Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

05 ஆகஸ்ட் 2011

யாழ் மினிகளில் காட்டப்படும் ஆபாசக்காட்சிகள்; அலைமோதும் மாணவர் கூட்டம்

யாழ் குடாநாட்டில் மாணவர்களை இலக்காகக் கொண்டு மினித் தியேட்டர்களில் ஆபாசக்காட்சிகள் காட்டப்படுகின்றன. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் மினிசினிமாத் தியேட்டர்களுக்கென்று தனி வரலாறே உண்டு.

90களில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளைகளில் தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து டெக்கில் ஜெனரேட்டர் மூலம் படம் காட்டுகின்ற கொட்டகைகள் யாழ்ப்பாணத்தில் இருந்தன. இவை மினிசினிமாக்கள் என்று அழைக்கப்பட்டன.

அக்காலப்பகுதிகளில் பெரும்பாலான சினிமா படங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட குறும்படங்களும் போர் எழுச்சிப் படங்களும் காண்பிக்கப்பட்டு வந்தன.

அங்கு காட்டப்படுகின்ற சினிமாப் படங்களில் கூட புலிகளின் திரைப்படத் தணிக்கைக் குழுவினரால் ஆபாசக் காட்சிகள் வசனங்கள் என்பன வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வந்தன.

யாழில் திரையரங்குகள் இருந்தாலும் மினிசினிமாக்களும் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டுவருவது யாழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் யாழ் குடாநாட்டில் தற்போது மினித்தியேட்டர்களில் ஆபாச மினிசினிமாக்கள் காட்டப்பட்டு வருகின்றமை புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் பல மினி தியேட்டர்கள் ஆபாசப்படம் ஓட்டியதற்காக காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டாலும் யாழ் நகரப்பகுதியில் இரு மினிகள் தொடர்ந்து இயங்கிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் ஒன்றுதான் கஸ்தூரியார் வீதியில் ராஜா திரையரங்கிற்கு முன்னால் இயங்கிவந்த மினி சினிமா. நெடுநாட்களாக காவல்துறையினரின் கண்களில் மண்ணைத்தூவி ஆபாசப்படங்களை இவர்கள் ஓட்டிவந்தாலும் அண்மையில் காவல்துறையினர் அந்த மினியை அடையாளம் கண்டு உரிமையாளரையும் கைதுசெய்து மினிக்கும் சீல் வைத்தார்கள்.

இரண்டாவது “செல்வா மினி”. இந்த பெயரைத் தெரியாத மாணவர்களே இருக்கமுடியாது.

அவ்வளவு பிரபலம் வாய்ந்தது. ஸ்ரான்லி வீதியில் அமைந்திருக்கிறது இந்த சினிமாக் கொட்டகை.

இந்த மினியில் வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும். காரணம் இந்த மினிக்கு அருகாமையில் நான்கு பிரபல தனியார் கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன.

அதிலும் இந்த கல்விநிலையங்கள் பஸ் ஸ்ராண்டிற்கு அருகில் அமைந்திருப்பதால் வெகு தொலைதூரங்களில் இருந்து வரும் மாணவர்கள்தான் இங்கு அதிகம்.

இவ்வாறு தொலை தூரங்களில் இருந்து கல்வி கற்பதற்காக வரும் மாணவர்களை கவர்ந்திழுத்து பெரு லாபம் ஈட்டிவருகிறார்கள் இவர்கள்.

அதுவும் மாணவர்களை கவர்ந்திழுக்க இவர்கள் கையாளும் தந்திரம் கட்அவுட். முன்னர் மினிக்கு முன்னாலும் பழைய வின்சர் திரையரங்கிற்கு முன்னும் கட் அவுட்டை வைத்தார்கள்.

இப்போது வின்சர் தியேட்டரில் “சதோசா’ இயங்குவதால்; அங்கு வைக்கமுடியாது போய்விட்டது.

கட் அவுட் கூட பார்ப்பதற்கு ஆபாசமாகத்தான் இருக்கும். அதிலும் இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் சிக்னல் என்ன தெரியுமா? கிழமை நாட்களில் கட்டவுட்டில் இருக்கும் நடிகைகளின் ஆடைமீது வர்ணம் பூசப்பட்டிருந்தால் அன்று கட்டாயம் ஆபாச படம்தான்.

“மர்மத்தீவில் மந்திரக் கன்னி, கன்னித்தீவு கன்னிகள், அரண்மனை அழகி, ராத்திரிநேர தேவதைகள்” என்ற விதத்திலேயே படத்தின் தலைப்புகள் அமைந்திருக்கும். ஆனால் உள்ளே ஓடுவது வேறு படம்.

அதாவது “பிட்டுப்படம்” வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவே இவ்வாறான தலைப்புகள் வைக்கப்பட்டாலும் பல வேளைகளில் எம்.ஜி.ஆரின் கட் அவுட்டுடன்கூட ஆபாசப்படம் உள்ளே ஓடும்.

இது தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் மாலை 6 மணிக்கு ஆபாசக்காட்சியொன்று பிரத்தியேகமாக வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் காட்டப்படுகிறது.

இது முழுக்க முழுக்க ஆங்கில ஆபாசப்படம் என்றாலும் சிங்கள மொழியில் சப் டைட்டில் இடப்பட்டிருப்பதன் மூலம் இப்படங்களுக்கான ஏக விநியோகஸ்தர்கள் யாராக இருக்கமுடியுமென்று உங்களால் ஊகிக்கமுடியும்.

வாடிக்கையாளர்கள் தவிர ஏனையவர்களுக்கு இந்த காட்சியில் அனுமதியில்லை. அது மட்டுமல்லாது இந்த இடத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கூடுவதாகவும் தெரியவந்துள்ளது.

மினியில் ஆபாசப்படம் போகும் போது இங்கு ஓரினச் சேர்க்கையாளர்கள் தமது லீலையில் மெய்மறந்து போயிருப்பர். 13 தொடக்கம் 18, 20 வயதிலுள்ளவர்களே அதிகமாக இங்கு வருகின்றனர்.

எப்பொழுதும் இவர்களது முதுகில் புத்தகப் பை தொங்கும். மற்றது 45, 50 வயதுக்கு மேற்பட்ட குடும்பஸ்தர்களும் இங்கு வருகை தருவது மட்டுமல்ல ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபடுவது கன்றாவியாக இருக்கிறது.

அதிகமானோர் மதுபோதையில் வருவதைக் காணக்கூடியதாகவிருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் உரிமையாளர் பாஷையூரைச் சேர்ந்தவரெனவும் தமிழ்க் கட்சியொன்றின் செல்வாக்கானவரென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது,

“இங்கு இப்படியான விடயங்கள் மோசமாக நடக்கின்றன. நீங்கள் இதுபற்றிய விடயங்களை வெளிப்படுத்தினால் நான் யாழ் சிரேஸ்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கும், யாழ் மாநகர சபைக்கும் தெரியப்படுத்தி இதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். எனக்கு நடவடிக்கை எடுக்கின்ற பொறுப்பு இருப்பதால் நான் என்ன நடவடிக்கை எப்படி எடுப்பேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் விடயத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவாருங்கள்” என்று தெரிவித்தார்.

நன்றி: “இருக்கிறம்” ( 01-08-2011 )

யாழ்ப்பாணத்தில் தற்போது மண்கவ்விய கட்சியைச் சேர்ந்தவர்களின் கைக்கூலிகளே இப்படியான ஆபாசப் படம் காட்டுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.

அவர்களின் இலக்கு இளைய சமுதாயம் குறிப்பாக மாணவர்கள். அவர்களை இப்படியான ஆபாசப்படங்களுக்கு அடிமையாக்கி அவர்களின் போராட்ட குணத்தை மழுங்கச் செய்து அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் இந்த சிங்களத்தின் அடிவருடிகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சியினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த போது தியேட்டரை விட்டு வெளியே வராமல் பதுங்கி இருந்தவர்கள் தற்போது தொழில் முறையாக ஆபாசப் படங்களைத் திரையிட்டு மாணவர்களை கெடுத்து குட்டிச் சுவராக்கி சுளை சுளையாய் சம்பாதிக்கிறார்கள்.

புலிகள் இருந்த போது கம்பீரமாக இருந்த யாழ்ப்பாணம் இன்று தமிழர்களின் கலாச்சாரம், தொன்மையான சின்னங்கள், பண்பாடு ஆகியவற்றைத் தொலைத்து கெட்டொழிந்து போய் கிடக்கிறது.

ஆட்சியாளர்களுக்கு இப்படியான விடயங்கள் தெரிந்தும் கண்ணை மூடி வாய் பொத்தி காணப்படுகிறார்கள். மீண்டு வருமா பழைய யாழ்ப்பாணம்?

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com