Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

09 ஜூன் 2009

பேட்டரியில் ஓடும் கார்: செப்டம்பரில் டாடா அறிமுகம்

லிவு விலைக் கார் நானோவைத் தொடர்ந்து பேட்டரியில் ஓடும் கார்களை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வகைக் கார்கள் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமாகும் என நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்தார்.

நியூயார்க்கில் கார்னெல் பல்கலைக் கழகத்தில் பேசுகையில் அவர் இத்தகவலை வெளியிட்டார். கார்னெல் பல்கலைக் கழகத்தின் அறங்காவலர்களில் டாடாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2008 ம் ஆண்டு நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டத்தில் பேசுகையில், பேட்டரியில் இயங்கும் கார்களைத் தயாரித்து வருவதாக ரத்தன் டாடா தெரிவித்தார்.

உலகின் மிகக் குறைந்த விலைக் காரான நானோ 2011 ம் ஆண்டு அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவில் தற்போது பேட்டரியில் ஓடும் கார்களை மெய்னி குழுமத்தைச் சேர்ந்த ரேவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த கார் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

பேட்டரியில் ஓடும் கார் தயாரிப்பில் பிரபல நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டுவந்த போதிலும், எவையும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் டாடாவின் பேட்டரி கார்கள் இந்நிறுவனத்தின் பெருமையை மேலும் உயர்த்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com