
Blogs எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இந்த இணையத்தளம் தருகின்றது
http://www.sitesketch10.com/ என்ற முகவரியில் உள்ள தளம் பிளாக்குகள் அமைக்கவும் வெப்சைட்டுகளை உருவாக்கவும் பல வழிகளில் ஆலோசனை கூறும் தளமாக உள்ளது. இந்த தளத்தின் மேலாக உள்ள நேவிகேஷன் பாரில் இத்தளம் தரும் உதவிகளை வகைகளாகப் பட்டியல் இட்டுத் தந்துள்ளது. அவை:
Blogging Tips: இங்கு உங்களுடைய பிளாக்குகளைச் சிறப்பாக்க அவற்றில் தரப்படும் கருத்துக்கள் எதைப் பற்றி எப்படி இருக்க வேண்டும் எனவும் அந்த வலைமனைகளுக்கு நிறைய பேர் வருவதற்கான சூழ்நிலையை எப்படி உருவாக்க வேண்டும் எனவும் டிப்ஸ்கள் நிறைய தரப்பட்டுள்ளன.
Fonts: உங்களுடைய பிளாக்குகளின் தலைப்பை அமைக்க ஒரு நல்ல பாண்ட் வேண்டுமா? அதுவும் ஷார்ப்பாக சிறப்பாக இருக்க வேண்டுமா? அப்படியானால் இந்த பிரிவில் நிச்சயம் நுழைய வேண்டும். இங்கு இலவசமாகக் கிடைக்கக் கூடிய தளங்கள் குறித்தும் எழுத்து வகைகள் குறித்தும் தகவல் கள் தரப்படுகின்றன. உங்கள் வலைமனை களை எந்த எழுத்துக்களைக் கொண்டு கவர்ச் சியாக அமைத்திடலாம் என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது.
Graphics: இங்கு உங்கள் வலைமனைகளுக்கான கிராபிக்ஸ் எங்கு கிடைக்கும் என்ற தகவல் தரப்படுகிறது. அத்துடன் மிகச் சிறப்பாக வெப் சைட்டுகளையும் பிளாக்குகளையும் அமைத்தவர்களுடன் பேட்டியும் தரப்படுகிறது. கிராபிக்ஸை எப்படி சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்ற அறிவுரையும் தரப்படுகிறது. குறிப்பாக பிளாக்குகளுக்கான டிசைன்களை வடிமைக்கையில் எப்படி கிராபிக்ஸ் உதவுகிறது என்றும் அறிவுரை தரப்படுகிறது.
Inspiration: இங்கு மற்ற பிளாக்குகளை எடுத்துக் காட்டி எப்படி உங்கள் வலைமனைகளை இன்னும் சிறப்பாக அமைக்கலாம் என்று எடுத்துச் சொல்லப்படுகிறது. இந்த தளத்திலேயே எனக்குப் பிடித்த பிரிவு இதுதான்.
Search Engines: பெரும்பாலான இணைய தளங்கள் அந்த தளங்களில் தங்களுடைய அல்லது பிற நிறுவனங்களின் சர்ச் இஞ்சின் எனப்படும் தேடுதல் தளங்களை அமைக்கின்றனர். தளம் அமைத்தவர்களுடையதோ அல்லது கூகுள் நிறுவனத்தினுடையதோ, இன்டர்நெட்டில் உள்ள எத்தகைய தளத்திலும் ஒரு சர்ச் இஞ்சின் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. இந்த பிரிவில் அப்படிப்பட்ட ஒரு சர்ச் இஞ்சினை உங்கள் பிளாக்கில் எப்படி அமைப்பது என்ற விபரங்கள் தரப்படுகின்றன.
Updates: கடைசியாகத் தரப்பட்டுள்ள பிரிவானாலும் முக்கியமான பிரிவாகும். இதில் அண்மைக் காலத்தில் வந்த சைட் அப்டேட் பைல்கள் பட்டியல் தரப்படுகிறது. அன்றைய செய்தியும் கிடைக்கிறது. பிளாக்குகள் வைத்துள்ள அனைவரும் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இணைய தளம் இது.