சினிமா பத்திரிக்கையான பிலிம்பேர் ஆண்டு தோறும் விருதுகளை வழங்கி வருகிறது. 2008ஆம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹிருத்திக்ரோஷன், ஐஸ்வர்யாராய் நடித்த வரலாற்று சம்பந்தமான ஜோதா அக்பர்' படத்துக்கு 5 விருது கிடைத்து உள்ளது.
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த டைரக்டர், சிறந்த பாடல், சிறந்த இசையமைப்பாளர் ஆகிய 5 விருதை அந்த படம் தட்டிச் சென்றது.
சிறந்த நடிகருக்கான விருது ஹிருத்திக்ரோசனுக்கு (ஜோதா அக்பர்) கிடைத்தது. பிரியங்கா சோப்ராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது (பேஷன்) கிடைத்தது.
சிறந்த டைரக்டராக அசு தோஸ் கவுரிகா(ஜோதா அக்பர்) தேர்வு பெற்றுள்ளார். ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த பின்னணி இசைக்கு விருது (ஜோதாஅக்பர்)கிடைத்தது. ஜோதா அக்பர், தோஸ்ட் னா, கஜினி, ஜானே துயா ஜானே நா, ராக் ஆன் ஆகிய படங்கள் சிறந்த படத்துக்காக போட்டியிட்டன. இதில் ஜோதா அக்பர் சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. ஹிருத்திக் ரோசன் மொக லாய மன்னன் அக்பர் வேடத்தில் நடித்திருந்தார்.
ஜோதா அக்பர் படத்தில் இடம் பெற்ற ஜாஸ்ன்ட் இ பகர பாடலுக்கு விருது கிடைத்தது. இந்த பாடலை எழுதிய ஜாவித் அக்தருக்கும் சிறந்த பாடலாசிரியர் விருது கிடைத்தது. சிறந்த புதுமுக நடிகைக்காக அசின் (கஜினி) தேர்வு பெற்றார்.