Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

28 ஜூலை 2012

இப்போல்லாம் கோலிவுட் நடிகைகளின் விருப்பக் குளியல் எது தெரியுமா...?!

பீர் குடித்தால் மட்டும் போதை ஏறாது பீர் கொண்டு கூந்தலை அலசும் பெண்களைக் கண்டாலே இனி ஆண்களுக்கு போதை ஏறினாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவிற்கு தலைக்கு பீர் ஊற்றி குளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். கோலிவுட் நாயகிகள் பலரும் இப்போது தலைக்கு பீராபிஷேகம்தான் செய்துகொள்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் அருந்தினால் எலும்புகள் வலுப்பெறுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீரில் உள்ள சிலிகான், திரவ வடிவத்தில் உள்ளதால் உடலில் எளிதில் உறிஞ்சப்பட்டு எலும்புகள் பலமடைய உதவுகின்றன. அரை லிட்டருக்கும் குறைவாக உட்கொண்டால் தான் இந்த பலன் கிடைக்கும். 500 மில்லி லிட்டருக்கு அதிகமானால், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடும், என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Hair Care
உடல் ஆரோக்கியத்திற்கு பீர் உதவுவதைப்போல கூந்தலை பட்டுப்போல மென்மையாக்குவதில் பீர் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளனர் அழகு ஆய்வாளர்கள். தமிழ்நாட்டில் டாஸ்மாக், எலைட் என்று விதவிதமாக வசதிகளை செய்து கொடுக்கிறது அரசு. இந்த நேரத்தில் நடிகை ஒருவர், குடிப்பதற்கு வைத்திருந்த பீர் பாட்டிலை தலையில் கொட்டி தனி ஆராய்ச்சி செய்திருக்கிறார். கூந்தலை கொத்து கொத்தாக பிரித்து அதில் பீரை ஊற்றி கழுவினால் தலை முடி பஞ்சு போல அலை அலையாய் மிதக்குமாம். இதனால் கூந்தலுக்கும் உறுதி என்று கண்டு பிடித்திருக்கிறார் அந்த நடிகை.
பீர் குடிப்பவர்களை விட பீர் ஊற்றி குளிப்பவர்களின் பட்டியல் அதிகரித்துவிடும் போல அந்த அளவிற்கு தமன்னா, டாப்ஸி, அனுஷ்கா என்று நடிகைகளின் பட்டியல் நீள்கிறது . ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடித்த சோனியா அகர்வால் பாட்டில் பாட்டிலாக பீர் வாங்கி குவித்த காரணம் தெரியாமல் மண்டை காய்ந்து போனார்கள். பின்னர்தான் அது குடிக்க வாங்கிய பீர் இல்லை குளிக்க வாங்கிய பீர் என்று தெரிந்தது. சோனியா அகர்வாலின் பட்டுக்கூந்தலுக்கு இந்த பீர்தான் காரணமாம்.
பீர் ஊற்றி குளிக்க ஆசைப்படுபவர்கள் முதலில் ப்ரிட்ஜில் இருந்து பீர் பாட்டிலை எடுத்து அறை வெப்பநிலைக்கு வைக்கவும். மைல்ட் ஷாம்பு போட்டு கூந்தலை சாதாரணமாக அலசவும். பின்னர் கூந்தலை பிரித்து வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பீர் ஊற்றி ஊறவைத்து அலசவும். பின்னர் சுத்தமான டவல் கொண்டு கூந்தலை துடைக்கவும். கூந்தல் உலர்ந்த பின்னர் பாருங்கள் அலை அலையாய் பட்டுப்போல கூந்தல் மாறும். பீரில் உள்ள வைட்டமின் பி, இயற்கை சர்க்கரை, போன்றவைதான் கூந்தலை பளபளப்பாக மாற்றுகிறதாம்.

நடுத்தரவயதில்தான் பெண்களுக்கு ஆசை அதிகம் வருமாம்!

20 வயது பெண்களை விட 35 வயதுக்கு மேற்பட்ட நடுத்தர வயதைச் சேர்ந்த பெண்களுக்குத்தான் செக்ஸ் ஆசை அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
திருமணமான புதிதில் பெண்ணுக்கு கூச்சம் அதிகம் இருப்பதனாலும், தவறாக நினைத்துவிடுவானோ என்ற அச்ச உணர்வினாலும் இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண்கள்தான் முதலில் நிற்கின்றனர். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள். காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் திரவங்கள் வயது கூடும்போது மாற்றமடைகின்றன. ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ் டெரோனின் குறைவை எஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.

Middle Aged Women Having More Sex Than The Younger Ones
சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகிறது. மனைவியை சிலிர்ப்பு நிலைக்கு கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பரவசத்தை அடைகிறான்.
இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் ஆண் உறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான். ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட்கையுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள். ஆனால் நடு வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறன்
வயது முதிரும் போது மோகத்திற்கு பார்வை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. தொடு உணர்ச்சிகளே அந்நிலைக்குத் தூண்ட முடியும். எனவே தான் இவ்வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத்தில் உதவிகரமாக இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

27 ஜூலை 2012

ஆண்களுக்கு ஏன் 'அது' மேல அவ்வளவு ஆசை...?

எத்தனையோ கேள்விகளுக்கு எப்படியாச்சும், ஏதாவது ஒரு பதில் கிடைத்து விடும். ஆனால் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் முக்கியமானது, முதலாவதானது மார்பகங்கள்தானாம். கண், இதழ் என பல விஷயங்கள் ஆண்களுக்குப் பிடித்தாலும் கூட முதலில் அவர்களது கண்ணை 'உறுத்துவது' மார்பகங்கள்தானாம். இதற்கு என்ன காரணம் என்பதை உளவியலாளர்கள் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லையாம்.
ஒரு பெண்ணை ஆண் பார்க்கும்போது முதலில் எந்த பாகத்தைப் பார்க்கிறான் என்பதையே ஒரு ஆய்வாக நடத்தியுள்ளனர். அதில் கிடைத்த முடிவு, கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் மார்பகங்களைத்தான் முதலில் நோட்டமிடுகிறார்களாம். பிறகுதான் கண் உள்ளிட்ட ஏரியாக்களுக்குப் போகிறார்களாம்.
ஒரு பெண்ணிடம் பேசும்போது, அந்தப் பெண் ஆணின் கண்ணைப் பார்த்து நேருக்கு நேராகப் பேசுவதுதான் வழக்கம். அதேசமயம், ஆண்களைப் பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கும்போது கழுத்துக்குக் கீழே கண்களை ஓட விட்டு ஓட விட்டு மீள்கிறார்களாம்.
அந்த அளவுக்கு பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்களுக்கு இத்தனை மோகம், ஆசை...? இதற்கு தெளிவான, உறுதியான பதில் இல்லை. அதேசமயம், பெண்களுக்கு பெண்மை மற்றும் அழகுக்குரிய முக்கிய அம்சமாக ஆண்கள் மார்பகங்களைத்தான் கருதுகிறார்களாம்.
அழகான, பெரிதான, கவர்ச்சிகரமான மார்பகங்கள் உடைய பெண்கள்தான் அழகானவர்கள், பெண்மை நிறைந்தவர்கள், செக்ஸ் விருப்பம் அதிகம் கொண்டவர்கள் என பெரும்பாலான ஆண்கள் கருதுவதே இதற்குக் காரணம் என்கிறார்கள் சிலர்.
சில ஆண்களுக்குப் பெரிய சைசிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களையே அதிகம் பிடிக்கிறதாம். அதேசமயம், மீடியமான மார்பகங்கள் கொண்ட பெண்களை பலர் ரசிக்கிறார்களாம். சிறிய மார்பகங்களுக்கு ஆண்களிடையே வரவேற்பு கம்மிதானாம்.
Why Are Men Attracted Breasts
காதல் விளையாட்டில் மார்பகங்களுக்கும் முக்கியப் பங்குண்டு என்பது சிலரின் வாதமாக உள்ளது. மேலும் முன்விளையாட்டின்போது பெண்களின் மார்பகங்களைப் படாதபாடு படுத்தி விடுவதும் ஆண்களின் வழக்கமாக உள்ளது. நிமிண்டுவது, பிடிப்பது, பிசைவது, கடிப்பது என அதை விளையாட்டுப் பொம்மை போல மாற்றி விடுவார்கள். செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்க மார்பகங்களும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதில் நிச்சயம் சந்தேகம் இல்லை. உண்மையில் பெண்களும் கூட இந்த மார்பக விளையாட்டை விரும்பத்தான் செய்கிறார்கள் - வலிக்காதவரை.
மார்பகங்கள் மீது ஆண்களுக்கு ஆசை வர இன்னொரு காரணம், பெண்ணின் உடலில் கைக்கு 'வாகான' உறுப்பாக இருப்பது மார்பகங்கள்தான். பிடித்து விளையாடுவதற்கு வசதியாக இருப்பதால்தான் ஆண்களின் கரங்கள் பிற பகுதிகளை விட முதலில் மார்பகத்திற்குப் போகிறதாம்.
ஒரு அழகான, தடித்த மார்பகங்களைக் கொண்ட பெண்ணுடன் பேசும்போது ஆண்கள் தடுமாறிப் போய் விடுகிறார்களாம். அவர்களையும் அறியாமல் அவர்களது கண்கள் அப்பெண்ணின் மார்பகத்தின் மீது மோதித் திரும்புமாம். அதைத் தவிர்க்க எவ்வளவுதான் அவர்கள் முயன்றாலும், கட்டுப்பாடு காக்க முயன்றாலும் கூட எப்படியாவது 'பார்த்து' விடுகிறார்களாம். இது அந்தப் பெண்ணுக்கும் தெரியுமாம், ஆனால் அந்த ஆணின் தடுமாற்றத்தைப் பார்த்து உள்ளுக்குள் அப்பெண்ணுக்கு தன் மீது பெருமிதமும் ஏற்படுகிறதாம்.
பெண்களின் மார்பகம் ஒரு கவர்ச்சிப் பகுதியாக ஆண்களால் பார்க்கப்பட்டாலும் கூட அது தாய்மையின் சின்னம் என்பதே உண்மை. ஒரு பெண்ணுக்கு இயற்கை கொடுத்த சீதனம்தான் மார்பகம். அதை கவர்ச்சிப் பொருளாக ஆண்கள் ரசித்தாலும் கூட அதை காட்சிப் பொருளாக்கி கள்ங்கப்படுத்தாத வரை சரிதான்...!

ரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை கவுசல்யா!

சென்னை: கவுசல்யாவை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. தொன்னூறுகளின் மிக முக்கிய நடிகை இவர். விஜய், முரளி, கார்த்திக் என முக்கிய நடிகர்களுடன் நடித்து, பின்னர் குணச்சித்திர வேடங்களுக்குத் தாவி, இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.Now Kousalya Joins The Club Nithyananda
இவருக்கு ஒரு பிரச்சினை... அது முதுகுவலி. பல டாக்டர்களிடம் போய் பார்த்தும் கேட்கவில்லையாம். இந்த வலிக்கு நித்தியானந்தா நல்ல ஹீலிங் தெரபி தருகிறார் என்று கேள்விப்பட்டு, தோழிகள் துணையுடன் பிடதிக்குப் போய் வந்தாராம். ஒரு முறை போய் வந்த பிறகு ஆசிரமத்தையே க்ளோஸ் பண்ணிவிட, இப்போது நித்தியானந்தா கேம்ப் போடும் ஆசிரமங்களுக்குப் போய் தன் வலிக்கு வைத்தியம் பார்த்துக் கொள்கிறாராம்.

வலி குணமடைந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அது நமக்கு தேவையுமில்லை. ஆனால் இந்த ட்ரீட்மென்டில் முக்கியத் திருப்பமாக அமைந்தது, சிகிச்சைக்கு வந்த கவுசல்யா சிஷ்யையாக மாறிப் போனதுதான்!
வலிக்கு சிகிச்சை வேணும் சாமி என வந்து, நிரந்தர பக்தையானவர்தான் ரஞ்சிதாவும். இவரைத் தவிர, மாளவிகா, ராகசுதா, யுவராணி, அண்ணி சீரியல் மாளவிகா என நடிகைகள் பலரும் இந்த குரூப்பில் உள்ளனர்.
எப்போ யார் மூலம் அடுத்த டேப்போ.. எல்லாம் அந்த சிவனுக்கே வெளிச்சம்.. தென்னாடுடைய சிவனே போற்றி!

ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகல தொடக்கம்- லண்டனில் கண்கவர் விழா

லண்டன்: தமிழக இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா ஆகியோரின் பாடல்கள் உள்ளிட்ட இசை நிகழ்ச்சியுடன் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டி கோலாகல துவக்க விழாவுடன் இன்று துவங்க உள்ளது. மொத்தம் 3 மணிநேரம் நடைபெற உள்ள துவக்க விழாவில் இசை விழா, நடனம், அணிகளின் அணிவகுப்பு ஆகியவை நடைபெற உள்ளது.
 london olympics opening ceremony starts with ar rahman
லண்டன் நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு (இந்திய நேரப்படி நாளை அதிகாலை 1.30 மணிக்கு) துவக்க விழா நடைபெறும். இந்த விழாவின் ஏற்பாடுகள் ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினியர் படத்தின் இயக்குனர் டேனி போலே மேற்பார்வையில் நடைபெறுகிறது.
லண்டன் ஒலிம்பிக் துவக்க விழாவில் தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், பஞ்சாபி இசையை தழுவிய இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். 'நிம்மா நிம்மா' என்று தொடங்கும் பாடலுக்கு, பின்னணி இசையுடன் பல பின்னணி பாடகர்களின் குரல்களுடன் இணைத்து இனிய இசை நிகழ்ச்சியை அளிக்க உள்ளார் ரஹ்மான்.
அதேபோல தமிழக இசை ஞானி இளையராஜா இசையமைத்து கடந்த 1980ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளியான 'ராம் லக்ஷ்மன்' படத்தில் வெளியான 'நான் தான் உங்க அப்பன்டா' என்ற பாடலும் இசைக்கப்பட உள்ளது.
துவக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகளை இங்கிலாந்தை சேர்ந்த பல நடன குழுவினர் நடத்த உள்ளனர். மேலும் துவக்க விழாவில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள 204 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பு இடம் பெறும். இதில் ஒவ்வொரு நாடுகளும் கொடிகளை ஏந்தி வரிசையாக அணிவகுத்து வர உள்ளனர். இதில் இந்திய கொடியை மல்யுத்த வீரர் சுசில் குமார் ஏந்தி செல்ல உள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவிற்கு வந்துள்ள அனைவரையும், இங்கிலாந்து ராணி எலிசபெத் II வரவேற்க உள்ளார். துவக்க விழாவின் இறுதியாக வண்ண மையமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். துவக்க விழாவை முன்னிட்டு லண்டன் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

26 ஜூலை 2012

ஒரு கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கிப் போகிறேன் - சூப்பர் ஸ்டார் ரஜினி

சென்னை: என்னை மீண்டும் இங்கே இத்தனை சக்தியோடு நிற்க வைத்திருப்பது உங்களின் பேரன்புதான். இந்த அன்பை எப்படி திருப்பித் தரப் போகிறேன் என்று தெரியவில்லை. அதனால்தான் மக்களைச் சந்திக்காமல், ஒரு பெரிய கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சிவாஜிகணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாகும் கும்கி படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு திடீரென வந்தார் ரஜினி.
பிரபு மகன் விக்ரம் பிரபுவை வாழ்த்தி ரஜினி பேசியதாவது:
இப்போதெல்லாம் நான் எந்த விழாக்கள், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். எதிரியே கிடையாது. எனக்கு நான்தான் எதிரி.
ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று ஒப்புக் கொண்டால், அந்த நிகழ்ச்சி முடியும்வரை அதே சிந்தனையில் டென்ஷனாக இருப்பேன். எந்த விஷயத்திலும் அப்படித்தான்.
இன்னொன்று, உடலில் முழுமையான எதிர்ப்பு சக்தி திரும்பும்வரை விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என டாக்டர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.
நடிகர் பிரபு சில மாதங்களுக்கு முன் இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது வர இயலாது என்றுதான் கூறினேன். ஆனால் நேற்று பிரபு எனது வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழை கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னார்கள்.
நான் அவருக்குப் போன் செய்து, என்னால விழாவுக்கு வரமுடியலியேன்னு வருத்தமா இருக்கு. நீங்க அழைப்பிதழ் கொடுத்திருக்கீங்க. எனக்கு மனசுக்கு சங்கடமா இருக்கு... என்று கூறினேன். 'உங்களுக்கு அழைப்பிதழ் தருவது என் கடமை.. விழாவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் போதும்' என்றார்.
எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. யோசித்துப் பார்த்தேன். சிவாஜி வீட்டு விழா. நாம போகாம இருக்கிறது சரியில்ல... என்ற முடிவு செய்து, பிரபுவுக்கு மட்டும் காலையில் போன் செய்து, நான் விழாவுக்கு வருகிறேன் என்றேன். வந்து விட்டேன்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றபோது கமல் என்னை பார்க்க வந்திருந்தார். டாக்டர்கள் சந்திக்க விடாததால் வருத்தத்தோடு திரும்பினார்.


I M Avoiding Fans Public Like Debto

ரஜினியைப் பார்க்க நான் சிங்கப்பூர் போயும், பார்க்க அனுமதிக்கவில்லையே என்று வெளியில் சொல்ல முடியாத சூழலாகிவிட்டதே என கமல் என்னிடம் பின்னர் வருத்தத்துடன் கூறினார். ஐயாம் சாரி கமல்... நான் சென்னை திரும்பியதும் நானே உங்களை வந்து சந்திக்கிறேன் என்று தெரிவித்தேன். சென்னை திரும்பியதும் முதலில் அவரிடம்தான் பேசினேன்.
கமல் மிகச் சிறந்த கலைஞர். அவருக்கு ஹாலிவுட் படத்தை நடித்து இயக்க கமலுக்கு அழைப்பு வந்துள்ளது. அதுவும் சாதாரண தயாரிப்பாளரிடமிருந்தல்ல... லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்தைத் தயாரித்த நிறுவனத்திடமிருந்து. இதன் மூலம் தமிழ் திரையுலகுக்கும், இந்தியாவுக்கும் கமல் பெருமை சேர்த்துள்ளார்.
என் ரசிகர்கள், என் மீது அன்பு செலுத்தி பிரார்த்தனை செய்த மக்களைப் பற்றி நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்ளை நான் சந்திக்கக் கூட இல்லை. அது எனக்கு மிகுந்த சங்கடமாக உள்ளது.
காரணம் அவர்களுக்கு ஒரு கடன்காரனை போலத்தான் நான் இருக்கிறேன். ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பிரார்த்தனையால்தான் நான் குணம் அடைந்தேன். ஆனால் அவர்களுக்கு நான் எதுவுமே செய்யவில்லை. கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாதவனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன். இந்த அன்பை நான் எப்படி திருப்பிச் செலுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை.
என்னைப் போன்ற கலைஞர்கள், பர்மார்மன்ஸ் - படங்களில் நடித்து அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம்தான் ஓரளவு இதை திருப்பிச் செலுத்த முடியும். அப்படி நான் சில படங்களைச் செய்ய, அதற்கான உடல் பலம் தேவை. நான் ஒரு இயக்குநர் அல்ல, எழுத்தாளர் அல்ல. நடிகன். உடல்தான் அதற்கு மூலம். எனவே அதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
இளைய தலைமுறை நடிகர்களுக்கு நான் ஒன்றைச் சொல்வேன். வருடத்துக்கு ஒரு படம் மட்டும் நடிப்பது என்று இல்லாமல் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு படம் நன்றாக போகாவிட்டாலும், மற்றவை கை கொடுக்கும். இல்லாவிட்டால், ஒரு படம் சரியாகப் போகாத டென்ஷன், மன அழுத்தம் காரணமாக அடுத்த படத்தில் கவனம் சிதறிவிடும்.
சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபுவுக்கு இந்த கலையுலகமே கை கொடுக்கும். அவருக்கு பின்னால் பலர் இருக்கிறார்கள். எதற்காகவும் அவர் பயப்பட தேவையில்லை.
சிவாஜி பற்றி எல்லோரும் நிறைய சொன்னார்கள். எனக்கும் சொல்ல நிறைய இருக்கிறது. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். படையப்பா ஷூட்டிங்கின்போது நிறைய நேரம் அவருடன்தான் இருந்தேன்.
ஒரு முறை அவர் என்னிடம் சொன்னார்..."நீ புத்திசாலிடா.. உன்னால காலரைத் தூக்கிவிட்டு நடக்க முடியும். ஆனால், காலரைத் தூக்கினா பட்டன் கழன்டுடும்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு. அதான் அப்படியே இருக்கேன்"னு சொன்னார். அதைத்தான் விக்ரம் பிரபுவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்...," என்றார்.

'ஐ'...ஷங்கர் படத்தில் நான் நடிக்கலையே...தீபிகா!

மும்பை: ஷங்கரின் ஐ படத்தில் தான் நடிக்கப் போவதாக வந்துள்ள செய்திகளை தீபிகா படுகோன் மறுத்துள்ளார். அப்படியெல்லாம் எதுவும் இல்லை, இது வெறும் வதந்திதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கும் புதுப் படம் ஐ. விக்ரம் நாயகன். இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக எமி சாக்சன் நடிக்கிறார். இந்த நிலையில் தீபிகா படுகோனையும் இப்படத்தில் முக்கியக் கேரக்டரில் ஷங்கர் புக் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் தீபிகா.
I Am Not Doing Shankar S Tamil Film Deepika Padukone


இதுகுறித்து பிடிஐக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நானும் கூகுள் அலர்ட் மூலம் இந்த செய்தியைப் பார்த்தேன். ஆனால் இது முற்றிலும் தவறானது, வதந்தி மட்டுமே. நான் ஷங்கர் படத்தில் நடிக்கவில்லை என்று மறுத்துள்ளார்.
அடுத்து தனது சைஸ் ஜீரோ உடலமைப்பு குறித்து தீபிகாவிடம் கேட்கப்பட்டது. அதுகுறித்து அவர் கூறுகையில், சைஸ் ஜீரோ குறித்தெல்லாம் நான் பெரிதாக கவலைப்படுவதில்லை. உடல் ஆரோக்கியமும், நல்ல உடல் வளமும்தான் முக்கியம். நல்ல பருமனாக, பொதபொதவென்று இருப்பவர்கள் கூட நல்ல உடல் வலுவுடன் திகழ்வதைப் பார்த்திருக்கிறேன். எனவே சைஸ் ஜீரோவா, இல்லை பீரோ சைஸா என்பது முக்கியமில்லை. ஆரோக்கியம்தான் முக்கியம் என்றார்.

25 ஜூலை 2012

சிறீலங்காவின் மிஸ் 2012 அழகு ராணியாக முடிசூடிய Sabrina Herft!

இந்த ஆண்டின் மிஸ் ஸ்ரீலங்கா அழகு ராணியாக Sabrina Herft முடிசூடியுள்ளார்.
மிஸ் ஸ்ரீலங்கா அழகு ராணிப் போட்டி 2012 கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஹில்ரன் ஹோட்டலில் இடம்பெற்றது.
இதில் வெற்றி வாகை சூடிய இவருக்கு பிரபல சிங்கள நடிகை சங்கீதா வீரரட்ண அழகு ராணி கிரீடத்தை சூட்டினார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 61 ஆவது பிரபஞ்ச அழகு ராணிப் போட்டி இடம்பெற உள்ளது. இதில் இலங்கை சார்பாக Sabrina Herft போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளாப் நடிகைன்னு முத்திரை குத்திட்டாங்களே! - குமுறும் பார்வதி ஓமணக்குட்டன்

சென்னை: ஒரு படம்தான் நடிச்சேன். அது சரியா போகாததுக்கு நானா காரணம்... அதுக்குள்ள என்னை ராசியில்லாதவன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்களே...'
- இப்படி குமுற ஆரம்பித்திருப்பவர், பில்லா 2-ல் அஜீத்துக்கு அக்கா மகளாக நாலைந்து சீன்களில் வந்து பாதியில் செத்துப் போகும் பாத்திரத்தில் நடித்த பார்வதி ஓமணக்குட்டன்தான்!


Parvathy Peevs With The Flop Actor Tag
இந்தப் படத்துக்காக அவர் முதன் முதலில் ஒப்புக் கொண்ட இந்திப் படத்தைக் கூடத் துறந்தாராம்.
ஆனால் பார்வதியின் இந்த 'தியாகத்தை'யெல்லாம் பொருட்படுத்தாமல், அவரை தோல்விப் பட நடிகை என முன்னணி பத்திரிகை எழுதிவிட்டதைத்தான் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லையாம்.
"பில்லா 2 சரியா போகாததுக்கு நான் என்னங்க பண்ண முடியும். என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லா புரமோட் பண்ணேன். கொடுத்த வேலையைச் செஞ்சேன். நான் என்ன நாலஞ்சி படங்களா நடிச்சிருக்கேன். ஒரே படம்தான். அதுக்குள்ள ராசியில்லாதவன்னு ஒதுக்கிடாதீங்க. நான் எந்த ரோலையும் செய்வேன். இன்னும் சில நல்ல சான்ஸ் கொடுத்துப் பாருங்க," என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் பார்வதி.
சரிசரி.. அடுத்த படத்திலாவது இன்னும் நாலு சீன் வர்றமாதிரி காட்சி வைக்கச் சொல்லுங்க. நீங்கதான் ஹீரோயின்னு ஜனங்களுக்குத் தெரியும்!

இந்திய பேட்ஸ்மேன்களின் வீழ்ச்சிக்கு மோசமான ஆடுகளமே காரணம்-கேப்டன் டோணி குற்றச்சாட்டு


ஹம்பன்டோட்டா: இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதற்கு இந்திய கேப்டன் டோணி, இலங்கை ஆடுகளத்தை குற்றச்சாட்டி உள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில், சிறப்பாக பந்துவீசி, பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Dhoni Blames The Unpredictable Pitch For Lose
இந்த நிலையில் ஆடுகளம் சரியில்லாததால் தான் இந்திய பேட்ஸ்மேன்களால் ரன் சேர்க்க முடியாமல் போனது என்று இந்திய கேப்டன் டோணி குற்றச்சாட்டி உள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது,
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் ஆடுகளம் விக்கெட்டை விட்டு விலகி இருந்தது. ஆனால் 2வது போட்டியில் வித்தியாசமாக இருந்தது. பந்து ஆடுகளத்தில் பிட்சாகி மிக தாழ்வாகவே வந்தது. விராத் கோஹ்லி அவுட்டான பிறகு, இந்திய விக்கெட்கள் வரிசையாக விழ ஆரம்பித்துவிட்டது.
பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தின் தன்மையை அறியவதற்கு முன்பாகவே அவுட்டாகி வெளியேறினர். இது அரிதாக நடக்க கூடிய ஒன்று தான். இந்த சூழ்நிலையிலும் இர்பான் பதான், அஸ்வின் போன்றவர்கள் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றனர்.
பந்து ஸ்டெம்பிற்கு வரும் போது மெதுவாக வந்தது. காற்று அதிகமாக இருந்ததால், பந்துகள் ஸ்வீங் ஆகாவில்லை என்று நினைக்கிறேன் ஆனால் அடுத்த போட்டி நடைபெற உள்ள கொழும்பு பிரேமதாசா மைதானத்தில், பலத்த காற்று இருக்காது.
இந்திய பேட்ஸ்மேன் அவசரப்பட்டு ஆடியதாக நான் நினைக்கவில்லை. ஒரிரு ரன்களாக எடுக்க பேட்ஸ்மேன்கள் முயன்றனர். ரோஹித் சர்மா பந்தை சிறப்பாக தான் ஆடித்து ஆடினார். ஆனால் பந்து இன்சைடு-எஜ் ஆகி போல்டாகிவிட்டார்.
அவர் அவுட்டாகாமல் இருந்திருந்தால், தொடர்ந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தி இருப்பார். இது போன்ற தோல்விகளில் இருந்து இந்திய அணி பாடம் கற்று கொள்ள வேண்டும். அடுத்த போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடிவார் என்று நம்புகிறேன் என்றார்.

'மன்னிக்கப்பட்டார்' கபில்தேவ்-ஐசிஎல்லில் இருந்து விலகி பிசிசிஐயில் இணைந்தார்!

பெங்களூர்: முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் அளித்த மன்னிப்பு கடிதத்தை ஏற்று கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ), அவரை இணைந்து செயலாற்ற அனுமதித்துள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் கபில்தேவ். இவர் தலைமையிலான இந்திய அணி கடந்த 1983ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்திய அணியில் ஓய்வு பெற்ற பிறகு கபில்தேவ், பிசிசிஐயை எதிர்த்து செயல்பட ஆரம்பித்தார்.
பிசிசிஐயை எதிர்த்து கபில்தேவ், கிரண் மோர் மற்றும் சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சேர்ந்து இந்தியன் கிரிக்கெட் லீக்(ஐசிஎல்) என்ற புதிய அமைப்பை துவங்கினார். அதன் தலைவராக கபில் தேவ் பதவி வகித்தார். இதனால் பிசிசிஐயின் வெறுப்பிற்கு ஆளான கபில்தேவ், பிசிசிஐ அளிக்கும் சலுகைகளில் இருந்து நீக்கப்பட்டார்.


Kapil Resigns From Icl Back With Bcci மேலும் கபில் தேவ் தனது செயலுக்கு மன்னிப்பு கடிதம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு கபில்தேவ் மறுத்துவிட்டார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் கிடைத்த வருமானத்தில், முன்னாள் இந்திய வீரர்களுக்கு ஒருமுறை ஓய்வு நிதி வழங்கப்பட்டது. இதில் ஐசிஎல் குழுவில் இருந்த கபில்தேவ் விலக்கப்பட்டார்.
இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் கபில்தேவ் இடையே கடும் வார்த்தை போர் நடைபெற்றது. இந்த நிலையில் கபில்தேவ்வை சந்தித்த பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிசிசிஐ உடன் சேர்ந்து செயலாற்றுவதன் மூலம் கிடைக்கும் சலுகைகள் குறித்து சீனிவாசன் விளக்கி கூறினார்.
இதையடுத்து பிசிசிஐயிடம் மன்னிப்பு கடிதம் அளிக்க, கபில்தேவ் ஒப்புக் கொண்டார். முன்னதாக ஐசிஎல் அமைப்பில் இருந்து விலகிய கிரண் மோர், பிசிசிஐயிடம் மன்னிப்பு கடிதம் அளித்து பிசிசிஐயில் இணைந்தார். அதேபோல கபில்தேவ் தனது மன்னிப்பு கடிதத்தை பிசிசிஐயிடம் அளித்தார்.
இந்த கடிதத்தை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ தற்போது கபில்தேவ்வை இணைத்து கொள்ள முடிவு செய்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் அளித்த மன்னிப்பு கடிதத்தை பிசிசிஐ ஏற்று கொண்டது. இதில் அவர் பிசிசிஐக்கு எதிரான செயல்பட்ட ஐசிஎல் அமைப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வருங்காலத்தில் பிசிசிஐயின் வளர்ச்சிக்கு உதவியாக செயல்பட போவதாக அறிவித்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.

5 மனைவிகளுடன் தொடர்ச்சியாக உறவு.. மூச்சுமுட்டி இறந்த ஆப்பிரிக்கர்!

நைஜீரியா: ஆப்பிரிக்காவில் தங்களது கணவன் ஆறாவது மனைவியுடன் உல்லாசமாக இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்ட 5 மனைவிகள் தங்களுடனும் உல்லாசமாக இருக்க வற்புறுத்தினர். தொடர்ச்சியாக முதல் 4 பேருடன் உல்லாசமாக இருந்துவிட்டு 5வது மனைவியிடம் சென்ற அந்த நபர் மூச்சுமுட்டி மரணம் அடைந்தார்.
 African Man Raped Death 5 Jealou Wives
ஆப்பிரிக்காவில் உள்ள ஒக்பாடிபோவைச் சேர்ந்த வசதி படைத்த தொழில் அதிபர் உரோகோ ஒனோஜா. அவருக்கு 6 மனைவிகள். கடந்த செவ்வாய்கிழமை அவர் பாரில் மது அருந்திவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நேராக 6வது மனைவியின் அறைக்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதைப் பார்த்து பொறாமைப்பட்ட மற்ற 5 மனைவிகள் அந்த அறைக்குள் புகுந்து கத்தி மற்றும் கம்பை காட்டி தங்களுடனும் உல்லாசமாக இருக்க வருமாறு மிரட்டி அழைத்தனர்.
ஒனோஜா அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்தும் முடியவில்லை. இதையடுத்து ஒவ்வொரு மனைவியுடனும் உல்லாசமாக இருந்துள்ளார். அதுவும் தொடர்ச்சியாக. முதல் 4 மனைவிகளை திருப்திபடுத்திவிட்டு 5வது மனைவியிடம் சென்றுள்ளார். ஏற்கனவே தொடர்ச்சியாக 4 பேருடன் உறவு வைத்ததால் கலைத்துப் போன அவர் 5வது மனைவியிடம் சென்றதும் மூச்சுமுட்டி இறந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பெண்களை கைது செய்துள்ளனர். ஒனோஜா இறந்தவுடன் அவரது முதல் 5 மனைவிகளும் காட்டுக்குள் ஓடிவிட்டதாக 6வது மனைவி தெரிவித்தார்.

24 ஜூலை 2012

பிரேம்ஜிக்கு வலை விரிக்கும் நடிகை சோனா


பழம் நழுவி பாலில் விழுந்தாலும் சரி, பால் தவறி பழத்தில் கொட்டினாலும் சரி. அது காசுக்கு பிடித்த தண்டம்! சோனா விஷயத்தையும் அப்படி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது. இன்று அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியை படித்த அந்த நிமிடத்திலிருந்தே வாலிப வயோதிக அன்பர்களுக்குள் பலத்த போட்டி. கீழே விழுந்து முட்டியை பேர்த்துக் கொள்வார்களோ என்று பேரச்சம் நிலவுகிறது கோடம்பாக்கத்தில்.

ஆண்களோடு வாழவும் முடியாது. ஆண்கள் இல்லாம வாழவும் முடியாது என்று தத்துவ முத்துக்களை ஒரு காலத்தில் சிதற விட்ட சோனா, கொஞ்சம் மனசு மாறி அப்படியொரு ஆணுடன் வாழத் தயராகிவிட்டார்.
என்னை புரிந்து கொண்டு நன்றாக கவனித்துக் கொள்கிற டைவர்ஸியை மணம் முடிக்க தயாராக இருக்கிறேன். அதே நேரத்தில் அவர் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும் என்று ட்விட் செய்திருக்கிறார்.
சோனாவின் வழ வழ கன்னத்தில் தனது சொர சொர தாடியால் அடிக்கடி ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரேம்ஜி இந்த செய்தியை படித்தாரா தெரியவில்லை. அப்படியே படித்திருந்தாலும் சோனாவின் நிபந்தனைகளை கேட்டால் பிரேம்ஜி நாட் எலிஜிபிள் ஆகிவிடுவாரே?

சங்கர் படத்தில் தீபிகா - விக்ரம் மீது நம்பிக்கை குறைகிறதா?


விக்ரம் மார்க்கெட் மீது நம்பிக்கை குறைந்துவிட்டதோ என்னவோ... ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் ஐ படத்தில் நாளுக்கு நாள் நட்சத்திரங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.
விக்ரம், ஏமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி என முதலில் ஒரு நட்சத்திரப் பட்டாளத்தை அறிவித்திருந்தார் ஷங்கர்.


அதில் லேட்டஸ்ட் வரவாக இருந்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். ஆம்... அவரும் ஒரு வேடத்தில் வருகிறாராம்.
ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த முதல் பாடலை விக்ரம், ஏமி ஜாக்சனை வைத்து ஏ.வி.எம்மில் படமாக்கிவிட்ட ஷங்கர், இப்போது இன்னொரு முக்கிய பெண் பாத்திரத்தை உருவாக்கியுள்ளாராம்.


படத்தின் பிற்பகுதியில் வரும் இவ்வேடத்திற்கு பாலிவுட் முன்னணி நாயகி தீபிகா படுகோனிடம் பேச்சு நடத்தி வெற்றியும் பெற்றுவிட்டாராம்.
தீபிகா படுகோன் தற்போது தமிழில் ரஜினியின் கோச்சடையானில் நடிக்கிறார். சில இந்திப் படங்கள் வேறு கைவசமிருந்தாலும், கால்ஷீட்டை சில மாதங்கள் கழித்து தந்தால் போதும் என ஷங்கர் கூறியதால் ஓகே சொல்லிவிட்டாராம்!

23 ஜூலை 2012

காதலர்களை பிரிக்கிறேனா...! மனம் திறக்கிறார் டைரக்டர் பாலாஜி சக்திவேல்!Balaji Sakthivel special interviewசமுதாயத்தில் நடக்கும் அவலங்களுக்கு திரையில்  "நச் அறை விடும் இயக்குனர், பாலாஜி சக்திவேல்.  சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 என, அடுத்தடுத்து, மனதை கனமாக்கிய படைப்புகளை தந்தவர். மதுரை பசுமலை மன்னர் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடியவரிடம், நம் பங்கிற்கு சில கேள்விகள் கேட்டோம். சீரியஸ் கேள்விகளுக்கும், சிரித்த முகத்தோடு பாலாஜி சொன்ன பதில்கள்.

* பள்ளி மாணவியை காதலிக்கும் கலாசாரத்தை கொண்டு வந்ததாக, உங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளதே?

ஒரு படைப்பு வரும் போது, அதன் மீது பல்வேறு விமர்சனம் வரும். தோட்டத்தில் இருக்கும் வரை அது என் பழம்; விற்பனைக்கு வந்துவிட்டால், வாங்குவோருக்கு சொந்தம். நடந்ததைத்தான் கூறியிருந்தேன், என் படத்தை பார்த்து, யாரும் மாறவில்லை.

* ஒரு சம்பவத்தை படமாக்கும் போது, அதிலுள்ள உண்மையை ஆராய வேண்டாமா?

சம்பவத்தை வைத்து மூன்று படங்கள் எடுத்துட்டேன். இதுவரை, பிரச்னை வந்ததில்லை. உண்மைக் கதை என்றாலும், திரைக்கு வரும் போது, 20 சதவீதம் கற்பனை கலக்க வேண்டியுள்ளது.

* சமுதாய கருத்துள்ள படங்களின் முடிவு, சோகம் தானா...?

"சுபம் போடும் கருத்துள்ள படங்கள் ஓடியதில்லை. சோகம் தான் நெஞ்சில் பதியும். என் படம் "சோகமாக இருக்கும் என்ற பேச்சு உண்டு. ஆனாலும், அதை ரசிப்பவர் அதிகம்.

* நல்ல கருத்தை சொல்ல, ஆபாசத்தை பயன்படுத்தும் போது எதிர்மறையாக மாறிவிடாதா?


நல்லதைத்தான் சொல்ல வருகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தனை நல்லதையும் தள்ளிவிட்டு, கெட்டதைத்தான் பிடிப்பேன் என நின்றால் என்ன செய்வது? இனி, இது போல எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான், நடந்ததை காட்டுகிறேன்.

* கருத்துள்ள கதைகளை, "மாஸ் ஹீரோக்கள் தவிர்க்கிறார்களா?

ஹீரோக்களை குறை சொல்லக்கூடாது. நாங்கள் தான், அவர்களை அணுகுவதில்லை. புதுமுகங்கள் என்றால், நமக்கு வேண்டியதை நின்ற இடத்தில் வாங்கிவிடலாம். "மாஸ் ஹீரோக்களிடம் அது  சிரமம். அறிமுக நடிர்களுக்கு பெரிய "ஓபனிங் இருக்காது. ஆனால், கடைசி வரை "கலெக்ஷன் இருக்கும்.

* தயாரிப்பாளர் கிடைக்காமல், நல்ல கதைகள் தூங்குகிறதாமே...

சிலரிடம் நல்ல கதைகள் இருக்கும். அதை நன்றாக சொல்லவும் தெரியும். ஆனால் திரைக் கதையில் வரும் போது, சொதப்பிவிடுவார்கள். பொதுவாகவே கருத்துள்ள படங்களில், அதிக கவனம் தேவை என்பதால், தயாரிப்பாளர்கள் சிந்திக்கின்றனர்.

* அப்போ... நல்ல கதை மட்டும் வெற்றி படத்திற்கு போதாது, அப்படித்தானே?

உண்மை தான். நல்ல திரைக்கதை, சாதாரண இயக்குனரையும் உச்சத்தில் கொண்டு செல்லும். மோசமான திரைக்கதை, திறமையான இயக்குனரையும் படுகுழிக்குள் தள்ளிவிடும்.

* உங்கள் படங்களில், காதல் ஜோடிகளை சேர விடுவதில்லையே?

ஹி...ஹி...ஹி... சேர்த்து வைக்க, எனக்கும் ஆசை தான். வில்லன்கள் சேர விடமாட்டாங்க. பார்க்கலாம், வருங்காலத்திலாவது சேர்த்து வைக்க முயற்சிக்கிறேன்.

* புதுமுகங்களை தேடும் உங்கள் பார்வையில், அடுத்த கதாநாயகன் யார்?

மன்னர் கல்லூரி விழாவில் என்னுடன் பேசிய இரு மாணவர்கள் என்னை வெகுவாக கவர்ந்தனர். அவர்கள் யார் என்று சொல்ல மாட்டேன். என் படத்தில் வரும் போது, உங்களுக்கு தெரியும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 விற்பனையில் புதிய சாதனைசாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான 2 மாதத்தில் 1 கோடி ஸ்மார்ட்போனுக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. மே 3ம் தேதி லண்டனில் அறிமுகமானது கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன். இந்தியாவில் ஜூன் 31ம் தேதி அறிமுகமானது. போட்டி நிறைந்த உலகில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான பின்பு, எத்தனையோ ஸ்மார்ட்போன்களும் வெளியாகிவிட்டன. ஆனாலும் வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை வாங்கி வருகின்றனர் என்பது, இந்த ஸ்மார்ட்போனின் புதிய தொழில் நுட்பத்தினையே குறிக்கிறது. சாம்சங் நிறுவனம் அடுத்ததாக கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. தனது அடுத்த படைப்பை வெளியிட இருக்கிறது.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com