Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

23 ஜூலை 2012

காதலர்களை பிரிக்கிறேனா...! மனம் திறக்கிறார் டைரக்டர் பாலாஜி சக்திவேல்!



Balaji Sakthivel special interviewசமுதாயத்தில் நடக்கும் அவலங்களுக்கு திரையில்  "நச் அறை விடும் இயக்குனர், பாலாஜி சக்திவேல்.  சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 என, அடுத்தடுத்து, மனதை கனமாக்கிய படைப்புகளை தந்தவர். மதுரை பசுமலை மன்னர் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடியவரிடம், நம் பங்கிற்கு சில கேள்விகள் கேட்டோம். சீரியஸ் கேள்விகளுக்கும், சிரித்த முகத்தோடு பாலாஜி சொன்ன பதில்கள்.

* பள்ளி மாணவியை காதலிக்கும் கலாசாரத்தை கொண்டு வந்ததாக, உங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளதே?

ஒரு படைப்பு வரும் போது, அதன் மீது பல்வேறு விமர்சனம் வரும். தோட்டத்தில் இருக்கும் வரை அது என் பழம்; விற்பனைக்கு வந்துவிட்டால், வாங்குவோருக்கு சொந்தம். நடந்ததைத்தான் கூறியிருந்தேன், என் படத்தை பார்த்து, யாரும் மாறவில்லை.

* ஒரு சம்பவத்தை படமாக்கும் போது, அதிலுள்ள உண்மையை ஆராய வேண்டாமா?

சம்பவத்தை வைத்து மூன்று படங்கள் எடுத்துட்டேன். இதுவரை, பிரச்னை வந்ததில்லை. உண்மைக் கதை என்றாலும், திரைக்கு வரும் போது, 20 சதவீதம் கற்பனை கலக்க வேண்டியுள்ளது.

* சமுதாய கருத்துள்ள படங்களின் முடிவு, சோகம் தானா...?

"சுபம் போடும் கருத்துள்ள படங்கள் ஓடியதில்லை. சோகம் தான் நெஞ்சில் பதியும். என் படம் "சோகமாக இருக்கும் என்ற பேச்சு உண்டு. ஆனாலும், அதை ரசிப்பவர் அதிகம்.

* நல்ல கருத்தை சொல்ல, ஆபாசத்தை பயன்படுத்தும் போது எதிர்மறையாக மாறிவிடாதா?


நல்லதைத்தான் சொல்ல வருகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தனை நல்லதையும் தள்ளிவிட்டு, கெட்டதைத்தான் பிடிப்பேன் என நின்றால் என்ன செய்வது? இனி, இது போல எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான், நடந்ததை காட்டுகிறேன்.

* கருத்துள்ள கதைகளை, "மாஸ் ஹீரோக்கள் தவிர்க்கிறார்களா?

ஹீரோக்களை குறை சொல்லக்கூடாது. நாங்கள் தான், அவர்களை அணுகுவதில்லை. புதுமுகங்கள் என்றால், நமக்கு வேண்டியதை நின்ற இடத்தில் வாங்கிவிடலாம். "மாஸ் ஹீரோக்களிடம் அது  சிரமம். அறிமுக நடிர்களுக்கு பெரிய "ஓபனிங் இருக்காது. ஆனால், கடைசி வரை "கலெக்ஷன் இருக்கும்.

* தயாரிப்பாளர் கிடைக்காமல், நல்ல கதைகள் தூங்குகிறதாமே...

சிலரிடம் நல்ல கதைகள் இருக்கும். அதை நன்றாக சொல்லவும் தெரியும். ஆனால் திரைக் கதையில் வரும் போது, சொதப்பிவிடுவார்கள். பொதுவாகவே கருத்துள்ள படங்களில், அதிக கவனம் தேவை என்பதால், தயாரிப்பாளர்கள் சிந்திக்கின்றனர்.

* அப்போ... நல்ல கதை மட்டும் வெற்றி படத்திற்கு போதாது, அப்படித்தானே?

உண்மை தான். நல்ல திரைக்கதை, சாதாரண இயக்குனரையும் உச்சத்தில் கொண்டு செல்லும். மோசமான திரைக்கதை, திறமையான இயக்குனரையும் படுகுழிக்குள் தள்ளிவிடும்.

* உங்கள் படங்களில், காதல் ஜோடிகளை சேர விடுவதில்லையே?

ஹி...ஹி...ஹி... சேர்த்து வைக்க, எனக்கும் ஆசை தான். வில்லன்கள் சேர விடமாட்டாங்க. பார்க்கலாம், வருங்காலத்திலாவது சேர்த்து வைக்க முயற்சிக்கிறேன்.

* புதுமுகங்களை தேடும் உங்கள் பார்வையில், அடுத்த கதாநாயகன் யார்?

மன்னர் கல்லூரி விழாவில் என்னுடன் பேசிய இரு மாணவர்கள் என்னை வெகுவாக கவர்ந்தனர். அவர்கள் யார் என்று சொல்ல மாட்டேன். என் படத்தில் வரும் போது, உங்களுக்கு தெரியும்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com