மலேசியாவில் குஷ்பு, அவருடைய கணவர் சுந்தர் சி. சென்ற படகு கவிழ்ந்ததால், நடுக்கடலில் ஒரு மணி நேரம் தவித்தார்களாம்.
சுந்தர் சி. நடிக்கும் ஒரு படத்தின் பாடல் காட்சி மலேசியாவில் படமாக்கப்பட்டு வந்தது. கணவர் சுந்தர் சி.யுடன் நடிகை குஷ்புவும், அவர்களின் 2 மகள்களும் மலேசியா சென்று இருந்தார்களாம்.
நேற்று, மலேசியாவில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரடாங் என்ற தீவில் படப்பிடிப்பு நடந்தது. சுந்தர் சி.யும், நடிகை சுருதியும் ஆடிப்பாடுவது போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர். குஷ்புவும், அவருடைய மகள்களும் கடற்கரையில் அமர்ந்து படப்பிடிப்பை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது திடீரென்று பயங்கர புயல் காற்று வீச தொடங்கியது. அதைத் தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே படப்பிடிப்பு குழுவினர் அவசர அவசரமாக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, காமிரா மற்றும் கருவிகளுடன் ஒரு பெரிய படகில்
மலேசியா ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
வை நோக்கி புறப்பட்டார்கள்.
வழியில், மழை அதிகரித்து, காற்று மிக வேகமாக வீசியது. மலேசிய கடற்கரையை அடைய அரை கிலோ மீட்டர் தூரம் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. படகில் இருந்த குஷ்பு உள்பட அனைவரும் கடலில் விழுந்தார்கள்.
அந்த இடத்தில், அதிர்ஷ்டவசமாக ஆழம் குறைவாக இருந்தது. அத்துடன் அருகில் ஒரு பாலமும் இருந்தது. அனைவரும் பாலத்தில் ஏறி அமர்ந்துகொண்டார்கள். பின்னர் வேறு ஒரு படகு மூலம் கரையை வந்தடைந்தார்கள்.

படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஓட்டலுக்கு திரும்பிய பிறகுதான், கடலில் 'கொந்தளிப்பு' ஏற்பட்ட தகவல் தெரிந்ததாம். எல்லோரும் உயிர் தப்பியதை எண்ணி, ஒருவரையொருவர் கட்டித்தழுவிக் கொண்டார்களாம்.
இதனால் அன்றைய
படப்பிடிப்பு
ரத்து ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
செய்யப்பட்டதாம். இதெல்லாம் குறிப்பிட்ட அந்தப் படத்தின் பிஆர்ஓ பரப்பி வரும் செய்தி.
வழக்கம்போல இது பப்ளிசிட்டி
செய்தி ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
யா... அல்லது நிஜமாகவே நடந்ததா என்பது கடவுளுக்கே வெளிச்சம்!