Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

06 ஆகஸ்ட் 2011

ஜிமெயிலில் புது வசதி: Preview Pane

தகவல் தொடர்பு சாதனங்களில் முக்கிய பங்கு வகிப்பது மின்னஞ்சல்கள் (ஈமெயில்கள்). நம்மில் பலருக்கு அதிகமான மின்னஞ்சல்கள் வரும். அவற்றில் தேவையில்லாத மெயில்களும் வரும். ஒவ்வொரு மின்னஞ்சல்களையும் திறந்து திறந்து படிக்கணும் என்றால் (என்னை போன்றவர்களுக்கு) கொஞ்சம் சிரமம் தான். நம்முடைய சிரமத்தைக்(?) கண்ட ஜிமெயில் தற்போது Preview Pane என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Microsoft Office Outlook-ல் உள்ளது போன்றாகும்.
உங்களுக்கு வந்துள்ள மின்னஞ்சல்களுக்கு வலது புறம் ஒரு Window இருக்கும். இடது புறம் உள்ள மின்னஞ்சல்களில் எதை க்ளிக் செய்கிறீர்களோ, அதனை வலது புறம் உள்ள விண்டோவில் படிக்கலாம், அங்கிருந்தே அந்த மெயில்களுக்கு பதில் அனுப்பலாம், மெயில்களை அழிக்கலாம். இந்த வசதியை பெற: 1. முதலில் https://mail.google.com/mail/#settings/labs (Gmail Lab)சென்று, அங்கு Preview Pane என்னும் Gadget-ஐ தேடவும். 2. பிறகு அந்த gadget-ல் Enable என்பதை தேர்வு செய்து, Save Changes என்னும் பட்டனை க்ளிக் செய்யவும்.
3. பிறகு உங்களுக்கு புது விண்டோ தெரியும். மின்னஞ்சல்களில் எதையாவது க்ளிக் செய்தால், அது வலது புறம் தெரியும். அவ்வளவு தான்..! மீண்டும் பழைய மாதிரியே வேண்டுமானால், மின்னஞ்சல்களுக்கு மேலே வலது ஓரம் Toggle split Pane Button இருக்கும். அதை க்ளிக் செய்து எப்பொழுது வேண்டுமானாலும் மாறிக்கொள்ளலாம்.
அவ்வாறு வரும் Preview window-வை இரண்டு விதமாக பார்க்கலாம். Toggle பட்டனுக்கு பக்கத்தில், Drop Down Arrow-வை க்ளிக் செய்தால் மூன்று விருப்பங்கள் வரும்.
No Split - ப்ரிவீவ் விண்டோ இல்லாமல் சாதாரணமாக பார்க்க Vertical Split - வலது புறம் ப்ரிவீவ் பார்க்க Horizontal Split - கீழே ப்ரிவீவ் பார்க்க இனி என் போன்றவர்களுக்கு மின்னஞ்சல்கள் படிப்பது எளிதாகிவிடும்.

“பிரபாகரனுடன் யுத்தத்தின் இறுதிவரை தொடர்பில் இருந்தேன்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தர் குமரன் பத்மநாதன் (கே.பி.), ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிவரை, பிரபாகரனுடன் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விஷயம் பற்றி ஒரு சர்ச்சை இருந்துவந்த நிலையில், இவரது கூற்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கே.பி. நேற்று வழங்கிய பேட்டி ஒன்றில், “யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாத காரணத்தால், புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது என்று கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானதே?” என்ற கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அந்தப் பேட்டியில்தான், இந்த விஷயத்தை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். “நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. சில சமயங்களில் நான் நடேசன் ஊடாக பிரபாகரனுடன் தொடர்புகளை வைத்திருந்தது உண்மைதான். அவை அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்த விஷயம். யுத்தம் மிக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. இதனால், பிரபாகரனுடன் நீண்டநேரம் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. அப்படியான சந்தர்ப்பங்களில் நடேசன் மூலமாக தகவல்களை அனுப்பியிருக்கின்றேன். அதற்காக, பிரபாகரனுடன் நான் நேரடித் தொடர்பில் இருக்கவில்லை என்று அர்த்தமல்ல. யுத்தத்தின் இறுதிவரை அவருடன் நான் தொடர்பில் இருந்தேன். அதுதான் உண்மை” என்றும் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதி நாட்களில் நடந்தவற்றை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் சேனல்-4ல் வெளியான காட்சிகள் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில் ஆச்சரியமானது. இந்தக் கேள்விக்கான பதில் என்ன தெரியுமா? கொழும்பில் இந்தப் பேட்டி பதிவு செய்யப்பட்ட அதே தினத்தில், புதுடில்லியில் இந்திய நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருப்பதும், இந்தப் பதிலும் கிட்டத்தட்ட ஒரே விஷயம்தான். “அது இப்போது முக்கியமல்ல. தற்போது அங்கிருக்கும் தமிழர்களுக்குத் தேவையான புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியம்” தற்போது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில், ஸ்ரீலங்கா பற்றிய நிலைப்பாடும் இதுதான்! நன்றி விறுவிறுப்பு .காம்.

ரஜினி - தனுஷ் இணைந்து நடிப்பார்களா? - ஐஸ்வர்யா பதில்

கணவர் தனுஷை வைத்து தான் இயக்கும் முதல் படத்துக்கு 3 என்று வித்தியாசமாக பெயர் சூட்டியுள்ளார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இந்தப் படம் குறித்து அறிமுகம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்தனர் ஐஸ்வர்யாவும் தனுஷும். நாயகி அமலா பாலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இந்த சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு ஐஸ்வர்யா மற்றும் தனுஷும் அளித்த பதில்களும்: கேள்வி: எந்த நம்பிக்கையில்ஒரு இயக்குநராக களமிறங்குகிறீர்கள்? ஐஸ்வர்யா: என் கதையைக் கேட்ட அப்பா, அந்தப் படத்தை தானே தயாரிக்க விரும்புவதாகக் கூறினார். அந்த அளவு அவருக்கு நம்பிக்கை தந்த ஸ்கிரிப்ட் இது. இப்போது என் மாமனார் தயாரிக்கிறார். கேள்வி: உங்கள் மனைவி ஐஸ்வர்யா ஒரு இயக்குநராக உங்களை விரட்டி வேலை வாங்குகிறாரா, அன்பாக வேலை வாங்குகிறாரா? தனுஷ்: விரட்டியும் வேலை வாங்குகிறார். அன்பாகவும் வேலை வாங்குகிறார். நான் மற்ற இயக்குநர்களின் படங்களில் எப்படி வேலை செய்கிறேனோ, அப்படித்தான் இந்தப் படத்திலும் வேலை செய்கிறேன். கேள்வி: உங்களுக்கு தனுஷ் உதவியாக இருக்கிறாரா? ஐஸ்வர்யா: படப்பிடிப்பு தளத்தில் அவர் நடிகர். நான் இயக்குநர். என் வேலையில் அவர் தலையிடுவதில்லை. வீட்டில் எனக்கு உதவியாக இருக்கிறார். குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறார். கேள்வி: இந்த படத்தின் கதை தனுஷுக்காக எழுதப்பட்டதா? ஐஸ்வர்யா: எங்க வீட்டில் இரண்டு நடிகர்கள் இருக்கிறார்கள். கதை எழுதும்போது இரண்டு பேருமே நினைவுக்கு வருவார்கள். இந்த கதையை பொறுத்தவரை தனுஷை மனதில் வைத்து எழுதப்பட்டதுதான். ரஜினி நடிப்பாரா? கேள்வி: இந்த படத்தில் தனுஷூடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறதா? ஐஸ்வர்யா: இல்லை. அப்பாவிடம் நான் இதுபற்றி பேசவே இல்லை. கேள்வி: அமலா பால்தான் ஹீரோயின் என்பதை நீங்கள் முடிவு செய்தீர்களா? தனுஷா? ஐஸ்வர்யா: நான்தான் ('சொன்னா நம்புங்க... நான் இதிலெல்லாம் தலையிடுவதில்லை' என்கிறார் தனுஷ்!). கேள்வி: படத்தை இயக்குவது சிரமமாக இருக்கிறதா, சுலபமாக இருக்கிறதா? ஐஸ்வர்யா: படம் இயக்குவது சுலபம் இல்லை. நிறைய பொறுப்புகளை தோளில் சுமக்க வேண்டியிருக்கிறது. செல்வராகவன்தான் குரு: கேள்வி: படம் இயக்குவதைப் பொறுத்தவரை உங்களுக்கு குரு யார்? பதில்: செல்வராகவனிடம் இரண்டு படங்களில் உதவி இயக்குநராக இருந்தேன். நிறைய விஷயங்களை அவர் எனக்கு கற்றுத் தந்தார். அந்த வகையில் செல்வராகவன்தான் என் குரு. கேள்வி (தனுஷிடம்): சமீபத்தில் விரதம் இருந்து சபரிமலை சென்றீர்களே... என்ன வேண்டுதல்? தனுஷ்: வேண்டுதலை வெளியில் சொல்லக்கூடாது. கேள்வி: நீங்கள் படம் இயக்குவதாக கூறி வந்தீர்கள். இப்போது உங்கள் மனைவி ஆகிவிட்டார். உங்கள் ஆசையை உங்கள் மனைவி மூலம் நிறைவேற்றிக் கொள்கிறீர்களா? தனுஷ்: எனக்கு முன்பே இயக்குநராகும் திட்டத்தோடு இருந்தவர் ஐஸ்வர்யா. அவர் இயக்குநரானதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் இயக்குநராவது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை. -இவ்வாறு இருவரும் பதிலளித்தனர்.

சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்!

ரெடி படத்தில் சல்மான்கானுக்கு ஒரு காட்சியில் முத்தம் கொடுத்தது உண்மைதான் என நடிகை அசின் கூறியுள்ளார். இதுகுறித்து அசின் கூறுகையில், "ரெடி படத்தில் முத்தக்காட்சி உள்ளது. ஆனால் அது மற்றவர்கள் எதிர்பார்ப்பது மாதிரி ஆபாசமாக இருக்காது. என் கன்னத்தில் சல்மான்கான் முத்தமிடுவது போன்றுதான் அக்காட்சி உள்ளது. நானும் அவருக்கு முத்தம் தருவது போல அமைத்துள்ளனர். ஆனால் கவர்ச்சிக்கு அளவு வைத்துள்ளேன். அதை மீற மாட்டேன். ரெடி குடும்ப பாங்கான படம். சல்மான்கானுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அவருக்கு யாராவது பிடித்து விட்டால் அவர்களுக்காக எதுவும் செய்வார்" என்றார்.

அடுத்த ஆண்டு திருமணம்... ஆனால் மணமகன் அம்ருத் இல்லை! - த்ரிஷா

ஒருவழியாக, தனக்கு அடுத்த ஆண்டு திருமணம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை த்ரிஷா. அவர் கூறுகையில், எனக்கு அடுத்த ஆண்டு திருமணம் என்பது உண்மைதான். ஆனால் மணமகன் அம்ருத் அல்ல என்று கூறியுள்ளார். த்ரிஷாவின் திருமண விவகாரத்தில் அவருக்கும் அவரது அம்மாவுக்கும் மவுன யுத்தம் நடக்கிறது.

த்ரிஷாவுக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் எப்படியாவது சீக்கிரம் திருமணம் செய்து வைத்துவிடும் நோக்கில் மணமகன்களை அலசி வருகிறார் தாயார் உமா கிருஷ்ணன். அப்படி அவர் முடிவு செய்தவர்தான் அம்ருத் என்ற தொழிலதிபர். இவர் த்ரிஷாவின் நண்பரும் கூட. ஆனால் காதலித்துதான் திருமணம் செய்வேன் என்று தொடர்ந்து கூறிவரும் த்ரிஷா அவரது அம்மாவின் முடிவை ஏற்கவில்லை.

இதனால் த்ரிஷாவுக்கு திருமணம் என அம்மா உமா செய்தி கொடுப்பதும், அதை மறுத்து த்ரிஷா பேட்டியளிப்பதும் தொடர்ந்தது. இப்போது ஒருவழியாக அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளாராம் த்ரிஷா. இதுபற்றி திரிஷாவிடம் கேட்டபோது, "அடுத்த ஆண்டு என் திருமணம் நடக்கும். ஆனால் மணமகன் அம்ருத் அல்ல. அவர் என் நண்பர்தான். பல நிகழ்ச்சிகளில் நாங்கள் இருவரும் கலந்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். எனக்கு கணவராக வருபவரை இதுவரை நான் சந்திக்கவில்லை," என்றார்.

வடிவேலு போட்ட குண்டு : விழிபிதுங்கும் சிங்கமுத்து!!

நிலமோசடியில் தனக்கு பங்கு இல்லையென்றும்; சிங்கமுத்துதான் மோசடிக்கு காரணம் என்றும் மறைமுகமாக பேசத் தொடங்கியிருக்கிறார் நடிகர் வடிவேலு. இதனால் எங்கே தன்னை மாட்டி விட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் விழிபிதுங்கி நிற்கிறார் சிங்கமுத்து. நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன் சமீபத்தில் நிலமோசடி புகார் அளித்தது நினைவிருக்கலாம்.

இந்த புகாருக்கு பதில் அளித்த வடிவேலு, தான் எந்தத் தவறுமே செய்யவில்லை என்று கூறியதுடன், சிங்கமுத்து மீது மறைமுகமாக குற்றம் சாட்டி வருகிறார். வடிவேலுவின் குற்றச்சாட்டுக்கு சிங்கமுத்து சூடான பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், வடிவேலுவும் நானும் சண்டை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தபோது எனது மேற்பார்வையில் நிறைய நிலங்களை வாங்கினார். இப்படி வாங்கும் நிலங்களை நேரடியாக அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்ய மாட்டார்.

வருமான வரி சிக்கல் வரும் என்பதால் என் பெயரிலும், வேண்டியவர்கள் பெயரிலும் பவர் வாங்கி வைத்துக் கொள்வார். பிறகு எங்களை அழைத்து அவர் குறிப்பிடும் நபர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்வார். இது போல் வாங்கிய இடங்களில் இதுவும் ஒன்று. அதில் இப்படி வில்லங்கம் இருப்பது எனக்கு தெரியாது. அவர் தான் அந்த நில உரிமையாளர் வீட்டுக்கு தினமும் சென்று பேசி குறைந்த விலைக்கு வாங்கினார். இதில் எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கில் என்னை பலிகடா ஆக்க வடிவேலு முயற்சிக்கிறார். அவர் மீதான குற்றங்களை ஆதாரத்துடன் வெளியிடுவேன், என்று கூறியுள்ளார்.

05 ஆகஸ்ட் 2011

ஜகத் டயசிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு சுமத்தி சுவிஸில் காணொளி ஒளிபரப்பு! வழக்குத் தொடரவும் முனைப்பு (Video in)

முன்னாள் உயர் படையதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயசிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சுவிற்சர்லாந்து தொலைக்காட்சி சேவையொன்று காணொளி ஒன்றை ஒளிபரப்புச் செய்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் எஸ்.எப்.1 என்னும் தொலைக்காட்சி அலைவரிசையில் இந்த காணொளி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. மேஜர் ஜெனரல் ஜகத் டயசிற்கு எதிராக போலியான போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இந்த காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது. சுவிற்சர்லாந்து புலி ஆதரவாளர்கள், எஸ்.எப் 1 அலைவரிசையின் தலைவர் புருலோ எம்ரிக்கை சந்தித்ததன் பின்னர் இந்தக் காணொளி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காணொளி புலிகளின் தேவைக்காக ஒளிபரப்புச் செய்யப்படுவதாக சுவிஸ் வாழ் இலங்கை அமைப்பு எஸ்.எப்.1 தொலைக்காட்சிக்கு தெளிவுபடுத்திய போதிலும் அதனை அந்த தொலைக்காட்சி அலைவரிசை ஏற்றுக்கொள்ள தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜகத் டயசிற்கு எதிராக வழக்குத் தொடர முனைப்பு இலங்கையின் முன்னாள் படையதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயசிற்கு எதிராக சுவிற்சர்லாந்தில் வழக்குத் தொடர முனைப்பு எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இரண்டு தரப்பினர் இவ்வாறு வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜகத் டயஸ் தற்போது ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவராக கடயைமாற்றி வருகின்றார். அச்சுறுத்தலுக்கான மக்கள் சமூகம் மற்றும் ட்ரயல் என்னும் இரண்டு அமைப்புக்களுமே இவ்வாறு வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பில் சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபரிடம் குறித்த அமைப்புக்கள் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளன. முன்னாள் படையதிகாரி ஜகத் டயஸ் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியே வழக்குத் தொடரப்படவுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத் தரப்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
http://www.tamilthai.com/?p=23335

யாழ் மினிகளில் காட்டப்படும் ஆபாசக்காட்சிகள்; அலைமோதும் மாணவர் கூட்டம்

யாழ் குடாநாட்டில் மாணவர்களை இலக்காகக் கொண்டு மினித் தியேட்டர்களில் ஆபாசக்காட்சிகள் காட்டப்படுகின்றன. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் மினிசினிமாத் தியேட்டர்களுக்கென்று தனி வரலாறே உண்டு.

90களில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளைகளில் தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து டெக்கில் ஜெனரேட்டர் மூலம் படம் காட்டுகின்ற கொட்டகைகள் யாழ்ப்பாணத்தில் இருந்தன. இவை மினிசினிமாக்கள் என்று அழைக்கப்பட்டன.

அக்காலப்பகுதிகளில் பெரும்பாலான சினிமா படங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட குறும்படங்களும் போர் எழுச்சிப் படங்களும் காண்பிக்கப்பட்டு வந்தன.

அங்கு காட்டப்படுகின்ற சினிமாப் படங்களில் கூட புலிகளின் திரைப்படத் தணிக்கைக் குழுவினரால் ஆபாசக் காட்சிகள் வசனங்கள் என்பன வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வந்தன.

யாழில் திரையரங்குகள் இருந்தாலும் மினிசினிமாக்களும் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டுவருவது யாழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் யாழ் குடாநாட்டில் தற்போது மினித்தியேட்டர்களில் ஆபாச மினிசினிமாக்கள் காட்டப்பட்டு வருகின்றமை புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் பல மினி தியேட்டர்கள் ஆபாசப்படம் ஓட்டியதற்காக காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டாலும் யாழ் நகரப்பகுதியில் இரு மினிகள் தொடர்ந்து இயங்கிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் ஒன்றுதான் கஸ்தூரியார் வீதியில் ராஜா திரையரங்கிற்கு முன்னால் இயங்கிவந்த மினி சினிமா. நெடுநாட்களாக காவல்துறையினரின் கண்களில் மண்ணைத்தூவி ஆபாசப்படங்களை இவர்கள் ஓட்டிவந்தாலும் அண்மையில் காவல்துறையினர் அந்த மினியை அடையாளம் கண்டு உரிமையாளரையும் கைதுசெய்து மினிக்கும் சீல் வைத்தார்கள்.

இரண்டாவது “செல்வா மினி”. இந்த பெயரைத் தெரியாத மாணவர்களே இருக்கமுடியாது.

அவ்வளவு பிரபலம் வாய்ந்தது. ஸ்ரான்லி வீதியில் அமைந்திருக்கிறது இந்த சினிமாக் கொட்டகை.

இந்த மினியில் வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும். காரணம் இந்த மினிக்கு அருகாமையில் நான்கு பிரபல தனியார் கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன.

அதிலும் இந்த கல்விநிலையங்கள் பஸ் ஸ்ராண்டிற்கு அருகில் அமைந்திருப்பதால் வெகு தொலைதூரங்களில் இருந்து வரும் மாணவர்கள்தான் இங்கு அதிகம்.

இவ்வாறு தொலை தூரங்களில் இருந்து கல்வி கற்பதற்காக வரும் மாணவர்களை கவர்ந்திழுத்து பெரு லாபம் ஈட்டிவருகிறார்கள் இவர்கள்.

அதுவும் மாணவர்களை கவர்ந்திழுக்க இவர்கள் கையாளும் தந்திரம் கட்அவுட். முன்னர் மினிக்கு முன்னாலும் பழைய வின்சர் திரையரங்கிற்கு முன்னும் கட் அவுட்டை வைத்தார்கள்.

இப்போது வின்சர் தியேட்டரில் “சதோசா’ இயங்குவதால்; அங்கு வைக்கமுடியாது போய்விட்டது.

கட் அவுட் கூட பார்ப்பதற்கு ஆபாசமாகத்தான் இருக்கும். அதிலும் இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் சிக்னல் என்ன தெரியுமா? கிழமை நாட்களில் கட்டவுட்டில் இருக்கும் நடிகைகளின் ஆடைமீது வர்ணம் பூசப்பட்டிருந்தால் அன்று கட்டாயம் ஆபாச படம்தான்.

“மர்மத்தீவில் மந்திரக் கன்னி, கன்னித்தீவு கன்னிகள், அரண்மனை அழகி, ராத்திரிநேர தேவதைகள்” என்ற விதத்திலேயே படத்தின் தலைப்புகள் அமைந்திருக்கும். ஆனால் உள்ளே ஓடுவது வேறு படம்.

அதாவது “பிட்டுப்படம்” வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவே இவ்வாறான தலைப்புகள் வைக்கப்பட்டாலும் பல வேளைகளில் எம்.ஜி.ஆரின் கட் அவுட்டுடன்கூட ஆபாசப்படம் உள்ளே ஓடும்.

இது தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் மாலை 6 மணிக்கு ஆபாசக்காட்சியொன்று பிரத்தியேகமாக வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் காட்டப்படுகிறது.

இது முழுக்க முழுக்க ஆங்கில ஆபாசப்படம் என்றாலும் சிங்கள மொழியில் சப் டைட்டில் இடப்பட்டிருப்பதன் மூலம் இப்படங்களுக்கான ஏக விநியோகஸ்தர்கள் யாராக இருக்கமுடியுமென்று உங்களால் ஊகிக்கமுடியும்.

வாடிக்கையாளர்கள் தவிர ஏனையவர்களுக்கு இந்த காட்சியில் அனுமதியில்லை. அது மட்டுமல்லாது இந்த இடத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கூடுவதாகவும் தெரியவந்துள்ளது.

மினியில் ஆபாசப்படம் போகும் போது இங்கு ஓரினச் சேர்க்கையாளர்கள் தமது லீலையில் மெய்மறந்து போயிருப்பர். 13 தொடக்கம் 18, 20 வயதிலுள்ளவர்களே அதிகமாக இங்கு வருகின்றனர்.

எப்பொழுதும் இவர்களது முதுகில் புத்தகப் பை தொங்கும். மற்றது 45, 50 வயதுக்கு மேற்பட்ட குடும்பஸ்தர்களும் இங்கு வருகை தருவது மட்டுமல்ல ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபடுவது கன்றாவியாக இருக்கிறது.

அதிகமானோர் மதுபோதையில் வருவதைக் காணக்கூடியதாகவிருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் உரிமையாளர் பாஷையூரைச் சேர்ந்தவரெனவும் தமிழ்க் கட்சியொன்றின் செல்வாக்கானவரென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது,

“இங்கு இப்படியான விடயங்கள் மோசமாக நடக்கின்றன. நீங்கள் இதுபற்றிய விடயங்களை வெளிப்படுத்தினால் நான் யாழ் சிரேஸ்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கும், யாழ் மாநகர சபைக்கும் தெரியப்படுத்தி இதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். எனக்கு நடவடிக்கை எடுக்கின்ற பொறுப்பு இருப்பதால் நான் என்ன நடவடிக்கை எப்படி எடுப்பேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் விடயத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவாருங்கள்” என்று தெரிவித்தார்.

நன்றி: “இருக்கிறம்” ( 01-08-2011 )

யாழ்ப்பாணத்தில் தற்போது மண்கவ்விய கட்சியைச் சேர்ந்தவர்களின் கைக்கூலிகளே இப்படியான ஆபாசப் படம் காட்டுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.

அவர்களின் இலக்கு இளைய சமுதாயம் குறிப்பாக மாணவர்கள். அவர்களை இப்படியான ஆபாசப்படங்களுக்கு அடிமையாக்கி அவர்களின் போராட்ட குணத்தை மழுங்கச் செய்து அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் இந்த சிங்களத்தின் அடிவருடிகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சியினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த போது தியேட்டரை விட்டு வெளியே வராமல் பதுங்கி இருந்தவர்கள் தற்போது தொழில் முறையாக ஆபாசப் படங்களைத் திரையிட்டு மாணவர்களை கெடுத்து குட்டிச் சுவராக்கி சுளை சுளையாய் சம்பாதிக்கிறார்கள்.

புலிகள் இருந்த போது கம்பீரமாக இருந்த யாழ்ப்பாணம் இன்று தமிழர்களின் கலாச்சாரம், தொன்மையான சின்னங்கள், பண்பாடு ஆகியவற்றைத் தொலைத்து கெட்டொழிந்து போய் கிடக்கிறது.

ஆட்சியாளர்களுக்கு இப்படியான விடயங்கள் தெரிந்தும் கண்ணை மூடி வாய் பொத்தி காணப்படுகிறார்கள். மீண்டு வருமா பழைய யாழ்ப்பாணம்?

மூன்று வயது சிறுவனின் அபார ஞாபக சக்தி!

யானைகள் அபார ஞாபக சக்தி உடையன என்று கூறுகின்றார்கள். ஆனால் எல்லோரையும் அசர வைக்கின்றது வெறும் மூன்று வயது உடைய சிறுவன் ஒருவரின் ஞாபக சக்தி. இவரது பெற்றோர் இந்தியாவில் கேரளா மாநிலத்தை சொந்த இடமாக கொண்ட மலையாளிகள். இக்குடும்பம் பிரித்தானியாவில் வாழ்கின்றது. சிறுவன் ஆதார்ஷ் ஜோர்ஜ் இன்னமும் பாலர் பள்ளிக்கு கூட செல்லத் தொடங்கவில்லை. ஆனால் நாடுகளின் தலைவர்கள், பிரதமர்கள், எதிர்க் கட்சித் தலைவர்கள், தலைநகரங்கள் மற்றும் நாணயங்கள், ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பெயர், சனத் தொகை கூடிய நாடுகள் போன்ற விபரங்களை மிகவும் சரியாக சொல்கின்றார். இவர் 300 வரை இலக்கங்களை ஒழுங்காக சொல்கின்றார். சுமார் 200 நாடுகளின் தலைநகரங்களை துல்லியமாக கூறுகின்றார். விபரங்களை தகப்பனிடம் இருந்து கேட்டு அறிவார். பின் நினைவில் எப்போதும் வைத்துக் கொள்வார். கணனியை திறம்பட பயன்படுத்துகின்றமையுடன் தேடுபொறிகளைப் பயன்படுத்தி பல தகவல்களையும் சொந்தமாகவே அறிந்து கொள்கின்றார். இவருக்கு புத்தகங்கள் செய்தித் தாள்கள் மீது அலாதிப் பிரியம். வைத்தியராக அல்லது விமானியாக வர வேண்டும் என்பது இவரின் ஆசை. இவர் ஒரு பால மேதை என்று உலகப் பத்திரிகைகள் போற்றுகின்றன. ஆயினும் இவருக்கு எவ்விதம் அபார ஞாபக சக்தி கிடைக்கப் பெற்றது என்பது பெற்றோருக்குக்கூட தெரியாத இரகசியமாக உள்ளது.

முகப்பு
Share

04 ஆகஸ்ட் 2011

மகளுடன் இணைந்து அழகு நடை நடந்து அசத்திய பிபாஷாவின் தாயார் (வீடியோ இணைப்பு

ரேம்ப் வாக் நிகழ்ச்சிகளில் பிபாஷா பாசுவைப் பார்த்து அசந்தவர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சியாக மகளுடன் இணைந்து அழகு நடை நடந்து அசத்தி விட்டார் பிபாஷாவின் தாயார் மமதா பாசு. மும்பையில் சர்வதேச நகை வார விழா நடந்தது. இதில் பல பிரபலங்கள், நடிகைகள், மாடல்கள் கலந்து கொண்டு பூணை நடை போட்டனர். அந்த நடைகளிலேயே அனைவரின் கண்களையும் அதிகம் கவர்ந்தது பிபாஷா பாசுவும், அவரது தாயார் மமதாவும்தான். முதல் முறையாக தனது தாயார் பூணை நடை போட்டுள்ளதாக பிபாஷா பெருமையுடன் மேடையில் கூறினார். தான் அழைத்ததற்கிணங்க, தனக்காக கொல்கத்தாவிலிருந்து மும்பை வந்துள்ளார் தனது தாயார் என்றும் அவர் கூறினார். அவருடன் இணைந்து ஜோடியாக நடந்தது பெரு்மையாகவும், பூரிப்பாகவும் இருக்கிறது என்று பிபாஷா கூற, அருகில் நின்றிருந்த அவரது தாயார் வெட்கப் புன்னகை பூக்க அந்த இடமே படு குதூகலமாகி விட்டது. சும்மா சொல்லக் கூடாது, பிபாஷாவை விட படு அழகாக காணப்பட்டார் மமதா பாசு. பிபாஷாமேலும் பேசுகையில், நமது நாட்டில் ஒரு தாய்க்கும், மகளுக்கும் உள்ள பந்தம் மிகவும் வலுவானது. பெண்களின் பலத்தை பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு குடும்பத்தை தாங்கி நிற்கும் ஆலமரமாக பெண்கள்தான் திகழ்கிறார்கள். எனக்கு மூன்று சகோதரிகள். அத்தனை பேரும் எனக்கு மிகவும் பலமாக இருக்கிறார்கள். அதேபோல எங்களது பெற்றோரும், குறிப்பாக எனது தாயார் எங்கள் நால்வருக்கும் மிக மிக பேருதவியாக, பலமாக இருக்கிறார். அவருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார் நெகிழ்ச்சியுடன். உங்களது தாயார் முதல் முறையாக பூணை நடை போட்டது குறித்து என்ன சொன்னார் என்று பிபாஷாவுடன் கேட்டபோது, அவருக்கு மிகவும் நம்பிக்கை இருந்தது. எனக்குத்தான் ரொம்பப் பதட்டமாகி விட்டது என்று கூறிச் சிரித்தார் பிபாஷா

உண்மையை பல நாட்கள் மறைக்க முடியாது! திரிஷா விடயத்தில் வெளிப்படை

வதந்தி வதந்தி என இத்தனை நாளும் மறுத்து வந்த சமாச்சாரம் இன்று உண்மையாகிவிட்டது. த்ரிஷாவுக்கு திருமணம் செய்யப் போகிறார் அவரது அம்மா. மணமகன் பெயர் அம்ருத். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர். தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையான த்ரிஷா, நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. மிக பிஸியான நடிகையாக இருந்த அவர், இப்போது புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்வதில்லை. இருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதில் தீவிரமாக உள்ளார். அவரது தாயார் உமா கிருஷ்ணன், த்ரிஷாவுக்கு இந்த ஆண்டு திருமணம் செய்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். த்ரிஷாவுக்கு ஹைதராபாத், அமெரிக்கா, சென்னை என பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்து வந்தார். இதனால் அவ்வப்போது த்ரிஷா திருமணம் குறித்து செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அதை த்ரிஷா மறுத்து வந்தார். இப்போது த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை யார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான அம்ருத் என்பவரைத்தான் திரிஷா திருமணம் செய்யப் போகிறார். அம்ருத் த்ரிஷாவுக்கு புதியவரல்ல. பெரும்பாலான பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம். கடந்த வாரம் த்ரிஷாவுக்கு ஸ்டைல் நடிகை விருது கொடுத்த போதுகூட, அம்ருத்தும் உடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் வரும் செப்டம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2012 தொடக்கத்தில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.

நண்பர்களை கூகுள் ப்ளஸ் ill தடை செய்வதற்கு

பேஸ்புக்கை காட்டிலும் கூகுள் பிளஸ் சமூக இணையதளம் உபயோகப்படுத்த மிகவும் சுலபமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த தளம் 20 மில்லியன் வாசகர்களை தாண்டி விட்டதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் இன்னும் சோதனை பதிப்பிலேயே வைத்திருக்க காரணம் வாசகர்களின் கருத்துக்களை கண்டறியவே. சமூக இணையதளங்களில் பெரும்பாலும் நாம் பகிரும் தகவல்கள் நம்முடைய கணக்கில் நண்பர்களாக உள்ள அனைவருக்கும் சென்றடையும். அவர்களும் தகவல்களை பார்த்து அதற்கு அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். கூகுள் பிளசில் நாம் பகிரும் தகவலை ஒரு குறிப்பிட்ட நபர் பார்க்காத வண்ணம் தடை செய்யலாம். அவ்வாறு செய்த பின் 1. அவருடைய அப்டேட்கள் இனி உங்கள் Stream பகுதியில் அப்டேட் ஆகாது. 2. நீங்கள் அப்டேட் செய்யும் செய்திகளுக்கு அவரால் கமென்ட் கூட போட முடியாது. 3. Block செய்வதால் உங்கள் Circle-ல் இருந்து நீக்கப்படுவதால் உங்களின் அப்டேட்கள் அவருக்கு செல்லாது. 4. ஆனால் முக்கியமான விடயம் நீங்கள் Public பகுதியில் பகிரும் விடயத்தை தடை செய்தாலும் அவரால் பார்க்க முடியும். இதற்கு முதலில் அந்த குறிப்பிட்ட நபரின் புரோபைல் பக்கத்திற்கு செல்லுங்கள். அவர் ஏதாவது கேமென்ட் போட்டிருந்தாலோ, உங்கள் circle-ல் அவர் இருந்தாலோ அந்த பொட்டோவை க்ளிக் செய்தால் அவரின் புரோபைல் பகுதிக்கு அழைத்து செல்லும். அடுத்து வரும் விண்டோவில் Block என்ற ஒரு லிங்க் இருக்கும் அதை க்ளிக் செய்யவும். அங்கு உள்ள Block பட்டனை அழுத்தினால் அவரின் ஐடி தடை செய்யப்பட்டு விடும். இனிமேல் உங்கள் அப்டேட்களை அவரால் பார்க்க முடியாது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஹர்பஜன் விலகல்

இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.

கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் பார்ம் இன்றி தவித்தார் ஹர்பஜன். டிரெண்ட்பிரிட்ஜ்ஜில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு அடிவயிற்றுப் பகுதியில் காயம்பட்டது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமாக இரண்டு விக்கெட்களே சாய்த்தார் ஹர்பஜன். ட்ரெண்ட்பிரிட்ஜ் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஒன்பது ஓவர்களே வீசினார்.

ஆனால் துடுப்பெடுத்தாடும் போது 46 ரன்கள் சேர்த்தார். எனவே அவரது உடற்காயம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு காயம் பட்டிருக்கிறது என்றும் அவர் 10லிருந்து 12 நாட்கள் ஓய்வாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தின் பின்னணியைப் பற்றிச் சொல்லும் இந்திய கிரிக்கட் ரசிகர்கள் ஹர்பஜன் மிகவும் மோசமான பார்ம் காரணமாக விலக்கப்பட்டிருக்கலாம். இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெறும் வாய்ப்பை அவர் வீணடித்துவிட்டார் என்கின்றனர்

சங்கிலிய மன்னனின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சிலை திறந்து வைப்பு

யாழ். மாநகரசபையினால் யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதி மன்னனான சங்கிலிய மன்னனின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சிலை திறப்பு விழா இன்று காலை 7.15 மணியளவில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பாரம்பரிய கைத்தொழில்; மற்றும் சிறுகைத் தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சங்கிலியனின் சிலையைத் திறந்து வைத்ததுடன் நினைவுக் கல்லையும் திறந்து வைத்தார்.

பிரதம விருந்தினர் உட்பட ஏனைய பிரமுகர்களும் பருத்தித்துறை வீதியில் உள்ள குமார வீதிச் சந்தியில் இருந்து மேளவாத்தியத்துடன் ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். தொடர்ந்து சமயத் தலைவர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றன.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் றெமேடியஸ் உட்பட பாடசாலை மாணவா்கள், அதிபர்கள், யாழ். செயலக அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

03 ஆகஸ்ட் 2011

பின் லாடன் கொலைபற்றிப் புதிய தகவல்கள்

பின் லாடனைக் கொன்றபின் அவரது உடலை ஒரு பையில் போட்டு எடுத்துச் சென்றனர். முதல் வேலையாக அவரது எலும்புக்குள் இருந்து டி.என்.ஏ மாதிரிகளை எடுத்தனர். பின் லாடனைக் கொன்றவுடன் அவர்கள் அனுப்பிய செய்தி "Geronimo E.K.I.A" . பின் லாடனுக்கு அமெரிக்க உளவுத் துறை வைத்த குறியீட்டும் பெயர்Geronimo. E.K.I.A என்பது enemy killed in action எதிரி நடவடிக்கையில் கொல்லப்பட்டான். இது போன்ற பல புதிய தகவல்களை நியூயோர்க்கர் வெளியிட்டுள்ளது. தலைக்கவசத்தில் காணொளிக் கருவிகள் இருந்திருக்கவில்லை. அமெரிக்க சீல் படையினர் தலைக்கவசத்தில் காணொளிக் கருவிகள் இருந்திருக்கவில்லை என இப்போது கூறப்படுகிறது. முன்பு பின் லாடனைக் கொன்ற அமெரிக்க சீல் படையினரின் தலைக் கவசத்தில் காணொளிப் பதிவு-ஒளிபரப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் அவற்றின் மூலம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பின் லாடனுக்கு எதிரான படை நடவடிக்கையை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டது. பின் லாடனின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி இங்குகாணலாம்:பின்லாடன் இருப்பிடம் அறிந்த விபரமும் தாக்குதல் விபரமும். பின் லாடனைக் கொன்றவர் விபரம் யாருக்கும் தெரியாது. பின்லாடனைக் கொன்றவர் யார் என்பது பற்றி பராக் ஒபாமா அறிய முற்படவில்லையாம். அவரது பெயர் இன்றுவரை வெளியிடப்படவில்லை. இது ஒரு குழுவினரின் துணீகர முயற்ச்சி தனிப்பட்ட ஒருவருக்கு மட்டும் அதற்கான பெயரும் புகழும் போய்ச் சேர்வதை விரும்பவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாகவும் இருக்கலாம். 23பேரின் 25நிமிட வேலை. இறுதிப் படை நடவடிக்கையில் நிலம்-நீர்-ஆகாயம் ஆகிய மூன்றிலும் செயற்படும் திறன் கொண்ட அமெரிக்க கடற்படையின் சிறப்புப் பயிற்ச்சி பெற்ற சீல் படையினர் 23பேர் 25 நிமிடத்தில் தங்களுக்கு இட்ட பணியைச் செய்து முடித்தனர். முதற் கோணல் முற்றும் கோணல் அல்ல். தாக்குதலின் முதல் நிமிடத்தில் ஒரு Black Hawkஎன்னும் உழங்கு விமானம்(ஹெலிக்கொப்டர்) விபத்தில் சிக்கி வீழ்ந்தது. அதனால் படை நடவடிக்கை தோல்வியில் முடியுமா என்ற அச்சம் சில கணங்கள் நிலவியது. இறுதியில் தோல்வியே வெற்றியில் முதல் படியானது. தற் கொலைத் தாக்குதலுக்கு எதிராக ஒரு சீல் படையினரின் துணிகரச் செயல். தாக்குதலுக்கு சென்றவர்களின் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது பின் லாடனின் மூன்று மனைவியரில் யாராவது ஒருவராவது தற்கொலை அங்கியுடன் இருப்பார்களா என்பதே. இதிலிருந்து தப்ப சீல் படையினரில் ஒருவர் மூன்று மனைவிகளையும் தனிமைப்படுத்தி தனியாக ஓரிடத்தில் பின் லாடனைக் கொல்லும் வரை தன்னுடன் வைத்திருந்தாராம். பின் லாடனை உயிருடன் பிடிக்க முயலவில்லையாம். நியூயோர்க்கர் மேலும் கூறுகையில் பின் லாடனை உயிருடன் பிடிக்கும் எண்ணம் சிஐஏக்கு இருந்திருக்கவில்லை என்கிறது. ஆனால் பின் லாடனை ஏன் அமெரிக்கா அவர் இருந்த மாளிகையைக் குண்டு வீச்த் தாக்கிக் கொல்லவில்லை என்ற கேள்வி இன்றும் இருக்கிறது. பராக் ஒபாமா பின் லாடன் தங்கி இருந்த அழகிய நகரான அபோட்டாபாத்தில் குண்டு வீச்சால் ஒரு பெரும் குழி ஏற்படுவதை விரும்பவில்லையாம். பராக் ஒபாமா கொடுத்த பரிசு. பின் லாடனின் உடலத்தை பெற்ற படைத் தளபதிக்கு உடலத்தின் உயரத்தை அளப்பதற்கு அவரிடம் அப்போது அளவு நாடா இருந்திருக்கவில்லை. பின் லாடனின் அடையாளங்களில் முக்கியமானது அவரது ஆறடி நாலு அங்குல உயரமே. அதை உறுதி செய்ய முடியாமல் ஒரு திண்டாட்டம் ஏற்பட்டதாம். பின்னர் கடறபடையினரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்தித்த போது தளபதிக்கு ஒரு அளவு நடா ஒபாமாவால் பரிசாகக் கொடுக்கப்பட்டதாம். சீல் படையினர் பாவித்த கருவிகள் Desert digital camouflage gear, laminated map of the compound. silenced Sig Saucer P226 pistol, silenced M4 rifle போன்றவற்றை சீல் படையினர் வைத்திருந்தனர். நம்பமுடியாத பாக்கிஸ்த்தானியர். பின் லாடன் இருந்த மாளிகைக்குள் சுரங்கப்பாதை அமைத்து உள்புகும் திட்டமும் இருந்ததாம். ஆனால் இதற்கான காலம் அதிகம் எடுக்கும். அத்துடன் பாக்கிஸ்தானியரின் உதவியும் தேவைப்படும். பாக்கிஸ்தானியர் இந்த திட்டத்தை அம்பலப்படுத்திவிடுவார்கள் என்பதால் அது கைவிடப்பட்டது. இதுபற்றி குறிப்பிட்டது: There was a real lack of confidence that the Pakistanis could keep this secret for more than a nanosecond. பாக்கிஸ்தானியர் ஒரு நொடியின் பில்லியனில் ஒரு பங்கு நேரமாவது இரகசியத்தைக் காப்பாற்ற மாட்டார்கள்.{ A nanosecond (ns) is one billionth of a second} இரு வாரப் பயிற்ச்சி வட கரோலினாவில் பின் லாடன் தங்கி இருந்த மாளிகை போல் ஒன்று அமைக்கப்பட்டது. வைஸ் அட்மிரல் பில் மக்ரவென் தலைமையில் இரு வாரங்கள் அங்கு 23 சீல் படையினருக்கும் பயிற்ச்சி அளிக்கப்பட்டது. பின்னர் நெவேடாவில் உள்ள ஒரு பாலை வனத்திலும் ஒத்திகை பார்க்கப்பட்டது. உழங்கு வானூர்திகள்(ஹெலிக்கொப்டர்கள்) இதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டன. ரடார்களில் தென்படாமல் இருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. உழங்கு வானூர்திகளில் இருந்து வரும் ஒளி, ஒலி, வெப்பம் போன்றவை பாக்கிஸ்தானியப் படையினரால் உணரப்படாமல் இருக்கும் படியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடைசி நேரத்தில் அஹமட் என்பவர் தாக்குதல் அணியில் 24வது ஆளாகச் சேர்க்கப்பட்டார். மொழி பெயர்ப்பாளராக. அதற்கு முன்பு வானூர்திகளில் இருந்து கயிற்றின் மூலம் இறங்கும் அனுபவமற்றவர் அஹமட் ஆனால் விரைவில் அதைப்பயின்று கொண்டார். இன்னும் ஒரு கெய்ரோ என்னும் நாயும் அணியில் இணைக்கப்பட்டது. அதன் வேலை பின் லாடனின் மாளிகைக்குள் வெளி ஆட்கள் வராமல் பார்த்துக் கொள்வது. கட்டளைப் பணியகங்கள். ஏப்ரல் 26-ம் திகதி ஜேர்மனியூடாக சீல் படையின்ர ஆப்கானிஸ்தான் சென்றனர். இவர்களுக்கான கட்டளைப்பணியங்கள். பெண்டகன், சிஐஏ தலமையகம், ஜலலாபாத்(மக்ரவென் என்னும் வைஸ் அட்மிரல்), இஸ்லாமபத் அமெரிக்கத் தூதுவரகம், என்பவை செயற்பட்டன இவ்ற்றிற்கிடையே காணொளித் தொடரபாடல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. சிஐஏ தலமையக்த்தில் இருந்து நேரடியாக நடவடிக்க்கைகள் பற்றி வெள்ளை மாளிகை போர்-அறைக்கு விளக்கிக் கொண்டிருந்தார். பாக்கிஸ்தானியருடன் போருக்குத் தாயார். சீல் படை நடவடிக்கைக்கு பாக்கிஸ்தானியப் படையினரிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பினால் அதற்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கு அமெரிக்க விமானங்கள் பல தயாராக இருந்தன. படை நடவடிக்கையின் போது சில விமானங்கள் அபோட்டாபாத்தின் மேல் பறந்து கொண்டிருந்தன. Black Hawk என்னும் உழங்கு வானூர்திகளின் செலுத்துனர்கள் ஒளி ஏதும் இன்றி இரவில் பார்க்கும் கண்ணாடி அணிந்தபடி செயற்பட்டனர். அதிகாலை 4-00மணி அப்போதைய சிஐஏ தலவர் பராக் ஒபாமாவிற்கு அறிவிக்கிறார்: சீல் படையினர் பின் லாடனின் மாளிகையை அண்மிக்கிறார்கள். உடனே ஒபாமா எழுந்து தான் இதை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்கிறார். பின் லாடன் மாளிகையின் மேல் 15,000அடி உயரத்தில் மிதந்து கொண்டிருந்த அமெரிக்க ஆளில்லா விமானமூலம் தகவல்கள் பெறப்படுகின்றன. முதற் பலியான தகவல் தொடர்பாளர். சீல் படையினர் முதலில் சிறு பிரிவுகளாகப் பிரிகின்றனர். ஒரு பிரிவினர் பின் லாடனின் மாளிகையின் விருந்திரகத்தில் (guest house) இறங்குகின்றனர். அங்கு பின் லாடனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவரும் பின் லாடன் மற்ற அல் கெய்தாவினருடன் தொடர்பு ஏற்படுத்தப் பயன்பட்டவருமான messenger ஒரு ஏகே47 துப்பாக்கியுடன் மனைவி சகிதம் வருகிறார். இருவரும் உடனே சுட்டுக் கொல்லப்படுகின்றனர். முன் வந்த மூன்றாம் மனைவி மூன்று சீல்கள் ஒரு இரும்புக் கதவை குண்டு வைத்துத் தகர்க்கின்றனர். படிகளில் அவர்கள் ஏறும் போது பின் லாடனின் 23 வயது மகன் ஒரு ஏகே-47 உடன் வருகிறார். அவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். மாடிக்குச் சென்ற சீல் படையினருக்கு தாடியும் நெடிய உருவமும் கொண்ட பின் லாடனை அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கவில்லை. முதலில் பின் லாடனின் மனைவியரில் இருவர் பின் லாடனை மறைக்கின்றனர். இளைய மனைவி அமல் அல் ஃபற்றா முன்னர் நகருகிரார். அவரது காலில் சுடப்படுகிறது. அவர் விழ ஒரு சீல் வீரன் மற்ற இரு மனைவியரையும் கட்டிப் பிடித்துக் கொள்கிறார். அவர் அவர்கள் மூவரையும் பிரித்து தனைமைப்படுத்துகிறார். மனைவியர் தற்கொலை அங்கி அணிந்திருக்கலாம் என்ற பயத்தில் அவர்களை அவர் விலக்கிக் கொள்கிறார். பதினொரு வருடங்கள் பல மில்லியன் டொலர்கள் செலவளித்துத் தேடித்திரிந்த அமெரிக்காவின் முதலாம் எதிரி பில் லாடன் தொழுகைத் தொப்பியும் சல்வார் கம்மீஸும் அணிந்தபடி ஆயுதமின்றி சீல் படையினரின் துப்பாக்கி முனையில். முதலில் நெஞ்சிலும் பின்னர் இடது கண்ணிலும் பின் லாடன் சுடப்படுகிறார். For God and country - Geronimo, Geronimo, Geronimo - கடவுளுக்காகவும் நாட்டிற்காகவும் ஜெரோனிமோ, ஜெரோனிமோ, ஜெரோனிமோ என்று ஒலி பரப்பப்படுகிறது. ஒபாமா முதற் சொன்னது அங்குள்ள அனைத்து சீல் படையினரும் பாதுகாப்பாக வரும்வரை எனக்கு நிம்மதியில்லை என்பதே. பின்னர் சீல் படையினர் மிக விரைவாகச் செயற்படுகின்றனர். பல கணனிகளும் இலத்திரனியல் பதிவேடுகளும் வாரி அள்ளப்படுகின்றன. நீலப் படங்கல் பல அங்கு இருந்தனவாம். இன்னொரு வானூர்தி வந்து பின் லாடனின் டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரிக்கிறது. பின் லாடனின் எலும்பு மொச்சை எடுக்கப்படுகிறது. ஜலலா பாத்தில் பின் லாடனின் உடலை வைஸ் அட்மிரல் மக்ரவன் அடையாளம் காண்கிறார். பின் லாடனின் உடல் ஆப்கானிஸ்தான் கொண்டு செல்லப்படுகிறது. சவுதி அரேபியாவிற்கு அறிவிக்கப்படுகிறது. பின் லாடனைக் கொன்ற செய்தி சவுதி உளவுத் துறைக்கு அறிவிக்கப்படுகிறது. அவரது உடலை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று வினவப் பட்டது. அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. உடல் பின்னர் கடறபடைக் கப்பல் U.S.S CARL VINSON இற்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் வீசப்பட்டது. நாயைச் சந்திக்க விரும்பிய பராக் ஒபாமா சீல் பிரிவினரின் படை நடவடிக்கையில் நாயும் பங்கு பெற்றதை அறிந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தான் அந்த நாயைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.

ஹர்பஜன் - உலக சாதனை??? யோவ் காமெடி பண்ணாதீங்கய்யா

ஜூலை 27 குமுதத்தில் வந்திருக்கும் பேட்டி ஒன்றில் - டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்தவர் முத்தையா முரளிதரன். ஆனால் இன்று அவர் தூக்கத்தையே ஒருவர் கெடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் ஹர்பஜன் சிங். ஹர்பஜன் சிங்கைப் பார்த்து முரளிதரன் பயப்படுவதற்குக் காரணம் சாதனை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற முரளிதரனின் சாதனையை ஒருவர் வீழ்த்த முடியும் என்றால் அது ஹர்பஜன் சிங்காகத் தான் இருக்க முடியும். தனது 96 வது டெஸ்ட் போட்டியிலேயே 404 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருக்கிறார் . இது இப்படியே தொடர்ந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை நிச்சயம் முரளிதரனிடம் இருந்து இவர் தட்டிப் பறிப்பார். கூக்லி, தூஸ்ரா என்று சுழற்பந்து வீச்சில் உள்ள வகைகளில் புதிதாக 'தீஸ்ரா' என்ற வகையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறாராம் ஹர்பஜன் சிங். ஸ்பின் பவுலிங்கில் பவுன்சர் வீசும் முறைதான் தீஸ்ரா. இந்த 'தீஸ்ரா' முரளிதரனின் சாதனையை பாஜி முறியடிக்க ஆயுதமாக இருக்கும் என்று நம்புவோம். டால்மேன் ---------------------------------------------------------------
கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் கூடுதலாக வெட்டியாகப் பொழுதைக் கழித்தவேளையில் கையில் கிடைத்த நாளேடுகள், சஞ்சிகைகள் எல்லாவற்றையும் வாசித்துத் தீர்த்தேன்..
அதில் குமுதம் கொஞ்சம் விசேடம்... அதிலே இருந்த ஹர்பஜன் சிங்கின் பேட்டி ஒன்று தான் மேலே தந்திருப்பது.. அடப் பாவிப் பயலே.. இப்படியும் ஒரு கணிப்பா? எப்போது அணியிலிருந்து தூக்கப்படுவார் என்று இருக்கும் ஒரு சப்பை பந்துவீச்சாளருக்கு இப்படியொரு சப்பறமா? (இலங்கைக் கோயில்களில் சாமிகள் பயணிக்கும் அலங்கார வாகனம்)
இங்கிலாந்து தொடரை ஒரு தடவை தானும் பார்க்காதவராக இருந்திருப்பாரோ இதை எழுதிய டால்மேன்? ஹர்பஜன் - சுழல் பந்துவீச்சாளர் என்று சேர்த்து எழுதினால் தான் இவர் சுழல் பந்து தான் வீசுகிறார் என்று இப்போது சொல்ல முடிகிறது. இந்திய அணிக்குள் நுழைந்தால் இவரை ஓரம் கட்டிவிடக் கூடியதாக மூன்று திறமையான சுழல்பந்து வீச்சாளர்கள் எப்போது வாய்ப்பு எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. அஷ்வின், மிஸ்ரா, ஓஜா.. அடுத்த தொடர்களே நிச்சயமில்லாத முப்பது பராயம் தாண்டிய ஒரு பந்துவீச்சாளர் இன்னும் நானூறு விக்கெட்டுக்களை எடுப்பதா? கடைசி மூன்று வருடங்களில் 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்த பாஜி, கைப்பற்றியுள்ள விக்கெட்டுக்கள் 92. அதிலும் சராசரி 36.80. இப்போதைய தரவுகளை வைத்துப் பார்த்தால் முரளியின் சாதனையை உடைக்க ஹர்பஜன் இன்னும் இதேயளவு டெஸ்ட் போட்டிகளை விளையாட வேண்டும்.. அதற்கு எட்டு வருடங்களாவது வேண்டும்.. முடிகிற காரியமா? ஹர்பஜனின் தரவுகள்.....
MatInnsBallsRunsWktsBBIBBMAveEconSR4w5w10
Tests9818027651130844068/8415/21732.222.8368.116255
year 2009610306.047875296/637/10230.172.8563.310
year 20101221612.01031750435/598/12340.692.8585.310
year 2011612259.443761207/1207/19538.052.9377.910
விரிவாக அலசி ஆராய்வதற்கு.. இந்தப் பதிவை வாசித்த பின் கீழ்க்காணும் சுட்டியை சொடுக்குங்கள்..
என்னைப் பொறுத்தவரை ஹர்பஜன் ஐந்நூறு என்ற இலக்கை அடையவே தவழவேண்டியிருக்கும்.. அதன் பின் சக இந்திய சுழல் பந்துவீச்சாளர்அணில் கும்ப்ளேயின் சாதனை.. அதற்கே வாய்ப்புக்கள் குறைவு.. இதற்குள் முரளியின் 800.. எதோ பழமொழி சொல்வார்களே.. கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன்.... அப்படி இருக்கு இந்த குமுதம் விஷயம்.. சுழல் பந்துவீச்சாளர்கள் பொதுவாக முப்பது வயதைத் தாண்டிய பின்னரேயே முதிர்ச்சியும் பக்குவமும் அடைவது வழமை.. அண்மைக்கால சுழல்பந்து மன்னர்களான முரளிதரன், வோர்ன், கும்ப்ளேஎன்று அனைவருமே தம் முப்பது வயதுக்கு பிறகு விக்கெட்டுக்களை மளமளவென எடுத்தோர் தான். ஆனால் அவர்கள் ஹர்பஜனின் இப்போதைய நிலைபோல எந்தவொரு கட்டத்திலும் அணியில் இடம் பறிபோகும் அபாயத்தில் இருக்கவில்லை. அடுத்து இப்போது ஹர்பஜன் சிங் எடுத்த விக்கெட்டுக்களில் பாதியளவைக் கூட எடுத்திராத இங்கிலாந்தின் கிரேம் ஸ்வானைத் தற்போது விளையாடும் சிறந்த சுழல் பந்து வீச்சாளராக விமர்சகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள். ஹர்பஜன் சிங்கின் பெறுபேறுகளைப் பார்த்தால் அதுவும் நியாயம் என்றே தோன்றும்..
சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் தவிர வேறு எந்த அணிகளுக்கு எதிராகவும் இவரது டெஸ்ட் பந்துவீச்சு சோபிக்கவில்லை.. முன்பு ஆஸ்திரேலியாவின் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அண்மைக்காலத்தில் அவர்களுடனும் திணறுகிறார். இந்தியா மற்றும் மிகப் பலவீன அணிகளான நியூ சீலாந்து, சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் தவிர பாஜ்ஜியின் பாச்சா வேறு எந்த நாட்டு ஆடுகளங்களிலும் பலிக்கவில்லை. பாகிஸ்தானில் வீசிய 486 பந்துகளில் விக்கெட்டுக்கள் இல்லை. இலங்கை, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஹர்பஜனின் பந்துவீச்சு சராசரி 45க்கும் மேல்.. அதற்குள் அன்றூ சைமண்ட்ஸ் 'குரங்கு' சர்ச்சை, ஸ்ரீசாந்த கன்னத்தில் அறை சர்ச்சை, அண்மைய விஜய் மல்லையா + தோனி விளம்பர சர்ச்சை என்று இனியும் மாட்டிக் கொண்டால் இன்னும் விளையாடும் ஆயுள் குறையலாம்.. இப்போதைக்கு விளையாடும் எவராலும் எட்ட முடியாத விக்கெட் உலக சாதனையை ஹர்பஜன் தான் எட்டக் கூடியவர் என்று ஒரு மாயையை சில இந்திய ஊடகங்கள் ஏற்படுத்தக் காரணமும் முரளிதரன்.. முரளிதரன் எவ்வளவுக்கெவ்வளவு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரோ, எவ்வளவுக்கெவ்வளவு இரக்க குணம் படைத்த மனிதரோ, அவற்றை விட அதிகமான ஓட்டை வாயுடையவர். இவர் வாயை சும்மா கிளறினாலே ஸ்கூப் செய்திகள் பலருக்கும் கிடைத்துவிடும்..
கழக மட்டத்தில் விளையாடும் நேரம் முதல் இலங்கைத் தேசிய அணியில் இடம் கிடைத்து நீண்ட காலம் ஒரு ஊமை போலவே மிக அமைதியாக இருந்ததாலோ என்னவோ, டரேல் ஹெயார் சர்ச்சைக்குப் பிறகு பேட்டிகள் கிடைக்கும் போதெல்லாம் வெளுத்துவாங்கிப் பக்கங்களையும் வம்பு கேட்கும் காதுகளையும் நிரப்ப ஆரம்பித்தார். அவற்றுள் பல அந்தந்தக் காலகட்ட தலைப்புச் செய்திகளாகவும் மாறிப் போயின.. முரளியின் சில பிரபல உளறல்கள்.. அல்லது உணர்ச்சிவசப்பட்ட கூற்றுக்கள்..
I am not a captaincy material - ஆஸ்திரேலியாவில் வைத்து வழங்கிய பேட்டி ஒன்றில்..
அடுத்து தலைமைப் பதவி வழங்கப்படலாம் என்றிருந்த நிலையில் இவரது பேட்டியும் அதற்கு மேலதிகாம தனக்குப் பொறுப்பு சுமக்க விருப்பமில்லை என்ற முரளியின் 'மனம் திறந்த' அறிக்கையும் வந்தது. இதே போல மிகுந்த தன்னடக்கத்துடன் ஷேன் வோர்ன் தன்னை விடவும் சிறந்த ஸ்பின்னர் என்று முரளி சொன்னதும் உண்டு. இதே போலத் தான் தான் ஓய்வு பெற்ற பின் கொடுத்த பேட்டியிலும் சும்மா இருக்க முடியாமல் "எனது சாதனையை உடைக்கக் கூடியவர் ஹர்பஜன் சிங் தான்" என்று கூறிவிட்டார். வேறு யாரும் கண்ணுக்கெட்டிய தொலைவில் தெரியாததால் கிட்ட இருந்த (நாடுகளின் தூரத்தை நான் சொல்லவில்லை) சிங்கை சொல்லிவிட்டாரோ? இது தான் இந்திய ஊடகங்கள் அடுத்த என்று ஹர்பஜனை உசுப்பேற்ற காரணம்.. ஆனால் முரளிதரனின் அண்மைய இரு ஊடகப் பேட்டிகள் கிளப்பிய பரபரப்பும் அனைவரும் அறிந்ததே.. இலங்கை கிரிக்கெட் வீரர்களை IPL 2011 இல் விளையாட விடச் சொல்லி.. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இலங்கைக்கான சுற்றுலாவுக்கு செல்லக் கூடாது என்று எதிர்ப்பு அங்கு வாழும் தமிழரால் எழுப்பப்பட்ட போது பேசாமல் இருந்திருக்கலாம்.. தேவையற்று கருத்து சொல்லப் போய் கடும் எதிர்ப்பை வாங்கிக் கட்டிக் கொண்டார். முரளிக்கும் பேட்டிகளுக்குமான சர்ச்சை தொடர்கிறது.. இதனால் இவர் சத்தமில்லாமல் செய்கின்ற பல நல்ல காரியங்களும் தெரியாமலேயே போய்விடுகின்றன.. ஆனால் ஒரேயொரு காரியத்தை இவர் செய்யாமல் விட்டதற்குப் பாராட்ட விரும்புகிறேன்.. கிளிநொச்சியில் அண்மையில் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு மைதானத்தைத் திறந்து தமிழ் மக்களுக்கு அன்பளிப்பு செய்தாரே.. (இந்தியப் பின்னணிப் பாடகர்கள் இசை நிகழ்ச்சிக்காக வந்து விமான நிலையத்துடன் திரும்பிப் போனதும் இதே மைதானத் திறப்பு விழாவுடன் நடக்க இருந்த பிரசாரக் கூட்டத்துக்குத் தான்) அந்த மைதானத்துக்கான அதிக செலவைப் பொறுப்பேற்றவர் முரளி. ஆனாலும் அரசியல்மயப்படுத்தப்பட்ட விழாவை முரளி தவிர்த்ததற்கே இந்தப் பாராட்டுக்கள்.... இன்னோர் விஷயம்.. தீஸ்ரா... இது ஏதோ ஹர்பஜன் கண்டுபிடித்த புதுவித அணுகுண்டு, ஐதரசன் குண்டு என்று குமுதம் கட்டிவிட்ட கதையும் ஆகாசப் புழுகு.... ஏற்கெனவே தீஸ்ரா வந்தாச்சு... முரளிதரன், ஸ்வான், இலங்கையின் சுராஜ் ரண்டிவ், ஏன் இந்தியாவின் இளைய நட்சத்திரம் அஷ்வினும் கூட இந்த தீஸ்ராவைப் பயன்படுத்துகிறார்கள்.. ஹர்பஜன் பயன்படுத்தியதாக நான் பார்த்ததும் இல்லை;அறிந்ததுமில்லை. ஆனால் இந்து சுழல் பந்துவீசும் பவுன்சர் என்று குறிப்பிட்டது தவறு.. நேராக சென்று திடீரென அதிக கோணத்தில் திரும்பும் பந்து இது. அதிகமாகப் பாவனையில் இல்லாததால் பலரும் இதுபற்றி அறிந்திலர். ஆனாலும் ஹர்பஜன் சிங் முரளியின் உலக சாதனையை முறியடிப்பார் என்பது.... ஹா ஹா ஹா.. அண்ணே குமுதம் டால்மேன் அண்ணே.. சும்மா ஜோக் அடிக்காதீங்க...
(ஒரு தடவைக்கு நான்கு தடவை இது நகைச்சுவை/கற்பனைப் பேட்டியா என்றும் பார்த்துவிட்டேன்) யாராவது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் பந்துவீசி பார்த்தீங்க? பேசாமல் அடுத்த போட்டியில் சேவாக்(விளையாடினால்), ரெய்னா, யுவராஜ் ஆகியோரின் சுழலை நம்பி இறங்கலாம்.. ஒன்றிரண்டு விக்கேட்டுக்களாவது விழும்....
Publish Post
THANKS-LOSHAN in kalam
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com