உச்சிதனை முகர்ந்தால் - தமிழீழத்தின் 13 அகவைச் சிறுமி ஒருத்தி, கொடிய சிறீலங்கா படைகளின் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் கதை பற்றிய திரைப்படம். இந்த திரைப்படத்தின் இறுவட்டு வெளியிட்டு வீழா (31.07.2011) லண்டன் Fஐர்fஇஎல்ட் அரங்கத்தில் இடம்பெற்றது. ஈழத்துப் போராளி ஒருவர் தமிழ்நாடுட்டுக்குத் தப்பிச் சென்று மருத்துவம் பெறும் �காற்றுக்கென்ன வேலி� கதையை திரைப்படமாக்கி, இந்திய திரைபடத் தணிக்கைக்குழுவுடன் போராடி வெளியிட்ட இயக்குனர் புகழேந்தி தங்கராஜனின் இயக்கத்திலும், தமிழீழத்தின் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஐயாவின் பாடல் வரிகளிலும், இசையமைப்பாளர் டி.இமானின் இசையிலும் வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் சத்தியராஜ், நாசர், நடிகை சங்கீதா, சிறுமி நீநிகா ஆகியோர் நடித்துள்ளனர். நோர்வேயில் வசிக்கும் ஈழத்துத் தயாரிப்பாளர்களின் முயற்சியில் வெளிவரவுள்ள உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் இறுவட்டு வெளியிட்டு வீழாவில் தமிழின உணர்வாளர், நடிகர் சத்தியராஜ், மற்றும் அண்மையில் சிறீலங்கா சென்று மகிந்த அரசாங்கத்தின் பரப்புரைக் கூட்டத்தில் பாட மறுத்து, தமிழ் நாடு திரும்பிய பாடகர் கிறிஸ் ஆகியோர் ஆற்றிய உரையின் ஒலி வடிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.