சிறீலங்காவின் மிஸ் 2012 அழகு ராணியாக முடிசூடிய Sabrina Herft!
இந்த ஆண்டின் மிஸ் ஸ்ரீலங்கா அழகு ராணியாக Sabrina Herft முடிசூடியுள்ளார்.
மிஸ் ஸ்ரீலங்கா அழகு ராணிப் போட்டி 2012 கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஹில்ரன் ஹோட்டலில் இடம்பெற்றது.
இதில் வெற்றி வாகை சூடிய இவருக்கு பிரபல சிங்கள நடிகை சங்கீதா வீரரட்ண அழகு ராணி கிரீடத்தை சூட்டினார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 61 ஆவது பிரபஞ்ச அழகு ராணிப் போட்டி இடம்பெற உள்ளது. இதில் இலங்கை சார்பாக Sabrina Herft போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.