08 மே 2009
கவுண்டமணி காக்டெய்ல்...
மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!-1
அன்பு வலை நண்பர்களே!!
காதல் வீதியில் கனவு நாயகனாக அலைந்து கடைசியில் கல்யாணம் என்ற கடுமையான கோட்டைக்குள் அகப்பட்டுக்கொண்ட சங்கத்தின் சிங்கங்களே!!
தினமும் குடும்ப பாரத்தைச்சுமந்து மாத பட்ஜெட்டுகளைக்கண்டு மலைத்துப்போய், டேமேஜர்களின் குடைச்சல்களையும் தாங்கி களைத்துப்போய் வீடு திரும்புகையில் மனைவி காதல் பொங்கப்பார்க்கையில்!!!....இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் எப்படி இவள்? என்று காதலையே மறந்துபோன கணவர்களே(நானும்தான்)!!
நம் பிரச்சினை அன்றாடம் உள்ளதுதான்!! அன்றாட அலுவல்களில் மறந்துபோன காதலை எப்படி உயிர்கொடுத்து மீட்பது என்பதுதான் இந்த பதிவின் ( பதிவுகளின் -- தொடர்ந்து எழுதுவோம்ல) நோக்கமே!!
ஆஹா! நமக்கு உதவுமேன்னு நினைக்கிற மக்கள் தொடர்ந்து படிங்க!!
நமக்குக் கல்யாணமே ஆகலையேன்னு சொல்றவங்க மனைவிங்கிற இடத்தில் காதலின்னு போட்டுக்குங்க!!
இதிலெல்லாம் நாங்க கிங்காக்கும்!! நமக்குப்போய் அட்வைஸான்னு சீறும் சிறுத்தைகள் படித்துவிட்டு பின்னூட்டத்தில் உங்கள் யுக்திகளையும் சொல்லுங்க!! சரியா!!...
1.பிறர் முன்னிலையில், சொந்தக்காரர்களுடன் இருக்கும்போது மனைவி புகழ் பாடுங்கள்! யார் யாரையோ புகழ்கிறோம். உங்கள் மனைவியின் நல்ல குணங்களை( அப்படி ஒன்னு இருக்கான்னு கேட்கக்கூடாது..... கொஞ்சம் யோசித்தால் அவரிடம் உள்ள நல்ல குணங்கள் தெரியும்!)புகழ்ந்துபேசுங்க!! எல்லோர் முன்னிலையிலும் ஏன் என்னைப்பற்றிப் பேசுகிறீர்கள் என்று கோபப்படுவார்கள்!!............கண்டுக்காதீங்க!....அவர் உள்ளம் கேட்குமே மோர்!!! புகழ்வதில் உண்மை உணர்வு கலந்து ஒன்றி மெய்யாலுமே புகழ்கிற மாதிரி இருக்கணும்!! நக்கல் கலப்பு உடம்புக்கு ஆகாது!!!
2.நீங்கள் நாத்திகராக இல்லாதபட்சத்தில் உங்கள் மனைவியின் பிரார்த்தனைகளில் கலந்துகொள்ளுங்கள்! ”சாமியைக்கும்பிடுங்கப்பா! நான் முக்கியமான் பதிவு எழுதிக்கிட்டு இருக்கேன் இதோ வந்திடுறேன்”ங்கிற பதில் நல்லதல்ல! சேர்ந்து கோவிலுக்குப்போங்க!! உடல்,மன,ஸ்பிரிசுவல் என்ற் மூன்றும் கலந்ததே நம் வாழ்க்கை!! மூன்றிலும் நீங்கள் ஒன்றிப் பிணைவதே இல்வாழ்க்கை!!
3.உன்னால இந்த வேலையைக்கூட செய்யமுடியாதா? 24 மணிநேரமும் என்னதான் செய்யுற வீட்டில்? போன்ற குறைசொல்லும் செயல் கூடாது!! செய்யாத வேலையையே குத்திக் குத்திக் காட்டாமல் (மனதை அடக்கிக்கொண்டு) புன்சிரிப்புடன் பிரச்சினைகளை அனுகவும்! “பரவாயில்லை விடு!! நாளைக்கு நானும் நீயும் சேர்ந்தே இந்த வேலையை முடிப்போம்” என்று விசய்த்தை சிம்பிளா முடிங்க!!
4.அலுவலக அலுப்பையும்,பிரச்சினைகளையும் அலுவலகத்திலேயே விட்டுவிடுங்கள்!! அதை மனைவிமீதுகாட்டி கோபப்படவேண்டாம்!! “கடுகடுன்னு இருக்கார்!!கிட்டப்போனா அவ்வளவுதான் வள்ளுன்னு விழுவார்” என்று மனைவி பயந்து நடுங்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவேண்டாம்!! ரொம்பத் தாங்க முடியாத பிரச்சினையா? உங்கள் மனைவியுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!! மனசும் லேசாகும்!! மனைவிக்கும் தான் மதிக்கப்படுகிறோம் என்று பெருமை ஏற்படும்!! உங்களுக்கும் பலன் உண்டுங்கோ!!!
5. 10 செகண்ட் முத்தம் என்று சுஜாதா கதை ஒன்னு எழுதினார். நமக்கும் அதுபோல் இலக்கு உண்டு! ஆமா குறந்தபட்சம் 6 வினாடி.......to...> உங்கள் இஷ்டம் முத்தம் கொடுங்க!! காலை எழுந்தவுடன் பெட்காபி போல் ஒரு முத்தம்!! கலையிலேயே மனைவி முகத்தில் புன்னகை!! அப்புறம் டூட்டி போகும் போது, புதுக்கணவன் போல ஒரு முத்தம்!! எது கொடுத்தாலும் நல்லா கொடுங்க!! அப்புறம் பாருங்க! அதன் விளைவுகளை!!
5 பாயிண்ட் எழுதுறதுக்கே தாவு தீந்துபோச்சு!! மக்கள் எப்படி சிறுகதை,தொடர்கதையெல்லாம் எழுதுறீங்களோ? ஆச்சரியந்தான்!!
மிச்சம் உள்ள விசயங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்!!! சரியா!!
பசங்க ஒரு ஒப்பீட்டு பார்வை
அவங்கள மாதிரியிருக்கோமா இல்ல அதவிட அழகா இருக்கோமா நல்ல வேளை சங்கர் சார் ஆங்கிலத்துல பேர் வச்சதுனால தப்பிச்சோம் நாங்களும் சிக்ஸ்பேக் காட்டுவோம்ல நாங்களும் கடவுள் தான் நானும் வேட்டைக்கு கிளம்பிட்டேன் தல எங்க போஸ் எப்பிடி என்ன முறப்பு நாங்க எல்லாருமே அண்ணன் கஞ்சா கருப்பு வழிவந்தவர்கள் நாங்களும் ஜெயிலுக்குப்போறோம் ஜெயிலுக்குப்போறோம்
Low Disk space warning மற்றும் Don't Send error reporting நீக்குவதைப் பற்றி
வயதுக்கு வந்த காதல்
உன் முத்தத்தின் விண்ணகம் வாய்க்காமல் போகையில் உதடுகளில் உணர்கிறேன் நரகத்தின் நகக் கீறல்களை
நீ முத்தமிட்ட கணத்தில் முளைத்த மன நடுக்கத்தில் சூரியன் ஒளிய காற்று உறைய இதயம் மட்டும் புவியீர்ப்பு விசையைப் புறக்கணித்துப் பறந்தது.
இன்னோர் முத்தமிடு நான் இறங்கி வர வேண்டும்.
நிலவொளியின் நதிக்கரையில் குளிர் காற்றின் பொதுக்கூட்டத்தில் உன் விரல் தொட்ட வினாடியில் உயிருக்குள் பறந்த பறவை சொன்னது எனக்குள் காதல் கூடாரமடித்திருப்பதை.
உன் காதல் நினைவுகளைச் சுமக்கையில் எனக்குள் காமத்தின் சாரலடிக்கும் என்பதை உன் வெட்கத்தின் வாசலுக்குள் சொல்லிச் செல்கையில் நீ சட்டென்று வெளிப்படுத்திய போலிக் கோபத்தில் புதைந்துகிடந்தது நம் காதல்.
உன் புகைப்படம் பார்த்துத் துயில்வதை விட உன் புகைப்படம் பார்த்து விழிப்பதை விரும்பிய கணத்தில் என் காதல் வயதுக்கு வந்திருந்தது.
இது தாண்டா டூ வீலர் !
கொஞ்ச தூரத்துல இருக்கிற கடைத் தெருவுக்குப் போகவேண்டும். ஆனால் கார் எடுத்துக் கொண்டு செல்ல முடியாத ஒரு நிலை. சின்னதா ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்குமே என மனதுக்குள் சிந்தனை ஓடும்.
நகர் முழுதும் வாகன நிறுத்தம் ஒரு மிகப்பெரிய சவால். வண்டி சின்னதா இருந்தா நிறுத்தியிருக்கலாம் என புலம்பல் தெறிக்கும்.
எரிபொருள் பர்சை எரித்து விடுகிறது, கொஞ்சம் செலவு குறைவான வண்டி இருந்தால் நன்றாக இருக்குமே என பெருமூச்சு வழியும்.
இந்த அனைத்து சிக்கல்களையும் தீர்ப்பதற்குரிய ஒரு புது வகையான இருசக்கரக் கார் ஒன்று வரப்போகிறது.
பக்கத்து தெருக்களில் சுற்றவும், அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று வரவும் , அதிக தூரமற்ற இடங்களுக்கு பயணிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படும் இந்த வாகனம் மின் சக்தியில் இயங்கப்போகிறது என்பதும், சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதது என்பதும் சிறப்பு அம்சங்களாகும்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். உயர் ரக சமநிலைத் தொழில் நுட்பம் இருசக்கரத்தில் இந்த வாகனம் நிலைகொள்ளவும் வேகமாய் இயங்கவும் துணை செய்கிறது.
உயர் கணினி தொழில் நுட்பத்தில் தயாராகவுள்ள இந்த வாகனம், விபத்துகள் ஏற்படும் சூழலைத் தவிர்க்கக் கூடிய ஆற்றல் படைத்ததாக இருக்குமாம்.
அளவில் சிறிய வியக்க வைக்கக்கூடிய வடிவத்தில் குறைந்த செலவில் ஓடும் இந்த வாகனத்தின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் ஒரு கார்வாங்கும் விலையில் இந்த வாகனம் மூன்று நான்கு வாங்கலாம் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
செக்வே மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த வாகனம் விற்பனைக்கு வர இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம் !
05 மே 2009
இளையராஜாவின் அழகர் மலை ஆடியோ- வெளியிட்டார் கமல்
டூயட் எனும் பெயரில் குரங்காட்டம்!'-பாலுமகேந்திரா
படித்ததில் பிடித்தது : கணவன் - மனைவி உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் - குழந்தை, நண்பர்கள், ஆசிரியர் - மாணவர், காதலன் - காதலி என உறவுகள் பல இருந்தாலும் உடலாலும் மனதாலும் இரண்டறக் கலந்து, ஆத்மாவின் அடி ஆழம் வரை ஊடுருவிச்செல்வது கணவன் - மனைவி உறவுதான். மற்றவர்களின் மன ஓட்டங்களை வெறும் பார்வையாளராயிருந்து கவனிக்கு (observe) முடியும். ஆனால் சுகம், துக்கம், விருப்பு, வெறுப்பு, குழப்பம், பயன் என அனைத்து உணர்வுகளும் அப்படியே தாக்குவது இந்த உணர்வில்தான். ஒரே அலைவரிசையிலிருக்கும் கணவன் - மனைவிக்கு அந்தந்த கணத்தில் எண்ணங்களை பரிமாறப்படுவதால் வார்த்தைகளே வீண்தான்.. எந்த ஒரு செயலுகுமே அடிப்படை எண்ணங்கள்தான். தங்களது மன ஓட்டத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியாத கணத்தில்தான் பிரச்சினைகள் வெடிக்கின்றன. இன்றைய தினத்தில் அதிகரித்து வரும் குடும்ப உறவுப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் மனம்தான். கணவன் - மனைவு உறவு முழுக்க, முழுக்க உணர்வுகளால் பின்னிப் பிணைந்த ஒரு கூடு. இதில் ஒரு இழை அறுந்து போனாலும் அந்த முழுமையே (whole) ஆட்டங்கண்டுவிடும். சின்ன சின்ன உணர்ச்சிகள் கூட பெரிய விபரீதகளுக்கு காரணமாகிவிடும். அப்படி எதுவும் நேர்ந்துவிடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கையில் தங்கள் உணர்ச்சிகளுக்கே வேலி போட்டுவிடுவர் சிலர். இந்தப் பாதிப்பு இன்னும் அதிகம். தற்காலிகமாக பிரச்சினையை ஒத்தி வைக்கலாமே தவர, முற்றிலும் தலைபோட முடியாது. ஒரே வழி, உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள். பிறகு வெளிப்படுத்துங்கள்! சந்தேகம்! இந்த வார்த்தையைப் படிக்கும் போதே நாற்காலியின் நுனிக்கு வந்துவிடுவார்கள் ஆண்கள். பலகுடும்பங்களை ஆட்டிவைக்கும் ஐந்தெழுத்து மந்திரவார்த்தை. “என்னங்க, நான் உங்க ஆஃபீஸ்க்கு ஃபோன் பண்ணப்ப யாரோ ஒருத்தி எடுத்தாளே, யாரவ? எதுக்கு உங்கள டேபிளுக்கு வரனும்?” “நான் இன்னைக்கு பூவே வைக்கலையே. உங்கள் மேல எப்படி மல்லிப்பூ வாசனை அடிக்குது?.” “உங்க ஆஃபீஸ் என்ன பீச் நடவுலையா இருக்கு? ஷூக்குள்ள ஒரு கிலோ மணல்…!” “கழுதை மிஸ் பண்ணாலும் பண்ணும். நீங்க பண்ணமாட்டீங்க.. ஒரு சினிமா போஸ்டர் விடாம வீட்டுக்கு வாங்க, கண்ணை தோண்டிடறேன்.” “குதிரைக்கு திரைகட்டற மாதிரி உங்க ரெண்டு கண்ணையும் கட்டினும் ரோட்ல வண்டி ஓட்டறப்ப அப்படி என்ன ரெண்டு பக்கமும் திரும்பி திரும்பிப்பார்த்து ஜொள்ளுவிட வேண்டியிருக்கு…?” என்ன? இவையெல்லாம் உங்கள் வீட்டு வசனங்கள்தானே…? எல்லா மனைவிகளும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மேற்படி வசனங்களைப் பேசிவிடுவார்கள். “வீட்டுக்கு வந்து கவனிச்சுக்கறேன்” என்று சொல்லிவட்டு அதுவரை கூட காத்திருக்க பொறுமையில்லாமல் ‘ஆன் தி ஸ்பாட் ஆக்ஷன்’ எடுக்கும் மனைவிகளுமுண்டு. “புருஷனையே சந்தேக்படறியே, நீயெல்லாம் ஒரு மனைவியா, சே..!” என்று கணவன் உணர்ச்சிவசப்பட்டுக் கேட்கும்போது சட்டென்று குற்ற உணர்ச்சி ஆட்கொண்டு, ஐயோ, நான் நல்ல மனைவி இல்லையோ… என்ற குழப்பும், கவலையும் வேதனையில் ஆழ்த்தும் நீங்களும் அபடித்தானா? அப்படியென்றால் ‘சந்தேகம்’ என்ற கடலைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய, மூழ்கி முத்தெடுக்க வேண்டிய விஷயகள் ஏராளம்…! 1. பெண்களைப் பொறுத்தவரையில், உங்கள் கணவரைப் புரிந்து கொள்வதற்கு முன் நீங்கள் சந்தேகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பசி, தூக்கம், காமம் ஆகிய உணர்வுகளைப் போல் சந்தோஷமும் ஒரு உணர்வுதான். நன்றாக யோசித்துப்பார்த்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புரியும். எப்போதெலாம் உங்கள் கணவரை சந்தேகப்படுகிறீர்கள் என்று கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள். நிச்சயமாக மாத்த்தின் எல்லா நாட்களிலும் சந்தேகம் வராது. மாதவிலக்கு நாட்கில் உங்களின் சந்தேக்க்குணம் தலைதூக்கும். காரணம், பொதுவாகவே இந்த நாட்களில் உடல் சோர்வுடன், மனச்சோர்வும் சேர்ந்திருக்கும். அதனால், உங்கள் கணவர் லேசாக ஒரு பாடலை முணுமுணுத்தால் கூட, ஏதோ அவர் அதீத சந்தோஷத்தில் மிதப்பதுபோல் தோன்றும். “நான் இங்க இவ்வளவு கஷ்டப்பட்டிருகேன். இவறு இவ்வளவு குசியா இருக்காரே! ஒருவேளை வேற யார்கூடவாத்து சுத்திட்டு வந்திருப்பாரோ?” என்று ஒரு பொறிதட்டும். அந்தப் பொறியை நீங்கள் தட்டிவிட்டீர்கள் என்றால் பிழைத்தீர்கள். (உங்கள் கணவர் பிழைத்தார்) இல்லை, அது கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி அடுத்தசில மணி நேரங்களில் சந்தேகத்தின் உச்சத்தைத் தொட்டிருப்பீர்கள். 2. அடுத்தது, அந்த சமயத்தில் சோர்வு மட்டுமில்லாமல், தான் அழகாயில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மயும் ஏற்படும். (உண்மையில், அப்போதுதன் பெண்கள்ரொம்ப அழிகாயிருப்பார்களாம்). ஒரு வேளை உற்சாக்க் குறைவால் கூட இந்த எண்ணம் தோன்றலாம். அதன் விளைவும் சந்தேகம்தான். தன்னைத் தவிர மற்ற பெண்களெல்லாம் தேவதைபோல் தோன்ற, கணவர் பக்கத்து வீட்டு மாமியிடம் பேசினால் கூட, உங்கள் மனதில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். சரி, இப்ப என்னதான் செய்யறது என்று கேட்கிறீர்களா? முதலில் இந்தக் கால சுழற்சியைக் கவனியுங்கள். சந்தேகம் எப்போது வருகிறது எனக் கவனிக்கத் தடங்கினீர்கள் என்றால், காலப்போக்கில் நாளைக்கு ‘கோடீஸ்வரி’ வரும் என்பதப் போல, நாளைக்கு ‘சந்தேகம்’ வரும் எனச் சரியாக ஊக்ககுமளவற்கு எக்ஸ்பர்ட் ஆகிவிடுவீர்கள். அடுத்து விழிப்பு: சந்தேகம் வரும் சமயங்களில் விழிப்புடன், தன்னுணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். சந்தேகம் இப்போது வருவது இயல்புதான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மூன்றாவது முக்கியமான விஷயம். சந்தேகத்தை சந்தேகமாகவே எடுத்துக்கொள்ளுங்கள் - அதாவத, நீங்கள் உங்கள கணவரை சந்தேகப்படுகிறீர்கள். அது உண்மையாக இருக்க வேண்டிய அசியமில்லை. கோபம் தணிந்த பிறகு ஓரிரு நாட்களில் கூட “சே, எவ்வளவு முட்டாள்தனமா நினைச்சுட்டேன்” என்று உங்கள் தலையில் நீங்களே கூட குட்டிக்கொள்ள நேரலாம். எனவே உங்கள் சந்தேகத்தை உண்மையென நம்பாதீர்கள். சந்தேகப்படும் மனைவிகளே, உங்களை சந்தோஷப்படுத்த சில புள்ளி விபரங்கள்: (ஆய்வின் அடிப்படையில்) 1. சந்தேகப்படும் மனைவிதான் உண்மையான மனைவி என்று நூற்றுக்கு தொண்ணூற்றியெட்டு பெண்களும், எண்பத்தேழு ஆண்களும் கருத்தக் கூறியுள்ளனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், “சந்தேகம் எப்போது வருகிறது? கணவன் தன்னை விட்டுப்போய்விடக் கூடாது என்ற உணர்வு உச்சநிலையை அடையும்போதுதானே, இந்த உணர்வு மனைவிக்கு எப்போது வருகிறது? கணவன் மேல் அதீத அன்பாயிருக்கும் போதுதான். எனவே, அதீத அன்புதான் சந்தேகமாகிறது. 2. அடுத்தது, ஒரு மனைவி எப்போது சந்தேகப்பட தொடங்குகிறாள் தெரியுமா? (சந்தேகப்படத் தகுதியா என்று சிரிக்காதீர்கள்) தன் கணவனுக்கு உண்மையானவளாயிருக்கும் போதுதான். கணவனுக்குத் தெரியாமல் மனைவி தப்பு செய்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். அவள் மனநிலை எப்படியிருக்கும் தெரியுமா? “இவனும் யார் கூடயாவது போயிட்டால்தான் நிம்மதி. அப்பதான் நாம செய்யறதைக்
கண்டுக்க மாட்டான்..” இப்படி நினைப்பவள் தன் குட்டு வெளிப்பட்டுவிடுமே என பயந்து கண்ணைக் கொஞ்சம் கூட சந்தேகப்படவே மாட்டாள். தன் மேல் தவறை வைத்துக்கொண்டு எப்படி கணவனை சந்தேகப்பட முடியும்? 3. மனைவிகளே, உங்களுக்கு இன் அதிர்ச்சியூட்டும் இன்னொரு செய்தி என்ன தெரியுமா? மனைவி தன்னை சந்தேகப்படுவதை ஆண்களே விரும்புகிறார்கள் என்பதுதான். மணமான பத்து ஆண்களில் ஒன்பது பேர் சொன்ன கருத்து இதோ: ‘என் மனைவி என்னை ரொம்ப சந்தேகப்படறப்ப கோபம் வரும். என்னடா நம்மளைப் புரிஞ்சுக்க மாட்டேன்கறாளேனு தோணும். ஆனா, கொஞ்சம் கோபம் தணிஞ்சப்புறம் நம்ம மேல இவ்வளவு பொஸஸிவ்வா இருக்காளேன்னு சந்தோஷமா இருக்கும்..” ஆம். மனைவி தனமேல் பொஸஸிவாக இருக்க வேண்டுமென ஆண்கள் விரும்புகிறார்கள். அன்பின் எதிரொலிதான் சந்தேகம் என்பதைப் புரிந்துகொண்ட கணவர்களுக்கு பெரிதாய் ஒன்றும் கோபம் வருவதில்லை. இதைப் படித்தவுடன் உங்கள் கணவரும் உங்கள் சந்தேகத்தை மதிக்கமாட்டார். கோபத்திற்குப் பதில் அசட்டுச்சிரிப்பு (பெருமையான சிரிப்பு?) சிரித்தாலும் ஆச்சர்யமேதுமில்லை. 4. அவ்வப்போது சந்தேகப்பட்டுக்கொள்ளும், தம்பதியர் பெரும்பாலும் பிரிவதில்லை. காதல் ஜோடிகளிலேயே “என்வுட்பியை நான் இதுவரைக்கும் சந்தேகப்பட்டதில்லை. நாங்கள் ரொம்ப சோஸியல்…” என்று பந்தாவாக சொல்லும் பலர் திருமணம் என்ற கட்டம் வரைகூட செல்வதில்லை. “அவர் என்னை சந்தேகப்பட்டதால்தான் பிரிந்தோம்..” என்று சொல்பவரகள் பெரும்பாலும அதை ஒரு காரணமாகத்தான் சொல்கிறாரகளே ஒழிய, உண்மையான காரணம் வேறு ஏதாவாகத்தானிருக்கம். “நல்லா சந்தஷமா எல்லார் கண்ணும் படறமாதிரிவாழ்ந்தாங்க. இப்ப என்னவோ தரியல பிரிஞ்சுட்டாங்க..” - இந்த ரீதியலான ஸ்டேட்மெண்ட்தான் விவாகரத்து வழக்குகளில் அதிகம் என சம்பந்தப்பட்டவர்கள் சத்தியம் செய்கிறார்கள். கட்டாயம் சந்தேகப்பட்டே தான் தீர வேண்டுமா, இல்லையென்றால் பாவச்செயலா…? நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இரண்டே இரண்டேதான். (1) சந்தேகப்படுகிறேன் இது இழிவில்லையா என்ற குழப்பம். குற்றவுணர்ச்சியும வேண்டவே வேண்டாம். (2) சந்தேகம் ஆரோக்கியமானதுதான். இடமறிந்து அளவறிந்து செயல்படும் வரை. சந்தேக உணர்ச்சியெல்லாம் இந்த பெண் ஜென்மங்களுக்கு வரும் அற்ப உணர்ச்சி. நாங்கள் அதையெல்லாம் கடந்தவர்கள் என்று காலரை தூக்கிக்கொள்ளும் ஆண்களே, கொஞ்சம் கவனியுங்கள். இராமாயண காலத்திலேயே நின்றுவிடுகிறது. (சமூக, குடும்ப சூழல்ளால்..) ஆனால் பலரின் வாழ்க்கையை வேரோடு அழித்த சம்பவங்களுக்கல்லாம் ஆணிவேர் ஆண்களின் சந்தேகம்தான். மனநலப் பிரச்சினைகளுக்கென வரும் கேஸ்களும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. உண்மையாகவே சந்தேகப்படும் ஆண்களைவிட மனைவி சந்தேகப்படுதுபோல் நடித்து Misuse செய்பவர்களே அதிகம். “என்னங்க, ஏதாவது வேலை தேடுங்களேன் இப்படி சும்மாவே இருக்கிறீர்களே…” “இந்த மாசம் பணம் பத்தாது போலிருக்கே.” இது போன்ற பொருளாதார பிரச்சினைகளை மனைவி எழுப்பும் போதெல்லாம் ஆண்கள் கையில் எடுத்துக்கொள்ளும் ஒரே ஆயுதம் சந்தேகம்தான். எங்கே அடுத்தமுறை நாம் கேள்வி கேட்டால், இதே போல் சந்தேகப்படுவானோ என்று பயந்து தங்கள் உணர்ச்சிகளை மனதில் புதைத்துக்கொள்வார்கள். அது வேறு எப்படியாவது வெளிப்படும்.! இது என்ன? பெண்கள் உண்மையாகே மனதில் தோன்றும் சந்தேகங்களைப் பூட்டிவைக்காமல், அதை ஒரு சந்தேகமாகவே வெளிப்படுத்தி… அதற்கு கிடைக்கும் நியாயமான பதிலை உள்வாங்கி ஏற்றுக்கொள்ளுங்கள்..! ஆகமொத்தத்தில் அளவோடு சந்தேகப்பட்டு, நலமோடு வாழுங்கள்…! சி.ஆர். செலின்இரட்டை குழந்தைகள் பிடிக்கும்!-த்ரிஷா
கணிணியில் இலவச டைரி
கணிணியில் இலவச டைரி
நாம் கணிணியில் புக்மார்க் குறித்து வைப்போம்.
சில நாள் கழித்து அது எதனுடைய புக்மார்க்-
அதனால் என்ன பயன் என மீண்டும் அந்த
புக்மார்க்கை நீங்கள் இணையத்தில் சென்றே
அறிந்து கொள்ள முடியும். உங்கள் நண்பர்
நீங்கள் குறித்துவைத்துள்ள புக்மார்க்கின்
இணைய முகவரி(URL) கேட்கின்றார். அந்த
சமயம் உங்கள் கணிணியில் இணைய இணைப்பு
துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பாது என்ன
செய்வீர்கள். அந்த மாதிரியான சமயங்களில்
இந்த கணிணி டைரி நமக்கு உதவுகின்றது.
நாம் நமது கணிணியிலேயே குறிப்புகளை
-இணைய முகவரிகளை –நமது விருப்பமான
புக் மார்க்குகளை -சாப்ட்வேர் களின்
சீரியல் எண்களை எழுதிவைக்க இந்த டைரியை
பயன்படுத்தலாம். இணைய இணைப்பு
இல்லாத சமயங்களிலும் நாம் இந்த புக் மார்க்கை
பயன் படுத்தலாம்.முதலில் நமது கணிணியில்
இந்த டைரியை எப்படி வெளியே எடுத்துவரலாம்
என பார்க்கலாம்.முதலில் நீங்கள் டெக்ஸ்டாப்பின்
வெற்றிடத்தில் மவுஸால் கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இந்தமாதிரி ஒப்பன் ஆகும்.
அதில் உள்ள Text Document –ஐ
மவுஸால் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கான
Text Document ஆனது ஓப்பன் ஆகி
டெக்ஸ்டாப்பில் அமர்ந்துவிடும். பின் அதை
ரைட் கிளிக் செய்து Rename-ல்
உங்கள் விருப்பமான பெயரை தட்டச்சு
செய்யுங்கள்.நீங்கள் சூட்டிய பெயருடன்
Text Document காட்சியளிக்கும். இதை
ஓப்பன்செய்யுங்கள். உங்களுக்கு இந்த
சாரளம் ஓப்பன் ஆகும்.
சரி அதில் அன்றைய
தேதியை எப்படி எடுத்து வருவது. நீங்கள்
உங்கள் Key-Board –ல் F5 அழுத்துங்கள்.
உங்கள் Text Document –ல் அன்றைய தேதி
வந்துவிடும். நீங்கள் உங்கள் புக் மார்க்
இணைய முகவரியை அதில் பேஸ்ட்
செய்யுங்கள்.அத்துடன் அந்த இணையத்தை
பற்றியும் குறிப்புகளை யும் ஆங்கிலத்தில்
அல்லது தமிழில் தட்டச்சு செய்துவிடுங்கள்.
உங்கள் இணைய இணைப்பு இல்லாத
சமயங்களிலும் நீங்கள் சுலபமாக உங்கள்
புக்மார்க்கை யும் –குறிப்புகளையும்
பார்க்கலாம். ஒருமுறை பயன்படுத்திப்
பாருங்கள். மறக்காமல் வாக்களியுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
எந்த மாதிரியான சந்தர்பங்களில் நாம் நமது
கம் யூட்டரை Format செய்யவேண்டும்?
1.விண் டாஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில்
பைல்கள் கரப்ட்(Corrupt) ஆகும் சமயம்.
2.தவறுதலாக விண்டா பைல்களை நாம்
அழிந்து விடும் சமயம்.
3.சாப்ட்வேர்களை முறையாக Uninstall
செய்யாமல் அதனால் பிழை ஏற்பட்டிருந்தால்.
4.சிஸ்டம் ரீ-ஸ்டார் செய்தும் கணிணி செயல்
படாத சமயம்.
5. வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டு எந்த விதமான
ஆன்டிவைரஸாலும் அதை நீக்க முடியாத சமயம்.
6.நமது கணிணியில் ஸ்பைவேர் தாக்கிய சமயம்.
7.Registry-ல் பிழை ஏற்பட்டு இருக்கும் சமயம்.
8. வழக்கத்திற்கு மாறாக கணிணி மிகவும்
மெதுவாக செயல்படும் சமயம்.
மேற்கண்ட 8 பிழைகள் உங்கள் கணிணியில்
ஏற்பட்டால் நீங்கள் தயங்காமல் கணிணியை
Format செய்யலாம்.
(பின்குறிப்பு:- இணைய இணைப்பில் ஏற்பட்ட
பழுது காரணமாகவும்-எனது சகோதரியின்
துணைவர் அகால மரணம் காரணமாகவும்
இடையில் என்னால் பதிவிட முடியவில்லை.
தவிர ஆங்கில பாடம் தொடர்ந்து ஞாயிற்றுக்
கிழமைகளில் வெளியிட வேண்டும் என்ற
காரணத்தால் இணைய இணைப்பு இல்லாத
போதும் தன்னுடைய இணைய இணைப்பு மூலம்
ஆங்கில் பாடத்தின் பதிவுகளை பதிவிட
உதவி செய்த நண்பர்
ஆனந்த்துக்கு இந்த பதிவின் மூலம்
நன்றியை தெரிவித்துக்
கொள்கின்றேன்.
நன்றி....)