பழம் நழுவி பாலில் விழுந்தாலும் சரி, பால் தவறி பழத்தில் கொட்டினாலும் சரி. அது காசுக்கு பிடித்த தண்டம்! சோனா விஷயத்தையும் அப்படி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது. இன்று அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியை படித்த அந்த நிமிடத்திலிருந்தே வாலிப வயோதிக அன்பர்களுக்குள் பலத்த போட்டி. கீழே விழுந்து முட்டியை பேர்த்துக் கொள்வார்களோ என்று பேரச்சம் நிலவுகிறது கோடம்பாக்கத்தில்.
ஆண்களோடு வாழவும் முடியாது. ஆண்கள் இல்லாம வாழவும் முடியாது என்று தத்துவ முத்துக்களை ஒரு காலத்தில் சிதற விட்ட சோனா, கொஞ்சம் மனசு மாறி அப்படியொரு ஆணுடன் வாழத் தயராகிவிட்டார்.
என்னை புரிந்து கொண்டு நன்றாக கவனித்துக் கொள்கிற டைவர்ஸியை மணம் முடிக்க தயாராக இருக்கிறேன். அதே நேரத்தில் அவர் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும் என்று ட்விட் செய்திருக்கிறார்.
சோனாவின் வழ வழ கன்னத்தில் தனது சொர சொர தாடியால் அடிக்கடி ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரேம்ஜி இந்த செய்தியை படித்தாரா தெரியவில்லை. அப்படியே படித்திருந்தாலும் சோனாவின் நிபந்தனைகளை கேட்டால் பிரேம்ஜி நாட் எலிஜிபிள் ஆகிவிடுவாரே?