Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

02 ஆகஸ்ட் 2011

இந்திய அணிக்கு இன்னொரு "அடி * பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டம் * இங்கிலாந்து மீண்டும் அபாரம்

நாட்டிங்காம் டெஸ்டில் டிராவிட், லட்சுமண் உள்ளிட்ட "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இந்திய அணி, இங்கிலாந்திடம் 319 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. "ஆல்-ரவுண்டராக அசத்திய டிம் பிரஸ்னன், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். தற்போது தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி, "ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிடம் இருந்து "நம்பர்-1 இடத்தை பறிக்க காத்திருக்கிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரில் 1-0 என்ற முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாட்டிங்காமில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 221, இந்தியா 288 ரன்கள் எடுத்தன. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 441 ரன்கள் எடுத்திருந்தது. பிரஸ்னன் 90 ரன்: நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. பிரவீண் குமார் பந்தில் பிரையர்(73) அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஸ்டூவர்ட் பிராட், ரெய்னா சுழலில் அடுத்தடுத்து இரண்டு இமாலய சிக்சர் அடித்தார். பிராட்(44) ரன் அவுட்டானார். அபாரமாக ஆடிய டிம் பிரஸ்னன் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். இவர் 90 ரன்களுக்கு பிரவீண் குமார் வேகத்தில் வீழ்ந்தார். இஷாந்த் பந்தில் சுவான்(3) வெளியேறினார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 544 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு 478 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின் கடின இலக்கை விரட்டிய இந்திய அணி எடுத்த எடுப்பிலேயே ஆட்டம் கண்டது. "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என ஆடினர். பொறுப்பற்ற "ஷாட் அடித்த இவர்கள், ஒற்றை இலக்கத்தில் வெளியேறி வெறுப்பேற்றினர். தூணாக நிற்பார் என எதிர்பார்க்கப்பட டிராவிட்(6), ஸ்டூவர்ட் பிராட் பந்தில் காலியானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு அதிர்ச்சி. இம்முறை ஆண்டர்சன் வேகத்தில் லட்சுமண்(4) போல்டானார். இதற்கு பின் டிம் பிரஸ்னன் விக்கெட் வேட்டை நடத்தினார். இவரது பவுன்சரில் முகுந்த்(3), ரெய்னா(1) வீழ்ந்தனர். பின் யுவராஜ்(8), தோனியை(0) அடுத்தடுத்து அவுட்டாக்கினார். இதையடுத்து "ஹாட்ரிக் வாய்ப்பு காத்திருந்தது. ஆனால், ஹர்பஜன் பவுண்டரி அடிக்க, பிரஸ்னன் வாய்ப்பு பறிபோனது. சச்சின் ஆறுதல்: இதற்கு பின் சச்சின், ஹர்பஜன் இணைந்து சிறிது நேரம் போராடினர். டெஸ்ட் போட்டிகளில் தனது 60வது அரைசதம் அடித்த சச்சின்(56), ஆண்டர்சன் வேகத்தில் அவுட்டானார். இதையடுத்து சர்வதேச அளவில் 100வது சதம் அடிக்கும் இவரது கனவு மீண்டும் தகர்ந்தது. பிரஸ்னன் வீசிய போட்டியின் 38வது ஓவரில் நான்கு பவுண்டரி அடித்த ஹர்பஜன், அவரது அடுத்த ஓவரில் 46 ரன்களுக்கு வெளியேறினார். இதையடுத்து டெஸ்ட் அரங்கில் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் பிரஸ்னன். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய பிரவீண் குமார் 25 ரன்களுக்கு ஆண்டர்சன் பந்தில் போல்டானார். ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஸ்ரீசாந்த்(0) போல்டாக, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, படுமோசமான தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே லார்ட்சில் வீழ்ந்த இந்திய அணி, தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி பர்மிங்காமில் துவங்குகிறது. ----------- முதலிடத்துக்கு ஆபத்து டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் இந்திய அணி(125 புள்ளி) முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தென் ஆப்ரிக்கா(118), மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து(117) அணிகள் உள்ளன. தற்போதைய இந்தியாவுக்கு எதிரான தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வெல்லும் பட்சத்தில் முதலிடத்துக்கு முன்னேறலாம். இதற்கு அடுத்த இரு போட்டிகளில் குறைந்தபட்சம் டிரா செய்தால் போதும். அதே நேரத்தில் அடுத்த இரண்டு போட்டிகளில் வென்று, தொடரை சமன் செய்தால், இந்தியா முதலிடத்தில் நீடிக்கலாம். --------------- மோசமான தோல்வி நேற்று 319 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக தனது மோசமான தோல்வியை பதிவு செய்தது. இதற்கு முன் 1990ல் நடந்த லார்ட்ஸ் டெஸ்டில் 247ல் ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. ஸ்கோர் போர்டு முதல் இன்னிங்ஸ் இங்கிலாந்து 221 இந்தியா 288 இரண்டாவது இன்னிங்ஸ் இங்கிலாந்து ஸ்டிராஸ்(கே)தோனி(ப)ஸ்ரீசாந்த் 16(52) குக்(கே)யுவராஜ்(ப)இஷாந்த் 5(11) பெல்(கே)லட்சுமண்(ப)யுவராஜ் 159(206) பீட்டர்சன்(கே)தோனி(ப)ஸ்ரீசாந்த் 63(120) மார்கன்(கே)தோனி(ப)பிரவீண் 70(88) பிரையர்(கே)தோனி(ப)பிரவீண் 73(60) டிராட்(கே)டிராவிட்(ப)பிரவீண் 2(10) பிரஸ்னன்(கே)டிராவிட்(ப)பிரவீண் 90(118) பிராட்-ரன் அவுட்(சப்ஸ்-சகா) 44(32) சுவான்(கே)சப்ஸ்-சகா(ப)இஷாந்த் 3(12) ஆண்டர்சன்-அவுட் இல்லை- 1(15) உதிரிகள் 18 மொத்தம்(120.2 ஓவரில், ஆல் அவுட்) 544 விக்கெட் வீழ்ச்சி: 1-6(குக்), 2-57(ஸ்டிராஸ்), 3-219(பீட்டர்சன்), 4-323(பெல்), 5-329(மார்கன்), 6-339(டிராட்), 7-458(பிரையர்), 8-540(பிராட்), 9-540(பிரஸ்னன்), 10-544(சுவான்). பந்துவீச்சு: பிரவீண் 36-5-124-4, இஷாந்த் 29.2-4-131-2, ஸ்ரீசாந்த் 27-5-135-2, யுவராஜ் 11-0-51-1, ஹர்பஜன் 9-1-47-0, ரெய்னா 8-0-42-0. இரண்டாவது இன்னிங்ஸ் இந்தியா அபினவ் முகுந்த்(கே)ஸ்டிராஸ்(ப)பிரஸ்னன் 3(41) டிராவிட்(கே)பிரையர்(ப)பிராட் 6(12) லட்சுமண்(ப)ஆண்டர்சன் 4(7) சச்சின்-எல்.பி.டபிள்யு.,(ப)ஆண்டர்சன் 56(86) ரெய்னா(கே)சப்ஸ்-எல்ஸ்டன்(ப)பிரஸ்னன் 1(5) யுவராஜ்(கே)குக்(ப)பிரஸ்னன் 8(32) தோனி-எல்.பி.டபிள்யு.,(ப)பிரஸ்னன் 0(1) ஹர்பஜன்(கே)சப்ஸ்-எல்ஸ்டன்(ப)பிரஸ்னன் 46(44) பிரவீண்(ப)ஆண்டர்சன் 25(25) இஷாந்த்-அவுட் இல்லை- 8(25) ஸ்ரீசாந்த்(ப)பிராட் 0(8) உதிரிகள் 1 மொத்தம் (47.4 ஓவரில், ஆல் அவுட்) 158 விக்கெட் வீழ்ச்சி: 1-6(டிராவிட்). 2-13(லட்சமண்), 3-31(அபினவ்), 4-37(ரெய்னா), 5-55(யுவராஜ்), 6-55(தோனி), 7-107(சச்சின்), 8-129(ஹர்பஜன்), 9-153(பிரவீண்), 10-158(ஸ்ரீசாந்த்). பந்துவீச்சு: ஆன்டர்சன் 17-3-51-3, பிராட் 14.4-5-30-2, பிரஸ்னன் 12-2-48-5, சுவான் 3-0-21-0, பீட்டர்சன் 1-0-7-0.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com