Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

24 ஜூலை 2012

சங்கர் படத்தில் தீபிகா - விக்ரம் மீது நம்பிக்கை குறைகிறதா?


விக்ரம் மார்க்கெட் மீது நம்பிக்கை குறைந்துவிட்டதோ என்னவோ... ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் ஐ படத்தில் நாளுக்கு நாள் நட்சத்திரங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.
விக்ரம், ஏமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி என முதலில் ஒரு நட்சத்திரப் பட்டாளத்தை அறிவித்திருந்தார் ஷங்கர்.






அதில் லேட்டஸ்ட் வரவாக இருந்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். ஆம்... அவரும் ஒரு வேடத்தில் வருகிறாராம்.
ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த முதல் பாடலை விக்ரம், ஏமி ஜாக்சனை வைத்து ஏ.வி.எம்மில் படமாக்கிவிட்ட ஷங்கர், இப்போது இன்னொரு முக்கிய பெண் பாத்திரத்தை உருவாக்கியுள்ளாராம்.


படத்தின் பிற்பகுதியில் வரும் இவ்வேடத்திற்கு பாலிவுட் முன்னணி நாயகி தீபிகா படுகோனிடம் பேச்சு நடத்தி வெற்றியும் பெற்றுவிட்டாராம்.
தீபிகா படுகோன் தற்போது தமிழில் ரஜினியின் கோச்சடையானில் நடிக்கிறார். சில இந்திப் படங்கள் வேறு கைவசமிருந்தாலும், கால்ஷீட்டை சில மாதங்கள் கழித்து தந்தால் போதும் என ஷங்கர் கூறியதால் ஓகே சொல்லிவிட்டாராம்!
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com