இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் பார்ம் இன்றி தவித்தார் ஹர்பஜன். டிரெண்ட்பிரிட்ஜ்ஜில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு அடிவயிற்றுப் பகுதியில் காயம்பட்டது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமாக இரண்டு விக்கெட்களே சாய்த்தார் ஹர்பஜன். ட்ரெண்ட்பிரிட்ஜ் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஒன்பது ஓவர்களே வீசினார். ஆனால் துடுப்பெடுத்தாடும் போது 46 ரன்கள் சேர்த்தார். எனவே அவரது உடற்காயம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு காயம் பட்டிருக்கிறது என்றும் அவர் 10லிருந்து 12 நாட்கள் ஓய்வாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணியைப் பற்றிச் சொல்லும் இந்திய கிரிக்கட் ரசிகர்கள் ஹர்பஜன் மிகவும் மோசமான பார்ம் காரணமாக விலக்கப்பட்டிருக்கலாம். இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெறும் வாய்ப்பை அவர் வீணடித்துவிட்டார் என்கின்றனர் |