நப்கின் ஹோல்டர்
கீறல்கள் விழுந்த CDயினை பயனுள்ளதாக மாற்றுங்கள்॥
பழைய cdஇரண்டு, எம்।சீல் - ஒரு பக்கெட், வீட்டில் இருக்கும் ஏதாவது மரத்தில் ஆன கட்டை, பேப்ரிக் கலர், 3டி அவுட்லைனர், பெவிகால்
முதலில் எம்।சீலை நன்றாக மிக்ஸ் செய்து மரக்கட்டையில் கொஞ்சம் பெவிகால் தடவி அதன் மீது சிறிது எம்।சீலை வைக்கவும்.
அதன் மீது cdயினை வைக்கவும்। சிறிது நேரம் பிடித்துக்கொள்ளவும்.
எம்,சீல் சின்ன சின்ன ரோஜாப்பூக்கள் செய்யவும், இலைகளும் செய்யவும்.
அதனை பெவிகால் தடவி படத்தில் உள்ளது போல் ஓட்டவும்
இதை போல் நிறைய பூக்கள், இலைகள், கொடி என்று செய்து ஓட்டவும்। குறைந்தது அரைமணிநேரம் காயவிடவும்.
பிறகு இலைகளுக்கு பச்சைகலர் கொடுக்கவும்। பச்சை, மஞ்சல் கலந்து கொடுத்தால் இலைகள் மிகவும் அழகாக இருக்கும்.
பிறகு பூக்களுக்கு சிகப்பு கலர் கொடுக்கவும்॥ அடி பகுதிக்கு கருப்பு கலரில் பெயிட் செய்து காயவிடவும்
cdயின் மேல் பகுதியில் 3டி அவுட்லைன் வைத்து விருப்பமான டிசைன் வரையவும்।
காய்ந்த பின்பு டிஸ்யூ பேப்பரை வைக்கவும்॥
எந்த ஒரு பொருளையும் தூக்கி போடாமல் ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தவும்