Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

02 அக்டோபர் 2009

திருட்டுப் பட்டத்தால் அழகிப் பட்டத்தைத் துறந்த சிங்கப்பூர் அழகி!

Miss Singapore has given up her crown

miss-singapore-2009.jpg திருட்டுப்பட்டம் கட்டிக்கொண்ட சிங்கப்பூர் அழகி தன்னுடைய அழகிப் பட்டத்தை துறந்தார்.

2009 ஆண்டுக்கான சிங்கப்பூர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரிஸ் லோ. ஆடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்குவதற்காக கிரெடிட் கார்டுகளை திருடினார் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இவருக்கு பொதுமக்களிடையே உண்டான எதிர்ப்பு காரணமாக, தன்னுடைய அழகிப் பட்டத்தை துறந்தார்.

சிங்கப்பூர் அழகி ரிஸ் லோ கடந்த வருடம் ஒரு மருத்துவமனையில் பணியாற்றியபோது மற்றவர்களின் கிரெடிட் கார்டுகளைத் திருடி தனக்குத் தேவையான ஆடைகள், அணிகலன்கள் உள்ளிட்டவற்றை வாங்கினார் என்று உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்திக்கட்டுரை வெளியிட்டது. கிரெடிட் கார்டுகளைத் திருடி அவர் வாங்கிய பொருட்களின் மதிப்பு சுமார் 3 லட்ச ரூபாய் என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையின் விளைவாக அழகிப் பட்டத்தைத் துறந்தார் ரிஸ் லோ.

சிங்கப்பூர் அழகிப் போட்டியை நடத்திய ERM World Marketing நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ரிஸ்லோ தனது அழகிப் பட்டத்தை துறந்ததை உறுதிப்படுத்தி இருக்கிறது. அத்துடன் டிசம்பர் மாதம் தென் ஆப்ரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக அழகிப் போட்டியில் பங்கெடுக்கும் வாய்ப்பையும் ரிஸ் லோ இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளது.

ரிஸ் லோ மீது திருட்டுப் பட்டம் மட்டுமல்லாது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய ஆங்கிலம் சகிக்கவில்லை என்றும், பிகினி என்ற சொல்லைக்கூட அவரால் சரியாக உச்சரிக்க இயலவில்லை என்றும், சிங்கப்பூரின் பாரம்பரியத்தை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் எந்த அம்சமும் அவரிடம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகத் தான் அவர் தனது அழகிப் பட்டத்தை துறந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com