Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

23 பிப்ரவரி 2009

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது: உலகெங்கும் ரசிகர்கள் கொண்டாட்டம்

உலக அளவில் திரைப்படத் துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் இன்று காலை அறிவிக்கப்படுகின்றன. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன. இந்த மகிழ்ச்சியை இந்தியர்கள் அனைவரும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஏ.ஆர்.ரகுமானின் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். ,

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் இருந்து சிறந்த இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என்று பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய திரைப்படங்கள் சிறந்து விளங்கினாலும் ஆஸ்கார் விருதை இதுவரை பெற்றது கிடையாது.

இந்த சூழ்நிலையில், முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியர்கள் பெருமளவில் பங்காற்றிய ஸ்லம்டாக் மில்லினர்' என்ற திரைப்படம், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான இசையமைப்பாளர் என்ற இரண்டு பிரிவுகளில் ஏ.ஆர்.ரகுமான் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

படத்தின் இசை மற்றும் 3 பாடல்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர் சேர்க்கப்பட்டு இருப்பதால் அவருக்கு கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று இந்தியா முழுவதும் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. ஏற்கனவே, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களும் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைக்க வாழ்த்தினர்.

இந்த சூழ்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்ற கோலாகல விழாவில் ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதை காண்பதற்கு உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆர்வமாக இருந்தனர்.

ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக சிறந்த இசை மற்றும் சிறந்த பாடல் என இரண்டு விருதுகள் ஏ.ஆர்.ரகுமானுக்கு அறிவிக்கப்பட்டது.

விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன் உலகெங்கும் உள்ள ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். சென்னையில் திரையுலகைச் சேர்ந்த அனைவரும், ஏ.ஆர்.ரகுமானிடமும், அவரது குடும்பத்தாரிடமும் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவுக்கு திரும்பும் ஏ.ஆர்.ரகுமானுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்க திரையுலகமும், அவரது ரசிகர்களும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com