Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

06 ஜூலை 2012

கடவுள் துகள் கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானியின் பங்களிப்பு புறக்கணிக்கப்படுகிறதா?



ஹிக்ஸ் பாசன் எனப்படும் கடவுள் துகளுக்கான இணை அணுத்துகள்கள் கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானியின் பங்களிப்பும் அளப்பரியதாக உள்ளதாக சுவிற்சர்லாந்தின் சேர்ன் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் இத்தகவல் பல இடங்களில் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவதாகவும், இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பு எப்படிப்பட்டது என சுட்டிக்காட்ட தவறவிடப்படுவதாகவும் அதிருப்தி எழுந்துள்ளது.

இங்கிலாந்தின் பிரபல விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸின் முதற்சொல்லும் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸின் இறுதிச்சொல்லும் இணைந்து ஹிக்ஸ் போசன் (கடவுள் துகள்) எனும் பெயர் உருவாக்கப்பட்டது. 'கடவுள் துகள் உண்மையில் இருக்கலாம். அணுவுக்கு நிறையை தருவது அணுவின் உட்கூறுகளில் ஒன்றான போசோன்கள் தான் என 1960 களில் உலகுக்கு உறுதியாக நம்பிக்கை வெளியிட்ட முதல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் ஆவார். அணுவில் அவற்றை இணங்கண்டவர் இந்திய அறிவியலாளர் சத்தியயேந்திரநாத் போஸ் என்பதால் அவற்றிற்கு 'போசன்கள்' என பெயரிடப்பட்டன.

மேலும் இணை அணுவியல் துகள்களின் அடிப்படை வகுப்புக்களை வகுத்தவர்களில் பிரதானமானவர் போஸ் ஆவார். இவர் ஐன்ஸ்டைனுடன் இணைந்து பணிபுரிந்தவர். ஜேர்மன் மொழியில் இருந்த ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவம் அடங்கிய ஆய்வு கட்டுரையை புரிந்து கொள்வதற்காக ஜேர்மனிய மொழியையே கற்றவர். குவாண்டம் பொறிமுறையில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் போஸ்-ஐன்ஸ்டைன் செறிபொருள், போஸ்-ன்ஸ்டைன் புள்ளியியல் போன்ற தத்துவங்களுக்காக இவர் அறியப்படுகிறார். ஐன்ஸ்டைனின் சிறப்பு சார்பியல் தத்துவம் ஆய்வுக்கட்டுரையை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் எனும் புகழ் இவருக்கு உண்டு.

நேற்றைய ஊடகவியலாளர்கள் கருத்தரங்கிலும் சேர்ன் விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கையில், கடவுள் துகள் ஆராய்ச்சி திட்டத்தில் வரலாற்று தந்தை போன்றது இந்தியா என பெருமிதத்துடன் கூறியிருந்ததற்கு முக்கிய காரணம் குறித்த இந்திய அறிவியல் விஞ்ஞானியான சத்தியேந்திரநாத் போஸ் ஆவார்.

எனினும் கடவுள் துகள் பற்றிய இறுதியான கண்டுபிடிப்புக்களை இன்று உலகமே கொண்டாடும் வேளையில் சத்தியேந்திரநாத் போஸ் இக்கண்டுபிடிப்பில் செலுத்திய பங்களிப்புக்களை பற்றி ஊடகங்களில் தகவல் இல்லை. அவரை பற்றி பலர் அறிந்திருக்க தவறுகின்றனர் என அதிருப்து எழுந்துள்ளது.

இந்திய விஞ்ஞானியின் பெயர் திட்டமிடப்பட்டு விடுபடுவதாக இந்திய செல்லூலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் நிறுவனரும், இயக்குனருமான பி.எம்.பர்காவா தெரிவித்துள்ளார். இது முதல் தடவை அல்ல இது போல் பல அரிய கண்டுபிடிப்புக்களில் இந்தியாவின் பங்களிப்பு விடுபடுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் போஸ் வரலாற்று ரீதியாகவே புறக்கணிக்கப்படுகிறார் என பிரதமருக்கான அறிவியல் ஆலோசனை கவுன்சிலின் தலைவர் சி.என்.ஆர் ராவ் தெரிவித்துள்ளார். போஸின் கபடமற்ற வெளிப்படையான பேச்சு இதற்கொரு காரணமாக இருக்கலாம். ஒரு முறை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜகவர்லால் நேரு நிகழ்வொன்றில் நடத்திய பேச்சின் போது, நேருவின் கருத்தை வெளிப்படையாகவே போஸ் எதிர்த்திருந்தார். ஒருவேளை போஸ் அமெரிக்காவில் இருந்திருந்தால் மிக பிரபலமடைந்திருப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com