Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

05 மார்ச் 2009

'கிரிக்கெட் அழிந்தால் பாக்.கில் பயங்கரவாதம் அதிகரிக்கும்'

பாகிஸ்தானில் கிரிக்கெட்டைக் காப்பாற்ற வேண்டும் இல்லையென்றால் எதிர்கால சந்ததியினர் பயங்கரவாத சக்திகளின் பிடியில் சிக்கி விடுவார்கள் என்று பாகிஸ்தான் அணித் தலைவர் யூனிஸ் கான் கிரிக்கெட் நிர்வாகிகளை எச்சரிக்கை செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தபட்ட பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்ற அச்சம் வெளியிட்டுள்ள யூனிஸ் கான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். விளையாட்டு என்பது நல்ல மனிதர்களை உருவாக்கவல்லது, விளையாட்டு என்ற ஒன்று இல்லையெனில் வருங்கால சந்ததியினர் தவறான பாதைகளுக்கு சென்று விடுவார்கள், எதிர்காலத்தில் பாகிஸ்தான் அனைத்து விதத்திலும் தனிமைப்பட்டு விடும் என்று அவர் மேலும் கூறினார். சிறு வயதில் தான் இம்ரான் கான், வாசிம் அக்ரம், ஜாவேத் மியாண்டட் ஆகியோர் அயல் நாட்டு அணிக்கு எதிராக விளையாடியதைப்பார்த்துத்தான் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டதாக கூறிய யூனிஸ் கான், தற்போது எந்த அணியும் பாகிஸ்தான் வர முடியாத நிலை தோன்றிவிட்டால், தற்போதைய இளைய சமுதாயம் என்ன ஆகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் யூனிஸ்கான். எனவே கிரிக்கெட்டை கொல்ல வேண்டாம் என்று கிரிக்கெட் ஆட்ட நிர்வாகத்தின் அனைத்துத் தலைமைகளிடத்தும் தான் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார். இப்போதைய நிலையில் ஐ.சி.சி.யும் அதன் உறுப்பு நாடுகளும் பாகிஸ்தானில் கிரிக்கெட் கிடையாது என்ற முடிவுக்கு வந்திருக்கலாம், ஆனால் இந்த முடிவால் பாகிஸ்தானில் பாதிக்கப்படும் எதிர்கால சந்ததியினர் பற்றி இவர்கள் யோசிக்கக் கடமைப்பட்டவர்களாவர்.பாகிஸ்தானிலிருந்து கிரிக்கெட்டை அகற்றி விட்டால் இந்த நாட்டின் எதிர் காலம் இருண்டு போகும் என்று கூறியுள்ளார் யூனிஸ் கான். தாக்குதலுக்கு பிறகு இலங்கை அணியினரை சந்தித்து தான் ஆறுதல் கூறியதாகவும் அவர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர் என்றும் கூறிய யூனிஸ் கான், விளையாட்டு என்பதுதான் நாடுகளை நெருக்கமாக இணைக்கும் பாலமாகும்.சில முட்டாள்கள் குண்டுகளையும், துப்பாக்கிகளையும் பயன்படுத்துவதால் அவர்களை மனிதர்கள் என்று அழைக்கலாகாது.இவர்கள் செய்யும் செயல்களால் அயல் நாட்டு வீரர்கள் பாகிஸ்தானுக்கு வர மறுக்கிறார்கள்.இதனால் பாகிஸ்தான் தனிமைப்பட்டு விடும் என்பது உறுதி என்று கூறினார் யூனிஸ்கான். ஆஸ்திரேலிய அணியுடன் இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடுவது தனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றாலும் இப்போதைக்கு இதனை ஏற்றுக்கொள்வதுதான் ஒரே வழி என்று அவர் மேலும் கூறினார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com