இந்திய சினிமாவில் கொடுக்கப்படும் முக்கிய விருதுகளில் பிலிம்பேர் விருதும் ஒன்று. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 59வது பிலிம்பேர் விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் திரளாக பங்கேற்றனர். இதில் தமிழில் நடிகர் தனுஷூக்கு ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. எங்கேயும் எப்போதும் படத்திற்காக நடிகை அஞ்சலிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. மேலும் சிறந்த அறிமுக நடிகைக்கான சிறப்புவிருது 7ம் அறிவு படத்திற்காக ஸ்ருதிஹாசனுக்கு கிடைத்தது. இவ்விருதை நடிகர் கமல்ஹாசனே, ஸ்ருதிக்கு வழங்கினார்.
தமிழ் மொழிக்கான விருது பெற்றவர்கள் விபரம் :
சிறந்த நடிகர் - தனுஷ் (ஆடுகளம்)
சிறந்த நடிகை - அஞ்சலி (எங்கேயும் எப்போதும்)
சிறந்த டைரக்டர் - வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த டைரக்டர் - ஜீ.வி.பிரகாஷ்குமார் (ஆடுகளம்)
சிறந்த துணை நடிகர் - அஜ்மல் (கோ)
சிறந்த துணை நடிகை - அனன்யா (எங்கேயும் எப்போதும்)
சிறந்த பின்னணி பாடகர் - அலாப் ராஜூ (கோ, என்னமோ ஏதோ...)
சிறந்த பின்னணி பாடகி - சின்மயி (வாகைசூட வா, சர சர சாரகாத்து...)
சிறப்பு விருதுகள்
வாழ்நாள் சாதனையாளர் விருது - டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் மற்றும் நடிகர் சீமா சாய்
விமர்சகர்கள் விருது - விக்ரம்(தெய்வத்திருமகள்)
சிறந்த புதுமுக நடிகர் - ஆதி (பிரேம காவலி)
சிறந்த புதுமுக நடிகை - ஸ்ருதிஹாசன் (7ம் அறிவு)
சிறந்த ஒளிப்பதிவு - வேல்ராஜ் (ஆடுகளம்)
பிற மாநில விருதுகள் :
தெலுங்கு
சிறந்த படம் - துக்குடு
சிறந்த டைரக்டர் - ஸ்ரீனு வைத்யலா (துக்குடு)
சிறந்த நடிகர் - மகேஷ் பாபு (துக்குடு)
சிறந்த நடிகை - நயன்தாரா (ஸ்ரீராம ராஜ்யம்)
சிறந்த இசை - தமன் (துக்குடு)
மலையாளம்
சிறந்த படம் - டிராபிக்
சிறந்த டைரக்டர் - பிளசி (பிரணயம்)
சிறந்த நடிகர் - சலீம் குமார் (ஆதாமின்டே மகன் அபு)
சிறந்த நடிகை - காவ்யாமாதவன் (கதாமா)
சிறந்த இசை - ஜெயச்சந்திரன் (பிரணயம்)
கன்னடம்
சிறந்த படம் - ஒலவே மந்த்ரா
சிறந்த டைரக்டர் - ஜெயதீர்தா (ஒலவே மந்த்ரா)
சிறந்த நடிகர்: புனீத்ராஜ் குமார் (குடுகாரு)
சிறந்த நடிகை: ரம்யா (சஞ்சு வெட்ஸ் கீதா)
சிறந்த இசை - ஜெசி கிப்ட் (சஞ்சு வெட்ஸ் கீதா)