
06 ஜூலை 2009
புளோராவின் லிப் லாக்!
விசா மோசடி புகழ் புளோரா படு கவர்ச்சியாக நடித்து வருகிறார் உச்சகட்டம் படத்துக்காக.
அமெரிக்கா செல்ல போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்று கைதாகி சிறை சென்று பின்னர் மீண்டவர் புளோரா.
இப்போது அவர் முழு நீள கவர்ச்சியில் உச்சகட்டம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் ஜெமினி.
இது ஒரு திரில்லர் படம். படத்தில் புளோராவின் காட்சிகள் எல்லாம் கண்காட்சியாக இருக்குமாம். அந்த அளவுக்கு கிளாமரை வாரி இறைத்துள்ளாராம்.
குறிப்பாக ஜெமினியும், புளோராவும் ஒரு லிப்லாக் காட்சியிலும் களை கட்டியுள்ளனராம். சிங்கிள் முத்தக் காட்சிதான் என்றாலும் கிட்டத்தட்ட 10 டேக்குகள் வாங்கி விட்டாராம் ஜெமினி.
தயங்கித் தயங்கி அவர் முத்தம் கொடுத்ததால் (நெசமாவா..???) காட்சி சிறப்பாக வரவில்லையாம். இதனால் கிட்டத்தட்ட 10 டேக் போன பின்னர்தான் முத்தம் ஓ.கே. ஆனதாம். புளோரா சைடிலிருந்து எந்தவிதத் தயக்கமும் இல்லையாம். ஜெமினிதான் சற்று பதட்டமாகி விட்டாராம்.
இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக மிஸ் பெங்களூர் ஸ்வாதியும் இருக்கிறார்.
தகப்பன்சாமி படத்தைத் தயாரித்த கோபால்தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்தின் முக்கிய வில்லனாகவும் அவரே நடிக்கிறார்
