Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

10 ஆகஸ்ட் 2011

மங்காத்தா - "ஆட்டம் சூடு பிடிக்கிதுங்கோ"

அமர்க்களம் படத்தில் ரகுவரன் சார்லியை அடித்து போட்டு விட்டு ஸ்ரீநிவாசா தியேட்டருக்குள் வேகமாக வருவார் அதை பார்த்த அஜீத் வேகமாக ஓடி வந்து கிரில் கேட்டை மூடி ரகுவரனை நோக்கி கோபமாக ஒரு லுக் விடுவார் .. அந்த நிமிடத்தில்தான் எனக்குள் இருக்கும் அஜீத் ரசிகன் ஜனனம் ஆனான் , அதன் பின்னர் தீனாவில் அருவாள் , கத்தி என்று ஒவ்வொன்றாக எடுத்து லைலாவிடம் கொடுக்கும் காட்சி , சிட்டிசனில் போலீஸ்காரர்களை பார்த்து சிரித்து கொண்டே சிட்டிசன் என்று சொல்லும் காட்சி இவை எல்லாம் என்னை அவரின் வெறித்தனமான ரசிகனாக மாற்றி விட்டன... அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு அஜீத் படம் வரும்போதும் செம கொண்டாட்டம்தான் , அதுவும் அஜீத் படத்தின் பாடல்களை முதல் நாளே கேட்கா விட்டால் பைத்தியமே பிடித்து விடும் , தல பாட்டை முதல் முறை கேட்டு பாடலும் நன்றாக இருந்து விட்டால் ஒரே நாளில் நூறு முறை கேட்பேன் , பூவெல்லாம் உன் வாசம் பாடலை வித்யாசாகரை விடவும் அதிக முறை கேட்டவன் நானாகத்தான் இருப்பேன் ...
அதே போல தல படங்களின் டிரைலர் முதல் முறை பார்க்கும் போதெல்லாம் அப்படியே உடம்பு சிலிர்க்கும் , முன்பெல்லாம் இணைய உபயோகம் இந்த அளவுக்கு கிடையாது , எனவே டிரைலர் பார்க்க வேண்டும் என்றாள் டி‌வி ஒன்றுதான் வழி ... தல படத்தின் டிரைலர் போடுகிறார்கள் என்றாள் சோறு தண்ணி குடிக்காமல் டி‌வி முன்னாள் உக்கார்ந்து விடுவேன் .... எப்படா விளம்பர இடைவேளை விடுவார்கள் , தல டிரைலர் பாக்கணும் என்று விளம்பர இடைவேளைக்காக காத்து கிடப்பேன் ... டிரைலர் டிவியில் வந்த வுடன் முதல் முறையாக அதை பார்க்கும் போது உச்சி மண்டை முதல் உள்ளங்கால் வரை ஜிவ்வென்று ரத்தம் ஸ்பீடா ஏறும் பாருங்க , ஃபாரீன் சரக்கு ஃபுல் பாட்டீல் அடிச்சாலோ இல்லை நம்ம லவ்வர் கிறக்கமா வந்து நமக்கு லிப் டூ லிப் கிஸ் அடிச்சாலோகூட அந்த அனுபவம் கிடைக்காது ... அந்த பரவசமான அனுபவங்கள் எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது , தலையால் மட்டுமே எங்களுக்கு அந்த அனுபவத்தை தர முடியும்.. ஆனால் ஏனோ கடந்த சில வருடங்களாக தல எங்களை ஏமாற்றி கொண்டிருந்தார் ... இதோ நீண்ட நாட்களுக்கு பின்னர் அப்படி ஒரு பரவசத்தை உணர்ந்தேன் இன்று மாங்காத்தா டிரைலர் பார்த்த பொழுது ....
என்ன சொல்றது தலதான் மாஸ் என்பதை அழுத்தமாக சொல்லுகிறது இந்த டிரைலர் ... எப்பவும் தலைக்கிட்ட ஒரு ஸ்டைல் இருக்கும் , அது இந்த டிரைலரில் அதிரி புதிரியா வெளிவந்திருக்கு.... அந்த போலீஸ் கெட்டப் போட்டுகிட்டு தல நடந்து வர்ற சீன் சின்ன சாம்பிள்.... எத்தனை நாளைக்குத்தான் நான் நல்லவனாவே நடிக்கிறது என்று அவர் பேசும் வசனம் டிரைலருக்கு அருமையாக பொருந்தி வந்திருக்கிறது ... அதே மாதிரி டிரைலரில் என்னை பரவசபடுத்திய இன்னொரு விஷயம் கேமரா , படத்துல கலர் ட்யூன் பக்காவா இருக்கு , இது அப்படியே படத்திலையும் இருந்தா கண்டிப்பா அது ஒரு பெரிய பிளஸ்தான்.... அப்பறம் யுவனோட மியூசிக் பத்தி சொல்லலேனா மாங்காத்தா பத்தி எழுதுறதுல அர்த்தமே இல்ல, இந்த படத்துக்கு அஜீத் ஒரு பில்லர் என்றால் யுவன் இன்னொரு பில்லர் ... டிரைலரில் வரும் பி‌ஜி‌எம் சும்மா சூடேத்துது (பாடல்களையும் கேட்டுவிட்டேன் , அதை பற்றிய என்னுடைய பார்வையை தனியாக நாளை ஒரு பதிவாக எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் ... ) அப்பறம் அர்ஜூன் , விநாயக் உன் கேம் முடிஞ்சிருச்சி என்று அவர் வசனம் பேசும்போது இருக்கும் வேகம் படத்திலும் இருந்தால் அட்டகாசமாக இருக்கும் ... டிரைலர் catchyயாக இருப்பதற்க்கு முக்கிய காரணம் வேகமான எடிட்டிங்தான்... இதே வேகம் படத்திலையும் இருக்கணும் சாமீ....
கண்டிப்பா இந்த டிரைலர் படத்தின் மேல் எனக்குள் இருந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகபடுத்தி விட்டது... கதையும் திரைக்கதையும் இதே போல் ஸ்பீடா இருந்தா படம் எங்களுக்கு இன்னொரு தீனாதான்.... அப்படி ஒரு தலயை திரும்ப திரையில் தரிசிக்க இன்னும் எத்தனை நாள் காத்திருக்கணுமோ? வெங்கட் ஸார் படம் ரிலீஸ் ஆகபோகிற தேதிய சீக்கிரம் சொல்லுங்க
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com