31 மே 2009
லாரன்ஸ் கட்டிய கோவிலை ரஜினி திறந்து வைக்கிறார்
தமிழ் பட உலகில், டான்ஸ் மாஸ்டர்' ஆக இருந்து கதாநாயகன் ஆகியிருப்பவர், லாரன்ஸ். இவர், ராகவேந்திர சாமிகளின் தீவிர பக்தர்.
ராகவேந்திர சாமிகளின் தீவிர பக்தரான இவர், தனது பெயரை ராகவேந்திரா லாரன்ஸ் என்று மாற்றிக்கொண்டதுடன், சென்னை அம்பத்தூரில் ராகவேந்திர சாமிகளுக்கு சொந்த செலவில் கோவில் கட்டி வந்தார். அந்த கோவிலின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தன.
கோவில் திறப்பு விழா, வருகிற ஆகஸ்டு மாதம் நடைபெற இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் விழாவில் கலந்துகொண்டு, கோவிலை திறந்து வைக்கிறார் என்று ராகவேந்திரா லாரன்ஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இவர் ஏற்கனவே ஆதரவற்றவர்கள், முதியோர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்காக சென்னையில் இல்லம் நடத்தி வருகிறார்.
இந்த சேவை மனப்பான்மை உங்களுக்குள் எப்படி வந்தது? என்ற கேள்விக்கு, நான் 7 வயது சிறுவனாக இருந்தபோது, மூளையில் கட்டி ஏற்பட்டு, அதன் காரணமாக என் கை கால் விழுந்து விட்டது. அதில் இருந்து குணம் அடைந்து, மீண்டு வந்தது தெய்வச்செயல். அப்போது முடிவெடுத்தேன். இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்று தீர்மானித்தேன். அதன் விளைவுதான், ஆதரவற்றோர் இல்லம் என்றார்.