தனது திருமணம்05 மே 2009
இரட்டை குழந்தைகள் பிடிக்கும்!-த்ரிஷா
த்ரிஷாவுக்கு இன்று பிறந்தநாள். இந்தப் பிறந்த நாளை ஆடம்பரமில்லாமல் எளிமையாகக் கொண்டாட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் த்ரிஷா.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான த்ரிஷா, தன் பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடுகிறார்.
இந்தப் பிறந்தநாளையொட்டி அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், சர்வம் படத்தில் ஆர்யாவுடன் முத்தக் காட்சியில் வந்துள்ள செய்திகளை மறுத்துள்ளார். இந்த மாதிரி வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என்றே தெரியவில்லை என்றும், நெருக்கமாக நடித்துள்ளது உண்மை... ஆனால் முத்தம் கொடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
தனது திருமணம்
 குறித்துப் பேசிய அவர், இன்னும் அதற்கான நேரம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பிறந்தநாளில் தனக்குப் பிடித்த விஷயங்கள் குறித்துக் கூறுகையில், "எனக்கு செக்ஸியாக நடிக்கப் பிடிக்கும். ஆனால் தேவையில்லாமல் திணிக்கப்பட்டதாக அந்தக் காட்சி இருக்கக் கூடாது. நடிகர்களில் செக்ஸியானவர் கமல்தான். எனக்கு அவரை மிகப் பிடிக்கும். இரட்டைக் குழந்தைகள் என்றால் எனக்கு கொள்ளை விருப்பம்" என்றும் கூறுகிறார் த்ரிஷா.
தனது திருமணம்