ஹம்பன்டோட்டா: இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதற்கு இந்திய கேப்டன் டோணி, இலங்கை ஆடுகளத்தை குற்றச்சாட்டி உள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில், சிறப்பாக பந்துவீசி, பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ஆடுகளம் சரியில்லாததால் தான் இந்திய பேட்ஸ்மேன்களால் ரன் சேர்க்க முடியாமல் போனது என்று இந்திய கேப்டன் டோணி குற்றச்சாட்டி உள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது,
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் ஆடுகளம் விக்கெட்டை விட்டு விலகி இருந்தது. ஆனால் 2வது போட்டியில் வித்தியாசமாக இருந்தது. பந்து ஆடுகளத்தில் பிட்சாகி மிக தாழ்வாகவே வந்தது. விராத் கோஹ்லி அவுட்டான பிறகு, இந்திய விக்கெட்கள் வரிசையாக விழ ஆரம்பித்துவிட்டது.
பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தின் தன்மையை அறியவதற்கு முன்பாகவே அவுட்டாகி வெளியேறினர். இது அரிதாக நடக்க கூடிய ஒன்று தான். இந்த சூழ்நிலையிலும் இர்பான் பதான், அஸ்வின் போன்றவர்கள் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றனர்.
பந்து ஸ்டெம்பிற்கு வரும் போது மெதுவாக வந்தது. காற்று அதிகமாக இருந்ததால், பந்துகள் ஸ்வீங் ஆகாவில்லை என்று நினைக்கிறேன் ஆனால் அடுத்த போட்டி நடைபெற உள்ள கொழும்பு பிரேமதாசா மைதானத்தில், பலத்த காற்று இருக்காது.
இந்திய பேட்ஸ்மேன் அவசரப்பட்டு ஆடியதாக நான் நினைக்கவில்லை. ஒரிரு ரன்களாக எடுக்க பேட்ஸ்மேன்கள் முயன்றனர். ரோஹித் சர்மா பந்தை சிறப்பாக தான் ஆடித்து ஆடினார். ஆனால் பந்து இன்சைடு-எஜ் ஆகி போல்டாகிவிட்டார்.
அவர் அவுட்டாகாமல் இருந்திருந்தால், தொடர்ந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தி இருப்பார். இது போன்ற தோல்விகளில் இருந்து இந்திய அணி பாடம் கற்று கொள்ள வேண்டும். அடுத்த போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடிவார் என்று நம்புகிறேன் என்றார்.