Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

01 ஜூலை 2009

ஜாக்சன் குழந்தைகளுக்கு டாக்டர்தான் அப்பா?

மைக்கேல் ஜாக்சன், டெபோரா ரோ ஆகியோரின் இரு குழந்தைகளுக்கும் உண்மையான தந்தை, ஜாக்சனின் டாக்டர்தான் என்று வார இதழ் ஒன்று புது செய்தியை வெளியிட்டுள்ளது.

மைக்கேல் ஜாக்சனுக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். இருவரையும் அவர் விவாகரத்து செய்து விட்டார். முதல் மனைவியான லிசா மேரிக்கு குழந்தை எதுவும் கிடையாது. 2வது மனைவியான நர்ஸ் டெபோரா ரோவுக்கு பிரின்ஸ், பாரிஸ் என இரு குழந்தைகள். இதுதவிர வாடகைத் தாய் மூலம் இன்னொரு குழந்தையையும் ஜாக்சன் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், டெபோராவுக்குப் பிறந்த இரு குழந்தைகளுக்கும் ஜாக்சன் உண்மையான தந்தை இல்லை என்று டெபோரா சமீபத்தில் கூறி பரபரபப்பை ஏற்படுத்தினார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜாக்சனின் சரும வியாதிக்கான டாக்டர் ஆர்னால்ட் க்ளீன் என்பவர்தான் அந்த இரு குழந்தைகளுக்கு் உண்மையான டாக்டர் என்று தற்போது அமெரிக்க வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. டாக்டர் க்ளீன், லாஸ் ஏஞ்சலஸைச் சேர்ந்தவர். இவரிடம்தான் டெபோரா முன்பு நர்ஸாக வேலை பார்த்து வந்தாராம். பிரின்ஸ், பாரிஸ் குறித்த ரகசியங்களை எந்தக் காலத்திலும் வெளிப்படுத்தக் கூடாது என்று டெபோராவும், க்ளீனும் ஒப்பந்தம் வேறு செய்து கொண்டுள்ளனராம். 80களில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார் டெபோரா. அப்போதுதான் ஜாக்சனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அவரைப் பார்க்க வந்தவர்தான் டெபோரா. அந்த சமயத்தில் க்ளீனின் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார் டெபோரா. ஜாக்சனுடன் காதல் மலரவே இருவரும் மணம் புரிந்து கொண்டனர். ஆனால் குழந்தைகளை மட்டும் க்ளீன் மூலம் பெற்றுக் கொண்டிருக்கிறார் டெபோரா என்று அந்த பத்திரிக்கை கூறுகிறது. இதுகுறித்து டாக்டர் க்ளீன் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவரது வக்கீல் ரிச்சர் சார்ன்லி கூறுகையில், வெளியாகி வரும் செய்திகள் அனைத்தும் டாக்டர் க்ளீன் அறிவார். ஆனால் நோயாளியின் (மைக்கேல் ஜாக்சன்) ரகசியத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பது டாக்டர் தொழிலின் கண்ணியம் என்பதால் எது குறித்தும் டாக்டர் க்ளீன் விளக்கமளிக்க மாட்டார் என்று கூறியுள்ளார். பெயரில் உள்ளது டாக்டரிடம் நிஜத்தில் இல்லையே..!

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com