இங்கிலாந்து இளவரசர் வில்லியம்மை திருமணம் செய்த பின்னர் கேத் மிடில்டனுக்கு அரசக் குடும்ப அந்தஸ்து கிடைத்து உள்ளது. பல ஆயிரம் ரசிகர்களும் உருவாகி உள்ளனர். அதே நேரத்தில் அவருக்கு தீவிரவாதிகள், கடத்தல்காரர்கள் அச்சுறுத்தலும் உள்ளது. ஆட்கடத்தல் நபர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள 29 வயது கேத்க்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. எஸ்.ஏ.எஸ் எனப்படும் சிறப்பு பயிற்சி கேத் மிடில்டனுக்கு அளிக்கப்படுகிறது. கேம்பரிட்ஜ் இளவரசியான கேத் மிடில்டனுக்கு உளவியல் மற்றும் உடல் ரீதியான ஆள் கடத்தலிலிருந்து தப்பிக்க கடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிரிட்டன் றொயல் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள், அபாயகரமான நாடுகளில் பணியாற்றும் பிரிட்டன் நபர்களுக்கு இந்த சிறப்பு எஸ்.ஏ.எஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. எதிர்பாராத நிகழ்வுகளை எதிர் கொள்வதற்கு தனி நபர் பாதுகாப்பு பயிற்சியை எஸ்.ஏ.எஸ் அல்லது எம் 15 உறுப்பினர்கள் அளிக்கிறார்கள். இந்தப் பயிற்சி பல மாதங்கள் நீடிக்கும். கேத் மிடில்டனுக்கு நீண்ட கால பயிற்சி அளிக்கப்படுகிறதா? அல்லது குறுகிய கால பயிற்சியா என்பது தெரியவில்லை. அரசக் குடும்பத்தை சேர்ந்த ராணி, இளவரசி டயானா இளவரசர் வில்லியம், இளவரசர் சார்லஸ் ஆகியோரும் இந்த விசேட பயிற்சி எடுத்துள்ளனர் |