09 ஆகஸ்ட் 2011
சின்மயியை தேடி தெலுங்கு சினிமாவின் பெருமைக்குரிய நந்தி விருது
கர்நாடக இசைபாடகி, மொழிபெயர்ப்பாளர், டப்பிங் கலைஞர், ஈவண்ட் மேனஜர் என்று சின்மயி பன்முக திறமையாளராக வலம் வருகிறார் கோலிவுட்டில். காலம் சென்ற இயக்குனர் ஜீவா நடிக்க அழைத்தும் நடிகை என்ற முகத்தை விரும்பவில்லை என்று மறுத்தவர்.
தற்போது கோலிவுட்டின் முன்னனி கதாநாயகிகளுக்கு குரல்கொடுபதில் பிஸியாக இருந்து வரும் சின்மயியை, தெலுங்கு சினிமாவின் பெருமைக்குரிய விருதாக கருதப்படும் நந்தி விருது தேடி வந்திருகிறது. இந்த விருது அவருக்கு சிறந்த டப்பிங் கலைஞருக்காக வழங்கப்பட்டுள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில், சிம்பு-திரிஷா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் யா மாயா ஜேசாவே. இந்தப் படத்தில் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் , சிம்பு-த்ரிஷா நடித்த கதாபாத்திரங்களில் நடித்தார்கள். இதில் நாயகி சமந்தாவுக்கு சின்மயி பின்னணி தெலுங்குக்குரல் கொடுத்திருந்தார். சின்மயியின் அபாரமான குரல் நடிப்புகாக இந்த விருது. விருது பெற்ற பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் சின்மயி!