
31 ஜூலை 2009
அஜீத்துக்கு ஜோடி ஸ்ருதி?
அஜீத் தனது 49 வது படமான அசலில் பிஸியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் தனது பொன்விழா படத்துக்கான வேலைகளில் மும்முரமாக உள்ளார்.
இந்தப் படத்தை இவர் இயக்குகிறார், அவர் இயக்குகிறார் என ஏகப்பட்ட ஹேஷ்யங்கள். இப்போதைக்கு, இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக பேச்சு அடிபடுகிறது.
அதைவிட முக்கியமான விஷயம் இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக கூறப்படும் நடிகை. கமல் மகள் ஸ்ருதி ஹாசன், இந்தப் படத்தில் நடிக்கப்போவதாகவும், இது அவரது முதல் தமிழ்ப் படமாக இருக்கும் என்கிறார்கள். ஹிந்தியில் அவரது லக் படம் படுதோல்வியடைந்ததால், தமிழில் நல்ல படத்துடன் கேரியர் துவங்க வேண்டும் என ஸ்ருதி விரும்புகி்றாராம்.
உண்மையில் வெங்கட் பிரபுவின் சரோஜா படத்தில் வேகாவின் வேடத்தில் நடிப்பதாக இருந்தவர் ஸ்ருதிதான். ஆனால் பின்னர் அந்தப் படத்தில் நடிக்க அப்போது ஸ்ருதி மறுத்துவிட்டார்.
ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், இப்போது மீண்டும் அதே வெங்கட் பிரபுவின் படத்தில் தமிழில் அறிமுகமாகிறார் ஸ்ருதி.
ஆனால் இதுபற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
