இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக சஹாரா நிறுவனம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
வரும் 2013 ஆம் ஆண்டுவரை இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் வழங்கும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் ஏலம் மும்பையில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் தற்போதைய ஸ்பான்சரான சஹாரா நிறுவனமும், பார்தி ஏர் டெல் நிறுவனமும் கலந்துகொண்டன. பலத்த போட்டிக்கிடையே பார்தி ஏர் டெல்லை பின்னுக்குத் தள்ளி, இந்திய அணிக்கு ஸ்பான்சர் செய்யும் வாய்ப்பை மீண்டும் பெற்றது சஹாரா நிறுவனம்.
ஏலத்தில் வெற்றி பெற்ற சஹாரா நிறுவனம் இந்திய அணிக்கு வரும் 2013 ஆம் ஆண்டுவரை ஸ்பான்சர் அளிக்கும். இதற்காக போட்டி ஒன்றுக்கு ரூ.3.3 கோடி ரூபாயை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துக்கு சஹாரா நிறுவனம் அளிக்கும்.
-சிவாஜி டிவி
