Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

13 ஆகஸ்ட் 2011

மீண்டும் விக்ரம் பாலா கூட்டணி!

சேதுக்கு முன்புவரை தோல்வியைத் தவிர எதையும் கண்டறியாத விக்ரமை, சியான் விக்ரமாக ரசிகர்களின் மனதில் இடம்பெயர்த்தவர் பாலா.

அதன் பிறகு இந்தக் கூட்டணி பிதாமகனில் மீண்டும் இணைந்தது. பாலா படங்களில் மாஸ் ஹீரோ என்ற பிம்பத்தை கழற்றி வைத்து விட்டு காதாபாத்திரமாக வாழும் வித்தையைக் கற்றுக்கொண்டார் விக்ரம். பிதாமகன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் விக்ரமை தேடிவந்தது.

வன யுத்தம் மேலும் படங்கள் கொஞ்சம் காஃபி...! கொஞ்சம் காதல் திரைப்படத்தின் படங்கள் ஹிட்டாகிக்கொண்டிருக்கும் - மங்காத்தா - MP3 -H.Q - பாடல்கள் - முழுவதும் கேட்க தரவிறக்கம் செய்ய

இப்படியிருக்க மறுபடியும் பாலா இயக்கத்தில் நடிப்பதென்றால் கசக்குமா விக்ரமுக்கு?! தற்போது தெய்வத்திருமகள் படத்தில் மனவளம் குன்றிய கிருஷ்ணா கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியதற்காக விக்ரமுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நேரத்தில் விடுவார்களா செய்தியாளர்கள்? விக்ரம் - பாலா எப்போது மீண்டும் இணைந்து படம் பண்ணுவீர்கள் என்று நிருபர்கள் கேட்க…” நீண்ட நாள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை அடுத்த ஆண்டே இணைய இருகிறோம்” என்று ஹாட் கிளப்பியிருகிறார் விக்ரம்.

மங்காத்தா - முதன் முதலில் இணையத்தில் டெய்லர் அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் கலக்கல் மங்காத்தா படங்கள் - புதுசு பலரும் காத்திருந்த மங்காத்தா பாடல்கள் - சாதரணமாக வெளியிட்டனர் வெங்கட் பிரபு படக்குழுவினர் - படங்கள் நந்தா நடிக்கும் வேலூர் மாவட்டம் - கார்த்திக் வெளியிட்டார் ஆடியோ படங்கள் மங்காத்தா - ஆடியோ வெளியீடு போஸ்டர்கள் பிரியா ஆனந் லேட்டஸ்ட் அழகான படங்கள் இசா சாவ்லா - படங்கள் புதுசு ஜெனிலியா பார்க்காத படங்கள்

இதுபற்றி விரிவாகப் பேசியிருகிறார் விக்ரம் " பாலா எனக்கு ஸ்பெஷல்...! ஏன்னா, நாங்க ரெண்டு பேரும் ஒரே பட்டறையில் இருந்து வந்தவங்க. எங்க ரெண்டு பேருக்குமே அது முதல் படம் மாதிரி. ஒரு வெற்றிக்காகக் காத்திருந்தவங்க நாங்க. எனக்குள் தீப்பிழம்பு மாதிரி சினிமா மீது அளவு கடந்த நேசத்தை அவர் ஊட்டி வளர்த்தார். அவருக்குள் இருந்ததை நான் வளர்த்தேன். அவர்தான் எனக்குள் இருந்த நடிகனை விழித்து கொள்ள வைத்தார். வித்தியாசமாக இருக்கக் கற்றுத்தந்தார். அவரோட வேலை பார்க்கிறது திரும்பவும் ஸ்கூலுக்குப் போற மாதிரிதான். சந்தோஷமான பள்ளி நாட்களை இழந்துட்டு, மறுபடியும் போக ஏக்கப்படுற மாதிரி...! சேது, பிதாமகன் போல ஒரு ஸ்க்ரிப்ட்டுக்காக நாங்க காத்திருந்தோம்!. அடுத்த வருஷம் அந்த படத்தைத் தொடங்க இருக்கோம் " என்று அதிரடி கிளப்புகிறார். யாரங்கே? இன்னொரு தேசிய விருதை அறிவிக்க டெல்லி தயாராகட்டும்!

கூகுள் பிளசில் வந்தாச்சு இலவச ஆன்லைன் விளையாட்டுக்கள் - Games on Google+

பேஸ்புக்கின் இந்த இமாலய வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று இந்த ஆன்லைன்விளையாட்டுக்கள். இந்த வசதி பேஸ்புக்கில் வந்து பல மில்லியன் வாசகர்களை கவர்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிற கூகுளும் சும்மா இருக்குமா என்ன தன்னுடைய சமூக தளத்திலும் இலவச ஆன்லைன் விளையாட்டுக்களை அறிமுகபடுதியுள்ளது.
இனி ஆன்லைனில் விளையாட எங்கும் அலைய வேண்டியதில்லை நம் நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டே நாம் விளையாடலாம் கூகுள் பிளஸ் உதவியுடன்.
ஆனால் எப்பொழுதும் போல இந்த வசதிகளை அனைவருக்கும் தற்பொழுது வழங்கவில்லை. குறிப்பிட்ட அளவு இந்த வசதியை வழங்கியுள்ளது கூடிய விரைவில் அனைவருக்கும் வழங்க இருப்பதாக அவர்களின் பிளாக்கில் தெரிவித்து உள்ளனர்.
இந்த தளத்தில் ஒரே விளையாட்டை உங்கள் நண்பரோடு சேர்ந்து நீங்கள் விளையாடும் வசதியும், உங்களுடைய Top score மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும், உங்களுக்கு இந்த விளையாட்டு பகுதி தேவையில்லை என்றால் அதனை நீக்கி விடும் வசதியும் இதில் அறிமுகபடுத்தி உள்ளனர்.
உங்களுக்கு இந்த வசதி கிடைத்து விட்டதா என அறிய உங்கள் Stream பகுதிக்கு மேலே Games என்று ஒரு புதிய லிங்க் இருக்கும் அல்லது கூகுள் பிளசில் Home, Photos, Profile, Circles பட்டங்களுக்கு அருகில் புதிய பட்டன் ஒன்று வந்திருக்கும் அதில் கிளிக் செய்தாலும் Games பகுதிக்கு செல்லலாம்.
மேலும் நீங்கள் Developer ஆக இருந்தால் உங்களுடைய விளையாட்டை கூகுள் பிளசிற்கு அனுப்பலாம். அதன் விவரங்களுக்கு Google+ Developer blog இந்த லிங்கில் செல்லுங்கள்.

11 ஆகஸ்ட் 2011

‘Invisible man’ artist hides in supermarket

An artist best-known as the real-life invisible man has painted himself again for a new photograph collection – this time against a supermarket shelf. Chinese-born Liu Bolin has mastered the art of camouflaging himself against a variety of backdrops and taking photos of the impressive results. The talented 38-year-old has travelled far and wide disguising himself across many surroundings, including a London phone box, a pile of bricks, the Beijing Olympic stadium, a Venetian canal and a graffiti-covered wall.

Photo:PA

A supermarket shelf may have been an odd choice of installation for the fine arts graduate, but he appears to blend naturally into the colourful stocked-up shelf of soda bottles and Pepsi cans. The artwork entitled ‘Plasticizer’ was created to express his speechlessness at use of plasticizer in food additives.

Photo:PA

According to the artist, each photograph can take months of planning and the actual paint job can take up to ten hours. The new photographs are part of Bolin’s ‘Hiding in the City’ collection and are being exhibited at the Eli Klein Fine Art Gallery in NYC until 28 August.

ஆபாசமான உடை சேலைதான் - ஆ‌ண்ட்‌ரியா

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமானவர் ஆ‌ண்ட்‌ரியா. கதையும், கேரக்டரும் பிடித்தால் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லும் நடிகைகள் அணியைச் சேர்ந்தவர். இதன் காரணமாக எப்போதாவதுதான் அவரை திரையில் பார்க்க முடிகிறது. அதேநேரம் அவரை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கேட்கலாம். ஆ‌ண்ட்‌ரியாவின் முதல் விருப்பம் இசை... பாடுவது. காக்க காக்க படத்தில் ஹாரிஸ் ஜெயரா‌ஜ் என்னை பாட வைத்தார். சினிமாவுக்காக நான் பாடியது அதுதான் முதல்முறை. அந்தப் படத்தின் இயக்குனர் கௌதம், பச்சைக்கிளி முத்துச்சரத்தில் என்னை நடிகையாக அறிமுகப்படுத்தினார். ஆ‌ண்ட்‌ரியா தமிழில் தொடர்ந்து பாடுகிறார். தெலுங்கிலும் அவர் பாடிய பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. தெலுங்கில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஜாரா... ஜாரா... பாடல்தான் முதலில் பாடினேன். பாடல் ஹிட். ஆனால் தமிழைப் போல் தெலுங்கில் தொடர்ச்சியாக பாட வாய்ப்புகள் ஏனோ வரவில்லை. ஆ‌ண்ட்‌ரியா என்ற பெயர் இவர் மும்பையைச் சேர்ந்தவரா என்ற எண்ணத்தை தரும். பலரும் அப்படிதான் நினைக்கிறார்கள். ஆனால் ஆ‌ண்ட்‌ரியா படித்தது சென்னை என்பது ஆச்ச‌ரியமான விஷயம். நான் சென்னை கிறிஸ்டியன் காலே‌ஜில்தான் என்னுடைய கிராஜுவேட்டை கம்ப்ளீட் செய்தேன். பிறகு மாடலிங்... விளம்பரங்கள். தென்னிந்தியாவின் முதல் பெண் மிரண்டா மாடல் நான்தான். ஆ‌ண்ட்‌ரியாவும், சர்ச்சையும் அக்கா, தங்கை. செல்வராகவன் படத்திலிருந்து திடீரென விலகியது, தன்னை படம் எடுத்த புகைப்படக்காரரை படம் எடுக்காதே என்று முறைத்தது என எப்போதும் சென்சேஷன்தான். அதனாலா தெ‌ரியவில்லை, சென்னையில் இருப்பதைவிட ஹைதராபாத்தில் தங்குவதையே அதிகம் விரும்புகிறார். ஹைதராபாத் எனக்குப் பிடித்த சிட்டி. அங்கு இருப்பதை விரும்புகிறேன். தெலுங்கு சினிமாவில்தான் அருந்ததி மாதி‌ரியான ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வருகின்றன. அதனால் தெலுங்குப் படங்கள் எனக்குப் பிடிக்கும். என்றாலும் எனக்கு எப்போதும் விருப்பமான இடம் என்றால் அது சென்னைதான். தேர்ந்தெடுத்து நடிப்பதால் ஆ‌ண்ட்‌ரியாவை அவ்வப்போதுதான் தமிழில் பார்க்க முடிகிறது. இனி எப்போது ஆ‌ண்ட்‌ரியாவை தமிழில் பார்க்கலாம்? மங்காத்தாவில் அ‌‌ஜீத்துடன் நடித்திருக்கிறேன். அதுவொரு நல்ல அனுபவம். ஹைதராபாத்தில்தான் ஷூட்டிங் நடந்தது. வேறொரு தமிழ்ப் படத்தில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கேன். நடிகை என்றதும் அடுத்து வரும் கேள்வி, கிளாமர். ஹோ‌ம்லியாக அறிமுகமாகி ஹோம்லியாகவே - ஆயிரத்தில் ஒருவன் தவிர்த்து - வளைய வருகிறார் ஆ‌ண்ட்‌ரியா. கிளாமர் ரோலில் அவரை பார்க்க முடியுமா? ஒய் நாட்? கிளாமராக நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது? முழுதாக சேலை கட்டியிருந்தாலும் கூட ஆபாசமாக காட்ட முடியும். குறைவான ஆடையிலும் நாக‌ரிகமாக காண்பிக்க இயலும். கிளாமர் அதை காட்சிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது. நடிப்பு, பாட்டு என்று இரு ட்ராக்கில் பய‌ணிக்கிறார் ஆ‌ண்ட்‌ரியா. மேடைகளில் பாடும் போது அவர் காட்டும் ஈடுபாடு அசர வைக்கிறது. நடிப்பு, இசை... அவரது முதல் சாய்ஸ்...? இசைதான் பர்ஸ்ட், நடிப்பு அதற்குப் பிறகுதான். ஆ‌‌ண்ட்‌ரியாவின் சினிமா ரோல் மாடல்கள்...? எனக்கு ஆ‌ண்ட்‌ரி ஹெப்பர்ன், கேட் வின்ஸ்லெட் இருவரையும் ரொம்பப் பிடிக்கும். இவர்களை என்னுடைய ரோல் மாடல்கள் என்று சொல்லலாம்.

குளிக்கும்போது படையினர் மொபைல் போனில் படம் எடுத்தனர்: அதிர்ச்சி சாட்சியம் !

போரின் இறுதிக்கட்டத்தின்போது தமிழ்ப் பொதுமக்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பெண்போராளிகள் மீது படைகள் பாலியல் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். அத்துடன் எந்தவொரு பாலியல் தாக்குதலும் அங்கு நடக்கவில்லை என்றும் இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார். இராணுவத்தின் போர்க்குற்றங்களின் பட்டியலில் முகாம்களில் இருந்த பெண்கள் மீதான துன்புறுத்தலும் அடங்கியுள்ளது. இதனை ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களுடன் தற்போது வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர் தான் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தம்மிடம் தெரிவித்ததாக ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி கூறியுள்ளது. முகாமில் ஒவ்வொரு முறையும் நாங்கள் காலையில் எழுகின்றபோது, நான்கு - ஐந்து பெண்கள் காணாமல் போயிருப்பர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று நாம் அறியவில்லை� என்று பாதிக்கப்பட்ட மற்றொருவர் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார். உணவுக்காகவும், (மாதவிடாய்) சுகாதாரத் துண்டுகளுக்காகவும், உடைகளுக்காகவும் தான் ஒவ்வொரு முறையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக வேறொரு பெண்ணும் சாட்சியம் அளித்துள்ளார். குளிக்கும்போது ஆண் படையினர் தம்மை கையடக்கத் தொலைபேசிகளில் படம் எடுத்ததாகவும், அதற்காகவே தம்மை திறந்தவெளியில் குளிக்க நிர்ப்பந்தித்ததாகவும் ஹெட்லைன்ஸ் ருடேயிடம் மற்றொரு பெண் கூறியுள்ளார். அரசாங்கத்தினால் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டாத இரகசிய முகாம் ஒன்றில் ஒரு பெண் ஒரு ஆண்டைக் கழித்துள்ளார். �அது ஒரு சித்திரவதை முகாம். அடிப்படை வசதிகள் எமக்கு கிடைக்கவில்லை. அரசசார்பற்ற நிறுவனங்களும் அனுமதிக்கப்படவில்லை.� என்கிறார் சுந்தரி என்னும் ஒரு பெண். அது ஒரு இராணுவ முகாம். என்ன பிரச்சினையென்றாலும் இராணுவத்தினரையே அணுக வேண்டும். அவர்கள் சில பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர்.� என்று தெரிவித்துள்ளார் சுந்தரி. அங்கே பாலியல் வன்புணர்வுகள் நடந்தன. இளம்பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். ஆனால் எப்படி அதை வெளியே சொல்ல முடியும்? அவர்கள் சங்கடப்படுவார்கள், பெண்கள் ஆடைகளின்றி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததால், அவர்கள் எம்மை துன்புறுத்தினர். எம்மைத் தடுத்து வைத்துத் துன்புறுத்தினர் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கணினியை பராமரிக்க - Wondershare Live Boot 2011 இலவசமாக

நம்முடைய கணினியை பயன்படுத்தும் போது பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும். உதாரணமாக விண்டோஸ் சரியாக இயங்க மறுப்பது, முதன்மை பயனாளரகடவுச்சொல் கோளாறு இதுபோன்று பல்வேறு பிரச்சினைகள் எழும். சில நேரங்களில் நமக்கே விண்டோஸ் இயங்குதளத்தில் பல்வேறு வேலைகள் இருக்கும். விண்டோஸ் பேக்அப், வன்தட்டு சீரமைப்பு, கடவுச்சொல் மீட்டெடுப்பு மற்றும் தகவல் மீட்டெடுப்பு போன்ற பயன்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் நாம் தனித்தனி மென்பொருள்களின் உதவியினை நாடி செல்ல வேண்டும். இந்த அனைத்து பயன்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு மென்பொருள் உள்ளது. அந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. அதுதான் Wondershare Live Boot 2012. இந்த மென்பொருள் மூலமாக 40+ மேற்பட்ட விண்டோஸ் பயன்பாடுகளை மிக எளிமையாக செய்ய முடியும்.
இலவச லைசன்ஸ் கீ பெற சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டு Get it Now என்னும் பொத்தானை அழுத்தவும். இந்த இலவச கீயானது ஆகஸ்ட் 12 வரை மட்டுமே கிடைக்கும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு இலவச கீயுடன், ஒரு மின்னஞ்சல் முகவரியும் அனுப்பபட்டிருக்கும். அதை சரியாக குறித்து வைத்துக்கொள்ளவும். இந்த மென்பொருடைய சந்தை மதிப்பு $59.95 ஆகும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவவும்.
இந்த மென்பொருளை முழுமையாக தரவிறக்கி உங்கள் கணினியில், மின்னஞ்சலில் வந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும்.பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
பின் உங்கள் விருப்பபடி Wondershare Live Boot னை உருவாக்கி கொள்ள முடியும். யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் சீடி/டிவிடி ட்ரைவினை பயன்படுத்தி, இந்த Wondershare Live Boot 2012 னை உருவாக்க முடியும். நான் தற்போது யுஎஸ்பி ட்ரைவினை பயன்படுப்த்தி இதனை செய்யப்போகிறேன்.
தற்போது தோன்றும் விண்டோவில் How to create LiveBoot bootable USB drive? என்னும் தேர்வினை அழுத்தி, Burn USB drive Now! என்னும் பொத்தானை அழுத்தவும்.
தற்போது யுஎஸ்பி ட்ரைவில் Wondershare LiveBoot 2012 பூட்டபிள் கோப்பாக இருக்கும். இதனை உங்கள் கணினியின் யுஎஸ்பி ட்ரைவில் இட்டு, கணினியை மறுதொடக்கம் செய்து பயாஸில் யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் ஆகுமாறு அமைத்துக்கொள்ளவும். இல்லையெனில் பூட்டிங் அமைப்பை மட்டுமாவது யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் ஆகுமாறு மாற்றியமைத்துக்கொள்ளவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Boot from LiveBoot மற்றும் Boot from hard diskMicrosoft என்று இரண்டு தேர்வுகள் இருக்கும் அதில் Boot from LiveBoot என்பதை தேர்வு செய்து என்டர் பொத்தானை அழுத்தவும்.
WinPE தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது விண்டோஸ் பைல்களுடன் சேர்ந்து Wondershare LiveBoot 2012 பூட் ஆக தொடங்கும்.
தற்போது கணினி வழக்கம் போல் பூட் ஆகி செயல் படும், பின் நீங்கள் Wondershare Live Boot 2012 னை ஒப்பன் செய்யவும். சாதரணமாகவே Wondershare Live Boot 2012 ஒப்பன் செய்யப்பட்டிருக்கும். பின் உங்களுக்கு வேண்டிய செயல்பாடுகளை இந்த மென்பொருளின் உதவியுடன் செய்து கொள்ள முடியும்.
இது போன்று இன்னும் பல்வேறு வசதிகள் இந்த மென்பொருளில் மறைந்துள்ளன. இந்த மென்பொருள் விண்டோஸ் பயன்பாட்டாளர்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். கூடவே இந்த மென்பொருள் தற்போது இலவசமாகவும் கிடைக்கிறது. விண்டோஸில் உள்ள 40கும் மேற்பட்ட பயன்பாடுகளை நம்மால் எளிமையாக செய்ய முடியும். பயன்படுத்தி பார்த்துவிட்டு பின் உங்கள் பதிலை கூறவும்.

பேஸ்புக்-ல் கடந்த ஆண்டு பேசியதை ஞாபகப்படுத்தும் துல்லியமான பயனுள்ள தளம்.

பேஸ்புக் மூலம் கடந்த கால நம் பேச்சு மற்றும் சுவையான பல உரையாடல்களை எளிதாக மீட்டெடுத்து அன்றைய தினம் இமெயில் மூலம் தெரிவிக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவ
.

சென்ற ஆண்டு இதே நாள் நான் பேஸ்புக்-ல் யாருக்கெல்லாம் செய்தி அனுப்பினேன் அல்லது எனக்கு யார் எல்லாம் செய்தி அனுப்பினார்கள் என்ற விபரங்களை நமக்கு இமெயில் மூலம் தெரிவிக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://pastposts.com

படம் 2

இத்தளத்திற்கு சென்று Connect with Facebook என்ற பொத்தனை சொடுக்கி நம் பேஸ்புக் கணக்கை கொடுத்து உள் நுழையலாம். அடுத்து வரும் திரை படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது இதில் Allow என்பதை சொடுக்கு உள்நுழையலாம். இனி நாம் கடந்த ஆண்டு என்னவெல்லாம் பேசினோம் என்பதை தினமும் நமக்கு இமெயில் மூலம் தெரிவித்து கொண்டே இருக்கும் இந்ததளம். சில நேரங்களில் நம் பழைய நிகழ்வுகளை அசைபோட ஒரு சந்தர்ப்பமாகவும் இது இருக்கும். புதுமை விரும்பிகளுக்கும் பேஸ்புக் நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

10 ஆகஸ்ட் 2011

மங்காத்தா - "ஆட்டம் சூடு பிடிக்கிதுங்கோ"

அமர்க்களம் படத்தில் ரகுவரன் சார்லியை அடித்து போட்டு விட்டு ஸ்ரீநிவாசா தியேட்டருக்குள் வேகமாக வருவார் அதை பார்த்த அஜீத் வேகமாக ஓடி வந்து கிரில் கேட்டை மூடி ரகுவரனை நோக்கி கோபமாக ஒரு லுக் விடுவார் .. அந்த நிமிடத்தில்தான் எனக்குள் இருக்கும் அஜீத் ரசிகன் ஜனனம் ஆனான் , அதன் பின்னர் தீனாவில் அருவாள் , கத்தி என்று ஒவ்வொன்றாக எடுத்து லைலாவிடம் கொடுக்கும் காட்சி , சிட்டிசனில் போலீஸ்காரர்களை பார்த்து சிரித்து கொண்டே சிட்டிசன் என்று சொல்லும் காட்சி இவை எல்லாம் என்னை அவரின் வெறித்தனமான ரசிகனாக மாற்றி விட்டன... அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு அஜீத் படம் வரும்போதும் செம கொண்டாட்டம்தான் , அதுவும் அஜீத் படத்தின் பாடல்களை முதல் நாளே கேட்கா விட்டால் பைத்தியமே பிடித்து விடும் , தல பாட்டை முதல் முறை கேட்டு பாடலும் நன்றாக இருந்து விட்டால் ஒரே நாளில் நூறு முறை கேட்பேன் , பூவெல்லாம் உன் வாசம் பாடலை வித்யாசாகரை விடவும் அதிக முறை கேட்டவன் நானாகத்தான் இருப்பேன் ...
அதே போல தல படங்களின் டிரைலர் முதல் முறை பார்க்கும் போதெல்லாம் அப்படியே உடம்பு சிலிர்க்கும் , முன்பெல்லாம் இணைய உபயோகம் இந்த அளவுக்கு கிடையாது , எனவே டிரைலர் பார்க்க வேண்டும் என்றாள் டி‌வி ஒன்றுதான் வழி ... தல படத்தின் டிரைலர் போடுகிறார்கள் என்றாள் சோறு தண்ணி குடிக்காமல் டி‌வி முன்னாள் உக்கார்ந்து விடுவேன் .... எப்படா விளம்பர இடைவேளை விடுவார்கள் , தல டிரைலர் பாக்கணும் என்று விளம்பர இடைவேளைக்காக காத்து கிடப்பேன் ... டிரைலர் டிவியில் வந்த வுடன் முதல் முறையாக அதை பார்க்கும் போது உச்சி மண்டை முதல் உள்ளங்கால் வரை ஜிவ்வென்று ரத்தம் ஸ்பீடா ஏறும் பாருங்க , ஃபாரீன் சரக்கு ஃபுல் பாட்டீல் அடிச்சாலோ இல்லை நம்ம லவ்வர் கிறக்கமா வந்து நமக்கு லிப் டூ லிப் கிஸ் அடிச்சாலோகூட அந்த அனுபவம் கிடைக்காது ... அந்த பரவசமான அனுபவங்கள் எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது , தலையால் மட்டுமே எங்களுக்கு அந்த அனுபவத்தை தர முடியும்.. ஆனால் ஏனோ கடந்த சில வருடங்களாக தல எங்களை ஏமாற்றி கொண்டிருந்தார் ... இதோ நீண்ட நாட்களுக்கு பின்னர் அப்படி ஒரு பரவசத்தை உணர்ந்தேன் இன்று மாங்காத்தா டிரைலர் பார்த்த பொழுது ....
என்ன சொல்றது தலதான் மாஸ் என்பதை அழுத்தமாக சொல்லுகிறது இந்த டிரைலர் ... எப்பவும் தலைக்கிட்ட ஒரு ஸ்டைல் இருக்கும் , அது இந்த டிரைலரில் அதிரி புதிரியா வெளிவந்திருக்கு.... அந்த போலீஸ் கெட்டப் போட்டுகிட்டு தல நடந்து வர்ற சீன் சின்ன சாம்பிள்.... எத்தனை நாளைக்குத்தான் நான் நல்லவனாவே நடிக்கிறது என்று அவர் பேசும் வசனம் டிரைலருக்கு அருமையாக பொருந்தி வந்திருக்கிறது ... அதே மாதிரி டிரைலரில் என்னை பரவசபடுத்திய இன்னொரு விஷயம் கேமரா , படத்துல கலர் ட்யூன் பக்காவா இருக்கு , இது அப்படியே படத்திலையும் இருந்தா கண்டிப்பா அது ஒரு பெரிய பிளஸ்தான்.... அப்பறம் யுவனோட மியூசிக் பத்தி சொல்லலேனா மாங்காத்தா பத்தி எழுதுறதுல அர்த்தமே இல்ல, இந்த படத்துக்கு அஜீத் ஒரு பில்லர் என்றால் யுவன் இன்னொரு பில்லர் ... டிரைலரில் வரும் பி‌ஜி‌எம் சும்மா சூடேத்துது (பாடல்களையும் கேட்டுவிட்டேன் , அதை பற்றிய என்னுடைய பார்வையை தனியாக நாளை ஒரு பதிவாக எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் ... ) அப்பறம் அர்ஜூன் , விநாயக் உன் கேம் முடிஞ்சிருச்சி என்று அவர் வசனம் பேசும்போது இருக்கும் வேகம் படத்திலும் இருந்தால் அட்டகாசமாக இருக்கும் ... டிரைலர் catchyயாக இருப்பதற்க்கு முக்கிய காரணம் வேகமான எடிட்டிங்தான்... இதே வேகம் படத்திலையும் இருக்கணும் சாமீ....
கண்டிப்பா இந்த டிரைலர் படத்தின் மேல் எனக்குள் இருந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகபடுத்தி விட்டது... கதையும் திரைக்கதையும் இதே போல் ஸ்பீடா இருந்தா படம் எங்களுக்கு இன்னொரு தீனாதான்.... அப்படி ஒரு தலயை திரும்ப திரையில் தரிசிக்க இன்னும் எத்தனை நாள் காத்திருக்கணுமோ? வெங்கட் ஸார் படம் ரிலீஸ் ஆகபோகிற தேதிய சீக்கிரம் சொல்லுங்க

கார் மோதுண்டதில் ஆசிய நாட்டைச் சேர்ந்த மூவர் பலி!

பேர்மிங்ஹாமில் கார் மோதியதில் மூன்று ஆண்கள் இன்று காலை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மூவரில் இருவர் 25, 21 வயதுடைய சகோதரகள். மற்றையவர் இவர்களின் நண்பர். அதிவேகமாக வந்த இரு கார்கள் மூவரையும் மோதிச் சென்றதாக இறந்த சகோதரர்களின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். “இவர்கள் வீதியில் இருக்கவில்லை அல்லது வீதியை மறித்துக் கொண்டிருக்கவில்லை. இவர்களை நோக்கி வந்து கார் மோதியது. கார் மோதியதில் மேலே தூக்கி எறிப்பட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். கடந்த இரவு இடம்பெற்ற கலவரத்தில் இருந்து தமது கார் கழுவும் தொழிலை பாதுகாக்க தெருக்களில் இருந்துள்ளனர் எனவும் அதன்பின்னரே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் என உறவினர் கூறியுள்ளார். பொலிஸார் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், விசாரணைகளில் இருந்து தெரியவருவது என்னவென்றால் காலை நேரத்தில் இந்த தெருவில் சண்டை நடந்துள்ளது. மற்றும் மூவரையும் காரை ஓட்டி வந்த ஒருவரே மோதியுள்ளார்” என்றனர். இச்சம்பவம் முந்தைய கலவரத்துடன் தொடர்புடையதா எனக்கூறுவது கடினமாக உள்ளது. ஆனால் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கலகக்காரர்களிடம் இருந்து தமது உடைமையை பாதுகாக்க இவர்கள் சண்டையிட்டுள்ளதாகவும், அதன்பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொலை விசாரணையை வெஸ்ட் மிட்லண்ட்ஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரையும் குறித்த காரையும் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தடவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்தை ஆராய்ந்து வருவதாகவும் கூறினர். விபத்துக்குள்ளாகி மூவரும் அடிபட்டுக் கிடந்த போது அங்கு சுமார் 80 பேர் கூடியிருந்ததாக அம்புலன்ஸ் சேவை பேச்சாளர் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகள் முன்வந்து தகவல்களை வழங்கும்படி பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கரின் டெபிட் கார்டுடன் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த வாலிபர் கைது

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். மும்பையில் உள்ள பாரத்மாதா சினிமா தியேட்டருக்கு அருகே உள்ள எச்எஸ்பிசி வங்கியின் ஏடிஎம்முக்கு 21 வயதான வாலிபர் பணம் எடுக்க வந்தார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாருக்கு வாலிபரின் கையில் இருந்த கார்டு மீது சந்தேகம் வந்தது.

இதையடுத்து அதை வாங்கிப் பார்த்தபோது சச்சின் டெண்டுல்கருக்குச் சொந்தமானது அது என்று தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் சோயப் தூத்வாலா என்றும், மாஹிம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து கார்டைக் கைப்பற்றினர். அந்தக் கார்டு உண்மையிலேயே சச்சின் டெண்டுல்கருடையா கார்டுதானா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் இது எப்படி இந்த இளைஞரின் கையில் வந்தது என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒருவேளை சச்சின் டெண்டுல்கரின் கார்டு தகவல்களை வைத்து இது போலியாக தயாரிக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த கார்டு தவிர நான்கு கிரெடிட் கார்டுகள் மற்றும் நான்கு வங்கிகளின் டெபிட் கார்டுகளும் அந்த இளைஞரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையின்போது தான் ஜூனியர் காலேஜில் 2ம் ஆண்டு படித்து வருவதாக கூறியுள்ளார் அந்த நபர். மேலும் தான் வைத்திருந்த சச்சின் டெபிட் கார்டு பஸ் ஸ்டாப் ஒன்றில் கீழே கிடந்ததாகவும், அது செயல்படுகிறதா என்று பார்க்க ஏடிஎம் மையத்துக்கு வந்ததாகவும் தூத்வாலா கூறியுள்ளார்.

ஆனால் போலீஸார் அவரது பேச்சை நம்ப மறுத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சச்சின் டெபிட் கார்டு குறித்து சம்பந்தப்பட்ட வங்கியை போலீஸ் அதிகாரிகள் தொடர்பு கொண்டு தகவல் சேகரித்து வருகின்றனர். அதில் சச்சினுடைய கார்டுதான் என்பது உண்மையானால், சச்சினைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அதேசமயம், இதுவரை கார்டு காணாமல் போனதாக சச்சின் தரப்பிலிருந்து எந்தப் புகாரும் வரவில்லை என்பதும் போலீஸாரைக் குழப்பியுள்ளது.

09 ஆகஸ்ட் 2011

கணவன் மனைவியாக ஆடிய குழந்தைகளின் அற்புத நடனம்!

baby-dance-husband-and-wife-look-dance-09-08-11

மொல்டோவா நாட்டில் கடந்த வாரம் ஒரு திருமணம் இடம்பெற்றது. திருமண வைபவங்களில் பொதுவாக மணமகன்தான் கதாநாயகன், மண்மகள்தான் கதாநாயகி. ஆனால் இத்திருமண வைபவத்தில் ஐந்து வயது நிரம்பிய ஒரு குழந்தைகள்தான் இந்த அந்தஸ்தை பெற்றுக் கொண்டனர். இவர்கள் கணவன் - மனைவியாக அபிநயித்து ஆடிய அற்புத நடனம் திருமண வைபவத்தையே கலகலப்பு ஆக்கியது. இந்நடனக் காட்சிகளை கொண்ட வீடியோ இணைய உலகில் மிகுந்த பிரபல்யம் அடைந்து உள்ளது. ஆகா... பிரமாதம் என்கிற வார்த்தையைத் தவிர சொல்கின்றமைக்கு வேறு ஒன்றும் இல்லை.

சின்மயியை தேடி தெலுங்கு சினிமாவின் பெருமைக்குரிய நந்தி விருது

கர்நாடக இசைபாடகி, மொழிபெயர்ப்பாளர், டப்பிங் கலைஞர், ஈவண்ட் மேனஜர் என்று சின்மயி பன்முக திறமையாளராக வலம் வருகிறார் கோலிவுட்டில். காலம் சென்ற இயக்குனர் ஜீவா நடிக்க அழைத்தும் நடிகை என்ற முகத்தை விரும்பவில்லை என்று மறுத்தவர். தற்போது கோலிவுட்டின் முன்னனி கதாநாயகிகளுக்கு குரல்கொடுபதில் பிஸியாக இருந்து வரும் சின்மயியை, தெலுங்கு சினிமாவின் பெருமைக்குரிய விருதாக கருதப்படும் நந்தி விருது தேடி வந்திருகிறது. இந்த விருது அவருக்கு சிறந்த டப்பிங் கலைஞருக்காக வழங்கப்பட்டுள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில், சிம்பு-திரிஷா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் யா மாயா ஜேசாவே. இந்தப் படத்தில் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் , சிம்பு-த்ரிஷா நடித்த கதாபாத்திரங்களில் நடித்தார்கள். இதில் நாயகி சமந்தாவுக்கு சின்மயி பின்னணி தெலுங்குக்குரல் கொடுத்திருந்தார். சின்மயியின் அபாரமான குரல் நடிப்புகாக இந்த விருது. விருது பெற்ற பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் சின்மயி!

பிரபுதேவாக்களுக்கு திருமணம் ஒரு செக்ஸ் லைசென்ஸ்!

ந்த விஷயத்தை கடைசிவரை என்வழியில் எழுதக் கூடாது என்று ஆரம்பத்தில் முடிவு செய்திருந்தோம்.

ஆனாலும், ‘திருமணம் என்பது சமூக ஒழுக்கமல்ல, வெறும் சந்தர்ப்ப தேவை மட்டுமே. காதல் என்பது சாஸ்வதமல்ல, உடல் இச்சையின் எல்லை வரை மட்டுமே’ என்ற புதிய இலக்கணத்தை படைத்திருக்கும் பிரபு தேவா என்ற தவறான முன்னுதாரணத்தை இனி வருபவர்கள் பின்பற்றாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையோடு இதைப் பதிவு செய்கிறோம்!

காதலித்து, பெற்றோரை எதிர்த்து, ரஜினி, தாணு போன்றவர்களின் ஆசியோடு லதா என்கிற ரமலத்தை 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட பிரபு தேவா, அந்த உறவை அதிகாரப்பூர்வமாக வெட்டிவிட்டார். எதற்காக… ரம்லத் சரியில்லை, வாழ்க்கையில் நிம்மதியில்லை… என்பதற்காக அல்ல. 15 ஆண்டுகளுக்கு முன்பு ரம்லத்திடமிருந்த வனப்பு இப்போதில்லை. அவரை விட இளமையும் கூடுதல் கவர்ச்சியும் கொண்ட நயன்தாரா என்ற நடிகை கிடைத்துவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக!

பிரபு தேவா – ரம்லத் விவாகரத்தை உயர்நீதிமன்றம் ஜூலை 2-ம் தேதி சனிக்கிழமை மாலை அறிவித்துவிட்டது.

உடனே, நயன்தாரா பிரவு தேவா திருமணம் எப்போது என மீடியாக்களில் செய்தி பரபரக்கிறது. அது வியாபாரம்…. நடக்கட்டும்!

நம் கேள்வி எல்லாம், திருமணம் என்பது அவ்வளவுதானா? காதல் இல்லையேல் சாதல் என்பது செக்ஸ் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்குப் பயன்படும் வெறும் டயலாக்தானா?

செட்டில்மெண்ட் கொடுக்க ஒப்புக் கொண்டால், கணவன் செய்த தவறுகள் மன்னிக்கப்படுமா?

அதேநேரம், இந்தக் கேள்விகளுக்கு பதில்களாய் எழும் எதிர்க்கேள்விகளையும் புறம் தள்ள முடியவில்லைதான்.

ஒரு காலத்தில் மனசுக்குப் பிடித்து, மணந்து… பின் மனம் கசந்த பிறகு நொந்துபோன அந்த வாழ்க்கையைத் தொடரத்தான் வேண்டுமா?

பிடிக்காத கணவன் மேல் கேஸ் போட்டு கோர்ட்டுக்கு அலைந்து செத்து சுண்ணாம்பாவதை விட, கிடைக்கிற செட்டில்மெண்டை வைத்துக் கொண்டு மிச்ச காலத்தை நிம்மதியாகக் கழிப்பதில் தவறென்ன?

-இந்த இருதரப்பு கேள்விகளிலும் உள்ள நியாயங்கள் மறுக்க முடியாதவையே. ஆனால் இந்த நிலைக்கு முக்கிய காரணம், தனி மனித ஒழுக்கம் தவறிப் போனதுதான்.

பலதார மணத்தை முன்னர் ஆதரித்து, ஆராதித்து, இப்போது சட்டத்துக்குப் பயந்து உள்ளுக்குள் கள்ளக்காதலுடன் திரியும் சமுதாயம்தான் இது. இடையில் கொஞ்சகாலம், ராமனின் ஏக பத்தினிக் கதைகள், பலதார மண தடைச் சட்டம் போன்றவை அலைபாயும் ஆண் / பெண் மனங்களைக் கொஞ்சம் கட்டிப் போட்டிருந்தன.

இப்போது அதெல்லாம் ‘ஹம்பக்’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். ஆண் – பெண் இருபாலருமே இதில் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை. அவர்களின் வக்கிரத்தை நியாயப்படுத்தும் அரும்பணியில் இருக்கவே இருக்கின்றன மீடியாக்கள்!

‘நீயும் நானும் இப்போது கல்யாணம் செய்து கொள்ளலாம்… அப்புறம் அவரவருக்குப் பிடித்தவர்களுடன் சுகத்தைப் பரிமாறிக் கொள்ளலாம். அதுவும் சரிப்படாவிட்டால், இருக்கவே இருக்கு விவாகரத்து. ‘சட்டப்படி விபச்சாரம்’ (கற்பு, விபச்சாரம் போன்றவற்றுக்கு இன்றைய சமூகம் தரும் அர்த்தத்தை மனதில் கொண்டு இந்தப் பதத்தைப் படியுங்கள்…!) செய்து கொள்ளலாம்,’ என்பதை ஒரு ஒப்பந்தமாகப் போட்டுக்கொள்ளாதது மட்டும்தான் பாக்கி.

அட நாசமாப் போனவர்களா… இந்த கல்யாணம், கட்டில் சுகம், கள்ளக் காதல், விவாகரத்து போன்றவற்றுக்கு நடுவில் கிடைத்த குழந்தைகள் என்ற விலை மதிப்பில்லா பொக்கிஷங்களை நாசமாக்குகிறோம் என்ற எண்ணமே உங்களுக்கு தோன்றுவதில்லையா? நாளைய சமூகம் முழுக்க பிரபுதேவாக்கள், பிரகாஷ்ராஜ்கள், நயன்தாராக்கள் என விஷமாய் நிரம்பி வழியப் போகும் அபாயத்தை உணரவே மாட்டீர்களா… அந்த கற்கால திறந்த வெளி செக்ஸில் இந்த சமூகம் சங்கமிக்கத்தான் இத்தனை பாடு படுகிறீர்களா..!

யோசித்துப் பார்த்தால், எனக்கு நினைவு தெரிந்த பிறகு, பல முறை என் அப்பா அம்மா சண்டை போட்டிருக்கிறார்கள். அடிதடி வரை கூட போயிருக்கிறது. இரண்டு நாள் பேசாமல் இருந்திருக்கிறார்கள். தாத்தாவின் தலையைக் கண்டதும் அந்த சண்டை பிசுபிசுக்கும். பின்னர் மெல்ல நாங்கள் தூதுவர்களாகி, அவர்களை சமாதானப்படுத்தி, அப்புறம் இருவரும் அன்புடன் எங்களுக்கு சோறூட்டிய நாட்கள் இன்னும் மனதுக்குள் நிரம்பித் ததும்புகின்றன. அந்த சண்டைகள் விவாகரத்து வரை போகாததன் காரணம், நயன்தாராக்கள் கிடைக்காததாலா… இல்லை! தன்னை உணர்ந்து, தன்னை நம்பியுள்ளவர்களின் உணர்வுகளை, உறவுகளை மதித்ததால்!

என் மனைவியுடன் எனக்கு மனஸ்தாபம் வரும் சமயங்களில், என் தாய் தந்தையரின் அந்த பழைய ‘சண்டையும் சமாதானமும்’ மனதுக்குள் நிழலாடி, அடுத்த நிமிடமே எங்கள் ஊடலைத் துடைத்துப் போடுவதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. பிரபுதேவாக்களே, உங்களுக்கு இப்படிப்பட்ட தாய் தந்தைகள் அமையவில்லையா…

நியாயமான காரணங்கள், சேரவே முடியாத அளவுக்கு மனப் பிளவுகள் இருந்தால், விவாகரத்து அனுமதிக்கப்படக் கூடியதே. அறுத்துக் கட்டுதல் என்பது தமிழ் சமுதாயம் அறியாததுமல்ல. ஆனால் அதற்கெல்லாம் நியாயமான காரணங்கள் தேவைப்பட்டன அன்று. ஆனால் காரணத்தை தேடி வைத்துக் கொண்டு விவாகரத்துக்கு விண்ணப்பிப்பது பிரகாஷ்ராஜ், பிரபுதேவாக்கள் ஸ்டைல் ஆகிவிட்டது. இன்னொரு அழகிய பெண் கிடைத்துவிட்டாள் என்பதற்காகவே விவாகரத்து கோரியவர்கள் இவர்கள்.

‘இந்த உலகத்துல ஒண்ணைவிட ஒண்ணு பெட்டராதான் தோணும்…’ அதற்காக…?

ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் பெற்றோர். அதில் விபச்சாரத்தையும் கள்ளத்தனத்தையும் வக்கிரத்தையும் மட்டுமே கற்றுத் தந்தால்… அன்புக்கு அவர்கள் அகராதியில் ‘காண்டம்’தானே குறியீடாகத் தெரியும்!

THANKS-

என்வழி.காம்

முரட்டுப் பிடிவாதத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய பாடம்! – கருணாநிதி

சென்னை: சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதன் மூலம் அ.தி.மு.க. அரசின் முரட்டுப் பிடிவாதத்துக்கு இந்திய உச்ச நீதிமன்றம் மிகப்பெரிய பாடத்தைப் புகட்டியுள்ளது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

1.5 கோடி மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூக நீதியில் அக்கறை கொண்டோரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த சமச்சீர் கல்வி பற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்து விட்டது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களும், உச்ச நீதிமன்ற நீதியரசர்களும் திரும்பத் திரும்பச் சொல்லியும் அவைகளை எல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு தி.மு.க. ஆட்சி அறிமுகப்படுத்தியது என்ற காரணத்திற்காகவும், ஆதிக்க வர்க்கத்திற்கு ஆதரவாகவும், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று நீதிமன்றங்களே நாட்களைக் குறிப்பிட்டுச் சொல்லி, அந்த தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை வினியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கூடக் கேளாமல் முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்த தமிழக அ.தி.மு.க. அரசுக்கு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மிகப்பெரிய பாடம் இந்திய உச்ச நீதிமன்றத்திலிருந்தே கிடைத்துள்ளது.

இதே தீர்ப்பு தி.மு. கழக ஆட்சியிலே உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று அறிக்கை விடுத்திருப்பார் அம்மையார் ஜெயலலிதா. அதைப்போல நான் தற்போது அறிக்கை விடுவதற்கு விரும்பவில்லை. இனியாவது இதுபோன்ற பிரச்சினைகளில் ஜெயலலிதா தனது பிடிவாதப் போக்கினைக் கைவிட்டு நாட்டு நலன்கருதி தன்னுடைய அணுகுமுறைகளையும், நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டு செயல்படுவார் என்று தமிழக மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

சமச்சீர் கல்விக்கு கிடைத்த இந்த உச்சகட்ட வெற்றியை அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

மக்களுக்கு இனிப்பு வழங்கிய மு க ஸ்டாலின்!

இந்நிலையில் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், “சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி. உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வேண்டும்.

இப்படி ஒரு தீர்ப்பு திமுக ஆட்சியில் வந்திருந்தால், கலைஞரை ராஜினாமா செய்யச்சொல்லி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பார். ஆனால் நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம். நாங்கள் பெருந்தன்மையாக நடந்துகொள்வோம். மாணவர் நலனே முக்கியம்,” என்றார்.

சட்டமன்றத்திற்கு செல்வீர்களா என்றபோது, “எங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்வரை நாங்கள் போகப்போவதில்லை” என்றார்.

பின்னர் பாளையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் பாளை பேருந்து நிலையத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின், அங்கு இறங்கி சமச்சீர் கல்வி தொடர்பான தீர்ப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்க, ஏகக் கூட்டம் கூடிவிட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கிவிட்டுச் சென்றார் ஸ்டாலின்.

70 பள்ளி நாட்கள் வீண்-ராமதாஸ்:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சமச்சீர்கல்வி தொடர்பான விசயத்தில் தமிழக அரசின் பிடிவாதப்போக்கால் காயமடைந்திருந்த மனங்களுக்கு மருந்து போடும் வகையில் அமைந்துள்ள இத்தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மாறி மாறி மேல் முறையீடு செய்தது. இதன்மூலம் ஒரு கோடியே 20 லட்சம் மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பாடம் படிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது. ஒருபுறம் வழக்குக்காக கோடிக் கணக்கில் மக்களின் வரிப்பணத்தை செலவழித்த தமிழக அரசு, இன்னொருபுறம் பழைய பாடத்திட்டத்தின் படியான புத்தகங்களை அவசர அவசரமாக அச்சடிப்பதற்காக 500 கோடி ரூபாய்க்கு மேல் வீணாக செலவழித்துள்ளது.

இந்தியாவின் எதிர்காலத் தூண்களான மாணவர்களின் நலனின் அக்கறையின்றி செயல்பட்டு, 70 பள்ளி வேலை நாட்களும் ரூ.500 கோடிக்கும் அதிகமான மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுவதற்கு காரணமான அனைவரும் இதற்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,” என்று கூறியுள்ளார்.

பொதுப் பள்ளி முறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்ற தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. பொதுப்பாடத்திட்டத்தை அனைத்துப்பள்ளிகளிலும் இவ்வாண்டே நடைமுறைப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.

சமச்சீர் கல்வி என்பது பொதுப்பாடத்திட்டம் மட்டு மல்ல. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது, ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் 1:30 என்கிற வகையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது, அனைத்து பள்ளி வாரியங்களையும் இணைத்து ஒரே பள்ளி வாரியத்தை உருவாக்குவது உள்ளிட்ட முத்துக் குமரன் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றி பொதுப் பள்ளியை நோக்கி தமிழக பள்ளி கல்வி முன்னேற ஆவண செய்ய வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது,” என்று கூறப்பட்டுள்ளது.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com