27 ஜூலை 2009
மது..பதானியுடன் சண்டை: த்ரிஷாவால் பரபரப்பு
பிரிக்கவே முடியாதது எது என்றால் மதுவிருந்து சர்ச்சையும் த்ரிஷாவும் என்று சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது இந்த மாதிரி ஒரு வில்லங்கத்தில் சிக்கிக் கொள்வது த்ரிஷாவுக்கு வாடிக்கையாகிவிட்டது.
நேற்று 'வீக் எண்ட் மதுவிருந்து' நடன நிகழ்ச்சிக்கு போன த்ரிஷா கடும் மோதலில் இறங்கி கைகலப்பு வரை போய்விட்டார். அவர் சண்டை போட்டது இந்திய கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானியுடன்!
பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த கைகலப்பை கடைசியில் ஓட்டல் சிப்பந்திகளும், போலீசாரும் கஷ்டப்பட்டு தடுத்தார்களாம்.
வார இறுதி நாட்களை மது - மாதுக்களுடன் கொண்டாடுவதுதான் இன்றைய தமிழகத் தலைநகர் சென்னையின் கலாச்சாரம். அந்த கலாச்சார ஜோதியில் பிரபலங்கள் தொடங்கி, மாணவர்கள் வரை அனைவருமே ஐக்கியமாகி வருகிறார்கள். ஏற்கெனவே பார்ட்டி பிரியையான த்ரிஷா, பிரபல ஹோட்டல்களில் தவறாமல் அட்டென்டன்ஸ் போட்டு விடுவார். பார்ட்டியின் முடிவில் பலமுறை தகராறு, கைகலப்பு என ஏக களேபரமாகிவிடுவது இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது.
நேற்றும் அப்படித்தான் ஒரு மதுவிருந்து நடன நிகழ்ச்சிக்கு தனது தோழர்-தோழியர் புடைசூழப் போனாராம் த்ரிஷா. இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ஆண்கள் என்றால் நிச்சயம் தனது பெண் ஜோடியுடன் வர வேண்டும். பெண்களுக்கு அந்தக் கட்டாயம் இல்லை. தனியாக வரலாம்... துணையோடு ஆடலாம்... போகலாம்!
பார்ட்டி உச்சகட்டத்தை எட்டிய போது, ஆட்டத்தில் லயித்திருந்த த்ரிஷாவின் மீது யாரோ பலமாக மோதிவிட்டார்களாம். உடனே அந்த நபரை நிறுத்தி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டாராம் த்ரிஷா. அவருக்கு ஆதரவாக அவர் தோழிகளும் இறங்க விவகாரம் முற்றியது. அந்த நபர் கிரிக்கெட் வீரர் பதானியாம்.
சிறிது நேரத்தில் அவரது அடிப்பொடிகளும் வந்துவிட, பெரிய 'பார் வார்' உருவாகும் நிலை ஏற்பட்டதாம். அப்போது, ஆத்திரத்தில் பதானைப் பிடித்து த்ரிஷா தள்ள, பதிலுக்கு அவரும் தள்ள ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டார்களாம்.
உடனே, ஹோட்டல் சிப்பந்திகள் தலையிட்டு தடுத்து நிறுத்தினர். சிறிது நேரத்தில் போலீஸ் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தி பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
தலைக்கு ஹெல்மெட் மாட்டாமலோ, வண்டிக்கு ஹெட்லைட் இல்லாமலோ போனால் சுறுசுறுப்பாக பிடித்து உள்ளே தள்ளுவார்கள் அல்லது இருப்பதைப் பிடுங்கிக் கொண்டு அனுப்புவார்கள். பெரிய இடத்து தவறென்றால் சமாதானம் செய்து அனுப்பி வைப்பார்கள். இவங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது!.