கணினியைப் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரே பயம் வைரஸ் தான். வைரஸ் எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்றே தெரியாது. சிலரின் கணினிகளில் வைரஸ் தாக்கிய விசயமே தெரியாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பர். வைரஸ்களின் நோக்கமே உங்கள் கணினியை செயல் இழக்க வைத்து பாழ்படுத்துவதே. வைரஸ்கள் வந்த பின்னர் கணினியை திரும்ப நல்ல நிலைக்கு மீட்பதை விட முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது தான் நலம். கணினியை பாதுகாப்பாக வைக்க என்ன வழிகள் என்று பார்ப்போம்.
கீழ்வரும் மூன்று மென்பொருள்களின் உதவியோடு கணினியை மிக்க பாதுகாப்போடு வைத்திருக்க முடியும். இந்த மூன்று மென்பொருள்களும் இருப்பின் உங்கள் கணினியில் வைரஸ்க்கு நோ சொல்லலாம்.
1 . Avast Antivirus
முதலில் கணினியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் கண்டிப்பாய் இருந்தாக வேண்டும்.சில வருடங்களாய் பல ஆண்டிவைரஸ் மென்பொருள்களை சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறேன். Avast,Avira, AVG, Nod32, Escan, Comodo, K7, Kaspersky போன்றவற்றை பணிச்சூழலில் பயன்படுத்திருக்கிறேன். இவற்றில் சில கட்டண மென்பொருள்களும் சில இலவசமும் இருக்கின்றன. எவருமே இலவசம் என்றால் தான் விரும்புவார்கள். இலவசமாக தரப்படுவதில் Avast ன் பயனர் இடைமுகமும் பாதுகாப்பும் சிறப்பாக உள்ளது. இப்போது இதன் புதிய பதிப்பாக 6 வெளிவந்துள்ளது. இதன் வைரஸ்களை கையாளும் விதம் மற்ற இலவச மென்பொருள்களான Avira, AVG போன்றவற்றை விட நன்றாக உள்ளது. பென் டிரைவை போட்டவுடன் வைரஸ் இருப்பின் பிடித்து அழித்துவிடுகிறது.
2 . USB Disk Sequrity
வைரஸ்கள் பெரும்பாலும் நுழைவதே பென் டிரைவ் , மெமரி கார்டுகள் போன்றவற்றால் தான். இவற்றை கட்டுப்படுத்தினாலே ஓரளவுக்கு கணினியும் பாதுகாப்பாக இருக்கும். பென் ட்ரைவைப் போட்டவுடன் தானாக ஸ்கேன் செய்து பெரும்பாலான வைரஸ்களை இந்த மென்பொருளின் மூலம் நீக்கிவிடலாம்.
3. WinPatrol
இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள இயல்பான அமைப்புகளை சோதித்து சேமித்துக் கொள்கிறது. பின்னர் கணினியில் எதாவது வைரஸ்கள், இணையத்திலிருந்து வருகிற மால்வேர்கள் எதாவது மாற்றங்களை உங்களுக்கு தெரியாமல் ஏற்படுத்துகிற போது தடுத்து நிறுத்தி உங்களுக்கு தெரியப்படுத்துகிறது. பொதுவாக வைரஸ்கள், மால்வேர்கள் கணினியின் Startup, Registry, Scheduled Tasks, Services போன்ற பகுதிகளில் நுழைந்து தங்களது இயக்கத்தை பரப்புகின்றன. இந்த பகுதிகளில் எந்த மாற்றங்களை செய்தாலும் அதனை உடனடியாக உங்களிடம் தெரிவிக்கின்றன.