Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

06 பிப்ரவரி 2009

தோனியை மிஞ்சிய பிளிண்டாப், பீட்டர்சன்

ஐபிஎல் 20 ஓவர் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை இங்கிலாந்து வீரர்கள் பிளிண்டாப் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் விஞ்சியுள்ளனர்.

ஐபிஎல் 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகளுக்கு வீரர்களை விலைக்கு வாங்கும் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து வீரர் ஆன்ட்ரூ பிளிண்டாப்பை 7.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதே தொகைக்கு கெவின் பீட்டர்சனை, பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி வாங்கியது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் மிக அதிகபட்சமாக தோனி 6 கோடி ரூபாய்க்கு விலை போனார். தற்போது பிளிண்டாப் அவரை மிஞ்சியுள்ளார்.

இதே போல் மற்றுமொரு இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சன்னை பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 7.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 20 ஓவர் கிரிக்கெட் சிறப்பு ஆட்டக்காரர் டைரான் ஹென்டர்சன்னை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6.5 லட்சம் டாலருக்கு வாங்கியுள்ளது.

பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி நியூசிலாந்தை சேர்ந்த ஜெஸ்ஸி ரைடரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் டாலருக்கும், கைல் மில்சை ஒரு லட்சத்து 50 ஆயிரம் டாலருக்கும் ஏலம் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கையின் திலான் துஷாராவை ஒரு லட்சத்து 40 ஆயிரம் டாலருக்கும், இங்கிலாந்து வீரர் ரவி போபாராவை 4.5 லட்சம் டாலருக்கும் வாங்கியுள்ளது.

டெக்கான் சார்ஜர்ஸ் அணி மேற்கிந்திய பந்துவீச்சாளர் பிடெல் எட்வர்ட்சை 1.5 லட்சம் டாலருக்கு வாங்கியுள்ளது. டெல்லி டேர் டெவில்ஸ் அணி, இங்கிலாந்து வீரர்கள் ஓவய்ஸ் ஷா மற்றும் பால் காலிங்வுட்டை தலா 2.75 லட்சம் டாலருக்கு ஏலம் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், பந்துவீச்சார் ஸ்டுவர்ட் கிளார்க் மற்றும் இலங்கை வீரர் சமாரா கபுகெடேரா ஆகியோரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.

கோவாவில் இன்று ஏலம் தொடங்கியுடன் முதலாவதாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஷான் டெய்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 3.75 லட்சம் டாலருக்கு விலை போனார். 9.5 லட்சம் டாலருக்கு தென்னாப்பிரிக்க வீரர் டுமினியை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com