ஈரானை சூழவுள்ள 35 அமெரிக்க இராணுவ தளங்களை சில நிமிடங்களுக்குள் முற்றாக தகர்த்துவிடக்கூடிய சக்தி வாய்ந்த எறிகணைகளை தாம் கொண்டிருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் இராணுவ கட்டளை தளபதி அமீர் அலி ஹஜிஷாதே இது தொடர்பில் நிருபர்களுக்கு தெரிவிக்கையில், ஈரானை சூழவுள்ள அமெரிக்க இராணுவ தளங்களை ஒரு சில நிமிடங்களுக்குள் எம்மால் முற்றாக அழித்துவிட முடியும். எனினும் இதுவரை நாம் அந்த அச்சுறுத்தலை அமெரிக்காவுக்கு விடவில்லை என்றார்.
ஈரான் முன்னெடுத்து வரும் அணு ஆயுத திட்டம், சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முதலான நாடுகள் ஈரான் மீது கடும் பொருளாதார அழுத்தத்தை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், ஈரானிடம், 900 மைல்கள் தூரம் சென்று தாக்கக்கூடிய Shabab-3 உட்பட பல ஆபத்தான எறிகணைகள் இருப்பதாக, ஈரானின் பிரஸ் டி.வி தெரிவித்துள்ளது. ஈரானுக்கு, 120 மைல் தொலைவில் பஹ்ரேனில் அமெரிக்காவின் கடற்படை இராணுவ தளத்தை இது இலகுவாக தாக்கிவிட கூடியது.
ஈரானின் தென்பகுதியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்க இராணுவத்தை பின்புலமாக கொண்ட விமானப்படை தளம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.