Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

27 பிப்ரவரி 2009

விவேக்கே... விருதை வீசி எறியுங்கள்! -கங்கை அமரன் ஆவேசம்!

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ§க்கு அஞ்சலி கூட்டம் ஒன்றை நடத்தியது ப்ரியாவிஷன்! ஆர்.எம்.வீரப்பன், ராதாரவி, எஸ்.வி.சேகர், உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழாவில் கங்கை அமரனின் பேச்சுதான் கடா முடா...! சமீபத்தில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விவேக்கை ஒரு பிடி பிடித்தார். 'கொடுக்க வேண்டியதை கொடுத்து பட்டத்தை வாங்கிக்கிறாங்க. அந்த கமிட்டிகளில் உள்ளவர்கள் பலரை எனக்கு தெரியும். கிட்டதட்ட ஏழு லட்ச ரூபாய்க்கு மேல் லஞ்சம் வாங்குகிறார்கள். யார் யாருக்கு எவ்வளவு தொகை போகிறது என்பதும் எனக்கு தெரியும். இப்போது நடிகர் விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு வந்ததும் விவேக் என்ன செய்திருக்க வேண்டும்? நகைச்சுவைக்கே Vivekஅரசன் நாகேஷ். அவருக்கு கொடுக்காத இந்த விருது எனக்கு வேண்டாம்னு அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். பட்டம் பட்டம்னு ஏன்யா இப்படி அலையுறீங்க? கடைசியா விவேக்கிற்கு சொல்லிக் கொள்கிறேன். இப்பவும் ஒண்ணும் கொறஞ்சு போயிடல. இந்த பத்மஸ்ரீ விருது எனக்கு வேணாம். எங்க நாகேஷ் ஐயாவுக்கு கொடுக்காத பட்டமும் விருதும் வேணாம்னு தைரியமாக மனசாட்சின்னு ஒன்னு இருந்தா அறிவிக்கனும். விவேக்கே... விருதை வீசி எறியுங்கள். அப்படி செஞ்சீங்கன்னா, இந்த திரையுலகத்தை திரட்டி நானே உங்களுக்கு பாராட்டு விழா எடுக்கிறேன்' என்றார் கங்கை அமரன். இதெல்லாம் விவேக்கின் காதில் விழாமலா இருக்கும்?
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com