Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

03 ஜூலை 2009

பதிலடி கொடுக்குமா இந்தியா?- இன்று வெ.இண்டீசுடன் 3வது போட்டி

செயின்ட் லூசியா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இரண்டாவது போட்டியில் கிடைத்த தோல்விக்கு இந்திய அணி இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி நான்கு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீசிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. இந்நிலையி்ல் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில் தொடரை வெல்ல அடுத்து நடக்கவிருக்கும் இரண்டு போட்டிகளையும் கைப்பற்ற வேண்டிய நிலையில் இரு அணிகளும் இருக்கின்றன. இந்நிலையில் மூன்றாவது போட்டி இன்று செயின்ட் லூசியா நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. இங்கிலாந்தில் நடந்த டுவென்டி-20 தொடரில் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் சொதப்பிய இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்று தனது பெருமையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் இன்று பொறுப்புணர்ந்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். டோணி, யுவராஜ் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இரண்டாவது போட்டியில் கோட்டைவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும். சச்சின், ஷேவாக் இல்லாத குறை இப்போட்டியில் தெளிவாக தெரிந்தது. கம்பீர், தினேஷ் கார்த்திக், யூசுப் பதான் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்திய வீரர்கள் அனைவரும் முழுமை திறமை வெளிப்படுத்துவார்கள், அடுத்து இரண்டு போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றுவோம் என கேப்டன் டோணி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் தொடரை வெல்ல கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இரண்டாவது போட்டியில் விளையாடிய அதே அணி இன்றும் விளையாடும் என அறிவித்துள்ளது. இப்போட்டியை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ரசிகர்கள் மீண்டும் அதிரடி விருந்துக்கு தயாராகலாம்.

உங்கள் வலைப்பதிவு திருடப்படுவதை தடுப்பது எப்படி?

வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் உள்ள ஒரே பிரச்சினை எதுவென்றால் அதுதான் இந்த வலைப்பதிவுதிருட்டு அல்லது பதிவை காப்பியடித்தல் ஆகும். இத்தனை முற்றாக தடுத்து விட முடியாது ஆனால் குறைத்துக்கொள்ள முடியும். காப்பி அடிப்பவர்கள் இரண்டு வழிகளில் காப்பி செய்வார்கள் . முதலாவது மவுஸ் கர்சரால் எல்லாவற்றையும் செலக்ட் செய்து பின்னர் ரைட் கிளிக் செய்து Copy , Past செய்வார்கள் . இரண்டாவது Ctrl+C , Ctrl+V மூலமாக காப்பி செய்வார்கள். இவை இரண்டையும் உங்கள் பதிவுகளை திருடுபவர்களோ அல்லது உங்கள் பதிவுகளை படிப்பவர்களோ செய்யாமல் தடுக்கும் வழிமுறைகளை இங்கு பார்ப்போம். 1.முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கினுள் உள்நுழையுங்கள். 2. Layout என்பதை கிளிக் செய்யுங்கள். 3.Page Elements என்பதில் add a Gadget என்பதை கிளிக் செய்யுங்கள். 4.அடுத்ததாக HTML/JavaScript கிளிக் செய்யவும். 5. புதிதாக தோன்றும் பெட்டியில் கீழுள்ள ஜாவாஸ்கிரிப்ட் கோட்களை சேர்க்கவும் . முதலில் உங்கள் வலைப்பூவில் ரைட் கிளிக் செய்வதை தடுக்க கீழுள்ள கோட்களை சேர்க்கவும் . இது உங்கள் வலைப்பூவில் யாராவது ரைட் கிளிக் செய்தால் எச்சரிக்கை செய்தியை அனுப்பும். இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். அவ்வளவுதான் இனி செவ் செய்து வெளியேறிவிட்டு உங்கள் வலைப்பூவில் ரைட் கிளிக் செய்து பாருங்கள். தேங்க்ஸ்:-கார்த்திக்

புரளியால் எனது காதல் தடம் புரண்டு போய் விட்டது - ஷாயாலி புலம்பல்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை நான் காதலிப்பதாக வெளியான புரளிச் செய்தியால் எனது உண்மையான காதல் முறிந்து போய் விட்டது என்று புலம்பித் தவிக்கிறார் ஷாயாலி பகத். இந்திக்காரப் பொண்ணான ஷாயாலி தமிழிலும் முகம் காட்டியவர்தான். நியூட்டனின் 3ம் விதி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு போடி போட்டவர் ஷாயாலி. இப்போது பெரும் புலம்பாலியாக மாறியுள்ளார் ஷாயாலி. ஏனாம்.. பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை நான் விழுந்து விழுந்து காதலிப்பதாக பத்திரிகைகளில் எழுதித் தள்ளி விட்டார். ஆனால் இப்போது அவரை பிரிந்தும் விட்டதாக இன்னொரு கதையைக் கிளப்பி விட்டுள்ளனர். உண்மையில் எங்களுக்குள் காதலே கிடையாது. பிறகு எங்கே பிரிவது.. நானும், சோயிப்பும் ஓரிரு முறை காபி சாப்பிடப் போயுள்ளோம். அவ்வளவுதான். மற்றபடி இருவரும் பெரிய அளவில் சந்திக்கவே இல்லை. இதில் கொடுமை என்னவென்றால், நான் உண்மையில் வேறு ஒருவரைக் காதலித்தேன். மாலிக்குடன் காதல் என்ற செய்தியால் எனது உண்மையான காதலர் பிரிந்து போய் விட்டார். ஏன்தான் இப்படி புரளி மேல் புரளியைக் கிளப்பி இப்படி வயிற்றெரிச்சலைக் கிளப்பிக் கொள்கிறார்களோ என்று புலம்புகிறார் ஷாயாலி.. ஷாயாலி புலம்பல் ரொம்ப நியாயமாவுல்ல இருக்கு..

Wi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்!

    "ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையதளஇணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது வெகு வேகமாகபரவலாகிவருகிறது.
    முறையான பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கை யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி பயன்படுத்தி எந்தவிதமான நாசவேளைகளிலும் ஈடுபடலாம் என்பதே தற்போது எழுந்துள்ள அச்சம்.
    இந்தியா தற்போது தகவல் தொடர்பியலில் புரட்சியை எதிகொண்டு வருகிறது. மிகப்பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இந்ததொழில் நுட்பமும் இந்தியாவில் அதிக வளர்ச்சியை பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
    இந்திய வர்த்தகத் துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இதனால் மக்கள்வாழ்முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் கணினிகள், லேப்டாப்கள், அடுத்த தலைமுறை அதி தொழில் நுட்ப ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும்பிற கைவழி பயன்பாட்டு மின்னணுக் கருவிகளின் தேவை கணிசமாக பெருகிவருகிறது. இதனுடன் சேர்ந்து 24 மணி நேர இணைப்புச் சேவை, பரவலானவிரிவலை (பேண்ட்வித்) ஆகியவற்றிற்குமான தேவைகளும் கூடி வருகிறது.
    இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய ஒரு தொழில் நுட்பமான Wi-Fi தொழில்நுட்பம் தற்போது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில்விரும்பத்தகுந்த ஒரு இணைப்புத் தொழில்நுட்பமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
    இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிய Wi-Fi அலையன்ஸ் நிறுவனத்தின்கணிப்பின்படி தற்போது Wi-Fi தொழில் நுட்பத்திற்கான இந்திய சந்தை 270 மில்லியன் டாலர்கள். 2011-12ஆம் ஆண்டுவாக்கில் இது 900 மில்லியன் டாலர்கள்சந்தையாக வளர்ச்சியடையும்.
    ஆனால்... இந்த தொழில் நுட்பம் பல பாதுகாப்பு கவலைகளையும், அச்சுறுத்தல்களையும் அளிக்க துவங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்கையில், பாதுகாப்பு நிறுவனங்கள், இதற்கு காரணமான ஒரு மின்னஞ்சலை கண்டுபிடித்துள்ளது. அதனை பின்பற்றிச்செல்கையில் கென் ஹேவுட் என்ற அமெரிக்க குடிமகனின் கணினிக்குஇட்டுச் சென்றுள்ளது.
    அதாவது அந்த அமெரிக்கக் குடிமகனின் கணினி ஹேக் செய்யப்பட்டு அதன்வழியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இந்த தொழில் நுட்பம்நம்மிடையே சில கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
    அதாவது சரியாக கண்காணிக்கவில்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கில் உள்ளகுறைபாடுகளினால் ஹேக்கர்கள் எந்த ஒரு கணினி நெட்வொர்க்கிலும் புகுந்துநாச வேலைகளில் ஈடுபடமுடியும். இதனால் இதன் பயனாளர்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் பிறந்துள்ளது .
    இதற்காக, வெள்ளை அறிக்கை ஒன்றையும் மஹிந்திரா ஸ்பெசல் சர்வீசஸ்குழுமம் (MSSG) வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்: "சிறப்பான பாதுகாப்பு செயல்முறைகள் - Wi-Fi -யின் அபாயங்கள் என்று அந்தவெள்ளை அறிக்கை தலைப்பிடப்பட்டுள்ளது.
    Wi-Fi தொழில் நுட்பத்தினால் இணையதளம் உள்ளிட்ட இணைப்புகளில்நடந்துள்ள புரட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை அதன் மீது ஈர்ப்பை அதிகரித்துள்ளது. அதன் பயனும், திறனும் மற்ற கம்பிவட இணைப்பு நெட்வொர்க்குகளை விட அதிகமானது. ஆனால் இது எவ்வளவு பயனுள்ளதோ அந்த அளவிற்கு பாதுகாப்பு அபாயங்கள் நிறைந்தது. எனவே இந்த குறிப்புகள் சிறந்த தடுப்பு உத்திகளை மேற்கொள்ள பயனுள்ளதாக அமையும்.
    கம்பியற்ற இணைப்பு உங்கள் நெட்வொர்க்கை அடைய ஒரு பின்வாசல் வழி!
    ஒயர்லெஸ் ஆக்சஸ் கார்டுகளின் மூலம் இயங்கும் லேப் டாப்கள், தானியங்கி இணைப்பு அமைப்புகள் ஆகியவை தற்போது பெருகி வருகிறது. அதாவது ஒயர்லெஸ் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தகவல்களை வான்வழியாக அனுப்புவதால், அதனை ஹேக் செய்வது சுலபம், அதாவது யார்வேன்டுமானாலும் அதனை பார்க்க முடியும். இதானல் ஹேக்கர்கள் எங்கிருந்தபடி வேண்டுமானாலும் நிறுவனங்களின் நெட்வொர்க்குகள் மட்டுமல்லாது ஒரு நாட்டின் பாதுகாப்பை தீர்மானிக்கும் ராணுவ சம்பந்தமான விஷயங்களையும் தகவல்களையும் வெளியிலிருந்தே அணுக முடியும்.
    என்ன தவறு ஏற்பட முடியும்?
    எதேச்சையாக அணுகுதல், அதாவது இதில் ஒரு பயனாளர் அடுத்ததாக உள்ளஒரு நிறுவனத்தின் ஊடுருவும் ஒயர்லெஸ் நெட்வொர்க் மூலம் ஒயர்லெஸ்அணுகல் புள்ளியைக் கைப்பற்றி அங்கிருந்து தகவல்களை திருடி என்னவேண்டுமானாலும் செய்யலாம்.
    கெட்ட நோக்கத்துடன் அணுகுதல், இதில், ஹேக்கர்கள் ஒரு பொய்யானஅணுகல் இடங்களிலிருந்து தாங்கள் உருவாக்கிய ஒயர்லெஸ் கருவிகள் மூலம்எந்த ஒரு நெட்வொர்க்கையும் ஆட்கொண்டு, அதன் வழி செல்லும் தகவல்களைதிருடுவது.
    தற்காலிக நெட்வொர்க்குகள், இதில் ஒயர்லெஸ் கணினிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவது, அதாவது ஒயர்லெஸ் அணுகல் இடம் என்ற ஒன்றுஇல்லாமலேயே.
    உங்கள் ஒயர்லெஸ் அணுகல் புள்ளி ஒரு குறிப்பிட்ட பகுதியை பரவலாகக்கொண்டு இயங்குவதால் நீங்கள் ஒயர் மூலம் அனுப்பும் செய்திகள் மற்றும்கார்ப்பரேட் தரவுகளை (datas) தொலைதூரத்திலிருந்தே அணுக முடிவது.
    இதனைத் தடுக்க உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
  • ஒயர்லெஸ் கருவி அட்மினிஸ்ட்ரேட்டர் தான்தோன்றி கடவுச்சொல்லைஉடனடியாக மாற்றவும். உதாரணமாக ரீ செட் 123 அல்லது அது போன்ற பிறபொதுவான கடவுச்சொல் தானாகவே உங்கள் கணினியில் இருந்தால் அதனைஉடனடியாக மாற்றி வேறு கடவுச்சொல்லை வைக்கவும்.
  • உங்கள் ஒயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEP பாதுகாப்புகுறியேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும்.
  • பயனில் இல்லாத போது Wi-Fi மீடியாவின் இயக்கத்தை நிறுத்தி வைப்பது நல்லது. அல்லது பிளக்கை பிடிங்கி வைப்பதும் சிறந்தது.
  • MAC முகவரி வடிக்கட்டி அமைப்பை ஏற்படுத்தி அதிகாரபூர்வ கருவிகளுக்குமட்டுமே இணைப்பை அனுமதிக்கவும்.
  • தானாகவே உள்ள சர்வீஸ் செட் ஐடென்டிஃபையர் (எஸ்.எஸ்.ஐ.டி.)ஐ உடனடியாகமாற்றவும்.
  • தேவையில்லை என்றால் எஸ்.எஸ்.ஐ.டி. ஒலிபரப்புகளை நிறுத்தி விடுங்கள்.
  • திறந்த Wi-Fi நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும் அமைப்பின்இயக்கத்தை நிறுத்தி வைக்கவேண்டும்.
  • உங்கள் ஒயர்லெஸ் பாதைகள் அனைத்திலும் ஃப்யர்வால்களை (Firewalls) உருவாக்கவும்.
  • உங்கள் வளாகத்தின் மையப்பகுதியில் உங்கள் ஒயர்லெஸ் அணுகள் இடத்தைவையுங்கள். சுவற்றிலோ மூலைகளிலோ வைத்தால் கசிவுகள் ஏற்படும்.
  • இந்த குறிப்புகள், தனிப்பட்ட பயனர்களுக்கு ஓரளவிற்கு பொருந்தகூடியது. நிறுவனஙளும், அமைப்புகளும் இதனை பரந்துபட்ட அளவில்மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஒரே படித்தான பாதுகாப்பு முறைகளை இவைகடைபிடிக்க வேண்டும்.
    என்ன தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தாலும், அதனை உடைத்து உள் நுழையும்தொழில் நுட்பத்தை இந்த தொழில் நுட்பங்களிலிருந்தே கண்டுபிடித்துவிடமுடிகிறது என்பதே இதன் மையப் பிரச்சனை. என்று தணியும் இந்தவலைப்பின்னல் பாதுகாப்பு தாகம்?

நாடோடிகள் - விமர்சனம்

தொடர்ந்து பாடாவதிப் படங்களாகப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, பளிச் சென்று ஒரு படம் பார்த்தால் எத்தனைப் புத்துணர்ச்சியாக இருக்கும்... அந்தப் புத்துணர்ச்சியைத் தருகிறது நாடோடிகள்! வெற்றிக்கான பார்முலா எது என்பதை சுப்பிரமணியபுரத்தில் சசிகுமாரோடு இணைந்து கற்றுக் கொண்ட சமுத்திரக்கனி, அதே போன்றதொரு கதைக் களத்தில் உருவாக்கியிருக்கும் படம் நாடோடிகள். சுப்பிரமணியபுரத்தில் விசுவாசத்துக்காக கொலையும் செய்யும் நண்பர்கள், இந்தப் படத்தில் காதலைச் சேர்த்து வைக்க வாழ்க்கையையே பணயம் வைக்கிறார்கள். ஒரு கவர்ன்மெண்ட் வேலை கிடைத்தால் போதும், மாமா மகளை கைப்பிடிக்கலாம் என்ற கனவில் காத்திருக்கும் கர்ணா (சசிகுமார்), வங்கி லோன் கிடைத்ததும் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து செட்டிலாகத் துடிக்கும் சந்திரன் (சென்னை 28 விஜய்), பாஸ்போர்ட் வந்ததும் வெளிநாட்டுக்குப் பறக்கும் கனவில் மிதக்கும் பாண்டி (பரணி)... என மூன்று நண்பர்கள். ராத்திரியானதும் தண்ணியடித்து மொட்டை மாடியில் கைலி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் ஒன்றாகத் தூங்கும் அளவுக்கு மிக நெருங்கிய நண்பர்கள். ரொம்ப நல்லவர்கள்... இவர்களுக்கு இடையில் வருகிறான் இன்னொரு நண்பன் சரவணன். முன்னாள் எம்பியின் மகன். நாமக்கல் பழனிவேல் ராமன் (ஜெயப்பிரகாஷ்) எனும் கோடீஸ்வரரின் மகளைக் காதலிக்கிறான். ஆனால் இருவரின் பெற்றோரும் தங்கள் கவுரவம் பார்த்து குறுக்கே நின்றதால், காதலியைப் பிரிகிறான். கர்ணா மற்றும் அவனது நண்பர்கள் இருக்கும் ஊருக்கு வரும் அவன், திடீரென்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயல்கிறான். அவனைக் காப்பாற்றும் கர்ணா, விஷயம் அறிந்து, காதலர்களைச் சேர்த்து வைக்க சபதம் ஏற்கிறான். நாமக்கல்லுக்குப் போகிறார்கள் நண்பர்கள். உயிரைப் பணயம் வைத்து பழனிவேல் ராமனின் பெண்ணைத் தூக்குகிறார்கள். இதில் கர்ணாவுக்கு ஒரு கண்ணே பறிபோகும் அளவு படுகாயம் ஏற்படுகிறது. பாண்டிக்கு இரண்டு காதும் செவிடாகிப் போகிறது. சந்திரன் ஒரு காலையே இழக்கிறான். அதுமட்டுமல்ல... மூவரையும் போலீஸ் கைது செய்கிறார்கள். விஷயம் தெரிந்ததும் பழனிவேல் ராமன் ஆட்கள் கர்ணாவின் வீட்டில் புகுந்து நடத்திய வன்முறையில், கர்ணாவின் பாட்டி மரணிக்கிறார். இனி கர்ணாவுக்கு அரசு வேலை கிடைக்காது என்று தெரிந்து, அவர் மாமா தன் மகளை வேறு ஒருவனுக்கு கட்டிக் கொடுத்துவிட, வாழ்க்கையே பறிபோகிறது கர்ணாவுக்கு. இவ்வளவு இழப்புகளையும் அவர்கள் நட்புக்காக தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் இத்தனை கஷ்டப்பட்டு சேர்த்துவைத்த ஜோடிகளோ, ஊதாரித்தனமாக ஊரைச் சுற்றி, உடல் பசி தீர்ந்ததும் பிரிந்து விடுகிறார்கள். கொதித்துப் போகிறார்கள் நண்பர்கள். மீண்டும் புறப்படுகிறார்கள்... தங்கள் நட்பைக் கொச்சைப்படுத்திய அந்த ஜோடிகளுக்கு பாடம் கற்பிக்க. அது எந்த மாதிரி பாடம் என்பது திரையில்! அநேகமாக, இன்றைய இளைஞர்கள் அல்லது இளமையை ஜஸ்ட் பாஸ் செய்த முன்னாள் வாலிபர்கள் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில் சந்தித்த அனுபவமே படத்தின் முதல்பாதி என்பதால், எடுத்த எடுப்பிலேயே படம் மனசுக்கு மிக அருகில் நெருக்கமாகி விடுகிறது. கிராமங்களில் படித்துவிட்டு, வேலை தேடுகிறோம் என்ற பெயரில் சும்மா இருக்கும் பெரும்பாலான இளைஞர்களின் அன்றாட செயல்களே திரைக்கதை என்பதால் இன்னும் இணக்கமான மனசோடு படம் பார்க்கிறோம். மிகப் பிடித்துப் போகிறது. நண்பன் தங்கையைக் காதலிப்பதா என்ற உறுத்தலோடு திரியும் இளைஞர்களுக்கு புதிய விளக்கம் கொடுத்து அவர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி. தன் நண்பனை தங்கை விரும்புகிறாள் என்பது தெரிந்த பிறகு அதை கண்டும் காணாத மாதிரி நடந்து கொள்ளும் சசிகுமார் மாதிரி தங்களுக்கும் ஒரு நண்பனில்லையே என்ற ஏக்கம் நிறைய பேருக்கு வரக்கூடும்! மூன்று நண்பர்களில் டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்பவர் சசிகுமார். நடிப்பு என்பது வலிந்து திணித்து வருவதல்ல. இயல்பாக, ஒரு மனிதனின் உணர்வுகளைக் காட்டக் கூடியதாக இருந்தாலே போதும். அதைத்தான் சசிகுமார் செய்திருக்கிறார். நம்மில் ஒருவராகவே மாறியிருப்பதால், சசிகுமாரின் சின்ன சின்ன தடுமாற்றங்கள் (நடனம்) கூட ஒரு ப்ளஸ்ஸாகவே தெரிகின்றன. நண்பன் செவித்திறன் இழந்து பரிதவிப்பதைப் பார்த்து அவர் கலங்கும் காட்சியும், தன் பாசத்துக்குரிய பாட்டியின் மரணத்தை எண்ணி அவர் உருகும் காட்சியும் மகா இயல்பானவை. தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல கதாநாயகன் கிடைத்து விட்டார். மற்ற இரு நண்பர்களில் 'கல்லூரி' புகழ் பரணி கலக்குகிறார். தன் கண்ணெதிரே நண்பனின் தங்கை இன்னொரு நண்பனுக்கு பச்சக் கென்று கன்னத்தில் 'இச்' கொடுத்து விட்டுச் செல்ல, மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் அவர் திகைத்து நிற்பதில் அரங்கம் அதிர்கிறது. 'சென்னை 28' விஜய் ஓகே. ஆனால் அவர் தந்தையாக வரும் நபர் அவரை விட அருமையாக நடித்துள்ளார். நாயகிகளில் அனன்யா அசத்தல் அழகு. அபிநயாவுக்கு நல்ல வாய்ப்புகள் வரக்கூடும். மற்ற புதுமுகங்களும் நிறைவாகச் செய்துள்ளனர். ஜெயப்பிரகாஷ் வழக்கம் போல பிரமாதப்படுத்தியிருக்கிறார். படத்தின் இரண்டாம் பகுதிதான் பலருக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. ஆனால் இந்தக் கதைக்கு வேறு எந்த மாதிரியான தொடர்ச்சியைத் தந்தாலும் அதில் செயற்கைத்தனமே மிஞ்சியிருக்கும். சமுத்திரக்கனி செய்த தவறு, இந்த இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட சீரியலில் வருவது போல காட்சிகளை ஜவ்வாக இழுத்திருப்பதுதான். அதைத் தவிர்த்திருக்கலாம். க்ளைமாக்ஸ் வசனங்களில் இன்னும் அழுத்தம் தேவை. ஆனால் படத்தின் நிறைவுக் காட்சி அட்டகாசம். அதுதான் நட்பின் இயல்பும் கூட... தன்னோடு சேரும் எதையும் எரிக்கும் நெருப்பு மாதிரி நட்பு என்பதை உணர்த்தும் காட்சி அது! நண்பர்களால் கஷ்டப்பட்டு சேர்த்து வைக்கப்பட்ட காதல், இணை பிரியாமல் இருக்கிறதா இல்லையா என்று தொடர்ந்து கண்காணிப்பதில், அந்த நண்பர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதுதான் சமுத்திரக்கனி சொல்லும் நீதி. சரிதான்... ஆனால் பல நட்புகள், அவரவருக்கு திருமணமாகி குடும்பம் குழந்தை என செட்டிலானதும் பிரிந்து போகிற யதார்த்தத்தையும் மறந்துவிடக் கூடாதல்லவா... (அது தனியாக படமாக்கப்படவேண்டிய சமாச்சாரம் என்கிறீர்களா!!) சுந்தர் சி பாபு இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. அந்த 'சம்போ...' பாடல் படத்துக்கு ஜெட் வேக எபெக்ட் தருவது நிஜம். கதிரின் ஒளிப்பதிவு இயல்பாக உள்ளது. எடிட்டர் ரமேஷ் தனது கத்தரிக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம். நாடோடிகள் ஒரு மிகச்சிறந்த படமாக இல்லாமல் இருக்கலாம்... ஆனால் ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு நல்ல படம் என்பது மட்டும் உண்மை. நடிப்பு: சசிகுமார், பரணி, விஜய், கஞ்சா கருப்பு, அனன்யா, அபிநயா, ஷாந்தினி தேவா ஒளிப்பதிவு: எஸ்ஆர் கதிர் இசை: சுந்தர் சி பாபு தயாரிப்பு: எஸ்.மைக்கேல் ராயப்பன் எழுத்து, இயக்கம்: பி சமுத்திரக்கனி மக்கள் தொடர்பு: நிகில் அதனால்தான் பாக்ஸ் ஆபீஸில் இந்த நாடோடிகளுக்கு ஏற்கெனவே க்ரீடம் சூட்டிவிட்டார்கள் ரசிகர்களும்!

01 ஜூலை 2009

ஜாக்சன் குழந்தைகளுக்கு டாக்டர்தான் அப்பா?

மைக்கேல் ஜாக்சன், டெபோரா ரோ ஆகியோரின் இரு குழந்தைகளுக்கும் உண்மையான தந்தை, ஜாக்சனின் டாக்டர்தான் என்று வார இதழ் ஒன்று புது செய்தியை வெளியிட்டுள்ளது.

மைக்கேல் ஜாக்சனுக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். இருவரையும் அவர் விவாகரத்து செய்து விட்டார். முதல் மனைவியான லிசா மேரிக்கு குழந்தை எதுவும் கிடையாது. 2வது மனைவியான நர்ஸ் டெபோரா ரோவுக்கு பிரின்ஸ், பாரிஸ் என இரு குழந்தைகள். இதுதவிர வாடகைத் தாய் மூலம் இன்னொரு குழந்தையையும் ஜாக்சன் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், டெபோராவுக்குப் பிறந்த இரு குழந்தைகளுக்கும் ஜாக்சன் உண்மையான தந்தை இல்லை என்று டெபோரா சமீபத்தில் கூறி பரபரபப்பை ஏற்படுத்தினார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜாக்சனின் சரும வியாதிக்கான டாக்டர் ஆர்னால்ட் க்ளீன் என்பவர்தான் அந்த இரு குழந்தைகளுக்கு் உண்மையான டாக்டர் என்று தற்போது அமெரிக்க வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. டாக்டர் க்ளீன், லாஸ் ஏஞ்சலஸைச் சேர்ந்தவர். இவரிடம்தான் டெபோரா முன்பு நர்ஸாக வேலை பார்த்து வந்தாராம். பிரின்ஸ், பாரிஸ் குறித்த ரகசியங்களை எந்தக் காலத்திலும் வெளிப்படுத்தக் கூடாது என்று டெபோராவும், க்ளீனும் ஒப்பந்தம் வேறு செய்து கொண்டுள்ளனராம். 80களில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார் டெபோரா. அப்போதுதான் ஜாக்சனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அவரைப் பார்க்க வந்தவர்தான் டெபோரா. அந்த சமயத்தில் க்ளீனின் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார் டெபோரா. ஜாக்சனுடன் காதல் மலரவே இருவரும் மணம் புரிந்து கொண்டனர். ஆனால் குழந்தைகளை மட்டும் க்ளீன் மூலம் பெற்றுக் கொண்டிருக்கிறார் டெபோரா என்று அந்த பத்திரிக்கை கூறுகிறது. இதுகுறித்து டாக்டர் க்ளீன் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவரது வக்கீல் ரிச்சர் சார்ன்லி கூறுகையில், வெளியாகி வரும் செய்திகள் அனைத்தும் டாக்டர் க்ளீன் அறிவார். ஆனால் நோயாளியின் (மைக்கேல் ஜாக்சன்) ரகசியத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பது டாக்டர் தொழிலின் கண்ணியம் என்பதால் எது குறித்தும் டாக்டர் க்ளீன் விளக்கமளிக்க மாட்டார் என்று கூறியுள்ளார். பெயரில் உள்ளது டாக்டரிடம் நிஜத்தில் இல்லையே..!

வைரமுத்து மகனுக்கு ஆற்றிய உதவி!

கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியும் இப்போது பாடலாசிரியராகிறார்... அதுவும் ரஜியின் எந்திரன் படத்தின் மூலம். இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் வைரமுத்து எழுதுவதாகத்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் தன் மகன் மதன் கார்க்கியையும் பாடலாசிரியாக அறிமுகப்படுத்த விரும்பினார் வைரமுத்து. சாதாரண படங்களில் அறிமுகமானல், புகழ் வெளிச்சம்பட நீண்ட காலம் பிடிக்கும் என்பதை உணர்ந்த வைரமுத்து, ரஜினியின் எந்திரன் படம் மூலம் அந்த அறிமுகம் நிகழவேண்டும் என ஆசைப்பட்டார். தனது ஆசையை ரஜினியிடமும், படத்தின் இயக்குநர் ஷங்கரிடமும் அவர் வெளிப்படுத்த, உடனடியாக பச்சை சிக்னல் கிடைத்தது இருவரிடமிருந்தும். இப்போது எந்திரன் படத்துக்காக தனது முதல் பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து மகன் மதன் கார்க்கி. ரஜினி - ஐஸ்வர்யா டூயட் பாடலை அவர்தான் எழுதியுள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள். கடந்த ஆண்டு நடந்த மதனின் திருமணத்துக்கு முதல் நபராகப் போய் வாழ்த்தியவர் ரஜினி என்பது நினைவிருக்கும். மதன் கார்க்கி கவிதைகள் எழுதி வருகிறார். வைரமுத்துவின் இன்னொரு மகன் கபிலன் ஒரு படத்துக்கு வசனம் எழுதுவது குறிப்பிடத்தக்கது.

பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள்

பாம்புக்கடி - NEGLECTED TROPICAL DISEASE என்னும் பதிவிற்கு மருத்துவர் RENUKA SRINIVASAN (UNIVERSITY OF EAST LONDON ) அவர்கள் எழுதிய மறுமொழியுடன் கூடிய உதவிக்குறிப்பு இங்கு பகிர்தலுக்காக பதிவாக்கப்பட்டுள்ளது.

பயனுள்ள படைப்பு. இத்துடன் பாம்பு கடிக்காமல் எம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதையும் இணைத்துள்ளேன்.
1. பாம்புகள் கூடுதலாக இனம் காணப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கால்களை மூடக்கூடிய பாதணிகளையும் (Shoes and Boots) நீண்ட உடையையும் (long pants) அணிவதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம் .
2. பாம்புகள் வழக்கமாக வசிக்கும் இடங்கள், அவை வெளி வரும் நேரங்கள், நச்சுத் தன்மை கூடிய பாம்புகளையும் நச்சுத் தன்மையற்ற பாம்புகளையும் இனம் காணும் அறிவை வளர்த்துக் கொள்ளல்.
3. கண்களால் பார்க்க முடியாத இடங்களுள் (கற்குகைகள், புதர்கள் மரப்பொந்துகள்) விரல்களையோ கைகளையோ உள்ளே நுழைப்பதைத் தவிர்க்க வேண்டும் (விசேடமாக சிறுவர்கள்).
4. இரவுகளில் வெளியே செல்வதாயின் வெளிச்சத்தை தரக்கூடிய விளக்கு/ torch யினை எடுத்துச் செல்லவேண்டும்.
5. இரவில் செல்வதாயின் தடியொன்றின் மூலம் நிலத்தில் தட்டுவதன் மூலம் ஏற்படும் அதிர்வினால் பாதையில் இருக்கும் பாம்பு விலகிச் செல்ல வாய்ப்புண்டு.
6. பாம்பைக் கண்டால் அடிப்பதையோ விளையாடுவதையோ கற்களால் எறிவதையோ தவிர்த்து விலகிச் செல்வது நல்லது.
7. இறந்து கிடக்கும் பாம்புகளிடமிருந்து கூட விஷம் பரவக் கூடிய சாத்தியமிருப்பதால் அவற்றைக் கைகளில் எடுப்பதைத் தவிர்த்துக்கொள்ளவும்.
8. உயிரினம் அடையாளம் காணப்படாத எந்தக் கடியாக (unknown bite) இருப்பினும் அலட்சியம் செய்யாது வைத்தியசாலையைச் சென்றடையவும்.
9. பாம்புகள் கூடுதலாக இனம் காணப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் இரவில் உறங்க முன் படுக்கைகளைப் பரிசோதிப்பதுடன் நித்திரையின் போது ஏதாவது கடித்த அல்லது குற்றியதாக குழந்தைகள் கூறும் போது உடன் கவனம் எடுக்கவும்.
10. MSF விடுதியொன்றில் நான் கண்ட பாம்பு வராமல் தடுக்கும் மிகவும் எளிய முறையொன்றையும் எழுதுகிறேன். வீட்டையும் வளவையும் சுற்றி வரவுள்ள நான்கு மூலைகளிலும் மரக்கட்டைகளை அடித்து அவற்றில் கராஜ்களில் கிடைக்கும் கழிவு எண்ணெயில் தோய்த்த கயிற்றினை நிலமட்டத்துடன் சதுரமாக கட்டுவதன் மூலம் வீடுகளினுள் பாம்புகள் வராமல் தடுக்கலாம். கழிவு எண்ணெயின் மணம் குறையும் போது கயிறுகள் மாற்றப்பட வேண்டும் (ஆறு மாதங்கள்).
இவற்றை படிப்பறிவில்லாத பாமர மக்களிற்கு எப்படிச் சென்றடைய வைப்பீர்கள்?
தேங்க்ஸ்-Dr.RENUKA SRINIVASAN

கல்யாணப் பத்திரிக்கையை வைத்து திருப்பதி கோவிலில் வழிபட்டார் மீனா

திருமணத்தையொட்டி தனது கல்யாணப் பத்திரிக்கையுடன் திருப்பதி சென்ற நடிகை மீனா அங்கு சாமி முன்பு பத்திரிக்கையை வைத்து பயபக்தியுடன் வழிபட்டார். நடிகை மீனாவுக்கு ஜூலை 12ம் தேதி திருப்பதியில் திருமணமாகவுள்ளது. மாப்பிள்ளை வித்யாசாகர் பெங்களூர்க்காரர். திருமணத்தையடுத்து சென்னையில் ஜூலை 14ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்யாணம் நிச்சயமானதும் திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்தே வந்து தரிசனம் செய்வதாக வேண்டியிருந்தாராம் மீனா. அதன்படி தனது கல்யாணப் பத்திரிக்கையுடன் அவர் திருப்பதி சென்றார். தந்தை துரைராஜ், தாயார் மல்லிகாவுடன் திருப்பதி சென்ற அவர் கீழ் திருப்பதியிலிருந்து படிகள் வழியாக சுமார் 3 மணி நேரம் நடந்து திருமலையை அடைந்தார். அங்கு ஏழுமலையான் பாதத்தி்ல கல்யாணப் பத்திரி்க்கையை வைத்து பயபக்தியுடன் வழிபட்டார். பின்னர் பிரசாதத்தை பெற்றுக் கொண்டார். பின்னர் வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் சிக்கிக் கொண்டார் மீனா. அவர்களிடம் அவர் பேசுகையில், திருமணமானாலும் தொடர்ந்து நடிப்பேன். டிவி தொடர்களிலும், நல்ல கேரக்டர்கள் கொண்ட படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன் என்றார் மீனா.

காதல்,கற்பு பற்றிய சமீபத்திய சர்வே

பி.எம்.ஜெ., - பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல் - உலகின் பல நாட்டு மருத்துவர்களின், கீதை - குரான் - பைபிள்! மருத்துவத் துறையின் புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், மருத்துவர்கள் சந்தித்த சவால்கள்... அவற்றை எதிர்கொண்டு ஜெயித்த முறை என மருத்துவர்களுக்கு தேவையான அனைத்தும் இந்த இதழில் இருக்கும்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சர்வே பற்றி விலாவரியாக கூறினார் டாக்டர் நண்பர் ஒருவர்.

ஆய்வு நடத்தப்பட்ட 21 வயதுக்குட்பட்ட பெண்களில், பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், பருவமடைந்த பின், வெகு சீக்கிரத்திலேயே, தமது கன்னித் தன்மையை இழந்தது குறித்து வருந்துகின்றனர்.

இதில் 16 வயதுக்கு முன்பே கன்னித் தன்மையை இழந்ததால் வருந்துபவர்கள் மூன்றில் இரண்டு பங்கு; ஆனால், இதே காலக்கட்டத்தில் உள்ள ஆண்களில் ஆறு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் வருந்துகின்றனராம்!

"அது என்ன?' எனத் தெரிந்து கொள்வதில் இருந்த ஆர்வமே பொதுக்காரணமாக பெரும்பாலும் இருபாலரும் கூறியுள்ளனர்!

பெண்கள் தமது கன்னித் தன் மையைப் பெரும்பாலும் இழந் துள்ள வயது 16; ஆண்கள் 17!

மேலே சொன்ன கணக்குகளெல்லாம் காதலர்களுடையது அல்ல; காதல், கீதல் எல்லாம் கிடையாது... பள்ளித் தோழி, அடுத்த வீட்டுப் பெண், பக்கத்துத் தெரு சிறுவன்... இவர்களுடையது!

* நிஜமாகவே, ஒருவரை ஒருவர் ஆழமாகக் காதலிப்பவர் களில், 16 சதவீதம் பெண்களும், 10 சதவீதம் ஆண்களும் "காதலே எங்கள் கற்பு பறி போனதற்குக் காரணம்!' எனக் கூறுகின்றனராம்!

* "உணர்ச்சி மேலீட்டால், "தப்பு' செய்து விட்டோம்...' என 13 சதவீதம் பெண்களும், ஆறு சதவீதம் ஆண்களும் கூறியுள்ளனர்.

* கொஞ்சம் போதை போட்டது தான் முதன் முதலாக கன்னித்தன்மை இழந்ததற்கு காரணமாக அமைந்தது என 10 சதவீதம் இருபாலரும் கூறியுள்ளனர்.

* எதை இழக்கப் போகிறோம் என்பதை நன்கு அறிந்து, தம் சுய உணர்வுடன் கன்னித் தன்மையை இழந்ததாக 14 சதவீதம் ஆண்களும், 5 சதவீதம் பெண்களும் கூறியுள்ளனர்.

* ஆண்களை விடப் பெண்களே தமது தோழியரின் நடத்தையால் அதிக அளவு பாதிப்படைந்துள்ளனர். 6 சதவீத பெண்களும், 3 சதவீத ஆண்களும், தமது நண்பர்கள், "இதில்' ஈடுபடுகின்றனரே... நாம் ஏன் கூடாது என்ற எண்ணத்தில் விழுந்ததாகக் கூறியுள்ளனர்.

'காத்ரீனா, கரீனா ரொம்ப செக்ஸி'

காத்ரீனா கைப், கரீனா கபூர் இருவருக்குமே செக்ஸியான உடல் அமைப்பு என்று சிலாக்கிறார் 'மாக்கோ மேன்' அக்ஷய் குமார். வாயில் வருவதை பட்டென்று போட்டு உடைத்து பேசி விடும் சிலரில் அக்ஷய்குமாரும் ஒருவர். மேடையில் பூனை நடை போடப் போகும்போது பேன்ட் ஜிப்பை கழற்ற முடியாமல் திணறிப் போய் படாரென்று மனைவியிடம் போய் ஜிப்பை கழற்றி விடேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி, வழக்கிலும் சிக்கி, போலீஸாரிடம் சரணடைந்தவர் அக்ஷய்குமார். இந்த நிலையில் இன்னொரு வில்லங்கப் பேச்சைப் பேசியுள்ளார் குமார். காத்ரீனா மற்றும் கரீனா ஆகிய இருவருக்குமே நல்ல செக்ஸியான பாடி என்று கூறியுள்ளார் குமார். நான் இதுவரை நடித்த நடிகைகளிலேயே மிகவும் செக்ஸியான உடலமைப்புக் கொண்டவர்கள் காத்ரீனாவும், கரீனாவும்தான் என்கிறார் குமார். கடந்த 18 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கும் அக்ஷய் குமார், இதுவரை காத்ரீனா மற்றும் கரீனாவுடன் மட்டுமே அதிக படங்களில் ஜோடி சேர்ந்துள்ளார். கரீனாவுடன் 5 முறையும், காத்ரீனாவுடன் 4 முறையும் ஜோடி சேர்ந்துள்ளார். இருவருடனும் ஒரே நேரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் யாரை விடுவது, யாருடன் இணைவது என்பதை தேர்வு செய்ய முடியாமல் தான் திணறிப் போய் விடுவேன் என்கிறார் சிலிர்ப்பு குறையாமல். தான் ஒரு மூத்த நடிகர் என்பதால் காத்ரீனாவும், கரீனாவும் தன்னிடம் டிப்ஸ் கேட்டு அணுகுவதாக கூறும் அக்ஷய், மூத்த நடிகர் என்ற முறையில் நிச்சயம் நான் அவர்களுக்கு உதவுகிறேன். நான் கற்றுக் கொண்டதை அவர்களுக்கும் கற்றுத் தருகிறேன் என்கிறார். அவர்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று மடக்கலாக கேட்டால், இருவரிடமிருந்தும் நான் கற்றுக் கொண்டதை குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதே நல்ல அனுபவம்தானே என்கிறார். கரீனாவுடன் அக்ஷய் ஜோடி போட்டுள்ள கம்பக்த் இஷ்க் ஜூலை 3ம் தேதி ரிலீஸாகிறது. அக்ஷய் ரொம்ப பத்திரமா இருங்க, சல்மானும், சைபும் சேர்ந்து வந்து 'புட் பால்' ஆடிடப் போறாங்க!

29 ஜூன் 2009

இசை உலகின் பிதாமகன் மைக்கேல் ஜாக்ஸன்! - ஏ.ஆர் ரஹ்மான்

இந்தியாவையும் இந்திய மக்களையும் பெரிதும் நேசித்தவர், இசை உலகின் பிதாமகன் மைக்கேல் ஜாக்ஸன்... அவரது மரணம் என்னை மிகவும் பாதித்துள்ளது என தனது இரங்கல் செய்தியில் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விடுத்துள்ள இரங்கல் செய்தி: "நம் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த இசையமைப்பாளர் மைக்கேல் ஜாக்சனின் எதிர்பாராத மரணம் பற்றிய தகவல் அறிந்து நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இந்த தலைமுறையில் யாரோடும் ஒப்பிட முடியாத ஒரு அடையாளமாக மைக்கேல் ஜாக்சன் இருந்தார். 'பாப் இசை'யில், மைல் கல்லாக இருந்த அவர், நம்ப முடியாத சிகரங்களை தொட்டார். 80களிலும், 90களிலும் அவர் ஆற்றல் மிகுந்த, நேர்த்தியான, தொலைநோக்கு பார்வையுள்ள ஒரு கலைஞராக திகழ்ந்தார். நான், 'ஆஸ்கார்' விருது பெற்ற பின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவரை நேரில் சந்தித்துப் பேசினேன். இந்தியாவையும், இந்திய மக்களையும் அவர் நேசிப்பதாக என்னிடம் சொன்னார். என்னைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பதாக கூறி, 'ஜெய் ஹோ' பாடலைப் புகழ்ந்து பேசினார். தன்னுடைய நடன அசைவுகள் ஆத்மாவில் இருந்து வெளிப்படுவதாக கூறிய அவர், 5 வினாடிகள் என் முன் ஆடி காண்பித்தார். அவருடைய நடனம் ஒரு மின்னல் போல் இருந்தது. உலகம் வெப்பமயமாதல் பற்றியும், யுத்தங்களால் மனித இனத்துக்கு ஏற்படும் நஷ்டங்கள் பற்றியும் அவர் மிகவும் வருத்தப்பட்டார். உலக ஒற்றுமைக்காக ஒரு கீதத்தை உருவாக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். நானும் சம்மதித்தேன். அவருடைய 3 குழந்தைகளிடமும் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அந்த குழந்தைகள், 'ஐ லவ் யூ டாட்'என்றார்கள். பதிலுக்கு அவர், "ஐ லவ் யூ மோர்'' என்றார். அவருடைய இசைக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்தேன். 'காட் ப்ளஸ் யூ' (கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்) என்று கூறினார். அவர் மரணம் அடைந்து விட்டார் என்று கேள்விப்பட்டதும், அது வதந்தியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் மறைந்து விட்டார் என்பதை நம்புவதற்கு ரொம்ப நேரமானது. என் முதல் படமான `ரோஜா'வுக்காக, 'காதல் ரோஜாவே' என்ற பாடலுக்கு நான் இசையமைத்து கொண்டிருந்தபோது, மறைந்த சவுண்ட் என்ஜினீயர் ஸ்ரீதர், 'ரிமெம்பெர் தி டைம்' என்ற மைக்கேல் ஜாக்சனின் ஆல்பத்தை கொண்டுவந்து கொடுத்தார். அது, எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளித்தது. வாழும் போதே கலைஞர்களை கவுரப்படுத்துங்கள்! இப்போது ஸ்ரீதரும் இல்லை. ஜாக்சனும் இல்லை. மனித உயிர்களின் மேன்மையை உணர்ந்து, உயிரோடு இருக்கும்போதே அவர்களை மதிக்க வேண்டும். கவுரவத்தைத் தரவேண்டும். வாழ்க்கை மிகவும் குறுகியது. கலைஞர்களும், அவர்களின் கலையும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும். ஜெய் ஹோ மைக்கேல் ஜாக்சன். நாங்கள் உங்கள் இசையை நேசிக்கிறோம்... சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு... என்று கூறியுள்ளார் ரஹ்மான். நடிகர் சங்கம் அஞ்சலி மைக்கேல் ஜாக்சனின் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை: பாப் இசையோடு நடனத்தைக் கலந்து பல புதுமைகளைப் புகுத்தி ஒரு மாபெரும் கலை பொக்கிஷமான திகழ்ந்த மைக்கேல் ஜாக்சனின் மறைவு இசையுலகுக்கு ஒரு பேரிழப்பு. தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் அவரைப் பின்பற்றி புகழடைந்துள்ளனர். உலக கலை வரலாற்றில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது, என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

கூகுளுக்கு (Google) ஓ போடுவோம்.

போன மாசம் மே 22ந் தேதி, டெல்லியில் CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து இருக்கு. நம்ம தம்பி சித்தாந் சிங்(18 வயசு), எதிர்பார்த்த மார்க்கைவிட கம்மியா வாங்கியிருக்கிறார். வீட்டுல கோபிச்சுக்குவாங்கன்னு பயந்து போய், வீட்டை விட்டு காணம போய்ட்டாரு. ஒரு மாசம தேடியும், எங்கியும் கிடக்கலை. ஒரு நல்ல நாள்ல, சித்தாந் அவரோட நண்பரோட ஆர்குட்(Orkut) அக்கவுண்டுல scarp போட்டுயிருக்காரு. (ஆர்குட் கூகுளை சார்ந்தது). அந்த நண்பர் போலிஸ்கிட்ட இதை சொல்ல, போலிஸ், கூகுள்கிட்டயிருந்து, எந்த ஐ.பீ (IP - Internet Protocol address) ல் இருந்து சித்தாந் scarp போட்டு இருக்காருன்னு தகவல் வாங்கியிருக்கு. இத வச்சு, சித்தாந், பரிதாபாத் (Faridabad) ஊருல்ல இருக்கற ஒரு browsing centreல்ல இருந்து இதை அனுப்பியிருக்காருன்னு கண்டு பிடிச்சு, அங்கே விசாரிச்சாங்க. நம்ம தம்பி சித்தாந், அங்கன ஒரு டீக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்காரு. பிறகு என்ன? பிரிந்தவர் கூடினால் சுபம்தான். உதவி செய்த கூகுளுக்கு நம் மனமார்ந்த நன்றிகள். கருத்து கந்தசாமி பரிச்சையில கிடைக்கிற மார்க்கைவிட, வாழ்க்கையை எவ்வளவு புத்திசாலித்தனமா அணுகறோம்கரது மிக முக்கியம். நம்ம நாட்டிலயும் ஏன் உலகத்திலயும் எத்தனயோ படிக்காத மேதைகள் இல்லையா?. சரி, எல்லாரும் மேதையாயிட்டா, ரொம்ம போர் அடிக்கும். அதனால, கொஞ்சம் புத்திசாலித்தனமும், நெறய தன்னம்பிக்கையும் இருந்த போதும். தாரளமா சந்தோசமா வாழலாமே?. இத எப்பத்தான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது?

அர்ஜுன் அண்ணன் கிஷோர் மரணம்

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த சகோதரரும், கன்னட படத் தயாரிப்பாளர்-இயக்குநருமான கிஷோர் சர்ஜா இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 50. மாரடைப்பு காரணமாக வெங்களூர் மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிஷோர், பின்னர் மரணமடைந்தார். கிஷோர் கன்னடப் படங்கள் சிலவற்றை இயக்கியுள்ளார். இந்தப் படங்களில் அர்ஜுன் நடித்துள்ளார். தமிழில் படிச்சபுள்ள உள்பட சில படங்களை தயாரித்துள்ளார் கிஷோர். சிலி தினங்களுக்கு முன் கிஷோருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டார் அர்ஜுன். தீவிர சிகிச்சை மேற்கொண்டும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. மனைவி அபர்னா மற்றும் மகன் சூரஜ் உடன் வசித்து வந்தார் கிஷோர். நாளை அவரது உடல் தகனம் பெங்களூரில் நடக்கிறது. கிஷோருக்கு தமிழ் மற்றும் கன்னடத் திரையுலகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Funny Mouse Cursors

Just Wait and See Photobucket Stop that

‘தம்’ அடிக்காமல் முடியலியே தவிக்கிறார் அதிபர் ஒபாமா

சிகரெட் உட்பட புகையிலை பயன்பாட்டை குறைக்க பல நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் ஒபாமா எடுத்து வருகிறார். ஆனால், அவரால் “தம்’ அடிக்காமல் இருக்க முடியவில்லையாம்.obama-smoking

அமெரிக்காவில் புகையிலை மற்றும் அதை சார்ந்த பொருட்களை கட்டுப்படுத்தும் வகையில், புதிதாக பல சட்டங்களை போட்டுள்ளார் ஒபாமா. சமீபத்தில் கூட, புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாடு தொடர்பான மசோதாவில் கையெழுத்திட்டார்.இப்புதிய சட்டம், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துதுறையினருக்கு, புகையிலைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வழங்குகிறது.

கையெழுத்திட்ட அதிபர் பராக் ஒபாமா கூறுகையில், “புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிட தற்போது கடுமையாக போராடி வருகிறேன். நான் எனது குடும்பத்தினர் முன் புகைப்பிடித்தது இல்லை. புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து 95 சதவீதம் விடுபட்டுள்ளேன். எனினும், சில நேரங்களில் நான் மனம் தடுமாறி விடுகிறேன். புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களில், 90 சதவீதத்தினர் தங்களுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்னரே புகை பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து விடுகின்றனர். அதில் நானும் ஒருவன்’ என்றார்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com