ வெயின் எனப்படும் நரம்புகள் முறுக்கேறி அதிக வெப்ப நிலையை அடையும் பட்சத்தில் உயிரணு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

தா‌ய்‌ப்பா‌லி‌‌ன் ச‌க்‌தி

lankasri.com தாய்பபால் உட்கொள்ளும் பிள்ளைகள் மற்ற குழந்தையை விட உடற்பருமனால் சிறிதாகவே பாதிக்கப்படுகின்றன என சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் தாய்‌ப்பால் கொடுப்பதால் உடல் பருமனாவது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் லூக்கேமியா எனும் இரத்த சம்பந்தமான கான்சர், ‌நீ‌ரி‌ழிவு நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவதை தடுக்கிறது. தாய்ப்பால் குழந்தையின் புத்திக்கூர்மையை மேலும் உயர்த்துகிறது என நம்பப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நல்ல பாசப்பிணைப்பு எற்படுகிறது. மேலும் தாய்ப்பாலில் குழந்தையின் மூலை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

புதுமுக நடிகையை கற்பழித்த இயக்குநர் கைது

பெரிய ஆளாக்கி விடுகிறேன், நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று கூறி புதுமுக நடிகையை கற்பழித்ததாக இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட இயக்குநரின் பெயர் ராம் குமார் குமாவத். இவர் சின்ன பட்ஜெட் படங்கள் சிலவற்றை இயக்கியுள்ளார். இவரிடம் 24 வயதான பெண் ஒருவர் அணுகி ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு நிச்சயம் வாய்ப்பு தருவதாகவும், பெரிய நடிகையாக்கிக் காட்டுவதாகவும் வாக்களித்த குமாவத் ஆடிஷன் டெஸ்ட்டுக்கு அவரை அழைத்துள்ளார். அந்தப் பெண்ணும் போயுள்ளார். ஆடிஷன் டெஸ்ட் முடிந்தும், எனது படங்களில் நிச்சயம் வாய்ப்பு தருகிறேன் என்று கூறி அனுப்பியுள்ளார். ஆனால் அவரிடமிருந்து எந்தத் தகவலும் வராததால் 3 நாட்களுக்கு முன் அப்பெண் இயக்குநரை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு அவர் வெர்சோவாவில் உள்ள தனது அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அங்கு சென்ற அப்பெண்ணை, இயக்குநர் குமாவத் கட்டாயப்படுத்தி கற்பழித்து விட்டார். இதை வெளியில் சொல்லக் கூடாது என்றும் அப்பெண்ணை குமாவத் மிரட்டியுள்ளார். இருப்பினும் வெர்சோவா காவல் நிலையத்தில் அப்பெண் இயக்குநர் மீது புகார் கொடுத்தார். இதையடுத்து குமாவத்தை போலீஸார் கைது செய்தனர்.

என்னை விட்டா யாரு?: தனுஷ்

சுய புராணம் பாடுவதில் தமிழ் சினிமாக்காரர்களுக்கு இணை யாருமில்லை. தங்களைத் தாங்களே அவதாரமாக நினைத்துக் கொண்டு அள்ளி விடுவதில் மன்னர்கள். அதிலும் சிம்பு- தனுஷ்- பரத் போன்ற நடிகர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சிம்பு வாயைத் திறந்தாலே சுய புராணம் பங்கிங்காம் கால்வாய் ரேஞ்சுக்கு ஓடும். சமீப காலமாகத்தான் சற்று அடக்கி வாசிப்பது போல நடிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் அவரது தொழில் எதிரி தனுஷ் இப்போது ஆரம்பித்துள்ளார். படிக்காதவன் என்ற தலைப்பை வைத்ததற்கே தனுஷ் மீது பல தீவிர ரஜினி ரசிகர்கள் கடுப்பிலிருக்கிறார்கள். 'இவர் ரஜினி மாப்பிள்ளைன்னா இவர் பண்ற சேட்டையையெல்லாம் ரசிக்கனும்னு தலை எழுத்தா?' என பலர் வெளிப்படையாகவே விமர்சித்தார்கள். இப்போது, ரஜினியின் 'பிளாக் பஸ்டர்' படமான மாப்பிள்ளையை ரீமேக் செய்கிறாராம் தனுஷ். அதுமட்டுமல்ல, இந்த ரீமேக் குறித்து அவர் நாளிதழ்களுக்கு அளித்துள்ள பேட்டிதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. தொடர்ந்து இரண்டு சுமாரான படம் கொடுத்ததற்கே இந்த பில்டப் என்றால், இன்னும் ரஜினி மாதிரி தொடர் வெற்றிகளைக் கொடுத்திருந்தால், தமிழ்நாட்டையே விலை பேசுவார் போலிருக்கே என்கிறார்கள் விமர்சகர்கள். அவர் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி, "நான் ரஜினியின் மருமகன் என்ற உரிமையில் இந்தப் படத்தைப் பண்ணவில்லை. எனக்கு இந்தப் படம் பிடிக்கும் அதனால் விரும்பி செய்கிறேன். நான் ஒரு நடிகர், என்ற முறையில் ரஜினியிடம் இதற்கான அனுமதி பெற்றுவிட்டேன். இதைவிட முக்கியம், இந்தப் படத்தை ரீமேக் செய்ய என்னைவிடத் தகுதியான ஆள் வேறு யார் இருக்கிறார்கள் இங்கே? நிறைய பேர் என்னை அடுத்த ரஜினி என்கிறார்கள் (?!). ஆனால் ரஜினியின் கார்பன் காப்பியாக நான் இருக்க விரும்பவில்லை. தமிழ் சினிமாவில் ஒரு ரஜினிதான். நான் என் ஸ்டைல்ல கதைகளைத் தேர்வு செய்கிறேன்..."என்று கூறியுள்ளார். அதுக்கு ஏன் ரஜினி படங்களை ரீமேக் பண்ணனும்... சொந்தமா கஸ்தூரிராஜா ஸ்டைல்ல முயற்சிக்கலாமே தனுஷ்!!.

27 ஜூலை 2009

இலவச பிளாக்கர் டெம்பிளேட்

எவ்வளவு நாள் தான் கூகுள் கொடுக்க கூடிய டேம்பிளடையே வைக்கிறது தினம் தினம் புதிசு புதுசா டெம்பிளேட் வடிவமைக்கிறார்கள் . நம்முடைய ரசனைக்கு ஏற்றவாறு டெம்பிளேட் மாற்றினால் நன்றாக தானே இருக்கும் . எனக்கு பிடித்த இரண்டு டேம்பிளேட்க்குகான லிங்க் கொடுக்கிறேன் நீங்களும் உங்களுக்கு பிடித்திருந்தால் பயன் படுத்துங்கள் .
  1. Paper Wall
இந்த டேம்பிலேட்டுக்கான லிங்க் இந்த டேம்பிலேட்டுக்கான லிங்க்

ஜெயம் ரவி படத்திலிருந்து நயன் நீக்கப்பட்டது ஏன்?

காதல் விவகாரத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டதால் நயன்தாராவை தன் படத்திலிருந்து தூக்கிவிட்டார் இயக்குநர் ஜெயம் ராஜா. தன் தம்பி ஜெயம் ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் மும்முரமாக உள்ளார் ஜெயம் ராஜா. இந்தப் படத்தில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். ஆனால் அவருக்கு முன் இந்தப் படத்தில் ஒப்பந்தமானவர் நயன்தாரா. சம்பளமெல்லாம் பேசி முடிக்கும்போதுதான், பிரபு தேவாவுடன் அவருடைய ரகசிய திருமணம், தனிக்குடித்தனம், பஞ்சாயத்து போன்ற விவகாரங்கள் வெளியாகின. எனவே படம் முடியும் வரை உடனிருந்து ஒத்துழைப்பு தருவேன் என எழுதித் தரச் சொல்லிக் கேட்டாரக்களாம் நயன்தாராவிடம். அவரோ அதற்கு மறுத்துவிட, 'வேற நடிகையைப் பாப்போம்... கோடம்பாக்கத்துல நடிகைகளுக்கா பஞ்சம். நமக்கு கதைமேல நம்பிக்கையிருக்கு', என எடிட்டர் மோகன் தன் ஸ்டைலில் சொல்லிவிட, அதற்குப் பிறகே தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆக, இப்போதைக்கு நயனை அந்த 'ஆதவன்' மட்டும்தான் காப்பாத்தணும், தமிழில்!

உலகின் முதல் 3D டிஜிட்டல் கேமரா சந்தைக்கு வருகிறது

புஜி பிலிம்(Fuji Film) நிறுவனம் இன்று வெளியிட்ட செய்தியின் படி மிக விரைவில் Fujifilm FinePix Real 3D W1 என்னும் உலகின் முதல் 3D டிஜிட்டல் கேமராவை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.ஒரு காலத்தில் புகைப்பட தொழிலில் கோலோச்சி பின்னர் நிக்கான்,கேனான் நிறுவனங்களின் கடும் போட்டியினால் தாக்கு பிடிக்க முடியாமல் பின்னடைந்த புஜி பிலிம் தன் இருப்பை காட்டிக்கொள்ள இப்போது இந்த புதிய தொழில் நுட்பத்தின் மூலம் அதிரடியாக களத்தில் இறங்குகிறது.இந்த கேமராவின் சிறப்பம்சம் 3D புகைப்படங்களை வெறும் கண்களாலேயே முப்பரிமாண கண்ணாடி இன்றி காண முடியும். ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் இருந்து எடுத்து,எடுக்கப்பட்ட இரு பிம்பங்களும் ஒன்றின் மீது ஒன்று வைக்கப்படும் போது முப்பரிமாண(3D) படம் கிடைக்கிறது.இந்த கேமராவில் மனித கண்களுக்கு இடையே உள்ள அதே தூர அளவில் உள்ள இரு லென்ஸ்கள் ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் படமெடுக்கின்றன.அவ்வாறு படமெடுத்த காட்சியை வெறும் கண்களாலேயே 10 மெகா பிக்சல்கள் அளவில் படமெடுக்கும் இந்த கேமராவின் 2.8 இன்ச் அகல LCD திரையில் காணலாம்.முப்பரிமாண முறையில் வீடியோக்களையும் முப்பரிமாண முறையிலன்றி வழக்கமான இரு பரிமாண(2D)படங்களையும் எடுக்கவல்லது இந்த கேமரா. இது போக FinePix Real 3D V1 என்னும் 8 இன்ச் அகலமுள்ள டிஜிட்டல் திரை சாதனத்தையும் புஜி பிலிம் அறிமுகப்படுத்தவுள்ளது.3D டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படங்களை இந்த 3D டிஜிட்டல் திரை சாதனத்தின் மூலம் பார்வையிடலாம்.இது மட்டுமன்றி முப்பரிமாண படங்களை பிரதி எடுக்க புஜி பிலிம் நிறுவனம் விஷேச காகிதங்களை தயாரித்துள்ளது.இந்த காகிதங்களின் மூலம் பிரதி எடுத்த முப்பரிமாண படங்களை வெறும் கண்களாலேயே பார்க்கலாம்.காகிதங்களில் பிரதியெடுக்க ஆன் லைன் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.அடுத்த மாதம் ஜப்பானில் வெளியாகி செப்டம்பர் மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வரவுள்ளது.

You might also like:

ரஹ்மானுக்கு ராதாரவி கண்டணம்!

ஏஆர் ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியிருக்கலாம். ஆனால் அவர் சினிமாவுக்கு அறிமுகமானது கவிதாலயா மூலம்தானே தவிர ஸ்லம்டாக் மில்லியனேர் மூலமல்ல. ஆனால் அவர் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை இழுத்தடிக்கிறார், அவமதிக்கிறார். இதற்காக அவரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார் ராதாரவி. 'மண்டபம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிலிம்சேம்பர் திரையரங்கில் நேற்று காலை நடந்தது. பாடல்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் வெளியிட, நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி பெற்றுக்கொண்டார். விழாவில், ராதாரவி பேசியதாவது: தமிழ்நாட்டில் சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு தியேட்டர்கள் கொடுப்பதில்லை. தமிழ்நாட்டில் தமிழ் படங்களை திரையிட தியேட்டர்கள் முன்னுரிமை தரவேண்டும். இந்தி படங்கள் வருகிறது என்று, தமிழ் படம் திரையிடுவதை தவிர்க்கக் கூடாது. தமிழ் படங்களை திரையிடாத தியேட்டர்களை இழுத்து மூடவேண்டும். தமிழ்ப் படங்களுக்கு தியேட்டர் கொடுக்க மனமில்லாவிட்டால் அவற்றை குடோன்களாக ஆக்கிவிடுங்கள். வேறு எங்காவது போய் தியேட்டர் கட்டிக் கொள்ளுங்கள். சின்ன படங்களை திரையிடுவதற்கு பல தியேட்டர்கள் முன் வருவதில்லை. இதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சில சட்ட திட்டங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். தமிழ் பெயர்கள் சில நடிகர்-நடிகைகள், அம்மா, அப்பா சூட்டிய பெயர்களை மாற்றிவிட்டு, 'நியூமராலஜி'படி பெயர் வைத்துக் கொள்கிறார்கள். தாய், தந்தையைவிட 'நியூமராலஜி' எந்த வகையில் சிறந்தது என்று தெரியவில்லை. இது 'சோளி உருட்டுவதை நம்பி அரசியல் நடத்துவது' போல் உள்ளது. இப்போதெல்லாம் சில இசை அமைப்பாளர்கள் 'டியூன்' போடுவதற்காக வெளிநாடுகளுக்கு போகிறார்கள். கூடுவாஞ்சேரியிலும், மதுரையிலும் கிடைக்காத 'டியூன்'களா வெளிநாடுகளில் கிடைக்கப் போகிறது. இதுபோல் ஒவ்வொரு ஏரியாவிலும் சினிமாவை கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமானுக்கு கண்டனம் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் படத்துக்கு இசை அமைத்துதான், இசையமைப்பாளராக அறிமுகமானார். அவருடைய முதல் படம் 'ஸ்லம்டாக் மில்லினர்' அல்ல. கவிதலாயா நிறுவனம் தான் அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் பட உலகை அடியோடு புறக்கணிக்கிறார். அவர் ஆஸ்கார் விருது பெற்றதற்காக தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த தேதி கேட்டோம். ஆனால் அவர் எங்களுக்கு தேதி தராமல், வேறு ஒரு மாநிலத்தில் பாராட்டு விழா நடத்த சம்மதித்து இருக்கிறார். இத்தனையையும் தாண்டி தமிழ் படத் தயாரிப்பாளர்கள் அவர் பின்னால் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார். அவரும் கண்டுகொள்வதில்லை. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், என்றார்.

பழைய Widget களை இழக்காமல் டெம்பிளேட் மாற்றுவது எப்படி ?

பிளாக்கர் டேம்பிலேட்டுகளில் மேலும் மேலும் அழகு படுத்தும் வண்ணமாக நாம் பல side bar widget கள் வைத்திருப்போம் . இப்படி நாம் நமது டேம்பிலேட்டுகளை அழகு படுத்தி வரும் போது புதிய பிளாக்கர் டேம்பிலேட்டு மாற்ற தோன்றும் . அப்படி மற்ற தோன்றும் போது புதிய டெம்பிளேட்டை தரவிறக்கி நமது பிளாக்கில் தரவேற்றும் போது நாம் ஏற்கனவே வைத்திருந்த Side bar widget கள் HTMl codes போன்றவற்றை இழக்க வேண்டியது வரும் . இதை இழக்காமல் நாம் எப்படி டெம்பிளேட்டை மாற்றுவது என்பதை பாப்போம் .
  1. முதலில் உங்களுக்கு பிடித்த டெம்பிளேட்டை அந்த தளத்திலிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள் .
  2. பின்னர் உங்கள் பிளாக்கர் கணக்கின் உள் நுழைந்து Layout ----> Edit HTML பகுதிக்கு சென்று Download Full Template என்ற இணைப்பை கிளிக் செய்து ஏற்கனவே இருக்கும் உங்கள் டெம்பிளேட்டை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் .
  3. புதிதாக தரவிறக்கிய டேம்பிலேட்டையும் , ஏற்கனவே இருக்கும் உங்கள் டேம்பிலேட்டையும் நோட் பதில் Open செய்து கொள்ளுங்கள் .
  4. பின்னர் ஏற்கனவே நீங்கள் பயன் படுத்தி வரும் டெம்பிளேட்டில் இருக்கும் Side bar HTML codes எது எல்லாம் உங்களுக்கு தேவையோ அதை வெட்டி புதிய டேம்பிலேட்டு பைலில் அதில் வருகிற Side bar Widget -க்கு கீழே ஒட்டி விடுங்கள் .
  5. பின்னர் அதை XML file ஆக Save கொள்ளுங்கள் .
  6. மீண்டும் உங்கள் பிளாக்கர் கணக்கிற்கு சென்று Edit HTML பகுதியில் சென்று Upload a template from a file on your hard drive என்று இருக்கும் அதன் மூலம் நீங்கள் Save செய்து வைத்துள்ள டெம்பிளேட் Upload செய்து கொள்ளுங்கள் .
  7. Conform and Save என்று கேட்கும் நீங்கள் அதை கிளிக்கி Save செய்து கொள்ளுங்கள் . புதிய நீங்கள் விரும்பிய டெம்பிளேட் கிடைக்கும் .
  8. இவ்வாறு செய்ய கடினமாக இருந்தால் நீங்கள் புதிய டெம்பிளேட் தரவேற்றுவதர்கு முன்னர் உங்கள் Side bar இல் உள்ள HTML Code -களை Note pad -இல் Save செய்து கொள்ளுங்கள் . மற்றும் தேவையான அனைத்து கோடுகளையும் save செய்து விட்டு புதிய டெம்பிளேட்டை தரவேற்றுங்கள் .\
  9. தரவேற்றிய பின்னர் ஏற்கனவே save செய்து வைத்துள்ள HTML code களை தேவையான இடங்களில் ஒட்டி விடுங்கள் . இது மிகவும் இலகுவானது .
மேலும் Note pad இல்லாதவர்கள் லேட்டஸ்ட் வெர்சன் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள் இத வெர்சன் எடிட் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . அதற்கான சுட்டி Down Load Notepad latest version

மது..பதானியுடன் சண்டை: த்ரிஷாவால் பரபரப்பு

பிரிக்கவே முடியாதது எது என்றால் மதுவிருந்து சர்ச்சையும் த்ரிஷாவும் என்று சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது இந்த மாதிரி ஒரு வில்லங்கத்தில் சிக்கிக் கொள்வது த்ரிஷாவுக்கு வாடிக்கையாகிவிட்டது. நேற்று 'வீக் எண்ட் மதுவிருந்து' நடன நிகழ்ச்சிக்கு போன த்ரிஷா கடும் மோதலில் இறங்கி கைகலப்பு வரை போய்விட்டார். அவர் சண்டை போட்டது இந்திய கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானியுடன்! பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த கைகலப்பை கடைசியில் ஓட்டல் சிப்பந்திகளும், போலீசாரும் கஷ்டப்பட்டு தடுத்தார்களாம். வார இறுதி நாட்களை மது - மாதுக்களுடன் கொண்டாடுவதுதான் இன்றைய தமிழகத் தலைநகர் சென்னையின் கலாச்சாரம். அந்த கலாச்சார ஜோதியில் பிரபலங்கள் தொடங்கி, மாணவர்கள் வரை அனைவருமே ஐக்கியமாகி வருகிறார்கள். ஏற்கெனவே பார்ட்டி பிரியையான த்ரிஷா, பிரபல ஹோட்டல்களில் தவறாமல் அட்டென்டன்ஸ் போட்டு விடுவார். பார்ட்டியின் முடிவில் பலமுறை தகராறு, கைகலப்பு என ஏக களேபரமாகிவிடுவது இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது. நேற்றும் அப்படித்தான் ஒரு மதுவிருந்து நடன நிகழ்ச்சிக்கு தனது தோழர்-தோழியர் புடைசூழப் போனாராம் த்ரிஷா. இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ஆண்கள் என்றால் நிச்சயம் தனது பெண் ஜோடியுடன் வர வேண்டும். பெண்களுக்கு அந்தக் கட்டாயம் இல்லை. தனியாக வரலாம்... துணையோடு ஆடலாம்... போகலாம்! பார்ட்டி உச்சகட்டத்தை எட்டிய போது, ஆட்டத்தில் லயித்திருந்த த்ரிஷாவின் மீது யாரோ பலமாக மோதிவிட்டார்களாம். உடனே அந்த நபரை நிறுத்தி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டாராம் த்ரிஷா. அவருக்கு ஆதரவாக அவர் தோழிகளும் இறங்க விவகாரம் முற்றியது. அந்த நபர் கிரிக்கெட் வீரர் பதானியாம். சிறிது நேரத்தில் அவரது அடிப்பொடிகளும் வந்துவிட, பெரிய 'பார் வார்' உருவாகும் நிலை ஏற்பட்டதாம். அப்போது, ஆத்திரத்தில் பதானைப் பிடித்து த்ரிஷா தள்ள, பதிலுக்கு அவரும் தள்ள ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டார்களாம். உடனே, ஹோட்டல் சிப்பந்திகள் தலையிட்டு தடுத்து நிறுத்தினர். சிறிது நேரத்தில் போலீஸ் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தி பத்திரமாக அனுப்பி வைத்தனர். தலைக்கு ஹெல்மெட் மாட்டாமலோ, வண்டிக்கு ஹெட்லைட் இல்லாமலோ போனால் சுறுசுறுப்பாக பிடித்து உள்ளே தள்ளுவார்கள் அல்லது இருப்பதைப் பிடுங்கிக் கொண்டு அனுப்புவார்கள். பெரிய இடத்து தவறென்றால் சமாதானம் செய்து அனுப்பி வைப்பார்கள். இவங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது!.

யாரையும் அண்ணா என்று அழைக்க மாட்டேன்! - நமீதா

என் வாழ்நாளில் யாரையுமே அண்ணா என்று அழைக்க மாட்டேன். எல்லாருமே எனக்கு மச்சான்ஸ்தான். படத்தில் எனக்கு அண்ணனாக நடிக்கும் வடிவேலுவைக் கூட அண்ணா என்று கூப்பிடுவதில்லை. அவர் மனசு சங்கடப்படும் என்பதற்காக சார் என்றே அழைக்கிறேன், என்கிறார் கவர்ச்சி நாயகி நமீதா. நமீதா மோகினியாக நடிக்கும் `ஜகன்மோகினி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏ.ஆர்.எஸ். கார்டனில் நடந்தது. நமீதா மோகினியாகவும், வடிவேல் நாதஸ்வர வித்வானாக-நமீதாவின் அண்ணனாகவும் நடிக்கும் காட்சி படமாகிகயது. படப்பிடிப்பு இடைவேளையில், நமீதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: "வடிவேலுவும், நானும் பல படங்களில் சேர்ந்து நடித்து இருக்கிறோம். 4 வருடங்களுக்குப்பின், இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறோம். வடிவேலுவின் நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய 'காமெடி'யை இந்த படத்தில் சேர்க்கும்படி நான்தான் இயக்குநரிடம் சொன்னேன். அப்படி வைத்தால், அண்ணன்-தங்கை பாசம் என்று உருக்கமான காட்சிகளை வைக்க வேண்டாம். 'காமெடி'யான சீன்களை வையுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். படத்தின் கதைப்படி வடிவேல் எனக்கு அண்ணனாக நடித்தாலும், 'செட்'டில் அவரை நான், அண்ணா என்று அழைத்து சங்கடப்படுத்துவதில்லை. 'சார்' என்றுதான் கூப்பிடுகிறேன். பொதுவாக 'அண்ணா' என்று எந்த ஆணையும் நான் கூப்பிடுவதில்லை. ஆண்கள் அனைவரும் எனக்கு மச்சான்கள்தான். எனக்கு திருமணம் நடந்தால், எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். ரசிகர்கள் உள்பட அத்தனை பேருக்கும் விருந்து கொடுப்பேன். அதுவரை நான், என்னை அழகாகவும், கவர்ச்சியாகவும் வைத்துக் கொள்வேன், என்றார் நமீதா.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com