Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

28 ஜூலை 2012

இப்போல்லாம் கோலிவுட் நடிகைகளின் விருப்பக் குளியல் எது தெரியுமா...?!

பீர் குடித்தால் மட்டும் போதை ஏறாது பீர் கொண்டு கூந்தலை அலசும் பெண்களைக் கண்டாலே இனி ஆண்களுக்கு போதை ஏறினாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவிற்கு தலைக்கு பீர் ஊற்றி குளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். கோலிவுட் நாயகிகள் பலரும் இப்போது தலைக்கு பீராபிஷேகம்தான் செய்துகொள்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் அருந்தினால் எலும்புகள் வலுப்பெறுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீரில் உள்ள சிலிகான், திரவ வடிவத்தில் உள்ளதால் உடலில் எளிதில் உறிஞ்சப்பட்டு எலும்புகள் பலமடைய உதவுகின்றன. அரை லிட்டருக்கும் குறைவாக உட்கொண்டால் தான் இந்த பலன் கிடைக்கும். 500 மில்லி லிட்டருக்கு அதிகமானால், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடும், என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Hair Care
உடல் ஆரோக்கியத்திற்கு பீர் உதவுவதைப்போல கூந்தலை பட்டுப்போல மென்மையாக்குவதில் பீர் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளனர் அழகு ஆய்வாளர்கள். தமிழ்நாட்டில் டாஸ்மாக், எலைட் என்று விதவிதமாக வசதிகளை செய்து கொடுக்கிறது அரசு. இந்த நேரத்தில் நடிகை ஒருவர், குடிப்பதற்கு வைத்திருந்த பீர் பாட்டிலை தலையில் கொட்டி தனி ஆராய்ச்சி செய்திருக்கிறார். கூந்தலை கொத்து கொத்தாக பிரித்து அதில் பீரை ஊற்றி கழுவினால் தலை முடி பஞ்சு போல அலை அலையாய் மிதக்குமாம். இதனால் கூந்தலுக்கும் உறுதி என்று கண்டு பிடித்திருக்கிறார் அந்த நடிகை.
பீர் குடிப்பவர்களை விட பீர் ஊற்றி குளிப்பவர்களின் பட்டியல் அதிகரித்துவிடும் போல அந்த அளவிற்கு தமன்னா, டாப்ஸி, அனுஷ்கா என்று நடிகைகளின் பட்டியல் நீள்கிறது . ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடித்த சோனியா அகர்வால் பாட்டில் பாட்டிலாக பீர் வாங்கி குவித்த காரணம் தெரியாமல் மண்டை காய்ந்து போனார்கள். பின்னர்தான் அது குடிக்க வாங்கிய பீர் இல்லை குளிக்க வாங்கிய பீர் என்று தெரிந்தது. சோனியா அகர்வாலின் பட்டுக்கூந்தலுக்கு இந்த பீர்தான் காரணமாம்.
பீர் ஊற்றி குளிக்க ஆசைப்படுபவர்கள் முதலில் ப்ரிட்ஜில் இருந்து பீர் பாட்டிலை எடுத்து அறை வெப்பநிலைக்கு வைக்கவும். மைல்ட் ஷாம்பு போட்டு கூந்தலை சாதாரணமாக அலசவும். பின்னர் கூந்தலை பிரித்து வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பீர் ஊற்றி ஊறவைத்து அலசவும். பின்னர் சுத்தமான டவல் கொண்டு கூந்தலை துடைக்கவும். கூந்தல் உலர்ந்த பின்னர் பாருங்கள் அலை அலையாய் பட்டுப்போல கூந்தல் மாறும். பீரில் உள்ள வைட்டமின் பி, இயற்கை சர்க்கரை, போன்றவைதான் கூந்தலை பளபளப்பாக மாற்றுகிறதாம்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com