Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

10 பிப்ரவரி 2009

சிங்கப்பூரை அதிரவைத்த தைப்பூசம் (படங்கள்)

தமிழகத்தில் கொண்டாடப்படும் தைப்பூசத்திற்கு சற்றும் குறைவில்லாத கொண்டாட்டங்கள் பல வெளிநாடுகளில் கொண்டாடப்படுகிறது. அதுவும் தமிழர்கள் அதிகம் நிறைந்த சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கேட்கவே வேண்டாம். இங்கே சிங்கப்பூர் ல் கொண்டாடப்பட்ட தைப்பூச கொண்டாட்டங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இங்கு குட்டி இந்தியாவில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து காவடி புறப்பட்டு டோபி காட் என்ற இடத்தில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோவிலை அடைகிறது, குறைந்த பட்சம் மூன்று கிலோ மீட்டர் தூரம் இருக்கும். வழி நெடுக காவடி ஊர்வலம் செல்ல பாதை ஒதுக்கி கொடுத்திருந்தார்கள், நம்மவர்கள் மேள சத்தத்துடன் நொறுக்கி தள்ளிட்டு போயிட்டு இருக்காங்க. வேடிக்கை பார்க்காதவர்களே கிடையாது. வெளிநாட்டினர் இதற்காகவே காத்திருந்து பார்க்கிறார்கள், வழி நெடுக பார்வையாளர்களுக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது ஊர்வலத்தை பார்வையிட, தண்ணீர் பந்தலும் உண்டு.
நான் காலை 7.30 மணிக்கு சென்றேன் அதற்க்கு முன்னாடி இருந்தே காவடி வந்து கொண்டு இருந்தது மாலை வரை வந்து கொண்டு இருந்தார்கள், இத்தனை பேர் இருக்காங்களா ன்னு வாயை பொளந்துட்டேன். கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம்.
போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. படத்தில் உள்ளவர்கள் இதற்காக வந்தவர்களே..
வெளிநாட்டினர் காலையில் இருந்த படம் எடுக்க குவிந்து விட்டனர், அதில் ஒருவர் ஸ்டேன்ட் எல்லாம் வைத்து படமாக சுட்டு தள்ளி கொண்டிருந்தார்
தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது, இங்கு வருபவர்கள் அனைவருக்கும் உணவு தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டன
கோவிலினுள் சென்று பார்க்க முடியாதவர்கள் கடவுளை தரிசிக்க வெளியே பெரிய திரை அமைக்கப்பட்டு இருந்தது
ஏகப்பட்ட வெளிநாட்டினர் காவடி மற்றும் அலகு குத்துதல் பார்க்க வந்து இருந்தனர். அதில் ஒரு குடும்பம் இவர்கள். இதில் இரண்டு பொடிசுகள் காவடிக்கு வந்தவர்கள் அடித்த ட்ரம்ஸ் சத்தத்திற்கு செம ஆட்டம் போட்டார்கள் :-)
என்னை மிரளவைத்த பக்தர்
தமிழர்கள் மட்டுமல்ல சீனர்களும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அலகு குத்தி காவடி எடுத்து வந்தார்கள். அதில் இவர் செம ஆட்டம் போட்டார், பாவம்! என்ன இவருக்கு ட்ரம்ஸ் அடிக்க ஆள் இல்ல. இருந்தாலும் பக்கத்து குழு அடித்த சத்தத்துக்கு இவர் சுத்து சுத்துன்னு சுத்திட்டார் :-)
மற்றொரு சீனர் குழு பால்குடம் எடுத்து வந்தார்கள், இவர்கள் ஸ்டைல் ல் ட்ரம்ஸ் அடித்தார்கள், செம அடி. எனக்கு சும்மா கிர்ர்ர் னு இருந்தது. பட்டய கிளப்பிட்டாங்க. அதுவும் வித்யாசமா ஒலி எழுப்பினாங்க.... உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்த மாதிரி இருந்தது
இந்த அம்மாவிற்கு கோவில் அருகே வந்தவுடன் அருள் வந்து விட்டது (இது உண்மையா பொய்யா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை) அனைவரையும் ஒரு மிரட்டு மிரட்டி விட்டார், படத்தை பார்த்தால் சரி என்று தானே தோன்றுகிறது! ;-)
பால் குடம் எடுத்து வந்த பக்தர் இவர், கோவில் அருகே வர வர இவரை பிடிக்கவே முடியவில்லை, அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு மாதிரி திமிறிட்டு இருக்கிறார், நான்கு பேர் போட்டு இவரை அமுக்கியும் இவரை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை, ஆனால் எப்படி இருந்தும் தலையில் இருந்த பால் குடத்தை மட்டும் விடவில்லை.
இவர் ஜிம் க்கு போவாரு போல! :-) வழி நெடுக முறுக்கி கிட்டே ஜெய் ஜாண்டிக்கா நடந்து வந்தாரு ..நிற்கும் போது கூட இரண்டு கையையும் இடுப்புக்கு கொடுத்து கம்பீரமா தான் நின்னாரு
இவர் ஒரு வெளிநாட்டவர், சும்மா அர்னால்ட் கணக்கா இருக்காரு ஆனா அமைதியா தான் இருந்தாரு.
ஆணி செருப்பு அணிந்து வந்தவர்
சுருட்டு சாமியார் மாதிரி இவர் சுருட்டு பக்தர் :-)). சுருட்டோட தான் வந்தாரு, அதோட ஒரு ஆட்டம் வேற போட்டாரு..ஒண்ணும் சொல்றதுக்கில்ல :-))
இவர் ஒரு சீனர் குடும்பத்துடன் வந்து இருந்தார்
இவங்க ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் போல..அவங்க பாட்டை பாடிட்டு கலக்கி எடுத்தாங்க..ஒலி பெருக்கி, வாத்தியம் எல்லாம் வைத்து அசத்து அசத்துனு அசத்திட்டாங்க..,இவங்களை பார்க்க கூட்டம். இவங்க அலகெல்லாம் எதுவும் குத்தவில்லை.
கோவில் கோபுரத்தை பார்த்த படியே வரும் ஒரு பெண் பக்தர்
இவர் தாங்க எனக்கு டாக் ஆஃப் த ஆட்டம், இவர் தண்ணீர் பந்தல் அருகே வந்தவுடன் அங்கே உள்ள ஒலி பெருக்கியில் "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்" பாட்டை போட்டாங்க பாருங்க.. மவனே ..என்னா ஆட்டம்ங்றீங்க ..சும்மா வெளு வெளுன்னு வெளுத்துட்டாரு(எனக்கு கை கால் எல்லாம் பரபரன்னு ஆகி விட்டது). செமையா ஆடுனாரு..நான் மிரண்டு போயிட்டேன். அவரது நண்பர்கள் அவர்கள் வைத்து இருந்த ட்ரம்ஸ் ல் கலக்கு கலக்குன்னு கலக்கிட்டாங்க.. அதனால் செம குஷி ஆகிட்டாரு..அனைவரும் உற்சாகப்படுத்தியவுடன் பட்டய கிளப்பிட்டாரு. நான் போகும் போது பாதி முடிந்து விட்டது, எனக்கு அது பெரிய ஏமாற்றம் ஆகி விட்டது.. அடடா! வடை போச்சே மாதிரி ஆகிட்டேன் :-( கடைசி வரை சோர்வடையாமல் உற்சாகமாக இருந்தார்
இவர் ஒரு பக்தர், சும்மா கர கர கரன்னு சுத்துறாரு..பக்கத்துல எவரும் வர முடியாது போல பின்னி பெடலெடுத்துட்டாரு ..படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரியும்
இவர் பால் குடம் எடுத்து வந்த பக்தர், இவரையும் அடக்க முடியல, ஆனால் பால் குடத்தை உடன் வந்தவர் தான் பிடித்து வந்தார், என்ன நடக்குதுன்னே அவருக்கு தெரிந்து இருக்காது என்று நினைக்கிறேன்
நானும் கூட்டம் இதோட முடிந்து விடும், காவடி நின்று விடும் என்று நினைத்துட்டே இருக்கிறேன்..அது குறைந்த மாதிரியே தெரியல.. வராங்க வராங்க வராங்க வராங்க சரமாரியா வந்துட்டே இருக்காங்க.. எனக்கு கண்ணை கட்டி விட்டது, ஆறு மணி நேரமா நின்று இடுப்பு கழண்டு விட்டது, அதனால் இனி வேலைக்காகாது என்று உள்ளே சென்று சாமி கும்பிட்டு விட்டு, கிளம்பிட்டேன்.
குட்டி இந்தியாவில் காவடி எடுத்து செல்பவர்கள் செல்ல வழி தடுப்பு வைத்து அமைத்து இருந்தார்கள். ட்ரம்ஸ் எல்லாம் வைத்து வழி முழுவதும் அசத்து அசத்துனு அசத்திட்டாங்க நம்ம மக்கள் , வேடிக்கை பார்க்காதவர்களே கிடையாது, ஒரு சில வேன் பேருந்து ஓட்டுனர்கள் அவர்கள் அருகே நிறுத்தி வணங்கி சென்றனர். ..எனக்கு அங்கே அடிக்கிற அடிக்கு ஆட்டம் போட்டே ஆக வேண்டும் போல ஆகி விட்டது, சூப்ப்ப்ப்ப்ப்பரா இருந்தது.
மொத்தத்துல தைப்பூசம் சிங்கப்பூரை என்ன சங்கதி என்று கேட்டு விட்டது :-) அரசாங்கம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தது. கோவில் பகுதியில் ஒரு பக்கம் போக்குவரத்தையே வேறு பக்கம் திருப்பி விட்டார்கள். காவலர்களும் ஏகப்பட்ட பேர் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்..
தைப்பூசம் சிறப்பாக நடந்ததற்கு கோவில் நிர்வாகம் செய்து இருந்த ஏற்பாடுகளும், அதற்க்கு துணையாக இருந்த அரசாங்கமும் முக்கிய காரணம். இவ்வளவு கூட்டத்தை வைத்து சிறப்பாக ஒரு திருவிழாவை நடத்துவது என்பது சாதாரண விசயமாக படவில்லை.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com