Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

06 ஜூலை 2012

கடவுள் துகள் கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானியின் பங்களிப்பு புறக்கணிக்கப்படுகிறதா?



ஹிக்ஸ் பாசன் எனப்படும் கடவுள் துகளுக்கான இணை அணுத்துகள்கள் கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானியின் பங்களிப்பும் அளப்பரியதாக உள்ளதாக சுவிற்சர்லாந்தின் சேர்ன் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் இத்தகவல் பல இடங்களில் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவதாகவும், இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பு எப்படிப்பட்டது என சுட்டிக்காட்ட தவறவிடப்படுவதாகவும் அதிருப்தி எழுந்துள்ளது.

இங்கிலாந்தின் பிரபல விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸின் முதற்சொல்லும் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸின் இறுதிச்சொல்லும் இணைந்து ஹிக்ஸ் போசன் (கடவுள் துகள்) எனும் பெயர் உருவாக்கப்பட்டது. 'கடவுள் துகள் உண்மையில் இருக்கலாம். அணுவுக்கு நிறையை தருவது அணுவின் உட்கூறுகளில் ஒன்றான போசோன்கள் தான் என 1960 களில் உலகுக்கு உறுதியாக நம்பிக்கை வெளியிட்ட முதல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் ஆவார். அணுவில் அவற்றை இணங்கண்டவர் இந்திய அறிவியலாளர் சத்தியயேந்திரநாத் போஸ் என்பதால் அவற்றிற்கு 'போசன்கள்' என பெயரிடப்பட்டன.

மேலும் இணை அணுவியல் துகள்களின் அடிப்படை வகுப்புக்களை வகுத்தவர்களில் பிரதானமானவர் போஸ் ஆவார். இவர் ஐன்ஸ்டைனுடன் இணைந்து பணிபுரிந்தவர். ஜேர்மன் மொழியில் இருந்த ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவம் அடங்கிய ஆய்வு கட்டுரையை புரிந்து கொள்வதற்காக ஜேர்மனிய மொழியையே கற்றவர். குவாண்டம் பொறிமுறையில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் போஸ்-ஐன்ஸ்டைன் செறிபொருள், போஸ்-ன்ஸ்டைன் புள்ளியியல் போன்ற தத்துவங்களுக்காக இவர் அறியப்படுகிறார். ஐன்ஸ்டைனின் சிறப்பு சார்பியல் தத்துவம் ஆய்வுக்கட்டுரையை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் எனும் புகழ் இவருக்கு உண்டு.

நேற்றைய ஊடகவியலாளர்கள் கருத்தரங்கிலும் சேர்ன் விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கையில், கடவுள் துகள் ஆராய்ச்சி திட்டத்தில் வரலாற்று தந்தை போன்றது இந்தியா என பெருமிதத்துடன் கூறியிருந்ததற்கு முக்கிய காரணம் குறித்த இந்திய அறிவியல் விஞ்ஞானியான சத்தியேந்திரநாத் போஸ் ஆவார்.

எனினும் கடவுள் துகள் பற்றிய இறுதியான கண்டுபிடிப்புக்களை இன்று உலகமே கொண்டாடும் வேளையில் சத்தியேந்திரநாத் போஸ் இக்கண்டுபிடிப்பில் செலுத்திய பங்களிப்புக்களை பற்றி ஊடகங்களில் தகவல் இல்லை. அவரை பற்றி பலர் அறிந்திருக்க தவறுகின்றனர் என அதிருப்து எழுந்துள்ளது.

இந்திய விஞ்ஞானியின் பெயர் திட்டமிடப்பட்டு விடுபடுவதாக இந்திய செல்லூலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் நிறுவனரும், இயக்குனருமான பி.எம்.பர்காவா தெரிவித்துள்ளார். இது முதல் தடவை அல்ல இது போல் பல அரிய கண்டுபிடிப்புக்களில் இந்தியாவின் பங்களிப்பு விடுபடுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் போஸ் வரலாற்று ரீதியாகவே புறக்கணிக்கப்படுகிறார் என பிரதமருக்கான அறிவியல் ஆலோசனை கவுன்சிலின் தலைவர் சி.என்.ஆர் ராவ் தெரிவித்துள்ளார். போஸின் கபடமற்ற வெளிப்படையான பேச்சு இதற்கொரு காரணமாக இருக்கலாம். ஒரு முறை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜகவர்லால் நேரு நிகழ்வொன்றில் நடத்திய பேச்சின் போது, நேருவின் கருத்தை வெளிப்படையாகவே போஸ் எதிர்த்திருந்தார். ஒருவேளை போஸ் அமெரிக்காவில் இருந்திருந்தால் மிக பிரபலமடைந்திருப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

35 அமெரிக்க இராணுவ தளங்களை ஒரு சில நிமிடங்களுக்குள் அழித்துவிட முடியும் : ஈரான்


ஈரானை சூழவுள்ள 35 அமெரிக்க இராணுவ தளங்களை சில நிமிடங்களுக்குள் முற்றாக தகர்த்துவிடக்கூடிய சக்தி வாய்ந்த எறிகணைகளை தாம் கொண்டிருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் இராணுவ கட்டளை தளபதி அமீர் அலி ஹஜிஷாதே இது தொடர்பில் நிருபர்களுக்கு தெரிவிக்கையில், ஈரானை சூழவுள்ள அமெரிக்க இராணுவ தளங்களை ஒரு சில நிமிடங்களுக்குள் எம்மால் முற்றாக அழித்துவிட முடியும். எனினும் இதுவரை நாம் அந்த அச்சுறுத்தலை அமெரிக்காவுக்கு விடவில்லை என்றார்.

ஈரான் முன்னெடுத்து வரும் அணு ஆயுத திட்டம், சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முதலான நாடுகள் ஈரான் மீது கடும் பொருளாதார அழுத்தத்தை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில், ஈரானிடம், 900 மைல்கள் தூரம் சென்று தாக்கக்கூடிய Shabab-3 உட்பட பல ஆபத்தான எறிகணைகள் இருப்பதாக, ஈரானின் பிரஸ் டி.வி தெரிவித்துள்ளது. ஈரானுக்கு, 120 மைல் தொலைவில் பஹ்ரேனில் அமெரிக்காவின் கடற்படை இராணுவ தளத்தை இது இலகுவாக தாக்கிவிட கூடியது.

ஈரானின் தென்பகுதியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்க இராணுவத்தை பின்புலமாக கொண்ட விமானப்படை தளம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

03 ஜூலை 2012

பைல்கள் -போல்டர்களை பாஸ்வேர்ட்கொடுத்து பாதுகாக்க

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பர்சனல் தகவல்கள் இருக்கும். அதை மற்றவர்கள் பார்பதை விரும்பமாட்டார்கள். நாம் நமது தகவல்களை இவ்வாறு மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைத்துவைக்கலாம்.3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இந்த சாப்ட்வேரினை நீங்கள் இன்ஸ்டால் செய்யும் சமயமே உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நீங்கள கொடுக்கப்போகும் பாஸ்வேர்டினை தட்டச்சு செய்யவும் ( இந்த பாஸ்வேர்ட் தான் உங்கள் அனைத்துப்பைல்களுக்கும் உண்டான பாஸ்வேர்டாகையால் இதனை கவனமாக தட்டச்சு செய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்)

இப்போழுது நீங்கள் இந்த சர்ப்ட்வேரினை ஓப்பன் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் மறைக்கவேண்டிய பைலையோ - போல்டரையோ தேர்வு செய்யுங்கள்.இதன் வலதுபுறம் உங்களுக்கு தேவையான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். தேவையானதை தேர்வு செய்துகொண்டு ஓ.கே.தாருங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஓ.கே.கொடுத்து வெளியேறுங்கள். இப்போழுது நீங்கள் உங்கள் சாப்ட்வேரினைன திறக்க உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் சாப்ட்வேரின் பாஸ்வேர்டினை கொடுத்தபின்னர்தான் உங்களுடைய பைல் ஓப்பன் ஆகும்.
இதன் மூலம் மற்றவர்கள் பார்வையிலிருந்து உங்கள் பைல்களை போல்டர்களை மறைக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

மேஜிக் காலண்டர்.

கடலில் முத்து எடுப்பவர்களுக்கு சில சமயம் விலை மதிப்பில்லா அரிய முத்து கிடைக்கும். அதுபோல் சாப்ட்வேர்களில் குறைந்த அளவில் நிறைய வசதிகளை கொண்ட இந்த சாப்ட்வேரினை சொல்லலாம். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
Maths Utilities - சயிண்டிபிக் கால்குலேட்டர் முதல்கொண்டு  கணிதத்தில் வரும் அனைத்துவிதமான கால்குலேட்டர்களும் இதில் உள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மாணவர்களுக்கு பயன்படும் Geometry Calculator ல் பக்க அளவுகளை கொடுத்து அதன் ஏரியா -ஆங்கில் (கோணம்) -பரப்பளவு ஆகியவற்றை எளிதில் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
Magic Squares என்கின்ற காலத்தில் நீங்கள் 2 க்கு மேற்பட்ட எண்ணிக்கையை தட்டச்சு செய்யும் போது அதே எண்ணிக்கை கொண்ட காலம் மற்றும் ரோ அடங்கிய எண்கள் கிடைக்கும். அதன் கூட்டுத்தொகையை மேலிருந்து கீழாகவோ -வலமிருந்து இடமாகவோ -குறுக்கு வாட்டத்திலோ என எப்படி நீங்கள் கூட்டினாலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள தொகை உங்களுக்கு கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


Other Utilities என ஒரு டேபினை கொடுத்துள்ளார்கள். அதில் Sun and Moon Data -இதன் மூலம் அன்றைய சூரிய உதயம் -அஸ்தமனம் -நிலவின் நிலைகளை அறிந்தகொள்ளலாம்.Average Speed.இதன் மூலம் ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு நீங்கள் எவ்வளவு வேகத்தில் சென்றால் எவ்வளவு நேரத்தில் அங்கு சென்று அடையலாம் என் எளிதில் கணக்கிடலாம்.Fuel Consumption -பெட்ரோல் விலை உயரும் இந்த காலத்தில் நீங்கள் எவ்வளவு பெட்ரோல் போட்டீர்கள் எவவளவு கிலோ மீட்டர் சென்றீர்கள்-உங்கள் வண்டியின் பெட்ரோல் கன்சப்ஷன் எவ்வளவு என எளிதில் அறிந்துகொள்ளலாம். Global Distances -நீங்கள் புதுமண தம்பதியராகவோ வேலைகாரணமாக வெளியூரில் வசிப்பவராகவோ இருக்கலாம்.உங்கள் பிரியமானவர்களுக்கும் உங்களுக்கும் இடைய உள்ள வான்வெளி தூரத்தை எளிதில் அறிந்துகெகாள்ளலாம். Travelling Salesman Problem - விற்பனை பிரதிநிதியின் ப்ராப்ளம் அறிந்துகொள்ளலாம்.Currency Converter - உங்களிடம் உள்ள கரண்சியின் மதிப்பை எளிதில் அறிந்துகொள்ளலாம்.Financial Calculator -பெருளாதாரத்தை கால்குலேட் செய்துகொள்ளலாம்.Paper Weight Converter - Unit Converter -அலகுகளை எளிதில் கன்வர்ட் செய்து கொள்ளலாம்.Bac Calculator -Biothem Calculator -BMI calculator -உங்கள் உயரம் -எடை கொண்டு நீங்கள் சராசரி உயராமானவரா -உங்கள் எடை சரியானதா என அறிந்துகொள்ளலாம்.Ovealtion Calculator -மகளிர் சம்பந்தமான கால்குலெட்டர்..Pregnancy Calculator -கருவுற்ற தேதியிலிருந்து குழந்தை பிறந்ககும் தேதியினை உத்தேசமாக அறிந்துகொள்ளலாம்.புதுமண தம்பதியினருக்கு அவசியமான ஒன்றாகும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 Sun and Moon Data -இதன் மூலம் அன்றைய சூரிய உதயம் -அஸ்தமனம் -நிலவின் நிலைகளை அறிந்தகொள்ளலாம்
Pregnancy Calculator -கருவுற்ற தேதியிலிருந்து குழந்தை பிறந்ககும் தேதியினை உத்தேசமாக அறிந்துகொள்ளலாம்.புதுமண தம்பதியினருக்கு அவசியமான ஒன்றாகும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
படிக்கும் மாணவர்கள் மற்றும் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் மிகவும் பயன்தரும் காலண்டர் இது..பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

02 ஜூலை 2012

யூரோ "ஹீரோ' ஸ்பெயின்! * கோப்பை வென்று வரலாறு படைத்தது


கியிவ்: யூரோ கோப்பை தொடரில் மீண்டும் கோப்பை வென்ற ஸ்பெயின் வீரர்கள் தங்களை "சூப்பர் ஹீரோ'க்களாக அடையாளம் காட்டினர். விறுவிறுப்பான பைனலில் இத்தாலியை புரட்டி எடுத்த ஸ்பெயின் அணி, கோல் மழை பொழிந்து அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து இரு முறை யூரோ கோப்பை வென்ற முதல் அணி என்ற வரலாறு படைத்தது. 
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர், போலந்து மற்றும் உக்ரைனில் நடந்தது. தொடரை நடத்திய போலந்து, உக்ரைன் அணிகள் லீக் சுற்றுடன் நடையை கட்டின. இங்கிலாந்து, கிரீஸ், செக் குடியரசு, பிரான்ஸ் போன்ற அணிகள் காலிறுதியில் வெளியேறின. போர்ச்சுகல், பலம் வாய்ந்த ஜெர்மனி அணிகள் அரையிறுதியுடன் நாடு திரும்பின. 
ஸ்பெயின் சாம்பியன்:
 பைனலில் "நடப்பு சாம்பியன்' ஸ்பெயின், இத்தாலி அணிகள் மோதின. 14வது நிமிடத்தில் பேப்ரிகாசிடம் இருந்து பந்தை வாங்கிய டேவிட் சில்வா, தலையால் முட்டி கோல் வலைக்குள் தள்ள, ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது. 41வது நிமிடத்தில் ஜோர்டி ஆல்பா, மின்னல் வேகத்தில் ஓடி வந்து தனி ஆளாக கோல் அடித்தார். 
முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்ற ஸ்பெயின், இரண்டாவது பாதியிலும் மிரட்டியது. பெர்னாண்டோ டோரஸ், 84வது நிமிடத்தில் "சூப்பர்' கோல் அடிக்க, ஸ்பெயின் வெற்றி உறுதியானது. பின் ஜுவான் மேட்டா (88வது நிமிடம்) ஒரு கோல் அடிக்க, ஸ்பெயின் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்று, யூரோ கோப்பையை தட்டிச் சென்றது. 
சாதனை அணி:
கடந்த 2008ல் கோப்பை வென்ற இந்த அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாதித்துள்ளது. யூரோ கோப்பை வரலாற்றில், ஒரு அணி அடுத்தடுத்து கோப்பை வெல்வது இதுவே முதன் முறை. தவிர, மூன்று பெரிய தொடர்களில் (2008 யூரோ, 2010 உலக கோப்பை, 2012 யூரோ) தொடர்ந்து கோப்பை வென்ற அணி என்ற சாதனையையும் ஸ்பெயின் படைத்தது. 
பிரதமர் பாராட்டு
கோப்பை வென்றது அணியை பாராட்டிய ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் கூறுகையில்,"" வியன்னா (2008), தென் ஆப்ரிக்கா (2010) தற்போது கியிவ் என, மூன்று தொடர்களில் ஸ்பெயின் சாம்பியன் ஆன போதும் நான் உடன் இருந்தேன். இது அற்புதமானது. இந்த வெற்றியால் பல லட்சக்கணக்கான ஸ்பெயின் மக்கள் மகிழ்ச்சியடைவர். இதற்கு அணி வீரர்கள், பயிற்சியாளருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்,'' என்றார்.
குறைந்த கோல்:
இத்தொடரில் மொத்தம் நடந்த 33 போட்டிகளில் 76 கோல்கள் தான் அடிக்கப்பட்டன. அதாவது ஒரு போட்டிக்கு சராசரியாக 2.45 கோல்கள் விழுந்தன. இது கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்த அளவாகும். ஏனெனில், 2004, 2008ல் 77 கோல்கள் (சராசரி 2.48), 2000ல் 85 (சராசரி 2.74) கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது முறை
இத்தாலிக்கு எதிரான "யூரோ' கோப்பை பைனலில் அசத்திய ஸ்பெயின் அணி, மூன்றாவது முறையாக (1964, 2008, 2012) சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகள் வரிசையில் முதலிடத்தை ஜெர்மனி (1972, 1980, 1996) அணியுடன் பகிர்ந்து கொண்டது. இவ்விரு அணிகள் தலா மூன்று முறை கோப்பை வென்றன.
* ஜெர்மனி அணி ஆறு முறை பைனலுக்கு முன்னேறியது. மூன்று முறை (1976, 1992, 2008) இரண்டாவது இடம் பிடித்தது. நான்கு முறை பைனலுக்கு தகுதி பெற்ற ஸ்பெயின் அணி, ஒரு முறை மட்டும் (1984) இரண்டாவது இடம் பிடித்தது.
* "யூரோ' கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை (2008, 2012) வென்ற முதல் அணி என்ற புதிய வரலாறு படைத்தது ஸ்பெயின்.
சாதனை வெற்றி
ஸ்பெயின் அணி 4-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. இதன்மூலம் "யூரோ' கோப்பை பைனல் வரலாற்றில் அதிக கோல் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்த அணி என்ற புதிய சாதனை படைத்தது. முன்னதாக 1972ல் பெல்ஜியத்தில் நடந்த தொடரில் மேற்கு ஜெர்மனி அணி 3-0 என்ற கோல் கணக்கில் சோவியத் யூனியன் அணியை தோற்கடித்தது.
டோரசுக்கு "கோல்டன் பூட்'
இத்தொடரில் அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் பெர்ணான்டோ டோரஸ் (ஸ்பெயின்), மரியோ கோமஸ் (ஜெர்மனி), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), மரியோ பலோடெலி (இத்தாலி), மரியோ மேன்ஜூகிச் (குரோஷியா), ஆலன் ஜகோயவ் (ரஷ்யா) ஆகியோர் தலா 3 கோல் அடித்து முன்னிலை வகித்தனர். 
ஆனால் ஸ்பெயின் வீரர் டோரசுக்கு "கோல்டன் பூட்' விருது வழங்கப்பட்டது. இதற்கு இவர், ஐந்து போட்டியில் 189 நிமிடங்கள் மட்டும் விளையாடி மூன்று கோல் அடித்தார். அயர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இரண்டு கோல் அடித்த டோரஸ், இத்தாலிக்கு எதிரான பைனலில் ஒரு கோல் அடித்தார். தவிர இவர், இத்தாலிக்கு எதிரான பைனலில் சக வீரர் ஜுவான் மேட்டா கோல் அடிக்க உதவினார். இதன் அடிப்படையில் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
"சிறந்த வீரர்' இனியஸ்டா
சிறந்த வீரருக்கான விருது ஸ்பெயினின் இனியஸ்டாவுக்கு வழங்கப்பட்டது. இத்தொடரில் இவர் ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்றாலும், சகவீரர்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். குரோஷியாவுக்கு எதிரான லீக் போட்டியில் சகவீரர் ஜீசஸ் நவாஸ் கோல் அடிக்க உதவி செய்துள்ளார். இத்தாலிக்கு எதிரான பைனலிலும் முதல் கோல் அடிக்க கைகொடுத்துள்ளார். பைனலில் சகவீரர் பேப்ரிகாசுக்கு பந்தை "பாஸ்' செய்தார். இதனை அப்படியே பேப்ரிகாஸ் தூக்கி அடிக்க, டேவிட் சில்வா தலையால் முட்டி முதல் கோல் அடித்தார். இத்தொடரில் இவரது ஒட்டுமொத்த செயல்பாடு சிறப்பாக இருந்ததால், இவ்விருது வழங்கப்பட்டது.
யூரோ "ரவுண்டு அப்'
"யூரோ' கோப்பை தொடரில் லீக் சுற்று (24 போட்டி), காலிறுதி (4), அரையிறுதி (2), பைனல் (1) உட்பட மொத்தம் 31 போட்டிகள் நடந்தன. இதில் மொத்தம் 76 கோல் அடிக்கப்பட்டது.
* அதிகபட்சமாக ஆறு வீரர்கள் தலா மூன்று கோல் அடித்தனர். பத்து வீரர்கள் தலா 2 கோல் அடித்தனர். 37 வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர்.
* சுவீடன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்தின் கிளின் ஜான்சன் "சேம் சைடு' கோல் அடித்தார். இது, இத்தொடரில் பதிவு செய்யப்பட்ட ஒரே ஒரு "சேம் சைடு' கோல்.
* பைனல் வரை சென்ற ஸ்பெயின் அணி அதிகபட்சமாக 12 கோல் அடித்தது. அயர்லாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு எதிராக தலா 4 கோல் அடித்தது. இதன்மூலம் இத்தொடரில் சிறந்த வெற்றியை பதிவு செய்தது.
* லீக் சுற்றோடு வெளியேறிய அயர்லாந்து அணி குறைந்தபட்சமாக ஒரே ஒரு கோல் மட்டும் அடித்தது. குரோஷியாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்த போதும், இப்போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
* இத்தொடரில் ஒரு வீரர் கூட "ஹாட்ரிக்' கோல் அடிக்கவில்லை. ஒன்பது வீரர்கள் அதிகபட்சமாக ஒரு போட்டியில் தலா 2 கோல் அடித்தனர்.
* மொத்தம் 4 "பெனால்டி கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதில் மூன்று வாய்ப்பை கோலாக மாற்றினர். ஒரு வாய்ப்பு நழுவியது.
* ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் அதிகபட்சமாக தலா 4 வெற்றியை பெற்றன. இதில் ஜெர்மனி அணி தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளை பதிவு செய்தது.
* நெதர்லாந்து, போலந்து, அயர்லாந்து அணிகள் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. இதில் நெதர்லாந்து, அயர்லாந்து அணிகள் தலா மூன்று லீக் போட்டியிலும் தோல்வி அடைந்தன. போலந்து அணி இரண்டு "டிரா', ஒரு தோல்வியை பெற்றது.
* அதிகபட்சமாக இத்தாலி அணி, மூன்று போட்டியை "டிரா' செய்தது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி "டிரா'வில் முடிந்த போதும், "பெனால்டி ஷூட் அவுட்' முறையில் இத்தாலி வெற்றி பெற்றது.
* வீரர்கள் செய்யும் தவறுக்காக மொத்தம் 123 "மஞ்சள்' நிற அட்டை வழங்கப்பட்டது. அடுத்தடுத்து தவறு செய்ததால், மூன்று வீரர்களுக்கு மட்டும் "சிகப்பு' நிற அட்டை காட்டப்பட்டு, வெளியேற்றப்பட்டனர்.
* அதிகபட்சமாக இத்தாலி வீரர்களுக்கு 16 முறை "மஞ்சள்' நிற அட்டை காண்பிக்கப்பட்டது. டென்மார்க், ஜெர்மனி வீரர்களுக்கு குறைந்தபட்சமாக தலா 4 முறை "மஞ்சள்' நிற அட்டை காட்டப்பட்டது.
* போர்ச்சுகல்-ஸ்பெயின் அணிக்கு எதிரான அரையிறுதியில் அதிகபட்சமாக 9 முறை "மஞ்சள்' நிற அட்டை காட்டப்பட்டது. ரஷ்யா-செக்குடியரசு, டென்மார்க்-ஜெர்மனி அணிகள் மோதிய போட்டியின் போது, ஒரு "மஞ்சள்' அட்டை கூட காட்டப்படவில்லை

01 ஜூலை 2012

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமர்ந்திருக்கையில் அவரது உள்ளாடை தெரிந்தது.





முன்னாள் உலக அழகியும், நடிகையுமான சுஷ்மிதா ஐ ஆம் ஷீ என்ற அமைப்பை கடந்த 2010ம் ஆண்டு துவங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு நடத்தும் அழகிப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் உலக அழகி மற்றும் மிஸ் ஏசியா பசிபிக் அழகிப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.













அப்படி இந்த அமைப்பு அனுப்பி வைத்த ஹிமாங்கினி சிங் யாடு மிஸ் ஏசியா பசிபிக் அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். அவரை வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்கு வந்த அமைப்பின் நிறுவனர் சுஷ்மிதா சென் உடலோடு ஒட்டிய குட்டி ஆடை அணிந்து வந்தார்.
அவர் நாற்காலியில் அமர்ந்தபோது ஏற்கனவே தொடை தெரிய இருந்த ஆடை, மேலும் தூக்கி உள்ளாடை தெரிந்தது. இதை கவனிக்காத அவர் ஹிமாங்கினியின் வெற்றி பற்றி பேசினார். ஆனால் அங்கிருந்த புகைப்படக்காரர்கள் அவர் உள்ளாடை தெரிய அமர்திருந்ததை போட்டோ எடுத்து தள்ளிவிட்டனர்.  

பத்திரிகையாளர்கள் சந்திப்பு மற்றும் விழாக்களுக்கு இதுபோன்ற உடை அணிந்து வருவதை சமூக ஆர்வலர்கள் பலமுறை கண்டித்துள்ளனர். இருப்பினும் நடிகைகள் இதுபோன்ற உடைகளை அணிந்து வருவதையே விரும்புகின்றனர்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com