சென்னை: ஒரு படம்தான் நடிச்சேன். அது சரியா போகாததுக்கு நானா காரணம்... அதுக்குள்ள என்னை ராசியில்லாதவன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்களே...'
- இப்படி குமுற ஆரம்பித்திருப்பவர், பில்லா 2-ல் அஜீத்துக்கு அக்கா மகளாக நாலைந்து சீன்களில் வந்து பாதியில் செத்துப் போகும் பாத்திரத்தில் நடித்த பார்வதி ஓமணக்குட்டன்தான்!
இந்தப் படத்துக்காக அவர் முதன் முதலில் ஒப்புக் கொண்ட இந்திப் படத்தைக் கூடத் துறந்தாராம்.
ஆனால் பார்வதியின் இந்த 'தியாகத்தை'யெல்லாம் பொருட்படுத்தாமல், அவரை தோல்விப் பட நடிகை என முன்னணி பத்திரிகை எழுதிவிட்டதைத்தான் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லையாம்.
"பில்லா 2 சரியா போகாததுக்கு நான் என்னங்க பண்ண முடியும். என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லா புரமோட் பண்ணேன். கொடுத்த வேலையைச் செஞ்சேன். நான் என்ன நாலஞ்சி படங்களா நடிச்சிருக்கேன். ஒரே படம்தான். அதுக்குள்ள ராசியில்லாதவன்னு ஒதுக்கிடாதீங்க. நான் எந்த ரோலையும் செய்வேன். இன்னும் சில நல்ல சான்ஸ் கொடுத்துப் பாருங்க," என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் பார்வதி.
சரிசரி.. அடுத்த படத்திலாவது இன்னும் நாலு சீன் வர்றமாதிரி காட்சி வைக்கச் சொல்லுங்க. நீங்கதான் ஹீரோயின்னு ஜனங்களுக்குத் தெரியும்!