03 ஏப்ரல் 2009
ஜீமெயில் இப்போ 5 வயசு பாப்பா!
இலவச ஈ-மெயில் சர்வீஸில், 10 MB-க்கே வழி இல்லாதபோது, (எக்ஸ்ட்ரா space வேணுமா! ரெண்டு, மூனு ஈமெயில் ஐடி ஓபன் பண்ணிக்கோ என்ற அட்வைசுக்கு நடுவில்) எடுத்த எடுப்பிலேயே, 1 GB இடம் கொடுத்து நம்ம எல்லாரையும் அலற வைத்த ஜீமெயில், 5 வயதை பூர்த்தி செய்துள்ளது.
அந்த சமயத்தில் ஒவ்வொரு கிளிக்குக்கும், முழு பக்கத்தையும் லோட் செய்த ஈமெயில் சர்வீஸுகளுக்கு நடுவில், முன்னோடியாக AJAX தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு பக்கத்தையும் லோட் செய்யாமல், தேவையான இடத்தை மட்டும் நொடியில் அப்டேட் செய்யும் சித்து விளையாட்டு செய்து, மக்களை வளைத்துப் போட்டது.
invite-டோட வந்தாதான் ஜீமெயில் ஐடி என்று கறாரா சொல்லி, உன்கிட்டே ஜீமெயில் invite இருக்கான்னு, invite இருக்கான்னு பார்க்கிரவன் ஒருத்தனைகூட விடாமல் நம்மளை கேட்க வைத்து, இலவச word of mouth ஜெனரேட் செய்த மார்கெடிங் ராஜதந்திரம்.
புதுசா கொண்டு வந்த வசதியின் பிரமிப்பு அடங்குவதற்கும், Gmail Labs-ல் இருந்து அடுக்கடுக்காக வசதிகள் அறிமுகம்.
Spam-ஆ! கிலோ எவ்வளவு என்று கேட்கக்கூடிய அளவிற்கு திறமையாக செயல்படும் ஸ்பாம் ஃபில்டர்.
இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்.
ஒரே ஒரு குறை சொல்லலாம்னா, அது ஜீமெயில் இன்னும் beta-வில்தான் இருக்கு.
கூடிய சீக்கிரம் வயசுக்கு வந்துடும்னு நம்புவோம்.